Zou சீனாவில் பெரிதும் மதிக்கப்படும் திரைக்கதையாசிரியர், கவிஞர், நாவலாசிரியர், கட்டுரையாளர். 2010ல் சீனமொழியில் வெளியான இந்த நாவல், பதிமூன்று ஆண்டுகள் கழித்து, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, புக்கர் நெடும்பட்டியலிலும் இடம்பெற்று விட்டது.
Khalid Jawedன் ‘ The Paradise of Food’ நாவலுக்கும் இந்த நாவலுக்குமுள்ள நெருங்கிய தொடர்பு, இரண்டுமே Coming of age novel என்பது மட்டுமல்ல, இரண்டிலுமே கதைசொல்லிக்கு எல்லோரையும் போன்ற சராசரிக் குழந்தைப்பருவம் என்பது இல்லை. ஆனால் முந்தையது நேர்க்கோட்டு கதை சொல்லும் பாணி, பிந்தையது vignettes மூலமாக ஒரு அசாதாரண சிறார்பருவத்தைச் சொல்லும் கதை.
Ninth building கதைசொல்லியும், அவனது நண்பர்களும் வளர்ந்த ஒரு கட்டிடம். 1966ல் கதை ஆரம்பிக்கிறது. சிறுவர் குழாம், பறவைக்கு உணவு கொடுப்பது, இறந்த பறவையின் இதயத்தை வெளியே எடுப்பது, காதலிப்பது, காதலர்கள் குறித்துப் பொதுச்சுவரில் எழுதுவது, பல்லியை பாட்டிலில் வளர்ப்பது, ஜன்னல் திரையின் வழியே நண்பனின் தந்தையும், தாயும் உறவு கொள்வதைப் பார்ப்பது என்று எல்லா நாட்டுச் சிறுவர்களைப் போலவே அறியாமையும், Adventureம். ஆனால் அதே சிறுவர்கள் சமூகப்புரட்சிக்கு எதிரானவர்களைக் கண்டுபிடித்து அழிக்கும் Red Guard அமைப்பை நிறுவும் போது அவர்கள் சிறார்பருவம் அசாதாரணமாகிறது.
இரண்டாவது பகுதி கதைசொல்லி பதின்மவயதில் வெளியேறி அதன் பின்னான எட்டாண்டு வாழ்க்கை. சமூகப்புரட்சிக்கு நடுவில் தான் வாழ்ந்த வாழ்க்கைக்கு எழுத்துவடிவம் கொடுக்கவே இந்த நாவலை எழுதியிருக்கிறார் Zou. ஒரு பேட்டியில் “என் குழந்தைப் பருவத்தை என்னிடமிருந்து வழியனுப்ப விரும்பினேன், அதற்காக இந்த நாவலை எழுதினேன்” என்றிருக்கிறார்.
ஏராளமான குட்டிக்கதைகளைக் கொண்டிருக்கும் இந்த நாவலின் பலம் ஒரு குறிப்பிட்ட காலத்தின் வரலாற்றை எந்த சார்புமில்லாது ஆவணப்படுத்துவது. பலருக்கு வாழ்க்கை மிக மோசமாக இருந்திருக்கிறது. பலர் ரஷ்யாவின் உளவாளிகளாகப் பணியாற்றி இருக்கிறார்கள். சீனா கடந்து வந்த பாதை இது. சுயசரிதைக்கூறுகள் கொண்ட நாவல். அதே நேரத்தில் சிறுவர்களுக்கேயுரிய அறியாமையும் சேர்ந்தே நாவலில் வருகிறது. திருமணம் என்றால் என்னவென்றே தெரியாத பருவத்தில் இவரைத் திருமணம் செய்கிறாயா என்று யாரேனும் கேட்டு, வெட்கமும், மகிழ்வும் அடைந்திருக்கிறீர்களா? முப்பது வருடங்களில் எல்லாமே மாறிப்போகிறது. அவனே அவனுக்கு அந்நியன் ஆகிறான். A very good representation from China to the Booker.