Munroவின் சமீபத்திய சிறுகதைத் தொகுப்பான ‘Dear Life’ என்ற தொகுப்பில் இடம்பெற்ற கதை இது. இந்தக் கதையிலும் சிறுவயதில் நிகழ்ந்த ஒன்றின் தாக்கம் வயதாகியும் தொடர்வது கதைக்கரு.
பத்துவயதுப் பெண்ணின் பார்வையில் அம்மா, மிகவும் போலித்தனமாக நடந்து கொள்கிறாள். அப்பா யதார்த்தமாக நடப்பவர். பக்கத்தில் இருப்பவர் வீட்டுக்கு ஒரு நடனக்கொண்டாட்டத்திற்கு சென்ற போது நிகழ்ந்தவை பல தெளிவாகவும் சில மங்கலாகவும் சொல்லப்படுகின்றன. அம்மா தன்னைக் கற்புநெறி தவறாத குடும்பப்பெண் என்பதை ஸ்தாபித்துக் கொள்ள விரும்புகிறாள்.
அம்மா ஆடினாளா, எனில் யாருடன் ஆடினாள், Peggy ஏன் அழுகிறாள், படைவீரர்கள் அவளை மிரட்டவில்லை, அவளை ஏதோ சமாதானப்படுத்துகிறார்கள், அந்த நடனநிகழ்வு எதற்காக, அம்மாவை ஏன் அங்கிருப்பவர்கள் தங்களில் ஒருவராகக் கருதுவதில்லை போன்ற பல தகவல்கள் கதையில் கொடுக்கப்படவில்லை. வாசகர்கள் விருப்பப்படி யூகித்துக் கொள்ளலாம்.
கதையின் மையப்புள்ளி, அறிந்தும் அறியாத வயதில் பாலியல் அனுபவத்துடனான முதல்சந்திப்பு. பெரியவளான பிறகு Peggy இடத்தில் தன்னைவைத்துக் கொண்டு Fantasize செய்கிறாள்.
ஒரு Show off mother, ஒரு அறியாப்பெண், பாலியல் உணர்வின் முதல் தீண்டல், பின் அதை மங்கலாய் நினைவுகூறல் அவ்வளவே கதை. Munro உபயோகிக்கும் வார்த்தைகள், அதன் மூலம் அவர் வாசகருக்கு கடத்த நினைக்கும் ஆழமான உணர்வுகள் இந்தக் கதையை சராசரி எழுத்தாளர் எழுதுவதற்கும், Munro எழுதுவதற்குமுள்ள வித்தியாசங்கள் என்று கூறலாம்.