The Promise – Damon Galgut 3/13

Damon தென் ஆப்பிரிக்காவில் பிறந்தவர். நாடகாசிரியர் மற்றும் நாவலாசிரியர். இதற்கு முன் எட்டு நாவல்கள் எழுதியுள்ளார், அவற்றில் இரண்டு புக்கர் இறுதிப்பட்டியலில் வந்துள்ளன. 2021ல் எழுதப்பட்ட இந்த நாவலுடன் மூன்றாம் முறையாக புக்கர் நீண்ட பட்டியலில் இடம் பெறுகிறார். யூதர் இனம் மற்ற மதங்களைப் போலல்லாமல் தலைகீழ் வளர்ச்சி அடைந்துள்ளது. 1939ல் 17 மில்லியன் யூதமக்கள் தொகை 2015ல் 14 மில்லியனாகி இருக்கிறது. உலக யூத மக்கள் தொகையில் இஸ்ரேலில் 30% யூதமக்கள் தொகை இருக்கையில் அமெரிக்காவில் … Continue reading The Promise – Damon Galgut 3/13

Second Place – Rachel Cusk: 2/13

ரச்செல் கனடாவில் பிறந்தவர். அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் வளர்ந்தவர். Creative writing பயிற்றுவிப்பவராகப் பணியாற்றியவர். மூன்று சுயசரிதை நூல்கள் எழுதி கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானவர். இவருடைய Outline Trilogyமிகவும் பேசப்பட்டது. பத்து நாவல்கள் எழுதியிருக்கும் இவரது இந்த நாவல் 2021 மே மாதத்தில் வெளியாகி புக்கர் நீண்ட பட்டியலில் இடம் பெற்றுள்ளது. Mabel Dodge Luhan தன்னுடைய சுயசரிதையில் D H Lawrenceஐ மெக்சிகோவில் இவருடைய இடத்தில் தங்க வைத்ததன் பிரதிபலனாக, D H Lawrence அவரை அழித்துவிடுவேன் … Continue reading Second Place – Rachel Cusk: 2/13

A Passage North- Anuk Arudpragasam 1/13

அருட்பிரகாசம் கொழும்பில் தமிழ் பெற்றோருக்குப் பிறந்தவர். தத்துவயியலில் முனைவர் பட்டத்தை அமெரிக்காவின் கொலம்பியா பல்கலையில் பெற்றவர். The Story of a Brief Marriage என்ற இலங்கை இறுதிப்போரில் இளம் தம்பதியரைக் கதைக்களமாகக் கொண்ட இவரது முதல் நாவல் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்தியாவிலும் இலங்கையிலும் வருடத்தின் பகுதிகளில் வசிக்கிறார். இவரது இந்த இரண்டாவது நாவல் புக்கர் 2021 நீண்டபட்டியலில் இடம்பெற்ற பதிமூன்று நாவல்களில் ஒன்று. உலகத்தின் எல்லா எழுத்தாளர்களின் படைப்புகளில் இருந்து தொகுக்கப்பட்ட Flash … Continue reading A Passage North- Anuk Arudpragasam 1/13

காலச்சுவடு குறுங்கதைகள் ஆகஸ்ட் 2021:

காலச்சுவடு குறுங்கதைகளுக்குள் நுழைவதற்கு முன் Lydia Davisன் இந்தக் கதையைப் பார்க்கலாம்: ON THE TRAINWe are united, he and I, though strangers, against the two women in front of us talking so steadily and audibly across the aisle to each other. Bad manners. Later in the journey I look over at him (across the aisle) and he is … Continue reading காலச்சுவடு குறுங்கதைகள் ஆகஸ்ட் 2021:

ஆவநாழி- ஆகஸ்ட்- செப்டம்பர் சிறுகதைகள்:

முதலாண்டு நிறைவு இதழ் இது. இந்த சூழ்நிலையில் இது நிச்சயமாக ஒரு சாதனை. ஆசிரியர் குழுவிற்கு நன்றியும் பாராட்டுகளும். எம்.கோபால கிருஷ்ணனுக்கும் எனக்கும் ஏதோ ஒரு டெலிபதி வேலை செய்கிறது. போன முறை நான் எழுதிக்கொண்டிருந்த நூல் குறித்து அவர் எழுதி வெளிவந்து விட்டது. இம்முறை நான் தூசிதட்டி எடுத்துவைத்த எம்.எஸ். கல்யாணசுந்தரம் குறித்து அவர் எழுதிவிட்டார். எழுதுவதில் நான் எப்போதும் சோம்பேறி தான். நல்லதொரு எழுத்தாளர், மறக்கப்பட்டவர் குறித்து எழுதப்பட்ட, நல்ல கட்டுரை. படித்துப் பாருங்கள். … Continue reading ஆவநாழி- ஆகஸ்ட்- செப்டம்பர் சிறுகதைகள்:

வனம் ஆகஸ்ட் 2021 சிறுகதைகள்:

மண்ணுள் உறைவது- சுஷில்குமார்: வனம் இதழில் கதையின் முடிவில் தான் கதாசிரியர் பெயர் இருக்கும். இந்தக் கதையை இரண்டுபத்தி படித்ததுமே யார் எழுதியது என்று தெரிந்து விட்டது. கிணறு வறண்டது ஏதோ சாபம் பின்னால் கிணற்றில் தண்ணீர் வந்து விட்டது என்பதைத் தாண்டி எத்தனை விசயங்கள் இந்தக்கதையில்! வழமை போல் கிணறு வற்றுதல், துர்க்கந்தம் எல்லாம் அமானுஷ்யம். அம்மா- அத்தை Chemistry, அத்தைக்கு ஹிஸ்டீரியா வருவது, எப்போதும் போல் மகாலட்சுமி ஸ்டெல்லா ஆவது, தண்ணீரைப் பார்த்து அத்தையின் … Continue reading வனம் ஆகஸ்ட் 2021 சிறுகதைகள்:

சொல்வனம் ஜூலை 25 சிறுகதைகள்:

ஒரு கடிதம் – டெம்சுலா ஆவ்- தமிழில் எம்.ஏ.சுசிலா: இந்தியாவின் வடகிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர் ஆசிரியர். வன்முறையில் நம்பிக்கை கொள்ளும் தீவிரவாத இயக்கங்களுக்கு, பாதுகாவலர்கள், பயங்கரவாதிகள் என்ற இரண்டு பெயர்களுக்கும் வாய்ப்பிருக்கிறது. யார் பார்வையில் என்பது தான் கேள்வி.சீனா, பங்களாதேஷ், பர்மா இவற்றை எல்லைகளாகக் கொண்ட இந்தப் பகுதியில் போராளிகள் நிறைந்து வன்முறை நிற்காது அந்த நாடுகளும் பார்த்துக் கொள்கின்றன. இந்தியவெறுப்பு போராளிகளிடம் காஷ்மீரைப் போலவே இருக்கும்.இந்தக் கதையில், யார்பக்கம் நியாயம் என்பதில் ஒருபக்கம் சரியாது, வாசகர்களுக்கும் … Continue reading சொல்வனம் ஜூலை 25 சிறுகதைகள்:

வியூகம் இதழ் 7:

புத்தகத்தின் நுழைவாயிலிலேயே பங்களித்த ஓவியர்களின் புகைப்படத்துடன் அவர்கள் பற்றிய குறிப்பு அழகு. சித்தாந்தன் கவிதைகள் மூன்றின் ஓரிரு வரிகள்: " ஒரு முத்தத்தின் பிறகானஎம் கணங்கள் முழுவதும் பறவைகள் தீண்டாத கனிகளே நிறைந்திருந்தன" " இப்போது பாருங்கள்மரங்கள் வரைந்த பாதையில்வரிசை பிசகாது செல்கின்றன எறும்புகள்" " முத்தங்களால் நெய்கிறாய் போர்வையைபெருமழை பெய்யத் தொடங்குகிறதுஅறையினுள்" நீலம் - றஷ்மி தி.ஜாவின் தவம் கதையில் ஒரு இலட்சியத்திற்காக பல வருடங்கள் அயராத உழைப்பு வீண் என்று தெரியும். இந்தக் கதையும் … Continue reading வியூகம் இதழ் 7:

தமிழினி ஜூலை 2021 சிறுகதைகள்:

துலாத்தான்- பா.திருச்செந்தாழை: மற்றொரு மண்டி கதை. ஆனால் முற்றிலும் புதிய களம். மண்ணின் மணம் வீசும் கதைகளை திருச்செந்தாழை தேர்ந்த சைத்ரீகனின் தன்னம்பிக்கையுடன் எழுதுகிறார். மனதை திடப்படுத்திக் கொண்டு கதையைப் படிக்க ஆரம்பியுங்கள்.திருச்செந்தாழை பெயர் போல மொழியும் அழகு. "பாவாடையை விரித்து குத்தவைத்து உட்கார்வது கவிழ்த்து வைத்த செம்பருத்திப்பூ." "மறந்திருந்த கவலைகள் அனைத்தும் ஈக்கூட்டம் போல் வந்து அப்பிக் கொண்டன." " அய்யாவு தனது பாதங்களைப் பூனைக்குட்டிகளைப் போல சாக்குக் கட்டுக்குள் பொதிந்து கொண்டார்." "காய்ந்த சோகை … Continue reading தமிழினி ஜூலை 2021 சிறுகதைகள்:

தமிழ்வெளி காலாண்டிதழ்-3- ஜூலை 2021:

மிச்சமாக முடியாத நினைவுகள் - சமயவேல்: " புஸ்தகம் எழுதுவது, வாசிப்பது, அது காரணமாக மிகுந்த அன்புடன் இருப்பது என்பது இங்கே யாருக்குத்தான் புரியும்". கி.ராவை நினைவு கூறும் இந்தக் கட்டுரையில், தொழில்முறை கதைசொல்லிகள் வருகிறார்கள், கு.அழகிரிசாமி அந்தக்கதையை ஏன் எழுதினார் எனும் பின்னணி வருகிறது, பெரிய தவில், உறுமி மேளம், ஊமைக்குழல், கம்மஞ்சோறு, மிதுக்கம்பழ மோர்மிளகாய் வத்தல்கள், கோடாங்கிப்பட்டி நார்த்தங்காய் ஊறுகாய் என்று கொண்டாட்டமாய் முடிகிறது. பெருவாழ்வு வாழ்ந்தவரைக் கொண்டாடத்தான் வேண்டும், சமயவேல் எழுதாத விசயங்கள் … Continue reading தமிழ்வெளி காலாண்டிதழ்-3- ஜூலை 2021: