ஹஸன் அப்பாஸ் பாகிஸ்தானைச் சேர்ந்த கல்வியாளர். கிழக்காசிய மற்றும் மத்தியகிழக்கு நாடுகள் இவரது கல்விப்புலம். நாட்டின் பாதுகாப்பு, சட்ட அமலாக்கம், தீவிரவாதத்தடுப்பு போன்றவற்றில் ஆராய்ச்சி செய்தவர். பெனாசிர், முஷாரப் போன்றோரது அரசாங்கங்களில் பணியாற்றியவர். இந்த நூல் ஏப்ரல் 2023ல் வெளியாகியது.
இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட Ashraf Ghaniக்கு நெருக்கடி, 2020 அமெரிக்க-தாலிபான் உடன்பாட்டுக்குப் பிறகு, அமெரிக்கா அவரைத் தாலிபன்களுடன் amicableஆகப் போகச் சொல்கிறது. ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கில்லை. அஷ்ரப், Mullah Baradar போன்ற தாலிபான் தலைவர்களுக்கு எதிரான Sirajuddin Haqqaniயிடம் உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்த இரகசியங்களைப் பகிர்கிறார். Ghani’s way of taking revenge on his opposition. அஷ்ரப்பும் அரசின் மற்ற தலைவர்களும் நாட்டை விட்டு அவசரமாகத் தப்பிப் போகின்றனர்.
தாலிபான்களின் Strategy எளிதானது. முதலில் சமூகஊடகங்களில் தீவிரமாக இயங்குவது, பெரும்பான்மை இருக்கும் பகுதிகளுக்கு அருகே உள்ள பகுதிகளைக் கைப்பற்றுவது, ஈரான், பாகிஸ்தான், தஜிஹிஸ்தான் எல்லைப்பகுதிகளை ஆக்கிரமிப்பது, மாதக்கணக்கில் ஊதியம் இல்லாது வேலைபார்க்கும் ராணுவத்தினரிடம் தாலிபானுடன் சேர்ந்தால் மாதம் $150 என்ற வாக்குறுதி. Taliban has become unstoppable now.
ஆனால் தாலிபான்களிடம் முல்லா ஒமர் போன்ற சக்திவாய்ந்த தலைவர் இல்லை. ஒமர் 2013ல் மர்மமான முறையில் இறந்ததை தாலிபான்கள் இரண்டு வருடங்கள் இரகசியமாக வைத்திருக்கிறார்கள். Mullah Baradar ஒமரின் லெப்டினன்ட் மட்டுமல்ல மச்சினனும் ஆவார். பாகிஸ்தான் சிறையில் Baradar அடைக்கப்படுகிறார். பாகிஸ்தான் Mullah Mansourக்கு ஆதரவு அளித்துத் தலைவராக்குகிறது ஆனால் 2016ல் அமெரிக்கப்படையால் அவர் கொல்லப்படுகிறார். பாகிஸ்தானே மறைமுகமாக அதற்கு உதவியது என்றும் சொல்லலாம். Mansourன் Movementsஐ Pakistan Intelligence அமெரிக்காவிடம் பகிர்கிறது. Mansour தேநீர் அருந்த இறங்கும் இடத்தில் அப்பாவிப் பொதுமக்கள் பல. கூடியிருக்கிறார்கள். அதனால் ஒருமணிநேரம் கழித்து ஓட்டுனர், பாதுகாப்பு அதிகாரிகள் மட்டும் இருக்கையில் Mansourமீது Drone தாக்குதல் நடத்தப்படுகிறது. அடுத்ததாக Mullah Hibatullah தாலிபான்களின் தலைவராகிறார்.
Mansour, Baddar போன்ற தாலிபான் தலைவர்கள் எல்லோரும் பொதுவாக நம்புவது போல், பாரம்பரிய முஸ்லீம் உடைகளை அணிந்து, குகைக்குள் வசிப்பவர்களில்லை. தொழில்நுட்பத்தில் யாருக்கும் அவர்கள் குறைந்தவர்களில்லை, தனியார் விமானம், பெண்கள், மது போன்ற கேளிக்கைகளிலும் கூட. ஆனால், Hibatullah ஒமர் போலவே ஒழுக்கநெறிகளில், மதக்கொள்கைகளில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். அலைபேசியைக்கூடப் பயன்படுத்தத் தெரியாதவர். எந்த சமூக ஊடகங்களிலும் இவரில்லை. இவரது மகனை தற்கொலைப்படையில் பலி கொடுத்தது இவருக்கு இன்னும் செல்வாக்கை ஏற்படுத்தியது. அத்துடன் இவரது Deputyகளின் நியமனம். இவருக்கு அடுத்த இடத்தில் நியமிக்கப்பட்டவர் Omarன் மகன். அதற்கடுத்த இடத்தில் Baradar. இவை எல்லாம் சேர்ந்து Hibatullahவை இன்றுவரை அசைக்க முடியாத தாலிபான்களின் தலைவராக்கி விட்டது.
தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றப் போகிறார்கள் என்று தெரிந்ததும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், காபூல் விமானநிலையத்தை முற்றுகையிட்டு நாட்டை விட்டுத் தப்பிக்க முயல்கிறார்கள். பெண்கள் வேலை பார்க்கலாம், படிக்கலாம் என்ற கனவு தூள்தூளாகிறது. Healthcare Sectorஐத் தவிர மற்ற எல்லாத் துறைகளிலும் பெண்கள் அவர்களது தலைமைப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். இப்போது பதவியில் இருக்கும் தாலிபான்கள் பழையவர்கள் போல் பழமையானவரில்லை. வெளிநாடுகளில் படித்தவர்கள், உலக அரசியல் தெரிந்தவர்கள், தொழில்நுட்பம் குறித்த பிரக்ஞை உள்ளவர்கள். ஆனால் இவர்களும் பெண்கள் மனைவியாகவும், குழந்தை பெற்றுத்தரவும் மட்டுமே லாயக்கானவர்கள் என்ற தீர்மானத்திற்கு வந்தது தான் பெரிய சோகம்.
எப்போதெல்லாம் பேரிடர் நேர்கிறதோ அப்போதெல்லாம் அதிகம் பாதிக்கப்படுவது
பெண்களே. 11 வயதுக்கு மேல் பெண்கள் பள்ளிக்குச் செல்ல முடியாது, 45 மைல்களுக்கு மேல் வீட்டு ஆண் துணையின்றி செல்லக்கூடாது, வீட்டை விட்டு இறங்கினால் தலைமுதல் கால்வரை மூடப்படும் பர்தா அவசியம் என்று அடக்குமுறைகள் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கும். அது போலவே சிறுபான்மை Shia முஸ்லீம்கள் மீதும். (ஆர்வமுள்ளோர் Khaled Hosseiniயின் The Kite Runner நாவலைப் படித்து அடக்குமுறை குறித்துத் தெரிந்து கொள்ளலாம்).
ஆரம்பத்தில் இருந்தே பாகிஸ்தானின் Influence தாலிபான்களிடம் எப்போதுமே உண்டு. தாலிபான் இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான, ஒமரின் நெருங்கிய உறவினரான Baradarஐ பாகிஸ்தான் நம்பாததாலேயே அவர் அடுத்த தலைவராக முடியவில்லை. தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, பாகிஸ்தானில் தீவிரவாத நடவடிக்கைகள் ஒரே வருடத்திலேயே ஐம்பது சதவீதம் அதிகரித்திருக்கின்றன.
ஏற்கனவே கூறியது போல், இந்த தாலிபான்கள் உயர்கல்வி கற்றவர்கள், உலக அரசியல் தெரிந்தவர்கள். காபூலில் இந்தியத் தூதரகத்திற்கோ, அதிகாரிகளுக்கோ சின்ன சேதம் கூட நேராது பார்த்துக் கொண்டதில் இருந்து அவர்கள் அரசியல் முதிர்ச்சி தெளிவாகத் தெரிகிறது. இன்று ஆப்கானின் அடிப்படை வசதிகளுக்கான முதலீட்டில் அதிகமாக முதலீடு செய்துள்ளது இந்தியா தான். முஸ்லீம் நாடுகள் இல்லாமல், அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளுடனும் தாலிபான்கள் நல்லுறவைப் பேணி வருகிறார்கள்.
ஹஸன் அப்பாஸ்ஸின் Position அவரை, அமெரிக்க, பாகிஸ்தான் அதிகாரிகளுடன், தாலிபான்களுடன் உரையாடி இந்த நூலுக்கான தகவல்களைச் சேகரிக்க உதவியிருக்கிறது. அதனாலேயே தாலிபான்கள் குறித்த Clear Pictureஐ இந்த நூலில் இவரால் அளிக்க முடிந்திருக்கிறது. கல்வியாளர் என்பதால், பாரபட்சமின்றி, பாகிஸ்தான் லஸ்கர் ஏ தொய்பா, அல்கொய்தா, பாகிஸ்தானி தாலிபான்கள் போன்ற அமைப்புகளுக்கு, பாகிஸ்தான் உதவிசெய்து இந்தியக் காஷ்மீர் பகுதிகளில் Unrestஐ விடாமல் ஏற்படுத்திக் கொண்டிருப்பதையும் தயங்காமல் குறிப்பிடுகிறார். ஆங்கிலத்தில் வாசிப்பவர்கள், தவறாது இந்த நூலை வாசித்துப் பாருங்கள். தமிழில் படித்து நாம் அத்தை என்று உறுதியாக நம்பிய தாலிபான்கள் உண்மையில் சித்தப்பா என்பதைக் கண்டடைவீர்கள்.