காலச்சுவடு அக்டோபர் 2022 சிறுகதை:

சிங்கத்தின் குகையில் - யுவன் சந்திரசேகர் : Over description, மையக்கதைக்கு சம்பந்தமில்லாத பல விஷயங்கள் இடையில் வந்தும், கதை சுவாரசியமாக முடிவது யுவன் சந்திரசேகர் போல சில எழுத்தாளர்களின் கதையில் தான் நடக்கிறது. சொல்லப் போனால் இதில் கதையே இல்லை. ஒரு அனுபவமும், அதற்குள்ளாகவே வரும் இரண்டு அனுபவங்களுமே இந்த சிறுகதை. எழுத்து வேறு, எழுத்தாளன் வேறு. இரண்டையும் ஒன்றாகப் பார்க்கிறவர்கள் எப்போதும் அடைவது ஏமாற்றம். சதக் சதக் என சதா குத்தும் ரத்தக்கதைகளை எழுதுபவரை … Continue reading காலச்சுவடு அக்டோபர் 2022 சிறுகதை:

தமிழ்வெளி ஜூலை 2022 சிறுகதைகள்:

குதிரை வண்டில் - ச.ஆதவன்: கதைகள் ஒரு சம்பவத்தையோ, ஒரு புறக்காட்சியையோ, பிரச்சனயையோ, உணர்வையோ ஏதாவது ஒன்றை மையமாக வைத்து எழுதப்படலாம். ஆனால் அது வாசகர் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த விழைய வேண்டும். இது அழிவு, பஞ்ச காலத்தைப் பற்றிய வர்ணனைகளுடன் நின்று விடுகிறது. கடல் என்னை நேசிக்கிறது- மியா கூட்டோ மியா கூட்டோவின் Sleepwalking Land அவரைத் தொடங்குவதற்கு சரியான புள்ளி. இந்தக் கதை அவருடைய புகழ்பெற்ற கதை. கவர்ச்சி, காமத்தில் ஆரம்பிக்கும் கதை, … Continue reading தமிழ்வெளி ஜூலை 2022 சிறுகதைகள்:

மன்றில் ஓசூர் இலக்கிய சிறப்பிதழ் ஜூலை 2022 சிறுகதைகள்:

முளை - பா.வெங்கடேசன் ; மகாகவி பாரதியார் பதினான்கு வயது சிறுவனாக அவருடைய தந்தையுடன் நடத்தும் உரையாடலே இந்தக்கதை. பாரதியின் வரலாற்றிலிருந்து எடுக்கப்பட்ட உண்மைகளுடன், உரையாடலில் புனைவு கலக்கிறது. பா.வெயின் ஆரம்பகால சிறுகதையாக இது இருக்க வேண்டும். பண்டிகையும் பலியும்- கன்னட மூலம் பி.டி. லலிதா நாயக்- தமிழில் ஜெயந்தி.கி: பண்ணையார்- பண்ணையாள்- கொத்தடிமை என்ற அதே பழைய கதை. வித்தியாசமாக பரமஏழை அம்மனுக்கு ஆடு நேர்ந்து கொண்டு ஒருவருடம் அடிமையாகப் போகிறான். கடவுள் எப்படியும் காப்பாற்றுவார் … Continue reading மன்றில் ஓசூர் இலக்கிய சிறப்பிதழ் ஜூலை 2022 சிறுகதைகள்:

புரவி ஜூலை 2022 சிறுகதைகள்:

நீர்க்கோழி - காளிபிரசாத்: நெருங்கிய நண்பர்களுக்கு இடையே ஒரு பெண் வருவது எல்லாக் காலங்களிலும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. அதே கதையை புதுமையாகச் சொல்லி இருக்கிறார் காளிபிரசாத். சட்டென்று காட்சிகள் மாறிச் செல்லும் கதையில் முஸ்லீமைக் காதலித்தால் முஸ்லீமாக மாற வேண்டும் என்ற கட்டாயம் போல் பல விஷயங்களைக் கொண்டு வந்திருக்கிறார்.மெஹரிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உவர்ப்பு - வங்காளத்தில் திலோத்தமா மஜூம்தார் - தமிழில் அருந்தமிழ் யாழினி: மிக எளிமையான கதை. இந்தியாவில் இன்னும் … Continue reading புரவி ஜூலை 2022 சிறுகதைகள்:

குறி இதழ் 32- ஜூன்-செப்டம்பர் 2022 சிறுகதைகள்:

வெனிலா - குமார செல்வா: வெனிலா வாசனையைத் தருவது போலவே பாலுணர்வையும் தூண்டுகிறது என்று நம்பப்படுகிறது. நிர்மலா டீச்சரின் பாலுணர்வு தான் மொத்தக்கதையும். voyeurism, சிறுவர்களுடன் Misadventures என்று அத்தனையும் செய்து பார்க்கிறாள் நிர்மலா. சம்பாத்தியம், டியூஷன், தோட்டம் என்று மெல்லக் கதைக்குள் புகுந்த பின்னரே Main story வருகிறது. டீச்சரின் கணவனின் Flashback எளிதாகச் சொல்லி முடிக்கப்பட்டிருக்கிறது. அவன் கதையில் மட்டுமல்ல, வாசகர்களுக்கும் ஒன்றும் பிரயோஜனமில்லை, Score செய்வது எல்லாமே நிர்மலா டீச்சர் தான். கோழிகளுக்குப் … Continue reading குறி இதழ் 32- ஜூன்-செப்டம்பர் 2022 சிறுகதைகள்:

காலச்சுவடு ஜூலை 2022 சிறுகதைகள்:

நரை - மாஜிதா: சொன்னதையே திருப்பிச் சொல்வது என்றாலும் பரவாயில்லை. வெளிநாடுகளில் வசிப்பவர்கள் எழுதுகையில் அவர்களை அறியாமலேயே தமிழின் புனைவெல்லையை விரிவுபடுத்துகிறார்கள். நம் கலாச்சாரத்தில் ஊறிய மனம் வேறு கலாச்சாரத்திற்குள் புகும்போது ஏற்படும் அதிர்ச்சிகள் தவிர்க்க முடியாதவை. அமெரிக்காவில் வசிக்கும் ஆப்பிரிக்கர்கள், ஜப்பானியர்கள், சீனர்கள், கொரியர்கள் இவற்றை நிறையவே தங்கள் கதைகளில் பதிவிட்டிருக்கிறார்கள். மாஜிதாவின் இந்தக் கதை லண்டனில் நடக்கும் கதை, இவர் இதுவரை எழுதியவற்றில் எனக்குப் பிடித்த கதைகளில் ஒன்று. இந்தக் கதையில் பல உள்முடிச்சுகள். … Continue reading காலச்சுவடு ஜூலை 2022 சிறுகதைகள்:

காலச்சுவடு ஜூன் 2022 சிறுகதைகள்:

அவுரி - சத்யஜித்ரே- தமிழில் கண்ணையன் தட்சிணாமூர்த்தி: இந்தக்கதையை ஏற்கனவே தமிழில் படித்த நினைவிருக்கிறது. சத்யஜித் ரேயின் Horror stories, Poeவின் Styleல், ஆனால் இந்திய கலாச்சாரத்தின் பின்னணியில் எழுதப்பட்டிருக்கும். பெங்காலிகள் யாராக இருந்தாலும், என்ன பதவியில் இருந்தாலும் தாகூரை சிலாகிக்காமல் இருக்க மாட்டார்கள். அதனால் உலக அளவில் அவர் புகழ்பெற முடிந்தது. இந்தக் கதையின் ஒரு பகுதி Pure Horror. ஒரு மாளிகையில் தங்கியவுடன், அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு ஆங்கிலேயனின் கடைசிநாட்களை revisit செய்ய … Continue reading காலச்சுவடு ஜூன் 2022 சிறுகதைகள்:

புரவி மே 2022 சிறுகதைகள் :

ஊழியம் - அண்டனூர் சுரா: ஊழியம் என்றால் Serviceஆ? நாம் ஊதியம்வாங்கிக்கொண்டு செய்வதையும் ஊழியம் என்றே சொல்கிறோம். குழந்தைகளைப் பார்க்கும் பெண்கள் தாயாகும் ஆசை கொள்வது இயற்கை. ஆனால் செல்போன் என்னைக் கேட்காமல் வாங்கக்கூடாது என்பது என்ன மனநிலை? கீவ் - கு.கு. விக்டர் பிரின்ஸ்: சாய்நிக்கேஸின் உண்மைக்கதையைத் தழுவி எழுதப்பட்ட கதை. இருந்த இடத்தில் செய்தித்தாள்களைப் படித்து உலகக்கதைகளை எல்லாம் சொல்லும் போட்டி வைத்தால் தமிழர்களே வெற்றி பெறுவார்கள். பதினான்கு சொற்கள் - பா.ராகவன்: சின்னக்கோடு … Continue reading புரவி மே 2022 சிறுகதைகள் :

குறி இதழ்-31 – ஏப்ரல்-ஜூன் 2022 சிறுகதைகள்:

அவர்களிடம் என்னைக் கொல்ல வேண்டாம் என்று சொல்- ஸ்பானிய மூலம் - ஹூவான் ருல்ஃபோ - தமிழில் சித்துராஜ் பொன்ராஜ்: பஞ்சகாலங்களில் மனிதம் செத்துவிடுவதைப் பற்றிப் பல கதைகள் வந்திருக்கின்றன. இந்தக் கதையின் கரு பழிவாங்குதல். ஒரு கொலையைச் செய்தவன், நாற்பது வருடங்களாகப் பயந்து ஒளிந்து திரிந்தது அதற்கான தண்டனையாக முடியுமா? மனைவி, பொருள் எல்லாவற்றையும் இழந்தது கொலைக்குற்றத்தை சரிக்கட்டி விடுமா?இரண்டு நாட்கள் சித்திரவதை அனுபவித்துதுடிதுடித்து இறந்த தந்தையின் கொலைக்குப் பழிவாங்க நினைப்பவன் கொலையாளியின் முகத்தைப் பார்க்காததிலும், … Continue reading குறி இதழ்-31 – ஏப்ரல்-ஜூன் 2022 சிறுகதைகள்:

வியூகம் மே 2022:

சி.விமலனின் பாலசுப்பிரமணியம் குறித்த கட்டுரை ஒரு Nostalgic பயணம். SPB எல்லோருக்கும் பிடித்த பாடகர். கானா பிரபாவின் பாடகன் சங்கதி என்ற நூலை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரை.இவர் மனோரமாவுடன் பாடிய பூந்தமல்லியிலே பாடலைப் பலர் மறந்தேவிட்டார்கள் போலிருக்கிறது. விதி- சரத்விஜேசூரிய- தமிழில் ரிஷான் ஷெரீப்: சிங்களக்கதைகள் தொடர்ந்து ஆச்சரியமூட்டுகின்றன. ஒரு கடிதத்தில் தான் எல்லாமே தொடங்குகிறது. அதில் ஒரு உண்மை பகிரப்படுகிறது. அந்த உண்மையே ஒரு உறவு முறியக் காரணமாக இருந்திருக்கிறது. விக்ரம் இன்றைய சராசரி … Continue reading வியூகம் மே 2022: