பல்கேரியன் மொழி நாவல் முதன்முறையாக புக்கரின் இறுதிப்பட்டியலில் நுழைந்தது மட்டுமன்றி விருதையும் வென்று விட்டது. Speculative fiction எனும் Genreஐச் சார்ந்தது இந்த நாவல்.

Alzheimer நோயால் பாதிக்கப்பட்டவருக்கான கிளினிக்கில் ஒவ்வொரு மாடியும் ஒவ்வொரு பத்தாண்டு. எழுபதுகளுடன் நினைவு தப்பிப் போனவர்கள் எழுபதுகளில் வாழமுடியும். அந்தக்காலத்திற்கான உடை, உணவு, சிகரெட், மது என எல்லாமே அப்படியே மாறாதிருக்கும். தினம் ஒரு செய்தித்தாளும் வரும். Dementiaவால் பாதிக்கப்பட்டவர் அல்லாமல், நல்ல நிலையில் இருப்பவர்களும், நிகழ்காலம் ஏற்படுத்தும் எதிர்காலம் குறித்த பயத்தால் இந்தக் கிளினிக்கில் சேர்ந்து கொள்கிறார்கள். எண்பதில் ஏமாற்றிய பெண் குறித்த கொடுநினைவுகள் ஏதுமின்றி எழுபதுகளில் இன்பமாக இருக்க முடிந்தால் நல்லது தானே!
தனிநபர்களைத் தாண்டி, ஐரோப்பிய நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாய் கடந்தகாலத்திற்குள் நுழைய நினைத்தால்? அதிலும் ஒரு தேசம் எழுபதுகளுக்குள்ளும் மற்றொன்று எண்பதுகளுக்குள்ளும் புகுந்து கொண்டால்?

தோழியின் தாயார் Alzheimerஆல் முழுதும் பாதிக்கப்பட்டு, அவரிடமே சொல்வாராம் ” இந்த வீட்டுப்பெண் பெரிய வாயாடி” என்று. கேட்பவருக்குத் தான் சங்கடமே ஒழிய பாதிக்கப்பட்டவருக்கில்லை. நாவலில் முற்றும் மறந்த ஒருவனுக்கு, எழுபதுகளில் அவனை அரசாங்கம் சிறை வைத்தபோது, அவனைத்தேடி அலைந்த அவனது காதலி, அவனைச் சந்திக்க ஏற்பாடுசெய்வதற்கு, காவல்துறை அதிகாரியுடன் படுக்கைக்கு ஒத்துக்கொண்டதை நினைவுறுத்துகிறார்கள். மூதாட்டி ஒருவருக்கு, 1944ல் ஜெர்மனியில் இருந்து தப்பிய போது, ஷெல் ஒன்று மாடு ஒன்றின் உடலைக்கிழித்து, அது பரிதாபமாக அலறியது மட்டும் நினைவு இருக்கிறது. நினைவை மறத்தல் வரமா, சாபமா என்று பொதுவாகச் சொல்வதற்கில்லை.

Demential, Time travel இரண்டையும் கலந்து எழுதி இருந்தாலும் இந்த நாவல் இருபத்தோராம் நூற்றாண்டையும் விமர்சிக்கிறது. Dark humour, satire இந்த நாவல் முழுதும் வந்திருந்தாலும், Holocaust survivorஆன பெண் ஒருவர் Showerஐப் பார்த்தாலே அலறுவது என்பது போல் Touchy இடங்களும் ஏராளம். இந்த நாவல் பதில் தெரியாத நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகளை வாசகர்களிடம் எழுப்புகிறது.
நம் வாழ்விலும் கூட நமது கடந்தகாலம் எவ்வளவு தூரம் நம் நிகழ்காலத்தை ஆக்கிரமித்திருக்கிறது என்பதை வைத்தே நமது ஆளுமையும் உருவாகிறதில்லையா!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s