நுவரெலியாவில் உள்ள காயத்ரி பீடம், இராவணனின் மகன் இந்திரஜித் வழிபட்ட தலம் என்று சொல்கிறார்கள். சகல சித்தர்கள் பற்றிய குறிப்புகளும் கோவிலில் இருக்கின்றன.

நுவரெலியாவில் இருந்து கதிர்காமம் செல்லும் வழியில் பண்டாரவளை. முன்னர் தமிழர் பெருவாரியாக இருந்த இடம் . 1983 கலவரத்தின் பின், சிங்களவர், முஸ்லீம்கள் பெரும்பான்மைப் பகுதியாக மாறிவிட்டது.
வலுவான இனம், மற்றொரு இனத்தை வலுக்கட்டாயமாக இடம்பெயரச்செய்வது இலங்கை வரலாற்றில் இந்த ஒருமுறை மட்டும் நடந்திருக்கவில்லை.

தாமோதர Nine arch bridge பிரிட்டிஷ் ரயில் ரோடு தொழில்நுட்பத்திற்கான மற்றொரு அத்தாட்சி. இதற்காக சாலையில் இருந்து செல்லும் தூரமும், பாதையும் உடல் ஆரோக்கியமுள்ளோரே எளிதாய் செல்ல முடியும்.

எல்ல Flying Ravana Zip line அவசியம் பார்க்க வேண்டிய மற்றொரு இடம். இதைச் சென்றடையும் பாதையும் செங்குத்தானது.
அங்கிருந்து Zipline பயணம் சாகசம் நிரம்பியது. பெரும்பாலும் இருபதுகளில் இருப்பவர்களே செல்கிறார்கள். எனக்கு
Acrophobia. என்னுடன் வந்தவர்கள் வயிறு வலி, தலைவலி இல்லை என்றால் போயிருக்கலாம் என்றார்கள். நான் உலகத்தின் எல்லா நாட்டினரின் கதைகளையும் படித்துவிட்டே சுற்றுப்பயணம் வந்திருக்கிறேன். எல்லவில் மற்றுமொரு சுற்றுலாத்தலம் Ravana Falls. நீராடுவது கடினம். கால்களை நனைக்கலாம். Ravana Cave என்பது சீதையை சிறைவைத்த குகை இருக்குமிடமாகவும், இந்த அருவியிலேயே சீதை குளித்ததாகவும் நம்பப்படுகிறது. 4500 அடிகள் உயரம் உள்ள குகைக்கு செல்லும் பாதை கரடுமுரடானது, அதிகநேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால் செல்லவில்லை.

கதிர்காமம் என்பது மூன்று கோயில்கள்.
செல்லக்கதிர்காமம், மலைக்கோயில்,
பெரிய கோவில். செல்லக்கதிர்காமம் விநாயகர் கோவில், மாணிக்க கங்கை நதிக்கரையில். மலைக்கோவில், ஏழுமலைகளின் நடுவே, இதுவே கந்தசஷ்டிக் கவசத்தில் வரும் ” கதிர்காமத்துறை கதிர்வேல் முருகா”. கீழே பழனி ஆண்டிக் கோலத்தில் பெரிய கோவில்.

எல்லாக் கோவில்களிலுமே திரை வழிபாடு மட்டுமே. மனம் ஒரு திரை, அதில் காணும் இறைவனுக்கு நாமே உருவம் கொடுக்கலாம், வேற்று மதத்தினர் தீட்டோடு வருவதால் திரை என்று ஏதேதோ காரணங்கள் சொல்கிறார்கள். உலகம் முழுதும் இந்துக் கடவுளுக்கு சிலைவழிபாடு எனும்போது இதற்கு தத்துவார்த்த காரணங்கள் தவிர வேறு ஒன்று இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டிலும், இந்துக்கோயில்களை அரசியல்வாதிகளின் கையில் கொண்டு சேர்க்க இந்து அறநிலையத்துறை என்று ஒன்று இருக்கிறது. இவர்கள் ஒருபடி மேலே சென்று இந்துக்க்கோயில்களின் நடுவே புதிய புத்த விஹார்களைக் கட்டுகிறார்கள்.
கதிர்காமத்தின் காணிக்கைகள் விஹாரின் கட்டுப்பாடில். சிங்களவர்கள் விநாயகரைக் கும்பிடுவது மதநல்லிணக்கம் என்கிறார்கள். எனக்கென்னவோ யானைகள் நிறைந்த தேசத்தில், காட்டுயானை பயம் விநாயகரைக் கும்பிட வைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. இன்னொன்று இந்து மதத்தினருடன் மட்டும் மதநல்லிணக்கம் என்பது கொஞ்சம் தட்டையாகத் தெரியவில்லையா? நான் வழிப்போக்கன், நாத்திகன், எனக்குப் பலவிஷயங்கள் புரியாது, மண்ணின் மைந்தர்களுக்குப் புரிந்திருந்தால் சரி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s