சுழல்களைக் கொண்ட தாரகைகளின் நீல இரவு – யதார்த்தன்:
Phone Sex and Sextortionஐ முழுவதும் களமாகக் கொண்ட கதைகள் தமிழில் இருக்கின்றனவா தெரியவில்லை. இந்தக் கதை அதையே மையமாகக் கொண்டது. யதார்த்தனின் பெரிய பலம் அவரது மொழி. சிறுகதையிலும் அது தெளிவாகத் தெரிகிறது. ” நான் கரைகளை இழந்தேன்”.
ஒரு வாடிக்கையாளர், ஒரு Service provider, ஒரு நாளின் நிகழ்வு என்றவகையில் கதை நல்ல அழுத்தத்தைத் தருகிறது. வழுதி கதைக்குள் வராமல் இந்தக் கதையில் செலுத்தும் தாக்கமும் முக்கியமானது. ஆனால், நீலகண்டனுக்கும், ஆதனுக்கும் இந்தக் கதையில் வேலையில்லை. கதையின் Focusஐக் குறைக்கிறார்கள். யதார்த்தனுக்கு தமிழ் இலக்கியஉலகில் நல்ல எதிர்காலம் இருக்கின்றது.
பர்மா புத்தர் – ஜே.கே:
கதிர்காமம் போன்ற பழம்பெரும் கோயில்களின் வளாகங்களிலும் புத்தவிஹார்கள் வந்துவிட்ட பிறகு, இந்தக்கதை இலங்கையில் எங்கேனும் நடப்பதற்கு சாத்தியக்கூறுகள் இருப்பதாகவே தோன்றுகிறது. ஆனால் வேலையில்லாத சிறுவனின் மந்தமான நடவடிக்கைகளில் ஆரம்பிக்கும் கதை, சிறிது நேரத்திலேயே வேகம் எடுத்து, இறுதியில் ஜெட் வேகத்தை எட்டிப்பிடிக்கிறது. யதார்த்தத்தை விட்டுக் கொஞ்சமும் நகராத கதை. லோகுவின் சிறுபிள்ளைத்தனம், பங்கஜத்தின் வைராக்கியமும், கனவும், புண்ணியனின் Misadventure எல்லாம் சேர்ந்து கதைக்கு ஒரு உயிரோட்டத்தைக் கொடுக்கின்றன. நல்ல Presentation. கடைசியில் Murphy’s Lawவே வெல்கிறது.
நிழல் விழும் இடங்கள் – சுஸந்த மூனமல்பே- தமிழில் ரிஷான் ஷெரீப்:
ஐந்து விளக்குகளின் கதைத் தொகுப்பில் வந்த கதை இது என்று நினைவு. தேடலும், கைவிடலும் சுஸந்த மூனமல்பே கதைகளில் அடிக்கடி வருபவை. அதே போல் நிழலுக்கும் நிஜத்திற்குமான மெல்லியகோட்டைத் தனது கதைகளில் அடிக்கடித் தாண்டி மீண்டும் வருவார். முத்துக்குமாரி, நிமாலி, தம்மி எல்லோரும் கதையில் மட்டுமின்றிக் கைவிடல் என்ற மையப்புள்ளியிலும் சந்திக்கிறார்கள் நல்ல மொழிபெயர்ப்பு.
மாஜிதாவின் பர்தா, மெலிஞ்சி முத்தனின் காந்தப்புலம், யதார்த்தனின் நகுலாத்தை ஆகிய மூன்று நாவல்களின் மதிப்புரைகள் இவ்விதழில் வந்திருக்கின்றன. சமீபத்தில் வெளிவந்த நாவல்களில் தவறாமல் படிக்க வேண்டிய நாவல்கள் பட்டியலில் இடம்பெறுபவை இவை மூன்றும். இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம் மூன்றும் ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறான கதைக்களம் கொண்டவை. வெட்சி காத்திரமான இதழாக வெளிவந்திருக்கிறது.
வெட்சி போன்ற பத்திரிகைகள் Simultaneous digital version (காலச்சுவடு போல) சந்தா வசூலித்துக் கொண்டு வந்தால் இன்னும் பலரைச் சென்றடையும். இங்கே பசியில் பாவம் தலையணைப் பஞ்சையெல்லாம் சாப்பிடுகிறார்கள்.
பிரதிக்கு:
ஆதிரை வெளியீடு, யாழ்ப்பாணம்
647 972 3619 & 021 222 59 50
மின்னஞ்சல் vetchimagazine@gmail.com