பேசும் புதியசக்தி June 2021 சிறுகதைகள்:

அந்த ஒரு வரம் - ஐஷ்வர்யன்: பரந்த வாசிப்பு இல்லாமல் எழுதவரக்கூடாது என்று சொல்லிச் சொல்லி இப்போதெல்லாம் இனிப்பை வாயில் போட்டாலும் புளிக்கிறது. ஆடுஜீவிதம் நாவலின் சுருக்கம் தான் இந்த சிறப்புச் சிறுகதை. இல்லை முன்னர் எப்போதோ படித்தது நினைவில் இருந்து நாம் கதை எழுதும் போது நம் சிந்தனையில் இருந்து உதித்த கதை என்று பலமாக நம்பி விடுவோமோ! மோஹநிழல் - ஹரிணி: நல்லவன் வாழ்வான் என்பதைச் சொல்லும் கதை. அதை மட்டும் சொல்லி நம்மை … Continue reading பேசும் புதியசக்தி June 2021 சிறுகதைகள்:

அந்திமழை மே 2021

அந்திமழை மே 2021 சிறுகதை: மாபெரும் தாய் - அகரமுதல்வன்: " தொன்மை உறைக்குள் செருகப்பட்ட மிகநீண்ட கருப்புநிற வாள்களாய் திசையெங்கும் பனைகள் உடல் நீட்டி நின்றன. காம்பினில் அகாலமுடைத்து இதழ்விரிக்கும் நித்தியகல்யாணியின் நறுமணம் சூரியத்தழலின் நரம்புகளையும் மயக்கியதைப் போல காலைவெயிலில் சுகம் சுழலும்". அகரமுதல்வனின் மொழிநடை மீது எப்போதும் பொறாமை எனக்கு. நீண்ட நாட்களுக்குப் பிறகு இவர் எழுதிய கதை இது. கன்னி நாவலைப் படிக்கையில் ஒரு அரைமயக்க நிலையில் வாசித்ததைப் போலவே இந்தக்கதையையும் படிக்கலாம். … Continue reading அந்திமழை மே 2021

வியூகம் இதழ் 6 மே 2021

வியூகம் காலாண்டிதழ் ஆறு மே 2021: ஜே.கே யின் திருமதி.பெரேராவிற்கான விரிவான விமர்சனம், நாற்பதுகளில் எழுதப்பட்ட மடோல் தூவ என்னும் சிங்களநாவல், Kite Runner, அந்நியன், மெர்சோ மறுவிசாரணை,Swamy and Friends போன்ற நூல்களுக்கும் இதில் ஒரு கதைக்குமுள்ள பொதுமைப்பண்பைக் கூறி, இசூரு எவ்விதம் மற்ற சிங்கள இலக்கியவாதிகளிடம் இருந்து வேறுபடுகிறார் என்பதையும் விளக்குகிறது. லேகா ராமசுப்பிரமணியன் அவருக்கேயுரிய பிரத்தியேக பாணி விமர்சனத்தால் "Never rarely sometimes always" என்ற படத்தைப் பார்க்கும் ஆவலை அதிகப்படுத்துகிறார். ஃபஷ்றி … Continue reading வியூகம் இதழ் 6 மே 2021

அந்திமழை டிசம்பர் 2020 சிறுகதை:

அந்திமழை டிசம்பர் 2020 சிறுகதை: நீலநிறக்கனவு- பாரதிபாலன்: Freudன் Post Consciousness theoryஐ மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. பயம், குற்ற உணர்வு போன்ற காரணங்களினால் மூளை ஒரு கற்பனை சித்திரத்தை உருவாக்கி கனவுகள் வாயிலாக வெளிப்படுத்துகிறது. பெரியவரின் வாக்கில் இருந்த நம்பிக்கை நாகவல்லியின் மனச்சித்திரத்தைத் துடைத்துவிடுகிறது. அந்திமழையின் நூறாவது இதழ் இது. வல்லிக்கண்ணன் குறித்து கி.ரா (கட்டுரையே கதை மாதிரி இருக்கிறது) ரே குறித்து இந்திரன், R.k.Lakshman குறித்து கார்டூனிஸ்ட் பாலா எழுதிய கட்டுரைகள் சிறப்புப் … Continue reading அந்திமழை டிசம்பர் 2020 சிறுகதை:

காலச்சுவடு டிசம்பர் 2020 கதைகள்

செல்லப்பன்- சுந்தரராமசாமி: சு.ரா இருந்தபோது அவரது மொத்தக் கதைகள் தொகுப்பிலிருந்து, பலவீனமான கதைகள் என்று நான்கு கதைகளை விலக்குகிறார். அதில் இதுவும் ஒன்று என்று குறிப்பு சொல்கிறது. தப்புத்தாளங்கள் திரைப்படத்தின் கதை தான் இதுவும். ஆனால் இது கல்கியில் 1959லேயே வெளிவந்து விட்டது. சு.ராவின் ஆரம்பகால கதைகள் வேறுவிதமாக இருக்கும். புளியமரத்தின் கதைக்கும், ஜே ஜே சில குறிப்புகளுக்குமே கடலளவு வித்தியாசம். என்றாலும் இதற்கு முன் வெளிவந்த பிரசாதம், சன்னல் போன்ற கதைகளும் கூட அழுத்தமானவை. சு.ராவின் … Continue reading காலச்சுவடு டிசம்பர் 2020 கதைகள்