ஊசித்தட்டான்களும் ஆறாவது விரலும் - வண்ணதாசன்: ஊசித்தட்டான் எந்த அவசரமுமில்லாமல் ஒரு நீலக்கோட்டை இழுத்து, கடந்தகாலத்தையும் நிகழ்காலத்தையும் இணைக்கிறது. பொருட்கள், இடங்கள் பழைய நினைவுகளைக் கூட்டிவருவது யாருக்குமே தவிர்க்க முடியாதது. பிரேமா மட்டுமல்ல, பெண்களில் பெரும்பாலோர் பழையது எதையும் மறப்பதில்லை. எல்லாமே இருந்தாற்போல் இருந்து மாறும் வாழ்க்கையில் எதைத்தான் நிரந்தரம் என்று சொல்ல முடியும். ஆறாவது விரல் முதலில் பார்க்கையில் அசூயையா என்பது கூட வெளிக்காட்டாமல் அடங்கிக் கிடக்கிறது. சைக்கிளைக் கொடுத்து என்னவாகப் போகிறது. பிரேமாவிற்கு ஒரு … Continue reading கனலி இதழ் 25- ஆகஸ்ட் 2022 சிறுகதைகள்:
தமிழினி ஆகஸ்ட் 30, 2022 சிறுகதைகள்:
அரைப்பனை- சரவணன் சந்திரன்: சாமியாடி பற்றிய கதைகள் ஏராளம். சொல்லச்சொல்ல சுவாரசியமானவை. சுடலைக்கு ஆதரவு எவ்வளவு இருந்திருக்கிறதோ அவ்வளவு வெறுப்பும் சம்பாதித்திருக்கிறார். கடைசிவரை சுடலை குறித்த மர்மத்திரை விலக்கப்படாமலேயேஇருக்கிறது. மயில்சாமி சொல்வதில் பாதிப் பொய், மீதி உண்மை இருக்கலாம். எது எப்படியானாலும் அந்த கடைசிப் புறக்கணிப்பு மட்டும் ஊர்க்காரர்கள் பலர் பார்த்ததால் நிஜம். வெறுப்பு மண்டிக் கிடந்த சுடலையால் அதைத் தாங்க முடியாமல் போயிருக்க வேண்டும். சிறப்பாகச் சொல்லப்பட்ட கதை. https://tamizhini.in/2022/08/30/%e0%ae%85%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88/ எட்டு நிமிடங்கள் - இந்திரா … Continue reading தமிழினி ஆகஸ்ட் 30, 2022 சிறுகதைகள்:
கனலி ஜூலை 31,2022 சிறுகதைகள்:
ஊறா வறுமுலை - ஜா.தீபா: பால் ஊறாத முலை. நான் வாசித்த வரையில் தீபாவின் Best இந்தக்கதை. கனவும் நினைவும் கலந்து அரைமயக்க சாயலில் ஆரம்பிக்கும் கதை, பாண்டஸி கூறுகளை உள்வாங்கிப்பின், யதார்த்தத்தில் முடிகிறது. குதிரை பௌருஷத்தின் குறியீடு. திரௌபதி பேசுவதை பேச்சியால் கேட்க முடிவதில்லை, ஆனால் மாயா கேட்கிறது. மாயாவிற்காகவே அவள் பேசுகிறாள். அந்தப் பேச்சில் தான் எத்தனை அர்த்தங்கள்! Yugantaவில் கார்வே, திரௌபதி அர்ச்சுனனை அதிகம் காதலித்ததற்குப் பதிலாக பீமனைக் காதலித்திருக்க வேண்டும் என்று … Continue reading கனலி ஜூலை 31,2022 சிறுகதைகள்:
கலகம் ஆகஸ்ட் 2022 சிறுகதைச் சிறப்பிதழ்:
பிறிதொரு ஞாயிறு - ஜெகநாத் நடராஜன்: காத்திருப்பில் காதல் வருவது எப்போதும் நிகழ்கிறது. விவாகரத்து ஆன விஷயத்தை மாஸ்க் அணிந்த Strangerஇடம் எதற்கு சொல்கிறாள்? ஒழிக, உங்கள் துப்பாக்கிகள் - கௌதம சித்தார்த்தன்: பின் நவீனத்துவக் கதை சொல்லலில் ஒரு மேஜிக் இந்த சிறுகதை. Jump Cut methodல் கதை அழுத்தமான ஒரு உணர்வைப் பதித்துச் செல்கிறது. அதரச்சிணுங்கல், ஆஹா. கணேஷ்பீடி - மனுஷி: சிறுமியின் பார்வையில் நகரும் கதை. மௌனங்களின் ஓலம் சிலநேரங்களில் செவிப்பறையில் பலமாக … Continue reading கலகம் ஆகஸ்ட் 2022 சிறுகதைச் சிறப்பிதழ்:
ஆவநாழி- இதழ் 13- இரண்டாம் ஆண்டு சிறப்பிதழ்- சிறுகதைகள்:
லாட்டி - ஷிவானி - தமிழில் அனுராதா கிருஷ்ணசாமி: அனுராதாவின் கதைகள் தேர்வு எப்போதும் சிறப்பாக இருக்கும். இம்முறை தவறி விட்டது. குஜராத்தில் பள்ளிச்சிறுமிகள் போல் இருக்கும் பெண்கள் தலையில் அத்தனை வீட்டு வேலைகளையும் சுமத்துவதைப் பார்த்திருக்கிறேன். அனுதாபத்தைக் கோரி எழுதப்பட்ட கதை போல் தெரிகிறது. காப்டன் பானோவைக் கவனித்தது போல் எத்தனை கணவர்கள் கவனிப்பார்கள்? நூறு பிள்ளைகள் பெற்றவள் - எஸ். செந்தில் குமார்: நல்லம்மா ஒரு வித்தியாசமான கதாபாத்திரம். கோபம் கண்ணை மறைக்கையில் எதிரில் … Continue reading ஆவநாழி- இதழ் 13- இரண்டாம் ஆண்டு சிறப்பிதழ்- சிறுகதைகள்:
தமிழினி ஜூலை 2022 சிறுகதைகள்:
வீழ்ச்சி - பா.திருச்செந்தாழை: வாழ்ந்தவர் கெட்டால் கதைகளில் வருவதெல்லாம் இதிலும் வருகிறது, ஆனால் இங்கே குடும்பம் திரும்ப மேலேவந்து விடும் என்பதற்கான அறிகுறிகள், ஒரு வார்த்தை கூட கதையில் வராமலேயே ஒளிந்திருக்கின்றன. அம்மாவிற்கு இருக்கும் Instinctஉடன் ஆரம்பிக்கும் கதையில் சகுந்தலா பலசரக்குக் கடையை மீட்டெடுக்கும் பழையகதை காரணமாகச் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு தலைமுறையில் ஒருவர் கெட்டி அடுத்த தலைமுறை தத்தி என்பது மாறிமாறி வரும் போலிருக்கிறது. சிவபாலனிடம் சகுந்தலாவின் ரத்தம் அதிகம் ஓடுகிறது." ஒவ்வொரு அலைக்கும் கைப்பிடி மணலாகபறிபோய்க் … Continue reading தமிழினி ஜூலை 2022 சிறுகதைகள்:
வனம் இதழ் 12 ஜூலை 2022 சிறுகதைகள்:
வலசை - கார்த்திக் பாலசுப்ரமணியன் : கார்த்திக்கின் கதைகள் பெரும்பாலும் அடங்கிய தொனியில், தேர்ந்தெடுத்த வார்த்தைகளின் கூர்மையில், நுட்பமான விசயங்களைப் பேசுவதால் அதிக எண்ணிக்கை கொண்ட வாசகர்வட்டத்தை நம்பி எழுதப்படுவதில்லை என்று தோன்றுகிறது. ஆஸ்திரேலியா என்றில்லை, எங்கெல்லாம் நம் எண்ணிக்கை அதிகம் இருக்கிறதோ அங்கெல்லாம் நாம் ஸ்டார்லிங் தான். வெளிநாட்டவர் பார்வையில் அந்தப்பறவையைப் போல நாம் ஒரே இடத்தில் குவிந்திருப்பது போல் தோன்றினாலும், நமக்கிடையேயான ஆயிரம் உட்பிரிவுகள் வெளிப்பார்வைக்குத் தெரிவதில்லை. இந்து- முஸ்லிம் என்ற பரஸ்பர அசூயை … Continue reading வனம் இதழ் 12 ஜூலை 2022 சிறுகதைகள்:
அகழ் ஜூலை 2022 சிறுகதைகள்:
வருடல் - நிரூபா: மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு நிரூபா எழுதிய கதை இது என்று நினைக்கிறேன்.சிறுவயதில் ஆனுபவித்த/பார்த்த பாலியல் வல்லுறவுகள் பெண்களிடம் பெரும்பாலும் எப்போதுமாகத் தங்கி விடுகின்றன. சிலருக்கு எப்போதாவது திடீரென்ற முழிப்பு பின் தூக்கமின்மை இவற்றுடன் போய்விடுகிறது. பலருக்கு Nightmares தொடர்கதை. அமெரிக்கா போன்ற திருமணத்திற்கு முன் பலருடன் பயமில்லாமல் உறவுகொள்ளும் கலாச்சாரத்தில் இருந்து வந்த பெண்களுக்கே Rape என்பது திரும்பிவரமுடியாத நிலைக்கு கொண்டு செல்கிறது. திருப்தியான தாம்பத்ய உறவுக்கு ஏங்கும் அதேநேரம் பழைய … Continue reading அகழ் ஜூலை 2022 சிறுகதைகள்:
வல்லினம் ஜூலை 2022 சிறுகதைகள்:
உடன் இருத்தல் - யுவன் சந்திரசேகர்: ஒரு இழப்பு மொத்தமாகப் பாதிக்கையில், தோற்றமயக்கத்தை மனம் வலிய ஏற்றுக் கொள்கிறது. முழுக்கவே புலிகளைப் பற்றிய கதையில் அந்த சோகம் நீறு பூத்த நெருப்பாக கண்ணுக்குப் புலப்படாமல் பதுங்கியிருக்கிறது. தற்செயலாக சந்திக்கும் ஒருவர் தன் கடந்தகாலத்தைப் பகிர்வது Haruki Murakami கதைகளில் அடிக்கடி நடப்பது. வில்லியம்ஸிடம் ஆடியபாதத்தைக் காண்பது போல, எனக்கு முரகாமியை யுவன் மொழிநடையில் படித்த உணர்வு. கதைக்குள் கதையாக Fable சாயலில் ஒரு சம்பவம் வருகிறது. கண்கள் … Continue reading வல்லினம் ஜூலை 2022 சிறுகதைகள்:
யாவரும் ஜூன்-ஜூலை 2022 சிறுகதைகள்:
கலகம் பிறக்குது - கார்த்திக் புகழேந்தி: குறைந்த பட்சம் ஒரு குறுநாவலாகவாவது எழுதியிருக்க வேண்டிய கதை. 1800ல் இங்கிலாந்து, Wales, ஸ்காட்லாந்து எல்லாம்சேர்ந்த ஜனத்தொகை 10.5 மில்லியன். அதே வருடத்தில் இந்தியாவின் ஜனத்தொகை 160 மில்லியன். போரில் வெல்ல மக்கள் எண்ணிக்கை முக்கியகாரணியல்ல, ஆனால் ஒருநாட்டை ஆக்கிரமித்துத் தொடர்ந்து ஆட்சிசெலுத்த அது முக்கியம். எப்படி அவர்களால் 200 ஆண்டுகள் முடிந்ததென்றால் அதற்கு முக்கிய காரணம் நம்மவர்களின் துரோகமும், நமக்குள் அடித்துக் கொண்டதும் தான். ஒரு கலகத்தை கதையாக்கி … Continue reading யாவரும் ஜூன்-ஜூலை 2022 சிறுகதைகள்: