சொல்வனத்தில் வெளிவந்த அனுராதா கிருஷ்ணசாமியின் மொழிபெயர்ப்புக் கதைகள்:

நான் சிறுவயதில் இருந்தே எந்தப் பத்திரிகையிலும் ஒரு தொடர்கதை கூடப் படித்ததில்லை. காத்திருப்பில் பொறுமை இருந்திருந்தால் சில காதல்கள் கூட கைகூடியிருக்கும். இப்போது ஏராளமான நூல்களைத் தூங்கவைத்துவிட்டு வாரஇதழ், மாதமிருமுறை எதையும் வாசிப்பது மித்ரதுரோகம் போல் மனதை உறுத்துகிறது. எதனால் சொல்வனத்தை மட்டும் தவிர்க்கிறேன் என்று இப்போது நிறையப்பேர் கேள்வி கேட்பதால் இந்த விளக்கம் அவசியமாகிறது. அனுராதாவின் மொழிபெயர்ப்புகளில் என்னை முக்கியமாகக் கவர்ந்தது அவர் மொழிபெயர்க்கத் தேர்ந்தெடுக்கும் இந்திய எழுத்தாளர்கள், அநேகமாகப் பெண் எழுத்தாளர்கள். ஆஷா பூர்ணாதேவி, … Continue reading சொல்வனத்தில் வெளிவந்த அனுராதா கிருஷ்ணசாமியின் மொழிபெயர்ப்புக் கதைகள்:

வல்லினம் மே 2022 சிறுகதைகள்:

மேலங்கி - ஆங்கில மூலம் ஐசக் தினெசென்- தமிழில் சுசித்ரா: Infidelity மற்றும் அதனால் ஏற்படும் குற்ற உணர்வே கதை. ஏஞ்சலோவின் பார்வையிலேயே கதை நகர்கிறது. ஒரே சம்பவத்தை ஒட்டி வேறுவேறு கனவுகள் காண்கிறான். அல்லோரியின் மௌனமே இந்தக் கதையின் மிக நுட்பமான விஷயம்.லுக்ரீசியா தவறுக்குத் துணிந்தவள். அவள் கனவில் வந்தது போல் பேர் சொல்லி அழைக்காமல் இருந்திருக்கலாம். கணவன் முகத்தைப் பார்க்கும்வரை பேசாமல் இருந்திருக்கலாம். அல்லோரிக்குக் கடைசிவரை தெரியாமல் போயிருக்கலாம்.அவர் ஏஞ்சலோவின் கன்னத்தில் முத்தமிடுகிறாரே! ஆனால் … Continue reading வல்லினம் மே 2022 சிறுகதைகள்:

காலச்சுவடு ஏப்ரல் 2022 சிறுகதைகள்:

கிழிவு -. கலாமோகன்: கலாமோகனின் கதைகள் Fantasyக்கு கதை வடிவம் கொடுக்க முயல்பவை. நான் வாசித்த அநேக கதைகளில் காணும் பெண்களை எல்லாம் கூடும் வயதான பிம்பம் ஒன்று வந்து போகும். அவரது எழுத்தில் அலைபாயும் உணர்வுகளைக் கடத்த முயலும் சற்றே பிறழ்ந்த மனம் இந்தக் கதையிலும் வருகின்றது. சொந்த நாட்டில் அகதியாக நடத்தப்படும் நிலை யாருக்கும் வரக்கூடாது. சிங்களவரும் தமிழரும் ஒருவரை ஒருவர் பார்த்து பயப்படுகின்றனர், ஒருவருக்கொருவர் உதவுகின்றனர். எல்லாம் OK. வாசித்து அந்த நேரத்தில் … Continue reading காலச்சுவடு ஏப்ரல் 2022 சிறுகதைகள்:

தமிழினி ஏப்ரல் 2022 சிறுகதைகள்:

சன்னக்கட்டை - ஆழிவண்ணன்: ஒரே தொழிலில் இருப்பவர்கள் பொறாமைப் படுவது ஒரு உளவியல். உடன் பிறந்தோரில் ஒருவர் அந்தஸ்து உயர்ந்தால் மற்றவர்களது பொறாமைக்கணைகள் உடன் பாயும். யாரும் அம்பானியைப் பார்த்துப் பொறாமைப்படப் போவதில்லை. தேரையும், சன்னக்கட்டையையும் குறித்து இவ்வளவு விளக்கமாக இப்போது தான் வாசிக்கிறேன். கடைசி இரண்டு பத்திகளுக்கு முன்னே "மிக அருகில் வந்து நின்றது' என்பதுடன் கதை முடிந்து விடுகிறது. மானு மோராஸ் - சரவணன் சந்திரன்: மாய யதார்த்தம், பேண்டஸி, Hysterical realism போன்ற … Continue reading தமிழினி ஏப்ரல் 2022 சிறுகதைகள்:

யாவரும் ஏப்ரல்-மே 2022 சிறுகதைகள்:

ஜில்லா விலாஸம் - கார்த்திக் புகழேந்தி: அண்மைக்கால சரித்திரத்தை பின்னணியாக வைத்துக் கதை எழுதுவது மிகவும் சிரமம். இதில் கூட வ.வு.சியின் கைது 1908 எனவே மற்ற தேதிகளில் குழப்பம் இருக்கிறது.தேதிகளே இல்லாமல் கதையை எழுதியிருக்கலாம். இதைவிட்டுப் பார்த்தால் இந்தக்கதை ஒரு காலகட்டத்தின் வாழ்க்கையை அப்படியே கொண்டு வந்திருக்கிறது. ஆங்கீலேய ஆட்சியில் இருந்து தி.மு.க முதலாவதாகப் பதவியேற்ற காலம் வரை நகரும் கதையில் எப்போதோ செய்த mischief கண்டுபிடிக்கப் படுகிறது. தெளிவாக தங்கு தடையின்றி நகரும் கதை. … Continue reading யாவரும் ஏப்ரல்-மே 2022 சிறுகதைகள்:

வனம் ஏப்ரல் 2022 சிறுகதைகள்:

அன்னையாதல் - சுதா ஸ்ரீநிவாசன்: மனம் திருந்திய மைந்தனுக்கு நடக்கும் உபச்சாரங்களைப் பார்த்து மூத்த மகன் எரிச்சலடைவான். கடைசியில் அன்பால் அண்ணன் தம்பி ஒன்று சேருவார்கள். பைபிள் காலத்திய கதை. அண்ணன் தம்பிக்குப் பதிலாக அக்கா தங்கை, அவர்கள் அண்ணன் தம்பியை மணப்பது, கடைசியில் மனம் திருந்துவது இந்தக்கதை. பலகை அடித்த சாளரம் - அம்புரோஸ் பியர்ஸ் - தமிழில் ராகவேந்திரன்: Horror story. ஒரு சின்னக்கதையை இவ்வளவு Disturbing ஆக எழுத முடியுமா! கதைத் தலைப்பின் … Continue reading வனம் ஏப்ரல் 2022 சிறுகதைகள்:

படைப்புத்தகவு இதழ் 47 சிறுகதைகள்:

சிறுமி - ஜமைக்கா கின்கெய்ட் - தமிழில் கார்குழலி: அம்மா, மகளுக்கு அளிக்கும் அறிவுரைகளே மொத்தக் கதையும். இந்தியாவில் நடுத்தரவர்க்கக் குடும்பத்தில் எழுபதுகளில் இவற்றை அடிக்கடி கேட்டிருக்கலாம். எப்படி எல்லோரும் மதிக்கும் பெண்ணாக நடப்பது, வீட்டோ வேலைகள், ஆண்களிடமிருந்து விலகி இருத்தல் ஆகியன. சிறுமியின் கேள்வி தான் கடைசி வரி. எந்த நாட்டிலும் நடுத்தரவர்க்க பயம் போவதில்லை. நல்ல மொழிபெயர்ப்பு. ஒளிர் - ஐ.கிருத்திகா: நடுத்தர வயதை நெருங்குகையில் ஏற்படும்அலைக்கழிப்பை சொல்லும் கதை. நான் இன்னும் காலாவதியாகிவிடவில்லை … Continue reading படைப்புத்தகவு இதழ் 47 சிறுகதைகள்:

ஆவநாழி ஏப்ரல்-மே சிறுகதைகள்:

பதி - கமலதேவி: Simpleஐன Story ஆனால் ஒரு உளவியல் அதில் ஒளிந்திருக்கிறது. பெண்களுக்கு மகனுக்குப் பிறகே கணவன். சிலர் அதை வெளிப்படையாகக் காட்டுகிறார்கள், பலர் அதை மறைத்துக் கொண்டு அவர் தான் எனக்கு எல்லாம் என்கிறார்கள். வேண்டாத விருந்தாளி போல் குடிபுகுந்து எல்லோரது மனதையும் கவர்ந்த தாத்தா. பொம்பளைப் பிள்ளைய கால் செருப்பா நினைக்கிறவனோட எதுக்கு வாழனும்?தாத்தா அதிக நாட்கள் உயிரோடு இருக்க மாட்டார் என்றே எனக்குத் தோன்றுகிறது. கடவுளுக்கென ஒரு மூலை- கன்னட மூலம்- … Continue reading ஆவநாழி ஏப்ரல்-மே சிறுகதைகள்:

வல்லினம் மார்ச் 2022 சிறுகதைகள்:

பந்தல் - சப்னாஸ் ஹாசிம்: சப்னாஸின் கதையுலகம் நம்மில் பலர் அறியாதது. அந்த உலகத்திலேயே சொல்லப்படாத கதைகள் இன்னும் பல நூறு இருக்கலாம். இவரது மொழிநடையும், வர்ணனைகளும் சேர்த்து கதைக்குள் சிறிதுநேரம் அடைத்து நம்மை வெளிவிடுகின்றன. எல்லா மதங்களிலும் தீவிரவாதம், மற்றவர்களது வாழ்க்கையைப் புரட்டிப் போடுகின்றது. https://vallinam.com.my/version2/?p=8320 பொந்து-;வைரவன் லெ.ரா: மண்ட்டோ பாணியில் ஒரு கதை. விபச்சாரியிடம் இருக்கும் Possessiveness, ஊர் மொத்தமும் அடிமையாவது, காவலர்களின் ஓசி காஜி, மேரியின் வித்தியாசமான ஊமைத்தனம் என்று சுவாரசியத்திற்குப் பஞ்சமேயில்லாத … Continue reading வல்லினம் மார்ச் 2022 சிறுகதைகள்:

தமிழினி பிப்ரவரி 2022 சிறுகதைகள்:

கேன்வாஸ் - கார்ல் மார்க்ஸ்: ஓவியர்கள் புறக்காட்சிகளை ஒரு கேன்வாஸில் கற்பனை செய்வது இயல்பு. கதைப்படி முரளிதரன் ஓவியன் இல்லை.எல்லாவற்றையும் அவன் கேன்வாஸிற்குள் கொண்டு வருவதில் தான் சிக்கலே ஆரம்பிக்கிறது. இதோ மேகலா தற்கொலை செய்யுமுன் அவள் முகபாவம்…. ஒரு கேன்வாஸ். அவள் உடலை சிதைமூட்ட எடுத்துப் போகிறார்கள்….. ஒரு கேன்வாஸ்.கார்ல்மார்க்ஸின் மொழிநடையும், கதைசொல்லும் யுத்தியும் சிறப்பாக வந்திருக்கிறது. கடைசியாக ஒரு encounter கதைக்குப் பல பரிமாணங்களைக் கொடுக்கின்றது. ஒத்தைத் தறி முதலியார்- எம்.கோபால கிருஷ்ணன்: பல்லடம் … Continue reading தமிழினி பிப்ரவரி 2022 சிறுகதைகள்: