சொல்வனம் அக்டோபர் 13, 2021 சிறுகதைகள்:

தளும்பல் - எஸ்.சங்கரநாராயணன்: பெண்பிள்ளைகளுக்கு அப்பாவின் மேல் பிரியம் எவ்வளவு இருந்தாலும் நெருக்கம் அம்மாவிடம் தான். அடிவயிறு போட்டுப் பிசைவதை அப்பாவிடம் சொல்ல எந்தப்பெண்ணும் விரும்புவதில்லை. அதீத ஒழுங்கில் அம்மாவால் வளர்க்கப்பட்ட பெண், அவள் இல்லாத போதும் முழுதாக அப்பாவிடம் மனதைத் திறப்பதில்லை. பரஸ்பர தியாகம், தன்னடக்கம் பெண்ணுக்கு அப்பாவிடம் இருந்தே வந்திருக்கும். https://solvanam.com/2021/10/13/%e0%ae%a4%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d/ நீலம்- நிர்வாணம்-நிதர்சனம்- சியாம் பாரதி: முழுக்கவே ஓவியநுணுக்கங்கள் பற்றிய கதை. எனக்கு ஓவியங்கள் புரிவதில்லை. https://solvanam.com/2021/10/13/%e0%ae%a8%e0%af%80%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9/ பெருந்தேவிக்கு பி.ஜி.உடௌஸ் வேண்டாம்- பா.ராமானுஜம்: … Continue reading சொல்வனம் அக்டோபர் 13, 2021 சிறுகதைகள்:

புரவி அக்டோபர் 2021 சிறுகதைகள்:

அடி - கார்த்திக் பாலசுப்ரமணியன் : ஆறாவது வகுப்பு மாணவனின் பார்வைக் கோணத்தில் நகரும் கதை. குடும்ப சூழ்நிலையால் மெட்ரிகுலேஷனில் இருந்து, அரசுநிதிபெறும் பள்ளிக்கு மாறுபவனின் ஆங்கிலம் சிலருக்கு வசீகரத்தையும், சிலருக்குப் பொறாமையையும் ஏற்படுத்துகிறது. அந்த வயதில் நட்பும் பகையும் சட்டென தோன்றி மறைபவை. சிறுவனின் மனநிலையை (குறிப்பாக பூமாலை டீச்சர் ஆறுதல் சொல்லியவுடன்)தத்ரூபமாகப் பதிந்திருக்கும் கதை. சொர்க்கத்திற்கு ஒரு பயணம்- சுநீல் கங்கோபாத்தியாய்- தமிழில் அருந்தமிழ் யாழினி: மகாஸ்வேதா தேவி என்றே நினைவு, பாண்டவர் சொர்க்கத்திற்கு … Continue reading புரவி அக்டோபர் 2021 சிறுகதைகள்:

ஆவநாழி அக்டோபர்- நவம்பர் சிறுகதைகள்:

அகவெளி வண்ணங்கள் - சாரோன்: அகவெளி வண்ணங்கள் ஒரே கதாபாத்திரத்தையும், அவனுக்குப் பாதிப்பு அதிகம் ஏற்படுத்திய இரண்டு பெண்களையும் பற்றியது. பொழுது போக்காக அவன் இரவுநேரக் காவலாளி வேலையைத் தற்காலிகமாக செய்தாலும், முழுநேரப்பணியாக சிறுவயதில் இருந்தே ஒன்றைத் தொடர்ந்து செய்து "காலமெல்லாம் உந்தன் காதலில் இளைத்தேனே" என்று பாடாமல் இளைக்கிறான். இடையே பல ஓவியங்கள் வரைகிறான். பள்ளியில் படிக்கையில் நிர்வாண ஓவியங்கள் வரைவது நிச்சயம் மனநலப்பாதிப்பின் அறிகுறி. அப்பாவின் வழியை மகன் பின்பற்றுவது, இலங்கை வெடிகுண்டு வெடிப்பில் … Continue reading ஆவநாழி அக்டோபர்- நவம்பர் சிறுகதைகள்:

குறி ஜுலை- செப்டம்பர் 2021 சிறுகதைகள்:

ஈயைத் துரத்திக்கொண்டு- ஸ்ரீகாந்தா- தமிழில் கே.நல்லதம்பி: ஈ என்ற பெயரில் வெளிவந்த திரைப்படம் இந்தக் கதையின் பாதிப்பில் எடுக்கப்பட்டிருக்கக்கூடும். ஒரு Obsession பற்றியே கதை முழுவதும். கதை 1960ல் வெளிவந்தது என்ற குறிப்பு ஆச்சரியப்படுத்துகிறது. கதையின் முடிவில் ஒரு கவித்துவமும், Dark humourம் சரிவிகிதத்தில் கலந்திருக்கிறது. இதுபோல் கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வரவேண்டிய நல்லகதைகள், நாவல்கள் ஏராளமாக இருக்கின்றன. நல்லதம்பியின் மொழிபெயர்ப்பு வழமை போல் இனிமை. கலெக்டராபீஸ் கண்ணனும் இஸிட் சண்முகமும்- விசாகன்: நகைச்சுவைக்காக எழுதப்பட்ட கதை … Continue reading குறி ஜுலை- செப்டம்பர் 2021 சிறுகதைகள்:

பதாகை அக்டோபர் 2021 சிறுகதைகள் :

வழிகாட்டி - உஷாதீபன்: இது ஒரு நல்ல கரு. வங்கியில் மனிதவளத்துறையில் தலைவராகக் கொடிகட்டிப் பறந்தவர் ஓய்வுபெற்று சில நாட்களில் ஒரு கிளைக்குப் போனதும் வெளியில் பெஞ்சில் உட்கார வைத்தார்கள். சந்திப்பில் ஓய்வுபெற்ற உயரதிகாரி தன்னடக்கமாகப் பேசுவதும், கீழ் வேலைபார்த்தவர்கள் அளவுக்கு மீறிப் புகழ்ந்து இப்போது ஒன்றும் சரியில்லை என்பதும் இயல்பாக வந்திருக்கிறது. ஆனால் மாமி இரண்டாயிரம் ரூபாய்க்கு மாத்திரை சாப்பிட்டு அமர்க்களமாக இருக்கையில் கதை முடியுமுன் கொல்வது நியாயம் தானா? https://padhaakai.com/2021/10/04/guide/ தாயம் - வேல்விழி … Continue reading பதாகை அக்டோபர் 2021 சிறுகதைகள் :

வனம் அக்டோபர் 2021- இதழ் 8 சிறுகதைகள்:

காப்பு - பா. திருச்செந்தாழை: வழக்கம் போல் திருச்செந்தாழையின் கதையில் கரைந்தேன். மொழிநடையின் வசீகரம் ஒரு கையையும், கதை இன்னொரு கையையும் இழுக்கத் திணறிப்போனேன்.எவ்வளவு நுணுக்கமாக இவரால் கதை எழுத முடிகிறது! வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் இரண்டுபெண்களின் கதைகளைச் சொல்லும் கதைசொல்லி. ஒரு கதாபாத்திரத்தை நல்லவிதமாகச் சொல்லி பின் அந்த பிம்பத்தை உடைப்பது பலரும் செய்தது, ஆனால் கடைசிப்பத்தி தூக்கிவாரிப் போடவைத்தது. திருச்செந்தாழை நிதானம் நிதானம் என்று பலமுறை எச்சரிக்கை செய்திருந்தும் இதை உண்மையில் நான் எதிர்பார்த்திருக்கவில்லை. … Continue reading வனம் அக்டோபர் 2021- இதழ் 8 சிறுகதைகள்:

காலச்சுவடு அக்டோபர் 2021 சிறுகதைகள்:

தீயணைப்பு- சித்துராஜ் பொன்ராஜ்: "நெருப்பு' என எழுதினால், அங்கு பொசுங்குகிற நெடி வர வேண்டும்” என்றார் லா.ச.ரா. சித்துராஜின் விவரணையில் அக்னி ஆக்ரோஷமாக எழுப்பும் சத்தமும் கேட்கிறது. ஒரு நிகழ்வு+ ஒரு சபலம்+.ஒரு பயந்தாங்கொள்ளி, இது தான் இந்தக் கதை. சித்துராஜின் கதையில் அனாவசியமான சொல் என்பதே இல்லை. கறுப்புப்புகை பூச்சியாய் மாறுவது, இரவுச்சந்தை குறித்த இடம் என்று மொழிநடையும் கூர்மையாக வந்திருக்கிறது. கதையின் எந்த இடத்திலும் நிதர்சனப் பார்வையை விட்டுக் கொஞ்சமும் நகரவில்லை. எனக்கென்னவோ விமானப் … Continue reading காலச்சுவடு அக்டோபர் 2021 சிறுகதைகள்:

தமிழினி செப்டம்பர் 2021 சிறுகதைகள்:

மரத்தில் மறைந்தது- எம்.கோபால கிருஷ்ணன்: நல்ல, பொருத்தமான தலைப்பு. கலைஞர்களுக்கு கருணை இருந்தால் மட்டுமே கலை பிறக்கும் என்பதில் இலக்கியவாதிகளையும் சேர்த்துக் கொள்ளலாம். "கருணை மறந்தேவாழ்கின்றார் கடவுளைத்தேடிஅலைகின்றார்" என்ற கண்ணதாசனின் வரிகள் இந்தக்கதைக்கு கச்சிதமாய்ப் பொருந்துகின்றன. தாஜ்மஹாலில் பௌர்ணமி இரவு கதையில் இதே விசயத்தைச் சொல்லியிருப்பார் ஆதவன். இரண்டாம் முறை கேட்கவும், மூன்றாம் முறை சொல்லவும் ஈகோ ஒத்துக்கொள்வதில்லை. குரு நித்யா கதைகளில் இருந்து மற்ற கதைகளை எழுதும் கோபாலகிருஷ்ணன் பெரிதும் வேறுபடுகிறார். நல்ல கதையிது. பொட்டை … Continue reading தமிழினி செப்டம்பர் 2021 சிறுகதைகள்:

யாவரும் செப்டம்பர்- அக்டோபர் 2021 சிறுகதைகள்:

அல்லி ராணி- பிரமிளா பிரதீபன்: ஆண்களின் பலம் உடம்பில் என்றால் பெண்களின் பலம் வஞ்சத்தில் என்பது கதைக்கரு. கதையைக் கொண்டு செல்லும் நேர்த்தி பிரமிளாவிற்கு நன்றாகக் கைவசப்பட்டுவிட்டது. அல்லிராணி காது கேட்காமல் எதற்காக சத்தமாக வானொலியை வைக்கிறாள் என்பது கடைசியில் தெரியவரும். மற்றவரின் பார்வையில் திமிர்தனமாக நடந்து கொள்ளும் அல்லிராணி, நினைத்திருந்தால் எல்லோருடைய பரிதாபத்தையும் சம்பாதித்திருக்கலாம். தமிழ்நாட்டுப் போலிஸூக்கும் சிங்களப் போலிஸூக்கும் பெரிய வித்தியாசமில்லை போலிருக்கிறது.முதலில் ஒரு பிம்பத்தை உருவாக்கி பின் அதை உடைக்க கதையை நான்கு … Continue reading யாவரும் செப்டம்பர்- அக்டோபர் 2021 சிறுகதைகள்:

அகழ் செப்டம்பர்/அக்டோபர் 2021 சிறுகதைகள்:

சின்னப்பன்றி- அகரன்: பன்றி என்பதைத் திட்டத்தான் பெரும்பாலும் உபயோகிக்கிறோம். இந்தக் கதையில் அந்த வார்த்தை நெருக்கத்துக்கு உதவுகிறது. இது போன்ற கதைகள் வாசகர்களுக்கும் கதாபாத்திரத்தின் உணர்வுகளைக் கடத்துவதை தவிர்க்க இயலாது. தனியாக வீட்டில் இருக்கும் குழந்தையின் முகம்தொந்தரவு செய்கிறது. எந்த அலங்காரங்களும் இல்லாமல் இயல்பாக விரையும் கதை. https://akazhonline.com/?p=3572 இரண்டு பெண்கள் - கலா மோகன்: கலாமோகனின் வழக்கமான பாரிஸூக்குப் புலம்பெயர்ந்த இலங்கைவாசியும், காமத்திற்கு அலைவதுமான Template இந்தக் கதையிலும் வருகிறது. ஆனால் இந்தக் கதையில் வருபவன் … Continue reading அகழ் செப்டம்பர்/அக்டோபர் 2021 சிறுகதைகள்: