விருதுநகரில் வசிக்கிறார். கல்லூரியில் தமிழ் பேராசிரியர். ஆதவன் படைப்புகளை முனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்துள்ளார்.இதற்கு முன் ஐந்து கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. இது இவரது ஆறாவது கவிதைத் தொகுப்பு. செல்வசங்கரனின் கவிதைகள் ஒரு மாற்று உலகத்தை சிருஷ்டி செய்து கொள்ளும். நிதர்சனமில்லாத எல்லாமும் அங்கே, தினம் நடக்கும் சாதாரண நிகழ்வு போல் பகிரப்படும். இருத்தல் குறித்த விசாரம், Absurdism ஆகியவைகளால் நிரம்பியது செல்வசங்கரன் கவிதைகள். அஃறிணைகள் நம்மைப் போல் சிந்திப்பது என்பது சரி, இங்கே காலமும, மனிதனும் … Continue reading மத்தியான நதி – செல்வசங்கரன்:
I Have Some Questions For You by Rebecca Makkai:
Rebecca ஹங்கேரியைப் பூர்வீகமாகக் கொண்ட, அமெரிக்க எழுத்தாளர். Rebeccaவின் முந்தைய நாவல் ஒன்று புலிட்சர் மற்றும் NBAஇரண்டின் இறுதிப்பட்டியல்களிலும் இடம்பெற்றதால் இவர் பெரும்பாலோருக்கு அறிமுகமான எழுத்தாளர். இந்த நாவல் 23 February 2023ல் வெளியானது. Bodie ஒரு திரைத்தயாரிப்பாளர், Podcaster. ஹாலிவுட் நடிகைகளைப்பற்றி Podcasting செய்ததால் பிரபலமானவர். அவரை Granby என்ற Elite Boarding பள்ளியில் Podcasting குறித்து இரண்டு வாரங்கள் வகுப்பெடுக்க அழைப்பு வருகிறது. Granby School Bodieக்குப் புதிதானதல்ல. இருபது வருடங்கள் முன்னர் அங்கு … Continue reading I Have Some Questions For You by Rebecca Makkai:
சொல் ஒளிர் கானகம் – ஸ்ரீதேவி கண்ணன்:
ஆசிரியர் குறிப்பு: கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அரசு ஊழியர். மெட்ராஸ் பேப்பர் இணைய வார இதழில் தொடர்ந்து எழுதிவரும் இவரது முதல் நூல் இது. உலக அளவில் கல்வி அறிவு பெற்றவர்களின் சதவீதம் என்றால் ஆண்களே அதிகம். ஆனால் வாசிப்பவர்கள் என்று எடுத்துக் கொண்டால் மூன்றில் இரண்டுபங்கு பெண்களே. அதே போல், எல்லா நாடுகளிலுமே எழுத்தாளர்களில் பெண்களின் சதவீதம் அதிகம். தமிழில் Serious writing என்றால், பெண்களின் எண்ணிக்கை இன்றும் கூட விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருப்பது … Continue reading சொல் ஒளிர் கானகம் – ஸ்ரீதேவி கண்ணன்:
ஊன்முகிழ் மிருகம் – சவிதா:
ஆசிரியர் குறிப்பு: சென்னையில் பிறந்தவர். சேலத்தில் வசிக்கிறார். தீவிர வாசகர். இதற்குமுன் இவரது மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளியாகி இருக்கின்றன. இது நான்காவது கவிதைத் தொகுப்பு. காதல் என்னும் உணர்வு பருகப்பருகத் தீராதது. காதலித்தவர்களை விட்டு விலகினாலும், காதலை இறுகப்பற்றிக் கொண்டே வாழ்க்கையைக் கழிக்கிறோம். காதலிப்பதை விடக் காதலிக்கப்படுவது என்பது வாழ்வின் அர்த்தத்தைக் கூட்டுகிறது. 'பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்' என்பதில் நாயகிபாவம் மட்டுமில்லை, எதிர்பார்ப்பில்லாத சரணாகதி. காலங்கள் தாண்டி, சவிதாவின் இந்தக் கவிதைகளும் அதையே செய்கின்றன. வரிசையாக, … Continue reading ஊன்முகிழ் மிருகம் – சவிதா:
மாமி சொன்ன கதைகள் – சந்திரா இரவீந்திரன்:
ஆசிரியர் குறிப்பு: வடமராட்சி, பருத்தித்துறை, மேலைப்புலோலி, ஆத்தியடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது இலண்டனில் வசிக்கிறார். ஏற்கனவே இவரது இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகி இருக்கின்றன. இது அனுபவப் பகிர்வுகளின் தொகுப்பு. மாமியார்- மருமகள் உறவு என்பது love-hate relationship. Hate எத்தனை சதவீதம் என்பதைப் பொறுத்தே அவர்கள் பேசுவது இருக்கும். மேலைநாடுகளில் கூட இந்த உறவு சொல்லிக் கொள்ளும் வகையில் கிடையாது. முதன்முறையாக, சந்திரா, தனது மாமியார் கூறிய கதைகளை நினைவுறுத்திப் புத்தகமாக்கியதன் மூலம் அந்த உறவின் … Continue reading மாமி சொன்ன கதைகள் – சந்திரா இரவீந்திரன்:
பெருக்கு – அலறி:
ஆசிரியர் குறிப்பு: கிழக்கிலங்கையின் மருதமுனையைச் சேர்ந்தவர். சட்டத்தில் இளமானிப் பட்டமும்,மனித உரிமைகள், பொதுச் சுகாதாரம், உளவளத்துணை போன்றவற்றில் டிப்ளமோ பட்டமும் பெற்ற சட்டதரணியாவார். ஏற்கனவே இவரது ஐந்து கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. இது ஆறாவது தொகுப்பு. 'அற்றைத் திங்களின்' பாரி மகளிரின் சோகம் இந்தக் கவிதையிலும் பிரதிபலிக்கிறது. சிதிலங்கள் எப்போதும் நமக்கு சொந்தமில்லாதவற்றில் நேரும் போதும் வருத்தத்தை ஏற்படுத்துபவை. கட்டிடங்கள், ஆறு, குளம், நாடு…… ஏன் பெண்ணாக இருந்தால் கூட சரி இனம்புரியாத சோகம் மேலெழுகிறது. " … Continue reading பெருக்கு – அலறி:
மரமல்லி- பொன்.விமலா:
ஆசிரியர் குறிப்பு: ராணிப்பேட்டை, அவரைக்கரை கிராமத்தில் பிறந்தவர். பத்திரிகையாளர். ஊடகவியலாளர். இது இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு. பொன்.விமலாவின் இந்தத் தொகுப்பை வாசித்ததும், முதலில் தோன்றியது, இதைத் தான் எழுத வேண்டும் என்ற, கூண்டுக்குள் மாட்டிக் கொள்ளாத, தயக்கமில்லாத எழுத்து. அதற்கேற்றாற்போல் இந்த மொழிநடையில் இருக்கும் வேகம். தங்கு தடையில்லாத மொழிநடை. நகரத்துக் கதைகளும், கிராமத்துக் கதைகளும் அதே Aurhenticityயுடன் இருக்கின்றன. பலிபீடம், தீட்டு, டிங் டாங் பெல், ரெய்ன் கிஸ் ஆகிய கதைகள் தொகுப்பில் எனக்குப் … Continue reading மரமல்லி- பொன்.விமலா:
அசகவ தாளம் – பெரு விஷ்ணுகுமார்:
ஆசிரியர் குறிப்பு: பழனியைச் சேர்ந்தவர். இயற்பியலில் முதுகலைப் பட்டதாரி. இதற்கு முன் " ழ என்ற பாதையில் நடப்பவன்' என்ற கவிதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. இது இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு. சிறிய சிக்கல்களில் மனஅழுத்தம் பெறுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்களது வாழ்க்கை முழுவதும் பேரிடர் அவர்கள் இருக்கும் தெருவிற்குக்கூட வரப்போவதில்லை. misfortunes never come singly என்பதெல்லாம் எப்போதும் அடிதாங்கிக் கொண்டு அமைதியாக இருப்பவர்களுக்கு மட்டும். " எதையும் நிரூபிக்காமல் வெறுமனேகிடப்பினும் காலம் எங்கேனும்கூட்டித்தான் செல்கிறதுதற்போது இந்த … Continue reading அசகவ தாளம் – பெரு விஷ்ணுகுமார்:
A Spell Of Good Things – Ayobami Adibayo:
Ayobami, Lagos, நைஜீரியாவில் பிறந்து வளர்ந்தவர். இவருடைய முதல் நாவலான Stay with Me ஆப்பிரிக்காவில் மட்டுமல்லாது, வேறு நாடுகளிலும் விருதுகளை வென்றது.இவரது இந்த இரண்டாவது நாவல் பிப்ரவரி 2023ல் வெளியானது. பள்ளிக்கு பணம் கட்டமுடியாது, பிச்சை எடுத்து, ஒரு குழந்தையை மட்டும் படிக்க வைக்க முடிந்த குடும்பத்தைச் சேர்ந்த பதினாறு வயதுப்பையன், பணக்காரக் குடும்பத்தில் பிறந்து, டாக்டராக வேலை பார்க்கும், முப்பதைத் தொடும் வயதில், காதலித்தவனை மணக்கப் போகும் பெண்,நைஜீரியாவில் கவர்னர் பதவிக்குத் தேர்தலும், குண்டர்களின் … Continue reading A Spell Of Good Things – Ayobami Adibayo:
Wuthering Heights – Emily Bronte- Literary Classics6/100:
கவிஞர், ஆசிரியர், நாவலாசிரியர். எமிலி (1818 -48) ஆங்கிலகிராமம் ஒன்றில் கட்டுப்பாடான சூழ்நிலையில் வளர்ந்தார். அவர் வளர்ந்த சூழலே இந்த நாவலின் கதைக்களம் ஆகும். இவருடைய இரு சகோதரிகள் சார்லோட் ப்ரோன்ட் மற்றும் அனீ ப்ரோன்ட் இவரை விட பிரபலமானவர்கள். இந்த ஒரு நாவலே இவர் எழுதியது. 1847ல் இந்த நாவல் வெளியான போது, இவரது சித்தசுவாதீனம் குறித்த சந்தேகத்தைத் தெரிவித்தவரும் இருந்தார்கள். இவர் இறந்தபிறகு இவரது சகோதரி சார்லோட் இவருடைய கவிதைகளை சீரமைத்த பின் விமர்சனங்கள் … Continue reading Wuthering Heights – Emily Bronte- Literary Classics6/100: