புரவி நவம்பர் 2021 சிறுகதைகள்:

பாரதிராஜா படம் - மணி எம் கே மணி: மணியின் வழக்கமான திரையுலகோடு தொடர்பு கொண்ட கதை. பெண்கள் மேல் அகஸ்மாத்தா கைபடுவது போல திரையுலக இரகசியங்கள் வெளிவருகின்றன. அங்கங்கே எடிட் செய்தது போன்ற கதை சொல்லலில் மினி உண்மையில் யாரென்று தெரியாததும், காதல் ஓவியம் பாடல் மறுபடி வருவதும் நன்றாக இருக்கின்றன. கடுகண்ணாவைக்கு ஒரு பயணம்- எம்.டி.வாசுதேவன் நாயர்- தமிழில் ரிஷான் ஷெரீப்: எம்.டி.வியின் கதைகளில் அநேகமாக சுயசரிதைக்கூறுகள் இருக்கும். இதிலும் இருக்கிறது. நிஜவாழ்க்கையிலும் இவரது … Continue reading புரவி நவம்பர் 2021 சிறுகதைகள்:

காலச்சுவடு நவம்பர் 2021 சிறுகதைகள்:

கடைநிலை ஊழியன் - அ.முத்துலிங்கம்: முத்துலிங்கத்தின் கதைகளில் ஒரு மெல்லிய நகைச்சுவை இழையோடும். "சிரிப்பிலேயே லாபம் சம்பாதித்து விடுவார்".அடுத்தது வரிகளைத் தாண்டிய அர்த்தங்கள் அவரது மொழியில் இருக்கும். இந்தக் கதையில் வரும் ஆக்டோபஸ் ஷூ போடுவது போல. கடைநிலை ஊழியன், நிறுவனத்தின் கடைசிப்படியில் இருக்கும் ஒருவரைக் குறித்து நிறுவனத்தின் தலைவர் சந்தர்ப்ப சூழ்நிலையால், அறிந்து கொள்வது. அவசரகதியான உலகத்தில் நமக்கு அனுதினம் உதவியாக இருப்பவரைக் குறித்து நமக்கு எதுவுமே தெரியாது. நம்மைப் பொறுத்தவரை பால்காரர், பேப்பர்காரர் அவ்வளவே. … Continue reading காலச்சுவடு நவம்பர் 2021 சிறுகதைகள்:

தமிழ்வெளி- நவீன கலை இலக்கிய காலாண்டிதழ் – அக்டோபர் 2021- சிறுகதைகள்:

தொலைதல் - சமயவேல்: சுற்றுச்சூழல் குறித்து உலகின் பல நாடுகளில் இருந்தும் கதைகள் வந்து கொண்டே இருக்கின்றன. புக்கர் இறுதிப் பட்டியலில் வந்த Bewilderment சுற்றுசூழல் குறித்த நாவல். தமிழில் சாயாவனம் ஒரு பேராசையால் காடு அழிவது. சமயவேலின் இந்தக் கதை சமகால அழிவுகளைச் சித்தரிக்கிறது. கல்யாணியிடம் நம் கவனம் குவிந்திருக்கும் போது சட்டென்று கதை பாதை மாறுவது நல்லயுத்தி. இயற்கையை எதிர்த்து மனிதனால் ஜெயிக்க முடியாது என்பதைப் பல உலக இலக்கியங்கள் சொல்லி இருக்கின்றன. இயற்கையை … Continue reading தமிழ்வெளி- நவீன கலை இலக்கிய காலாண்டிதழ் – அக்டோபர் 2021- சிறுகதைகள்:

வியூகம் இதழ் 8 அக்டோபர் 2021 சிறுகதைகள்:

சாருலதா - ஜேகே: ஆஸ்திரேலியாவில் நடக்கும் கதை. விபத்து நடந்த பிறகு யோசித்தால், அந்த இடத்தில் Overtake செய்யாதிருந்தால் என்ற சிந்தனை வந்தே தீரும். சபலத்திற்கும் சுயநலத்திற்கும் இடையில் பயணிக்கும் கதை. வாழ்க்கை என்பது இது தான். நிதர்சனம் முகத்தில் அறையத்தான் செய்யும். It’s a dog-eat-dog world. கதைசொல்லியின் சந்தர்ப்பவாதம் ஆரம்பத்தில் இருந்தே தெளிவாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. நகைச்சுவை இவருக்கு இயல்பாக வருகிறது. கொரானா தொற்றையும் கதையில் நன்றாகப் பயன்படுத்தியிருக்கிறார். நல்ல வாசிப்பனுபவத்தை வழங்கிய கதை. கிணற்றுக்குள் … Continue reading வியூகம் இதழ் 8 அக்டோபர் 2021 சிறுகதைகள்:

புரவி அக்டோபர் 2021 சிறுகதைகள்:

அடி - கார்த்திக் பாலசுப்ரமணியன் : ஆறாவது வகுப்பு மாணவனின் பார்வைக் கோணத்தில் நகரும் கதை. குடும்ப சூழ்நிலையால் மெட்ரிகுலேஷனில் இருந்து, அரசுநிதிபெறும் பள்ளிக்கு மாறுபவனின் ஆங்கிலம் சிலருக்கு வசீகரத்தையும், சிலருக்குப் பொறாமையையும் ஏற்படுத்துகிறது. அந்த வயதில் நட்பும் பகையும் சட்டென தோன்றி மறைபவை. சிறுவனின் மனநிலையை (குறிப்பாக பூமாலை டீச்சர் ஆறுதல் சொல்லியவுடன்)தத்ரூபமாகப் பதிந்திருக்கும் கதை. சொர்க்கத்திற்கு ஒரு பயணம்- சுநீல் கங்கோபாத்தியாய்- தமிழில் அருந்தமிழ் யாழினி: மகாஸ்வேதா தேவி என்றே நினைவு, பாண்டவர் சொர்க்கத்திற்கு … Continue reading புரவி அக்டோபர் 2021 சிறுகதைகள்:

குறி ஜுலை- செப்டம்பர் 2021 சிறுகதைகள்:

ஈயைத் துரத்திக்கொண்டு- ஸ்ரீகாந்தா- தமிழில் கே.நல்லதம்பி: ஈ என்ற பெயரில் வெளிவந்த திரைப்படம் இந்தக் கதையின் பாதிப்பில் எடுக்கப்பட்டிருக்கக்கூடும். ஒரு Obsession பற்றியே கதை முழுவதும். கதை 1960ல் வெளிவந்தது என்ற குறிப்பு ஆச்சரியப்படுத்துகிறது. கதையின் முடிவில் ஒரு கவித்துவமும், Dark humourம் சரிவிகிதத்தில் கலந்திருக்கிறது. இதுபோல் கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வரவேண்டிய நல்லகதைகள், நாவல்கள் ஏராளமாக இருக்கின்றன. நல்லதம்பியின் மொழிபெயர்ப்பு வழமை போல் இனிமை. கலெக்டராபீஸ் கண்ணனும் இஸிட் சண்முகமும்- விசாகன்: நகைச்சுவைக்காக எழுதப்பட்ட கதை … Continue reading குறி ஜுலை- செப்டம்பர் 2021 சிறுகதைகள்:

காலச்சுவடு அக்டோபர் 2021 சிறுகதைகள்:

தீயணைப்பு- சித்துராஜ் பொன்ராஜ்: "நெருப்பு' என எழுதினால், அங்கு பொசுங்குகிற நெடி வர வேண்டும்” என்றார் லா.ச.ரா. சித்துராஜின் விவரணையில் அக்னி ஆக்ரோஷமாக எழுப்பும் சத்தமும் கேட்கிறது. ஒரு நிகழ்வு+ ஒரு சபலம்+.ஒரு பயந்தாங்கொள்ளி, இது தான் இந்தக் கதை. சித்துராஜின் கதையில் அனாவசியமான சொல் என்பதே இல்லை. கறுப்புப்புகை பூச்சியாய் மாறுவது, இரவுச்சந்தை குறித்த இடம் என்று மொழிநடையும் கூர்மையாக வந்திருக்கிறது. கதையின் எந்த இடத்திலும் நிதர்சனப் பார்வையை விட்டுக் கொஞ்சமும் நகரவில்லை. எனக்கென்னவோ விமானப் … Continue reading காலச்சுவடு அக்டோபர் 2021 சிறுகதைகள்:

பதி- அகர முதல்வன்

சிறுகதை காலாண்டிதழில் வந்த கதை இது.வழமை போல் அகர முதல்வன் மொழிக்குள் நீந்திக்கரையேறி அதன்பின் கதையைப் படிக்கவேண்டும். "வானத்தின் அடிவயிறு என்னை அழுத்தியது. என்னைக் காப்பாற்றுங்கள் என்று கூக்குரல் எழுப்பினேன். வார்த்தைகள் அவிழ்ந்து உதிர்ந்தன. கல்லுக்குள் அலையெழுப்பும் குருதிக்கடலின் மீது சூரியன் நிமிர்வது மட்டும் தெரிந்தது. என் பாதங்களில் காட்டு மரங்களின் வேர்கள் படர்ந்தன. ஒரு பெண்ணின் கூந்தல் வாசத்தில் கொப்புகள் முளைத்தன. உச்சிக்கொப்பில் வண்ணத்துப்பூச்சியாய் ஆகியிருந்தேன். கைபிடித்தானியம் போல இரண்டு கற்களையும் சுமந்திருந்தேன்" மாயதார்த்தம் போல் … Continue reading பதி- அகர முதல்வன்

சீர் இதழ் 4 – ஜூன்-ஜூலை 2021- தஞ்சை ப்ரகாஷ் சிறப்பிதழ்:

தலையங்கம் 'கனவுகளின் கலைஞன்' இலக்கியம் ஒன்றே உயிர்மூச்சு என்று ப்ரகாஷ் வாழ்ந்ததையும், இருக்கும் போது அவருக்குப் போதுமான இலக்கிய அங்கீகாரம் கிடைக்காததையும் சொல்கிறது. கற்பிதங்கள் ஒருபோதும் கலையாகாது - சி.எம்.முத்து: இன்றைய தலைமுறையில் பலரும் கேள்விப்பட்டிராத இவருடைய P.K.Books பதிப்பகம் வெளியிட்ட, கன்னிமை, கடைத்தெருக்கதைகள், சிறகுகள் முறியும் போன்ற நூல்கள் இன்றும் பேசப்படுகின்றன. முப்பதுவருட நெருங்கிய பழக்கத்தின் நினைவுகளைப் பகிர்கிறார் சி.எம்.முத்து. வாசித்துத் தீராத புத்தகம் - தஞ்சாவூர் கவிராயர்: ப்ரகாஷ் ஒரு இலக்கிய இயக்கமாய் இயங்கியதைச் … Continue reading சீர் இதழ் 4 – ஜூன்-ஜூலை 2021- தஞ்சை ப்ரகாஷ் சிறப்பிதழ்:

காலச்சுவடு குறுங்கதைகள் ஆகஸ்ட் 2021:

காலச்சுவடு குறுங்கதைகளுக்குள் நுழைவதற்கு முன் Lydia Davisன் இந்தக் கதையைப் பார்க்கலாம்: ON THE TRAINWe are united, he and I, though strangers, against the two women in front of us talking so steadily and audibly across the aisle to each other. Bad manners. Later in the journey I look over at him (across the aisle) and he is … Continue reading காலச்சுவடு குறுங்கதைகள் ஆகஸ்ட் 2021: