தமிழினி செப்டம்பர் 2021 சிறுகதைகள்:

மரத்தில் மறைந்தது- எம்.கோபால கிருஷ்ணன்: நல்ல, பொருத்தமான தலைப்பு. கலைஞர்களுக்கு கருணை இருந்தால் மட்டுமே கலை பிறக்கும் என்பதில் இலக்கியவாதிகளையும் சேர்த்துக் கொள்ளலாம். "கருணை மறந்தேவாழ்கின்றார் கடவுளைத்தேடிஅலைகின்றார்" என்ற கண்ணதாசனின் வரிகள் இந்தக்கதைக்கு கச்சிதமாய்ப் பொருந்துகின்றன. தாஜ்மஹாலில் பௌர்ணமி இரவு கதையில் இதே விசயத்தைச் சொல்லியிருப்பார் ஆதவன். இரண்டாம் முறை கேட்கவும், மூன்றாம் முறை சொல்லவும் ஈகோ ஒத்துக்கொள்வதில்லை. குரு நித்யா கதைகளில் இருந்து மற்ற கதைகளை எழுதும் கோபாலகிருஷ்ணன் பெரிதும் வேறுபடுகிறார். நல்ல கதையிது. பொட்டை … Continue reading தமிழினி செப்டம்பர் 2021 சிறுகதைகள்:

நரக மாளிகை- சுதீஷ் மின்னி- தமிழில் கே.சதாசிவன்:

சுதிஷ் மின்னி தலசேரி தாலுகாவில் கண்டங்குந்நு கிராமத்தில், விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். கணிதத்தில் முதுநிலைப்பட்டம் பெற்றவர். சங்பரிவார் அமைப்புகளில் இருபத்தைந்து வருடங்கள் சேர்ந்திருந்து விட்டு தற்போது சி.பி.எம்மில் இணைந்து பணியாற்றுகிறார். கே.சதாசிவனின் மொழிபெயர்ப்பு தெளிவாக இருக்கிறது. பொதுவாகவே ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்ப்பதை விட இந்திய மொழிகளில் இருந்து செய்யப்படும் பெயர்ப்புகள் தமிழுக்கு நெருக்கமாகின்றன. எந்த மதவாதமுமே அபாயமானது. சகமனிதனின் நம்பிக்கையை உடைக்கச் செய்யும் முயற்சிகளால் அவன் வாழ்வில் பலகெடுதல்களையும், அழிவையும் ஏற்படுத்துவது. கருணையே வடிவான புத்தரைப் பின்பற்றுபவர்கள் … Continue reading நரக மாளிகை- சுதீஷ் மின்னி- தமிழில் கே.சதாசிவன்:

அணங்கு – அருண்பாண்டியன் மனோகரன் :

ஆசிரியர் குறிப்பு: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர். முதுகலைப் பட்டதாரி. சினிமாவில் துணை இயக்குனராகப் பணிபுரிகிறார். இவரது சிறுகதைகள், சினிமா குறித்த மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. இவரது முதல் நாவல் இது. திருச்செங்கோடு என்ற உடன் நினைவில் வருவது, நான் பணிபுரிந்த வங்கி குறிப்பிட்ட ஜாதிப்பெரும்பான்மை கொண்டிருந்தாலும், அந்த ஜாதியில் உள்ள மேலாளர்கள் யாரையுமே அந்தக்கிளைக்கு அமர்த்த மாட்டார்கள். வேறுகாரணங்களுக்காகப் பகலில் திருச்செங்கோடு வரும் அப்பிரிவினர் சூரியன் மறைவதற்குள் திருச்செங்கோடை விட்டு மறைந்து விடுவார்கள். இன்றும் … Continue reading அணங்கு – அருண்பாண்டியன் மனோகரன் :

கண்ணம்மா – ஜீவ கரிகாலன்:

ஆசிரியர் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்தவர். யாவரும் பதிப்பகம், B4 books போன்றவற்றின் மூலம் தொடர் இலக்கியத் தொடர்பில் இருப்பவர். திறமை வாய்ந்த புதிய தலைமுறை எழுத்தாளர்களின் நூல்களைத் தன் பதிப்பகம் மூலம் கொண்டு வருபவர். ட்ரங்க்பெட்டி கதைகள் என்ற சிறுகதைத் தொகுப்பு ஏற்கனவே வெளிவந்துள்ளது. இது இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு. 'கண்ணம்மா' தொகுப்பு 2017 டிசம்பரில் வந்திருக்கிறது. பன்னிரண்டு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. கடல், மீன் ரூபத்தில் வந்து பழிவாங்குகிறது. தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் … Continue reading கண்ணம்மா – ஜீவ கரிகாலன்:

சில கடிதங்களும் இரண்டு நாவல்களும்- கிருத்திகா

: மதுரம் பூதலிங்கம் என்ற பெயரில் ஆங்கிலத்திலும், கிருத்திகா என்ற பெயரில் தமிழிலும் எழுதிய கிருத்திகா, புனைவின் எல்லா வடிவங்களிலும் முயற்சித்தவர். குழந்தைகளுக்கான பல நூல்களை ஆங்கிலத்தில் எழுதியவர், சோழர், பல்லவர் சிற்பக்கலை குறித்த நூல்களை எழுதியவர், இராமாயணம், மகாபாரதம் குறித்தும் நூல்கள் எழுதியவர். கணவர் உயர் அரசு அதிகாரியாகப் பணியாற்றியதால், இந்தியாவின் பல நகரங்களில் வசித்தவர், இந்தியா முழுதும், பல நாடுகளுக்கும் பயணம் செய்தவர். தமிழ்,ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற கிருத்திகா, … Continue reading சில கடிதங்களும் இரண்டு நாவல்களும்- கிருத்திகா

யாவரும் செப்டம்பர்- அக்டோபர் 2021 சிறுகதைகள்:

அல்லி ராணி- பிரமிளா பிரதீபன்: ஆண்களின் பலம் உடம்பில் என்றால் பெண்களின் பலம் வஞ்சத்தில் என்பது கதைக்கரு. கதையைக் கொண்டு செல்லும் நேர்த்தி பிரமிளாவிற்கு நன்றாகக் கைவசப்பட்டுவிட்டது. அல்லிராணி காது கேட்காமல் எதற்காக சத்தமாக வானொலியை வைக்கிறாள் என்பது கடைசியில் தெரியவரும். மற்றவரின் பார்வையில் திமிர்தனமாக நடந்து கொள்ளும் அல்லிராணி, நினைத்திருந்தால் எல்லோருடைய பரிதாபத்தையும் சம்பாதித்திருக்கலாம். தமிழ்நாட்டுப் போலிஸூக்கும் சிங்களப் போலிஸூக்கும் பெரிய வித்தியாசமில்லை போலிருக்கிறது.முதலில் ஒரு பிம்பத்தை உருவாக்கி பின் அதை உடைக்க கதையை நான்கு … Continue reading யாவரும் செப்டம்பர்- அக்டோபர் 2021 சிறுகதைகள்:

கோடிக்கால் பூதம் – அ. உமர்பாரூக்- கொரானா குறித்த நாவல்

மாணவப் பருவத்திலிருந்தே எழுதத் தொடங்கியவர். அக்கு ஹீலராக பணிபுரிபவர். பல மருத்துவ நூல்களை எழுதியுள்ளார். தமிழில் ஆரோக்கியநிவேதனம் வெளிவந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுளுந்தீ வந்தது அதன்பின் வந்த முழுமருத்துவ நாவல் இவருடைய ஆதுரசாலை. இவர் பிறந்த மாவட்டமான தேனியின் அகழ்வாராய்ச்சி குறிப்புகள் அடங்கிய அழநாடு இன்னொரு முக்கியமான நூல். இது இவரது சமீபத்திய நாவல். எல்லாத் தொழில்களுக்குமே ஏற்ற இறக்கங்கள் இருந்தே தீரும். ஒரு காலத்தில் Sunrise industry ஆக இருந்த Online tourism இருந்த … Continue reading கோடிக்கால் பூதம் – அ. உமர்பாரூக்- கொரானா குறித்த நாவல்

டைகரிஸ் – ச.பாலமுருகன் – முதல் உலகப்போர் நாவல்

ஆசிரியர் குறிப்பு : ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்தவர். களப்பணியாளர், பழங்குடி மக்களின் உரிமைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். இவருடைய முதல் நாவலான சோளகர் தொட்டி 2004ல்வெளியானது. பெருங்காற்று என்னும் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. இது இவரது இரண்டாவது நாவலாகும். மலைவாழ் பழங்குடி மக்களின் வாழ்க்கையை பிரதிபலித்த சோளகர் தொட்டி நாவலை அடுத்து முதல் உலகப்போரில் இந்திய வீரர்கள் பிரிட்டனுக்காக, எந்த குறிக்கோளுமின்றி, பல நாடுகளில் போர்புரிந்து மரணித்த கதையை சொல்கிறார். At Night All … Continue reading டைகரிஸ் – ச.பாலமுருகன் – முதல் உலகப்போர் நாவல்

Great Circle – Maggie Shipstead:

Maggie அமெரிக்க எழுத்தாளர். IOWA writers workshopலும், Stanford பல்கலையிலும் பட்டம் பெற்றவர். இவரது முதல்நாவல் Seating Arrangements பல விருதுகளை வென்றது. 2021ல் வெளியான இவருடைய இந்த மூன்றாவது நாவல் புக்கர் நீண்ட பட்டியலில் இடம்பெற்ற நாவல்களில் ஒன்று. "I thought I would believe I’d seen the world, but there is too much of the world and too little of life. I thought I would … Continue reading Great Circle – Maggie Shipstead:

Light Perpetual – Francis Spufford 11/13:

Francis பிரிட்டனைச் சேர்ந்த எழுத்தாளர். அல்புனைவுகளை எழுதிக் கொண்டிருந்தவர், 2016ல் Golden Hill என்ற முதல் நாவலை அவருடைய ஐம்பத்தி இரண்டாவது வயதில் எழுதினார். நல்ல வரவேற்பைப் பெற்ற நாவல் அது. லண்டன் பல்கலையில் எழுத்துக்கலையைக் கற்பிக்கும் இவரது இந்த இரண்டாவது நாவல் 2021 புக்கர் நீண்ட பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. “Come, other future. Come, mercy not manifest in time; come knowledge not obtainable in time. Come, other chances. … Continue reading Light Perpetual – Francis Spufford 11/13: