நுவரேலியாவை Little England என்றழைப்பது போல், அம்பேவலவை little New Zealand என்று அழைக்கிறார்கள். இலங்கைக்கான முக்கிய பால்உற்பத்தி இங்கிருந்து. ஜெர்ஸி மாடுகளை இயல்பாக மலைப்பகுதியில் வளர்ந்த புற்களில் மேயவிடுகிறார்கள். அம்பேவலவில் காய்கறி, கிழங்குகளும் விளைகின்றன. நல்ல பசுமைப்பகுதி. பண்ணைகளைச் சுற்றுலாப்பயணிகள் பார்வையிடலாம். ஸ்டாராபெரித் தோட்டம் அடுத்து அம்பேவலவில் பார்க்க வேண்டிய இடம்
தலவாக்கலை தேயிலை அதிகம் விளையும் பிரதேசம். மகாவலி கங்கையின் கிளையாறு மற்றும் இரண்டு அருவிகளை இங்கே பார்வையிடலாம். தமிழர்கள் அதிகம் வசிக்கும் பிரதேசம் இது. கண்டி, நுவரெலியா மட்டுமல்ல, மலைநாடு முழுதுமே சைவஉணவு சாப்பிடுபவர்களுக்கு
சோதனை கட்டம்.
World End என்பதில் மேகங்கள் தவழ்ந்து வந்து நம்மை மூடும் என்றார்கள். நாங்கள் World endன் ஆரம்பம் வரை சென்று திரும்ப வேண்டியதாகி விட்டது. நம் ஓட்டுனருக்கு, பரிசோதனைகள் அதிகம் உள்ள இடம் என்று தெரியாதா இல்லை ஒரு Chance பார்க்கலாம் என்று எடுத்தாரா தெரியவில்லை, இலங்கையர் ஐந்து பேருக்கான கட்டணமான
1200 சீட்டை எடுத்துவிட்டார். இந்தியருக்கான கட்டணம் ரூ.45000/-. அலுவலருக்கு குறிப்பாக என்னைப் பார்க்கையில் இந்தியன் என்று சந்தேகம். ஓட்டுனரைக் கேள்வி மேல் கேட்டதில் வெலவெலத்துப் போய்விட்டார். என்னை அவர் கமல்ஹாசன் என்று நினைத்துக்கொண்டு உங்களை யாழ்ப்பாணம் என்று சொல்லி இருக்கிறேன், யாழ்ப்பாணத்தமிழில் பேசுங்கள் என்றார். அலுவலர் Passportஐக் கேட்க நான் அதை அவரிடம் இழக்கத் தயாரில்லை. திரும்பி விட்டோம். ரொம்ப ஜாஸ்தி என்று தான் இதை எடுத்தேன் என்றார் ஒட்டுனர். நல்ல நோக்கங்கள், நன்மை பயக்காது, தவறான புரிதலை ஏற்படுத்துவதைப் பற்றி அறிந்துகொள்ள நீங்கள் மணமானவராக இருத்தல் வேண்டும்.