Nettel மெக்ஸிகோவில் பிறந்து வளர்ந்தவர்.
இதற்கு முன் மூன்று நாவல்கள், மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ள Nettel, மெக்ஸிகோவின் Contemporary writersல் குறிப்பிடத்தக்கவர். Rosalind மிகவும் அனுபவம் வாய்ந்த மொழிபெயர்ப்பாளர்.

Snippet from the book:

“Like waves in the ocean, All things are doomed to impermanence and death The life of every being is as ephemeral as a bubble.”

தோழிகள் இருவர் Motherhoodஐ அறவே வெறுக்கிறார்கள். Laura வின் நண்பனுடனான உறவு, அவன் குழந்தை வேண்டும் என்று கேட்பதனால் முடிவடைகிறது. Alina மனம்மாறி முப்பத்தைந்து வயதுக்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புகிறாள். Motherhood மீதான இருவரது பார்வையும் சீக்கிரம் மாறப்போகிறது.

புடவை இன்னும் கொஞ்சம் இறங்கினால் சிசேரியன் தழும்பு தெரியும். இறங்காமலேயே வயிறு உப்பிப்பின் சுருங்கியதால், ஒருவயதுக் குழந்தையின் ஓவிய முயற்சியாய் முடிந்த வயிற்றுக் கோடுகள், மார்பகம், பிருஷ்டம், கால்கள் எதுவும் முன்போலில்லை. இரவில் நித்திரையில்லை. காம்பின் வெடிப்புகள் குழந்தைக்குப் புரிவதில்லை……….. ஆனால் இதற்குக் காரணமானவன் ஒரு பிளேடு கீறல் கூட இல்லாது அதே மெருகு கலையாது இருக்கிறான். இயற்கை Motherhood என்ற பெயரால் ஓரவஞ்சனையுடன் நடந்து கொள்கிறது.

மூன்று பெண்களில் இரண்டு தாய்மார்கள். ஒருத்திக்குக் குழந்தை பிறக்குமுன்னரே மூளைவளர்ச்சி இல்லை, எந்நேரமும் இறக்கலாம் என்று எல்லா மருத்துவர்களாலும் அறிவுறுத்தப்படுகிறது. இன்னொருத்திக்கு Abusing கணவனை எப்போதும் நினைவுறுத்தும் மகன். கடைசியில் குழந்தை பெறாதவளே பாக்கியசாலியா?

பெண்கள் எழுதும் போது அவர்கள் உலகம் பளிச்சென்று வெளித்தெரியும். Alina, தாதியின் கால்கள், மார்பகங்களைப் பார்த்துப் பொறாமை கொள்வது, குழந்தைக்குத் தன்னை விட தாதி முக்கியம் என எரிச்சல் கொள்வது, முகாந்திரமே இல்லாது கணவன், தாதி இருவர் மீதும் சந்தேகம் கொள்வது என்று Alinaவின் கதாபாத்திரம் வெகுநுட்பம்.

குறைபாடுள்ள குழந்தை பிறந்தால் முதல் அடி திருமணத்தின் மீது தான் விழும். பெரும்பாலும் ஆண் தப்பித்துக் கொள்ள நினைப்பான், வெகுசில சமயங்களில் பெண்கள் பொறுப்பை விட்டுத் தப்பித்திருக்கிறார்கள். எப்படி இருந்தாலும்
எல்லாமே சுமூகமாக இருக்கையில் கண்ணே மணியே என்றுகழிப்பதல்ல தாம்பத்யம். It has to be tested atleast once.

Lauraவே கதைசொல்லி. ஆனால் பெரும்பாலான கதை Alina, Doris மற்றும் அவளது மகன் Nicholasஐப் பற்றியது. Lauraவின் பார்வையில் சொல்லப்படுகிறது.
நாவலில் ஒரு குயில், புறாக்களின் கூட்டில் இருந்த முட்டையைக் கீழே தட்டிவிட்டுத் தன் முட்டையை அதே இடத்தில் வைத்துவிட்டுச் செல்லும். புறாக்கள் அடைகாத்து, வேறு உருவைப் பொருட்படுத்தாது உணவுஊட்டி
குஞ்சுக்கு சிறகு முளைத்ததும் விட்டுச்செல்லும். குஞ்சு பெரிதாகி அதே இடத்திற்கு வளர்ப்புப் பெற்றோரைத் தேடி வரும். நாவலின் மையஇழையும் இதுவே. Biological Motherஐ விட வளர்த்தவர்களிடம் பேரன்பு காட்டுபவர்களைப் பார்த்திருக்கிறோம்.

நாவல் முழுதும் ஒரு Feminist anger கலந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. Motherhood என்பது ஒரு Human shackleஆ என்ற ஆதார கேள்வியை நாவல் எழுப்புகிறது. நம்நாட்டில் பெண்களுக்குத் திருமணமே Human Shackle தான். மருத்துவம், உடல்குறைபாடு போன்ற பல தகவல்கள் ஆய்வுசெய்யப்பட்டு நாவலில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கின்றன. அனுபவம் வாய்ந்தவரின் திறமையான மொழிபெயர்ப்பு. இலக்கியம் எப்போதும் தீர்வைச் சொல்வதில்லை. சரியான கேள்வியை வாசகரிடத்தில் எழுப்பும். அவர்களிடம் விடை இருக்கலாம், அல்லது இல்லாது போகலாம், அதுகுறித்து இலக்கியம் கவலைப்படுவதில்லை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s