Hjorth இருபது நாவல்களுக்கு மேல் எழுதியவர். நார்வேயைச் சேர்ந்த எழுத்தாளர். சுயசரிதைக்கூறுகள் கொண்ட நாவல்களை இதற்கு முன்னரும் எழுதியதற்காக அவரது குடும்பத்தால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர்.

Snippet from the book:

“How strange it must be to have lived for so long with another human being, so close to them, day after day, night after night, year after year, then one of you dies and turns to dust. I’ve heard that animals that live in close proximity invariably grow fond of each other and that people who do the same might equally well end up hating one
another. ”

கடந்த சில ஆண்டுகளாகப் புக்கர் பட்டியலில் தாய்-மகள் உறவைப் பற்றி ஒரு புத்தகமேனும் தவறாது இடம்பெறுகிறது.
தாய்-மகன் உறவு அதிக சிக்கல்களில்லாத நெருக்கமான உறவு. ஆனால் தாய்-மகள் உறவைப் பெரும்பாலும் அப்படிச் சொல்ல இயலாது. மகள்கள் அவர்களைத் தாயின் நீட்சியாக ஒப்புக்கொள்ளாது அவர்கள் தரப்பு வாதங்களைத் தொடர்ந்து வைத்துக் கொண்டே இருப்பார்கள். இறுதியில் அவர்கள் தானாகவே உணரும் வேளையில், பெரும்பாலும் அம்மாக்கள் உயிருடன் இருப்பதில்லை.

மற்ற எல்லா தாய்-மகள் உறவு நாவல்களில் இருந்தும் வேறுபட்டது இந்த நாவல். ஒரு திரில்லரின் தன்மைகளைக் கொண்டது. உறவுகளை உளவியல் ரீதியாக ஆழமாகத் தோண்டிப் பார்ப்பதில் இது ஒரு உளவியல் நாவல். இந்தக்கதை Return of the Eloped daughter என்றும் சொல்லலாம். ஆனால் முந்நூறு பக்கத்திற்கு மேலாக Tormentationsஐ மட்டுமே கதையாகச் சொல்வது என்பது புதுமையான யுத்தி. The Sorrows of Young Werther போலவே Unrequited love இந்த நாவலிலும். அதில் காதலி, இதில் அம்மா.

ஜோனா ஒருகட்டுப்பாடு மிகுந்த நார்வேஜியன் குடும்பத்தின் இரண்டு மகள்களில் மூத்தவள். தந்தையின் விருப்பப்படியே சட்டம் படித்து, வழக்கறிஞரை மணமுடித்து ஒரு சராசரி வாழ்க்கையை வாழ்ந்து முடித்திருக்க வேண்டியவள். Water Colour Paintimgஐச் சொல்லித்தரும் அமெரிக்க ஆசிரியர் மார்க்கை காதலித்து, அவனுடன், திருமணத்தில் இருந்து, பெற்றோரிடமிருந்து ஓடிப்போகிறாள். முப்பது வருடங்களாக எந்தத் தொடர்பும் குடும்பத்துடன் இல்லை, தந்தை இறந்ததற்கும் வரவில்லை. மார்க் இறந்து ஒரே மகன் ஜான் அவனது வாழ்க்கைக்காக ஜோனாவை விட்டு விலகி வெகுதூரம் சென்ற பிறகு, அம்மா வசிக்கும் அதே நகரத்திற்கு வருகிறாள். எத்தனை முறை அலைபேசியில் அழைத்தாலும் அம்மா எடுப்பதில்லை. அவளாகவே அப்படி செய்கிறாளா இல்லை தாய்க்கும், இவளுக்குமிடையே தங்கை புகுந்திருக்கின்றாளா?

சொந்தத் தாயை Stalking செய்வது மனத்தவிப்பு அடங்குவதற்கு. Tomb of Sandல் மகன் மரத்தில் ஏறித் தாயை வேவு பார்ப்பான். இதில் முற்றிலும் வேறு சூழ்நிலை. குழந்தைகள் அம்மாவைக் கைவிடுவது அடிக்கடி நிகழும், ஒரு தாயால் தன் மகளை கைவிடுதல் உண்மையில் முடியுமா?

கடந்தகால சம்பவங்களிலும், நிகழ்கால நிகழ்வுகளிலும் அம்மாவே நிறைந்திருக்கிறாள். Mark பற்றியோ John பற்றியோ அதிகம் சொல்லப்படுவதில்லை. தந்தை குறித்தும் அதிக தகவல்கள் இல்லை.
அவளுடைய Artistic career குறித்தும் அதிகம் சொல்லவில்லை. அம்மாவே எங்கும் நீக்கமற நிறைந்து நினைவில் Hauntingஆக.
கடைசியில் அம்மா குறித்து யாருக்குமே தெரியாத ஒன்றையும் இவள் தெரிந்து கொள்கிறாள். அன்னையரை இழந்த மகள்கள் தவறவே விடக்கூடாத நாவலிது.
Charlotte ஒரு அற்புதமான மொழிபெயர்ப்பாளர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s