தமிழினி ஜனவரி 2022 சிறுகதைகள்:

காக்கைப்பொன் - திருச்செந்தாழை: ஒரு சிறுகதைக்குள் ஒரு நகரத்தில் வாழும் ஒரு சமூகத்தின் வாழ்க்கையை எளிதாகக் கொண்டு வந்திருக்கிறார் திருச்செந்தாழை.எந்நேரமும் கேட்கும் தறியின் சத்தம் காதுகளுக்கும், இருண்ட வீடுகளின், வெளியில் பார்த்தால் அடையாளம் கண்டுகொள்ளமுடியாத, வெளிறிய முகங்கள் மனக்கண்ணிலும் வந்து போயின. ஆரம்பத்தில் சௌராஷ்டிரா மக்களில் ஒரு பிரிவு ஐயர் என்று போட்டுக் கொள்வதில் இருந்து அத்தனை செய்திகளும் தத்ரூபம்.சித்திரைத் திருவிழாவின் பரபரப்பும் அது முடிந்து மதுரை அக்கடாவென்று நிம்மதியாவதும் அழகாக வருகின்றன. இரண்டுமுறை ஓடிப்போனவளை இணங்க … Continue reading தமிழினி ஜனவரி 2022 சிறுகதைகள்:

இருவாட்சி இலக்கியத் துறைமுகம்- பொங்கல் சிறப்பு வெளியீடு 13- சிறுகதைகள்:

கலைந்தது கனவு - கே.எஸ்.சுதாகர்: மீண்டும் கோகிலாவில் ஸ்ரீதேவி இப்படித்தான் அவனையாவது திருமணம் செய்திருக்கலாம் என்று வெதும்புவார். பார்வை ஒன்றே போதுமே - ஏ.ஏ.ஹெச்.கே.கோரி: சர்ரியல் கதையா ஆனா கோர்வையா வருதே. அடித்தல் திருத்தல் - செல்வராஜ் ஜெகதீசன்: அலுவலகம் முடியும் நேரத்தில் எதையாவது எடுத்துக் கொண்டு, எதிரிலிருப்பவர் நெளிவதைப் பார்த்து திருப்தியடையும் Minimal Sadism நிறையப்பேருடன் இருக்கிறது. சிறுவர்கள் எறும்பைத் தொல்லை செய்வது போல. இத்துடன் சீனு ஒரு சுவாரசியமான பாத்திரம். இயல்பான கதையாக வந்திருக்கிறது. … Continue reading இருவாட்சி இலக்கியத் துறைமுகம்- பொங்கல் சிறப்பு வெளியீடு 13- சிறுகதைகள்:

தமிழ்வெளி காலாண்டிதழ் 5 – ஜனவரி 2022 சிறுகதைகள்:

தமிழ்வெளி இதழை முழுதும் படித்த உடன் தோன்றிய சிந்தனை, இது போல் நான்கைந்து இதழ்கள் தமிழில் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்பது தான். பொருளாதார ரீதியாக பல சோதனைகள் இருக்கிறது என்றாலும் Nidhi Agerwalஐப் பார்த்து மோகிப்பது போல், நடைமுறையில் சிரமம் என்று தெரிந்தே விரும்புகிறோம். நேசமிகு சுவர்கள் - அமுதா ஆர்த்தி: இது தான் நான் வாசிக்கும் இவருடைய முதல்கதை. கதைக்கரு என்றில்லாமல் ஒரு உணர்வை வெளிப்படுத்த, கதைகளைப் பயன்படுத்தும் முறை சமீபகாலமாக அதிகரித்திருக்கிறது. … Continue reading தமிழ்வெளி காலாண்டிதழ் 5 – ஜனவரி 2022 சிறுகதைகள்:

தமிழினி நவம்பர் 2021 சிறுகதைகள்:

நிரபராதம்- மயிலன் ஜி சின்னப்பன்: மிட்டாயைக் கையில் வாங்கிய குழந்தை, பிசுபிசுப்பு கையை உறுத்தும் வரை வைத்திருந்து சாப்பிடுவது போல, காலையில் பார்த்தபின்னும் கொஞ்சம்நேரம் கழித்துப் படிக்கலாம் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். கதையைப் படித்ததும் நான் எடுத்த முடிவு சரியெனத் தெரிந்தது, மயிலன் ஏமாற்றுவதில்லை.நெருங்கிய மருத்துவர்கள் சொல்லிக் கேட்டதுண்டு, " நான் சற்று முன்னால் போயிருந்தால்……..". ஒரு குற்ற உணர்வை, உறுத்தலைச் சொல்லும் கதையாக இது மாறவில்லை. மனம் அதை வடிக்க ஒரு வடிகாலைத் தேடுவதும், … Continue reading தமிழினி நவம்பர் 2021 சிறுகதைகள்:

ஓலைச்சுவடி ஜனவரி 2022 சிறுகதைகள்:

சடம் - ஜெயமோகன்: ஒரே நேரத்தில் எழுதப்பட்ட இரண்டு காவல்துறைக்காரர்களின் கதைகள். இரண்டும் எதிரெதிர் திசையில் பயணிக்கின்றன. சவடால் போலிஸே இரண்டிலும் இருக்கும் ஒற்றுமை. ஜடம் என்றால் அன்னமயலோகம் என்கிறான் சிஷ்யன். ஆனால் ஜடம் என்பது வேறு அர்த்தத்தில், கதை முழுக்க வருகிறது. சிஜ்ஜடம், சித்தத்தை ஜடம் ஆட்கொள்வது.கடைசிவரியில் கதையை U turn செய்யும் வித்தை தெரிந்தவர் ஜெயமோகன். சுடலைப்பிள்ளை ஒரு சுவாரசியமான கதாபாத்திரம். https://lm.facebook.com/l.php?u=https%3A%2F%2Folaichuvadi.in%2Fstory%2Fsadam-jeyamohan-story%2F&h=AT1g0nrTdIBHixLwceB16fa6nUBBTyHUVQlG3fFELmTfWugdxobsdszUTumZJC9csZKa3G6vZOTn5xH7RHeRBqSlKGn5dE7c6dOWFW-5GOAKRS9Eg2JttJ2VpuMCy-G1Bao-xqvYz9Zb-aceLMaX தொற்று -வா.மு.கோமு: கோமுவின் கதை ஒரு கிராமத்தில் மனிதவாழ்வு அழிந்து … Continue reading ஓலைச்சுவடி ஜனவரி 2022 சிறுகதைகள்:

வல்லினம் ஜனவரி 2022 சிறுகதைகள்:

வேதாளம் - ஜெயமோகன்: "சின்னப்பிள்ளைகள் தூக்கச் சொல்லி செல்லமாகக் கூப்பிடுவது போல" என்ற வரி ஏற்படுத்தும் அதிர்வலைகளுக்கு எல்லையே இல்லை. துப்பாக்கியை வேதாளம் என்றும், அதைத் தூக்கிக் கொண்டே நடந்து சலித்த சடாட்சரம் என்று நம் கவனத்தை முழுதுமாகத் துப்பாக்கிக்கு திருப்பிவிட்டு, நாம் சுதாரிப்பதற்குள் கதை திடீரெனத் திரும்புகிறது. Billஐ செட்டில் பண்ணுவதில் இருக்கும் சுணக்கம், போலிஸ்காரரின் அவலவாழ்வு, அது வெளியே தெரியாமல் வடிவேலு போல் மிரட்டிப்பார்ப்பது, கமலம்மையுடன் நடத்தும் இரட்டை அர்த்த உரையாடல் எல்லாம் கலைந்து … Continue reading வல்லினம் ஜனவரி 2022 சிறுகதைகள்:

காலச்சுவடு கதைகள் -ஜனவரி 2022

நான் கொன்ற பெண் -கன்னடத்தில் ராகவேந்த்ர காசனீசா - தமிழில்: கே.நல்லதம்பி முழுக்கவே Unreliable narrator சொல்லும் கதைகள் தமிழில் அரிது. நேரடியாகச் சொல்லும் கதைகளிலேயே, விளங்காவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் ஆசிரியர் கதையின் இடையில் விளக்கம் சொல்வதுண்டு. இந்தக் கதையின் Narrator ஒரு மனச்சிதைவு அடைந்தவர். பூனைகள் உண்மையில் இல்லை அவை Metaphor ஆகவே முழுதும் வருகின்றன. Lust, possessiveness, Jealous எல்லாமே மிகவும் அடங்கிய Toneல் கதைமுழுக்கச் சொல்லப்படுகின்றன. கதைசொல்லி தான் நம்பவிரும்புவதையே … Continue reading காலச்சுவடு கதைகள் -ஜனவரி 2022

அகழ்- நவம்பர்-டிசம்பர் 2021 சிறுகதைகள்:

வண்ணச்சீரடி - உமா மகேஸ்வரி: உளவியல் கதை. Post-traumatic stress disorder. ஆனால் கதைக்குள் மருத்துவமனையில் படுத்திருக்கும் பெண்ணின் அகமன அலைக்கழிப்புகள் அத்தனையும் நம் கண்முன் விரிகின்றன. கால் தரையில் பாவாமல் ஓடிக்கொண்டே இருக்கும் பெண்களைப் பார்த்திருக்கின்றேன். மற்றவர்களிடம் மாறுபட்ட அந்த Traitஏ பயம் என்ற பூதமாக மாறியிருக்குமோ? பிரவீண்/அம்மா செய்திருக்க வேண்டியது மாரிக்கா செய்ததைத் தானோ? கணவன் இருபது நிமிடம் இருந்து விட்டுப் போவதில் இருந்து எத்தனை விசயங்கள், எத்தனை கால்கள் இந்தக்கதையில்! நட்சத்திரங்களுடன் உரையாடும் … Continue reading அகழ்- நவம்பர்-டிசம்பர் 2021 சிறுகதைகள்:

கனலி இதழ் 16- நவம்பர் 2021- சிறுகதைகள்:

கிழவியும், பிக்காஸோவும், புறாக்களும்-கலாமோகன்: சம்பவங்கள், Stream of consciousness, Associative memory எல்லாவற்றையும் சேர்த்து கதையே இல்லாமல் ஒரு சிறுகதை எழுதுவது நவீன இலக்கியத்தில் பலரும் செய்வதே. ஆனால் கலா மோகனின் கதைகள் ஒன்று எனக்குப் புரிவதில்லை. அல்லது பெண்களுடன் நிகழ்த்திய காமசாகசங்களின் சாறு இவர் கதைகள். அந்த எண்பதுவயது மூதாட்டி கதையில் இருந்து மறையும் வரை படபடக்கும் நெஞ்சில் வலதுகையை ஆதுரமாக வைத்துக் கொண்டே படித்து முடித்தேன். திகம்பரபாதம்- சுஷில் குமார்: சுஷில் குமாரின் மொழி … Continue reading கனலி இதழ் 16- நவம்பர் 2021- சிறுகதைகள்:

புரவி நவம்பர் 2021 சிறுகதைகள்:

பாரதிராஜா படம் - மணி எம் கே மணி: மணியின் வழக்கமான திரையுலகோடு தொடர்பு கொண்ட கதை. பெண்கள் மேல் அகஸ்மாத்தா கைபடுவது போல திரையுலக இரகசியங்கள் வெளிவருகின்றன. அங்கங்கே எடிட் செய்தது போன்ற கதை சொல்லலில் மினி உண்மையில் யாரென்று தெரியாததும், காதல் ஓவியம் பாடல் மறுபடி வருவதும் நன்றாக இருக்கின்றன. கடுகண்ணாவைக்கு ஒரு பயணம்- எம்.டி.வாசுதேவன் நாயர்- தமிழில் ரிஷான் ஷெரீப்: எம்.டி.வியின் கதைகளில் அநேகமாக சுயசரிதைக்கூறுகள் இருக்கும். இதிலும் இருக்கிறது. நிஜவாழ்க்கையிலும் இவரது … Continue reading புரவி நவம்பர் 2021 சிறுகதைகள்: