Mari இத்தாலியக் கவிஞர், சிறுகதை ஆசிரியர், நாவலாசிரியர். பல்கலையில் இத்தாலிய இலக்கியத்தைக் கற்பிப்பவர்.
இதுவரை மூன்று சிறுகதைத் தொகுப்புகள், பன்னிரண்டு நாவல்கள், இரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
இலக்கியம் எவ்வாறு உலகை ஒரு சின்ன வட்டத்தில் கொண்டு சென்று நிறுத்துகிறது என்பதற்கு இந்தக்கதையை உதாரணமாகச் சொல்லலாம்.
முதலில் சப்னாஸ் ஹாசிம் எழுதிய சென்ரல் யூனியன் கோப்ரட்டி சிறுகதை. சிறுவர்கள் விளையாடுகிறார்கள். பந்து மதிலுக்கு மறுபுறம் விழுந்தால் பந்து திரும்பக் கிடைக்காது. மறுபுறம் இருக்கும் பெண்மணி Sadist. கடைசியில் ஒரு உண்மை.
இக்கதையில் கண்டிப்பு மிகுந்த போர்டிங் பள்ளியில் மாணவர்கள் கால்பந்து விளையாடுகிறார்கள். பந்து மதிலுக்கு அந்தப்புறம் விழுந்தால் கிடைக்காது. அங்கிருப்பவர் Sadist. கடைசியில் ஒரு உண்மை.
இரண்டிலுமே ஒரு சிறுவன் துணிந்து மதிலுக்கு அப்பால் இறங்குவதால் உண்மையைக் கண்டுபிடிக்கிறான்.
Mari அனுபவமிக்க எழுத்தாளர் என்பதால்
இத்தாலிய போர்டிங் பள்ளிகளின் கண்டிப்பு, சிறுவர்களின் கால்பந்து மோகம், பெற்றோரை வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே பார்க்க முடிவது, தத்துவார்த்தமான ஒரு உண்மை எல்லாவற்றையும் அழுத்தமாகக் கதையில் கொண்டு வந்திருக்கிறார். இந்தக்கதை இத்தாலியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் இப்போது நியுயார்க்கரில் வந்திருக்கிறது. கண்டங்கள் தாண்டிப் பிறந்த சகோதரிகள் இந்த இரு கதைகள்.
https://www.newyorker.com/magazine/2023/05/29/the-soccer-balls-of-mr-kurz-fiction-michele-mari