இந்த இடத்தில் வாகனத்தில் இருந்து இறக்கி விடுவார்கள். ஆண்களும் பெண்களும் இறங்கி நடப்பார்கள். சிங்கள ராணுவத்தினர் சோதனை என்ற பெயரில் எல்லா இடங்களிலும் தடவுவார்கள், என்றார்கள் முல்லைத்தீவில் ஓரிடத்தைக் காட்டி.
வல்லை வெளி என்பது நெடிய சாலை. சாலையின் இருபுறமும் வெட்டவெளி. (படம் இணைக்கப்பட்டுள்ளது) இடப்பெயர்வுக்காகச் செல்லும் மக்கள் சாரிசாரியாகச் செல்கையில் வானிலிருந்து தாக்குதல் நடத்தினால் அவர்கள் ஒளிவதற்கு இடம் கிடையாது.
ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதர சகோதரிகள் வெவ்வேறு பாதையில் சென்ற பின், மீண்டும் சந்திக்கிறார்கள். வல்லைவெளியைக் கடக்கையில் வரும் சிக்கல்களை சந்திரா Undertoneல் சொல்கிறார். இயற்கை எழில் கொஞ்சும் ஊரைப் பயத்துடன் கடக்க வேண்டியதாகிறது. பரத் வரும் காட்சியில் இருந்து பதற்றம் நமக்கும் தொற்றிக் கொள்கிறது. கிண்டலும் கேலியுமான குடும்பத்தில், பயத்துடன் எல்லாவற்றையும் முழுங்குகிறார்கள். நாளை நிலைமை மாறலாம். ஆனால் இந்தக்கதை வரலாற்றின் ஒரு ஆவணமாக இருக்கும்.