The Soccer balls of Mr.Kurz by Micheal Mari:

Mari இத்தாலியக் கவிஞர், சிறுகதை ஆசிரியர், நாவலாசிரியர். பல்கலையில் இத்தாலிய இலக்கியத்தைக் கற்பிப்பவர்.இதுவரை மூன்று சிறுகதைத் தொகுப்புகள், பன்னிரண்டு நாவல்கள், இரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இலக்கியம் எவ்வாறு உலகை ஒரு சின்ன வட்டத்தில் கொண்டு சென்று நிறுத்துகிறது என்பதற்கு இந்தக்கதையை உதாரணமாகச் சொல்லலாம். முதலில் சப்னாஸ் ஹாசிம் எழுதிய சென்ரல் யூனியன் கோப்ரட்டி சிறுகதை. சிறுவர்கள் விளையாடுகிறார்கள். பந்து மதிலுக்கு மறுபுறம் விழுந்தால் பந்து திரும்பக் கிடைக்காது. மறுபுறம் இருக்கும் பெண்மணி Sadist. கடைசியில் ஒரு … Continue reading The Soccer balls of Mr.Kurz by Micheal Mari:

The Ferry – Ben Lerner:

பின் கதவையும், முன் கதவையும் தாளிட்டாகி விட்டது. ஜன்னல்களையும் கூட மூடியாயிற்று. இனி காற்றும் உள்ளே நுழைவதற்கில்லை என்று நிம்மதியாகத் தூங்கிய சமூகம் ஒன்று இருந்தது. இப்போது இரவு ஒருமணிக்கு போனில் வந்து விழும் செய்தி என்னவாக இருக்கும்? பார்க்கவா இல்லை வேண்டாமா? ஒரு பெண்ணின் பார்வையில் இருந்து இதை யோசித்துப் பாருங்கள். தினம் சமைத்ததைச் சாப்பிட்டு ஒரு வார்த்தை பேசாது, முகத்தைப் பாராது தூங்கிப் போகும் கணவன். காலை வணக்கம் இரவு வணக்கம், இடையில் சாப்பிட்டீர்களா? … Continue reading The Ferry – Ben Lerner:

ஆவநாழி ஏப்ரல்-மே 2023 சிறுகதைகள்:

ஜாடி மலர்கள் - பா. திருச்செந்தாழை: சிறுகதைகள் ஒரு கதையைச் சொல்லாது, ஒரு நுட்பமான உணர்வைச் சொல்லுகையில், மொழி எவ்வளவு முக்கியமானது என்பது இந்தக் கதையை வாசிக்கையில் தெரிகிறது. Adopted mother உண்மையான மாமியாராக மாறுகையில், அவனால் அசல் மகன் போல் கத்த முடியாது.கதையின் ஆரம்பம் ஒரு உபாசனையில் தொடங்கி, மகிழ்வில் முடிகிறது. பெண்களால் ஒரே அறையில், அருகருகே அமர்ந்திருந்தாலும், மூடிய கதவின் வெளியே நாம் நிற்கும் உணர்வை லேகாவைப் போலவே வழங்க முடியும். சிறு குழந்தை … Continue reading ஆவநாழி ஏப்ரல்-மே 2023 சிறுகதைகள்:

கனலி மார்ச் 2023 சிறுகதைகள்:

அவக் - சரவணன் சந்திரன்: இப்போதெல்லாம் பெண்பிள்ளைகளை விட, ஆண்பிள்ளைகளே அவர்களுக்கென்று குடும்பம் வந்தால் பெற்றோரை எளிதாகக் கைவிடுவது. நான் பெண் குழந்தை ஒன்றைப் பெறவில்லையே என்று பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். பெண்கள் ஒரு மாதத்திலேயே என் வீடு, பெற்றோரிடம், முறையாகச் செய்தால் தானே நமக்கு மரியாதை என்பது போல் சொல்வது காலங்காலமாக இருந்து வருவது தான். ஆண்களை விடப் பெண்கள் சுருதிபேதத்தை எப்போதும் எளிதாகப் புரிந்து கொள்வார்கள். காளியாத்தாளோ இல்லை மாரியாத்தாளோ எப்படியும் கைகொடுப்பாள் என்றிருந்தால் … Continue reading கனலி மார்ச் 2023 சிறுகதைகள்:

அகழ் இணைய இதழ் மார்ச் 2023 சிறுகதைகள்;

ஆயிரத்து முன்னூற்றிப் பதினான்கு கப்பல்கள் - அஜிதன்: எவ்வளவு நீளமாக இருந்தாலும், கதை முடிகையில் அதற்குள் முடிந்துவிட்டதா என்று தோன்றச்செய்யும் எல்லாமே சுவாரசியமான கதைகள் தான். இக்கதையில் சுயசரிதைக் கூறுகள் எவ்வளவு கலந்திருக்கிறது தெரியவில்லை, ஆனால் beautiful and lucid narration. சிறுவர்களின் பார்வையில் உலகம் புதிதாகக் காட்சியளிக்கும். ஏழைகள் என்று தெரிந்தாலும் அவர்கள் வீட்டில் சாப்பிடச் சொன்னதும் தயங்காமல் சாப்பிடும் மனநிலை நம்மனதில் கள்ளம் புகுந்ததும் விலகிவிடுமாய் இருக்கும். பாப்பு குழந்தையாக இருந்தாலும் பெண். அஜி … Continue reading அகழ் இணைய இதழ் மார்ச் 2023 சிறுகதைகள்;

அகழ் பெப்ரவரி 2023 கதைகள்:

நிழலின் அசைவு - விஷால் ராஜா: பெருநோய் மரணம் குறித்த கண்ணோட்டத்தை எல்லோருக்குமே மாற்றியிருக்கிறது. ஜிம்மில் தினம் தவறாது இரண்டு மணிநேரம் உழைப்பவன் மரணிக்க, பெருத்த உடலைத் தூக்க முடியாது விடாது Junk food சாப்பிடுபவன் பிழைத்துக் கொண்டான். இந்த நிலையாமையைக் கதையில் கொண்டு வந்ததோடு, ஒரு பெண் வாலிபர்கள் இடையில் வந்து ஒரு சமநிலையைக் குலைப்பது, Depression எப்படி தன் பிடியை இறுக்கிக் கொண்டே போகும் என்பதும் கதையில் நன்றாக வந்திருக்கிறது. கதை முழுதும் தஸ்தயேவ்ஸ்கியைப் … Continue reading அகழ் பெப்ரவரி 2023 கதைகள்:

ஆவநாழி – பிப்ரவரி-மார்ச் 2023 சிறுகதைகள்:

பிறழ்வு - அரவிந்த் வடசேரி: வேட்டை மனநிலையில் இருப்பவன் பற்றிய கதை. எப்போதுமே கையிலிருப்பது கவர்ச்சியாக இருப்பதில்லை. காப்பிக்கலர் புடவை பணத்திற்குக் கிடைப்பவள் என்று தெரிந்ததுமே காமம் வடிந்து விடுகிறது. வீட்டில் இருக்கும் பெண் கதாபாத்திரம் முக்கியமானது. அவனது அத்தனை தேடல்களிலுமிருந்து விலகி எதிர்துருவத்தில் இருக்கும் பெண். எந்தவித ஆரவாரமுமில்லாமல் சொல்ல வேண்டியதை சொல்லி முடிக்கும் கதை. நன்றாக வந்துள்ளது அரவிந்த். வாழ்த்துகள். கும்பசாரம் - கு.கு.விக்டர் பிரின்ஸ்: Who dun it சிறுகதை. சிறுவன் மூலமாக … Continue reading ஆவநாழி – பிப்ரவரி-மார்ச் 2023 சிறுகதைகள்:

தமிழினி ஜனவரி 2023 சிறுகதைகள்:

யாதவப் பிரகாசர் - சரவணன் சந்திரன்: ஹாக்கி விளையாட்டின் நுணுக்கங்களை மையமாகக் கொண்ட கதை. வேறு யாருக்கும் தெரிவதற்கு முன்னால் குருவுக்கு சீடனின் திறமை தெரிந்து போகிறது. குரு சற்றே பாதையிலிருந்து கீழிறங்கி விட்டு, மீண்டும் பிரதானசாலைக்கு வந்து சேர்வது அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது. தக்கையின் மீது நான்கு கண்கள் தாத்தா நினைவுக்கு வருகிறார். https://tamizhini.in/2023/01/31/%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d/ அனாகதநாதம் - செந்தில் ஜெகன்நாதன்: விரும்பிய பெண்ணின் மீது ஏற்படும் disenchantment அப்படியே நாதஸ்வரத்திற்கு மாறிவிடுகிறது. காணுமிடமெங்கும் அவள் சிரிப்பு என்பது … Continue reading தமிழினி ஜனவரி 2023 சிறுகதைகள்:

கனலி டிசம்பர் 2022 சிறுகதைகள்:

பார்த்திருத்தல் - வண்ணதாசன்: அறுபது வருடங்களுக்கு மேலாக எழுதிக் கொண்டிருக்கிறாரா வண்ணதாசன்! எழுத எழுத காப்பி டிக்காஷன் மூன்றாவது, நான்காவது என்றாவது போலத் தொடர்ந்து எழுதினால் ஆவதென்பது இவருக்கு நேரவேயில்லை. அதே நுணுக்கம். இந்தக் கதைக்குள் புகுந்து வேடிக்கை பார்ப்பவனாக அந்த மூவர் முகத்தை ஒருதடவை பார்க்கும் ஆசை எழுகிறது. கதை என்று எதுவுமில்லை, ஆனால் இது நல்ல கதை.எனக்கும் மற்ற வாழைப்பழங்களை விட நாட்டுப்பழமும், சிறுமலைப்பழமும் பிடிக்கும். https://kanali.in/parthiruthal/ ஏது எதங்கு - பெருமாள் முருகன்: … Continue reading கனலி டிசம்பர் 2022 சிறுகதைகள்:

கலகம்- டிசம்பர் 2022 சிறுகதைகள்:

பொம்மைகளின் உரையாடல்கள் - கே.ஜே.அசோக்குமார் : புதுமைப்பித்தனின் துரோகம் கதையில் வேணு புலம்புவான். என்னுடைய ஒரே ஆடையான இலக்கியஉடுப்பைப் பறித்து என்னை அம்மணமாக்க முயல்கிறான் என்று. அன்னம் அதையே மாலினிக்குச் செய்கிறாள். மூன்று பெண்களின் ஆட்டத்தில் பாஸ்கரன் பொம்மை. சாமியாடுவதை சாதகமாக்கிக் கொள்வது எப்போதுமே நடப்பது. இது பொம்மைகளின் கதையல்ல, மனிதர்களின் கீழ்மை பற்றிய கதை. நன்றாக வந்திருக்கிறது. வாலெயிறு ஊறிய நீர் - அகராதி: அகராதியின் சிறுகதைகளில் முன்னைவிட நல்ல முன்னேற்றம் தெரிகிறது. கால மயக்கத்தைத் … Continue reading கலகம்- டிசம்பர் 2022 சிறுகதைகள்: