நினைவில் நிற்கும் சில நாவல்கள்-2022

நன்றி அகநாழிகை/ பொன்.வாசுதேவன். தமிழில் பட்டியல் என்றாலே இப்போதெல்லாம் பயம் வருகிறது. மூளையின் செயலிக்கும், கைவிரல்களுக்கும் இருக்கும் தொடர்பு அறுந்து போகிறது. நினைவில் நின்றவை என்று சொல்வதில், பட்டியல் வந்தாலும் கூடப் பழி நினைவிற்குப் போய்ச்சேரட்டும். நாவல்கள் எப்போதுமே தமிழ் நவீன இலக்கியத்தின் பலவீனம் என்றே சொல்ல வேண்டும். சிறுகதைகளில் ஒரு பொறியை வைத்து, பிரகாசமாகக் காட்டும் வித்தை நாவல்களில் கைகூடுவதில்லை. நாவல் நின்று விளையாட வேண்டிய களம். சிறுகதைகளில், கவிதைகளில் நாம் உலகத்தரத்தில் இருக்கிறோம் என்று…

ஆவநாழி – பிப்ரவரி-மார்ச் 2023 சிறுகதைகள்:

பிறழ்வு – அரவிந்த் வடசேரி: வேட்டை மனநிலையில் இருப்பவன் பற்றிய கதை. எப்போதுமே கையிலிருப்பது கவர்ச்சியாக இருப்பதில்லை. காப்பிக்கலர் புடவை பணத்திற்குக் கிடைப்பவள் என்று தெரிந்ததுமே காமம் வடிந்து விடுகிறது. வீட்டில் இருக்கும் பெண் கதாபாத்திரம் முக்கியமானது. அவனது அத்தனை தேடல்களிலுமிருந்து விலகி எதிர்துருவத்தில் இருக்கும் பெண். எந்தவித ஆரவாரமுமில்லாமல் சொல்ல வேண்டியதை சொல்லி முடிக்கும் கதை. நன்றாக வந்துள்ளது அரவிந்த். வாழ்த்துகள். கும்பசாரம் – கு.கு.விக்டர் பிரின்ஸ்: Who dun it சிறுகதை. சிறுவன் மூலமாக…

தமிழினி ஜனவரி 2023 சிறுகதைகள்:

யாதவப் பிரகாசர் – சரவணன் சந்திரன்: ஹாக்கி விளையாட்டின் நுணுக்கங்களை மையமாகக் கொண்ட கதை. வேறு யாருக்கும் தெரிவதற்கு முன்னால் குருவுக்கு சீடனின் திறமை தெரிந்து போகிறது. குரு சற்றே பாதையிலிருந்து கீழிறங்கி விட்டு, மீண்டும் பிரதானசாலைக்கு வந்து சேர்வது அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது. தக்கையின் மீது நான்கு கண்கள் தாத்தா நினைவுக்கு வருகிறார். அனாகதநாதம் – செந்தில் ஜெகன்நாதன்: விரும்பிய பெண்ணின் மீது ஏற்படும் disenchantment அப்படியே நாதஸ்வரத்திற்கு மாறிவிடுகிறது. காணுமிடமெங்கும் அவள் சிரிப்பு என்பது போல்…

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.