எஸ்.ராமகிருஷ்ணனின் ஆறு நூல்கள்

எஸ்.ராமகிருஷ்ணனின் ஆறு நூல்கள்: எஸ்.ரா சென்ற ஆண்டைப் போலவே இப்போதும் அவருடைய இந்த வருடத்தியப் புத்தகங்களை வருடத்தின் முடிவில் வெளியிட்டிருக்கிறார். இந்த வருடத்தின் புத்தகக்கண்காட்சி கேள்விக்குரியதாக இருக்கையில் அதை எதிர்பாராது தொடர்ந்து மற்ற பதிப்பகங்களும் நூல்களை வெளியிடுவது நல்லது. இந்த ஆண்டு, உலக இலக்கியம் பற்றிய நூல், சிறுகதைத் தொகுப்பு, குறுங்கதைத் தொகுப்பு, தமிழ் சினிமாக் கட்டுரைகள் தொகுப்பு, உலகசினிமா கட்டுரைத் தொகுப்பு, சிறார் நூல் என்று கலவையாக ஆறுநூல்களின் வெளியீடு. கதாபாத்திரங்களின் பொம்மலாட்டம்:(உலக இலக்கியம்) உலக … Continue reading எஸ்.ராமகிருஷ்ணனின் ஆறு நூல்கள்

Cobalt Blue

Cobalt Blue - Sachin Kundalkar- Translated from Marathi by Jerry Pinto: சச்சின் மராத்தியில் இரண்டு திரைப்படங்களுக்கு தேசியவிருது பெற்ற திரைப்பட இயக்குனர், திரைக்கதாசிரியர், நாவலாசிரியர். தன்னுடைய இருபத்திரண்டாம் வயதில் இந்த நாவலை இவர் வெளியிட்டார். சமீபத்தில் வெளிவந்த B.R. Collinsன் The Binding நாவல் உட்பட அண்ணன், தங்கை இருவரும் ஒரே ஆணைக் காதலிப்பது போன்ற கதையம்சம் கொண்ட ஆங்கில நாவல்கள் பல. இந்தியாவில் நாம் தொடத்தயங்கும் ஒரு கதைக்கரு. மராத்தியில் வந்திருக்கிறது … Continue reading Cobalt Blue

தனுஜா- ஈழத்திருநங்கையின் பயணமும் போராட்டமும்

தனுஜா - தனுஜா சிங்கம்: ஆண் குழந்தையாகப் பிறந்து தனுஜன் என்ற பெயரில் வளர்ந்த இவர், இயற்கையின் தேர்வில் தன்னை தனுஜாவாக மாற்றிக் கொண்டார். பன்னிரண்டு வயதிலிருந்து ஜெர்மனியில் வளர்ந்தவர். பாலியல் தொழிலாளியாக நல்ல வருமானத்தை ஈட்டி வந்த இவர், சுயவிருப்பில் அதை விட்டுவிட்டு சுகாதாரத்துறையில் பற்கள் பராமரிப்பு கல்விபயின்று கொண்டிருக்கிறார். இருபத்தொன்பது வயதே ஆன இவரது இந்த சுயசரிதை, ஈழத்தின் திருநங்கைகளின் முதல் சுயசரிதை மட்டுமல்ல, தமிழில் முழுமையான LGBT பிரிவில் அடங்கும் முதல் சுயசரிதையும் … Continue reading தனுஜா- ஈழத்திருநங்கையின் பயணமும் போராட்டமும்

இருட்டில் ஒரு புனிதன் நாவல் விமர்சனம்

இருட்டில் ஒரு புனிதன் - பி.எப். மாத்யூஸ்- தமிழில் சுஜா ராஜேஷ்: பி.எப். மாத்யூஸ்: 1986ல் இருந்து மலையாளத்தில் எழுதுகிறார். இலக்கியம், திரைத்துறை இரண்டிலும் இணைந்து பணியாற்றும் இவர் 'குட்டிசிரான்' படத்தின் திரைக்கதைக்குத் தேசியவிருது பெற்றவர். இதுவரை ஐந்து சிறுகதைத் தொகுப்புகள், ஒரு நினைவுக்குறிப்பு நூல் வெளிவந்துள்ளன. இது இவருடைய சமீபத்தில் வெளிவந்த முதல்நாவல். சுஜா ராஜேஷ்: கேரள மாவட்டம் இடுக்கியில் பிறந்தவர். முனைவர் பட்டம் பெற்றவர். தமிழ்த்துறை பேராசிரியர். எழுத்திலும், மொழிபெயர்ப்பிலும் ஈடுபாடு கொண்டவர். மனைவியின் … Continue reading இருட்டில் ஒரு புனிதன் நாவல் விமர்சனம்

அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும் நாவல் விமர்சனம்

அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும்- சுரேஷ்குமார இந்திரஜித்: ஆசிரியர் குறிப்பு: நாற்பது ஆண்டுகளாக சிறுகதை எழுதி வரும் இவரது முதல்நாவல் 2019ஆம் ஆண்டு வெளியானது. 2020 விஷ்ணுபுரம் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இது சமீபத்தில் வெளிவந்த நாவல். கோவில்கள் இத்தனை இல்லாமலிருந்தால் இத்தனை படையெடுப்புகள் நடந்திருக்குமா என்ற சந்தேகம் எனக்கு உண்டு. எவ்வளவு எளியவர் ஆயினும் கோவிலுக்குக் கொடுத்தால் பலமடங்கு திரும்பவரும் என்பது நம்பிக்கை. அதனால் தான் குசேலர்-அவல் கதை. கோவில்கள் எல்லோரையும் அன்றும் சமமாக நடத்தியதில்லை இன்றும் … Continue reading அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும் நாவல் விமர்சனம்

போர்க்குதிரை-சிறுகதைத் தொகுப்பு

போர்க்குதிரை - லஷ்மி சரவணகுமார்: ஆசிரியர் குறிப்பு: மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்தவர். சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் என வெவ்வேறு தளங்களில் இயங்கி வருகிறார். யுவபுரஸ்கார் விருது உட்பட பலவிருதுகளைப் பெற்றவர். திரைக்கதாசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார். இது இவரது சமீபத்திய சிறுகதைத் தொகுப்பு. வீடு திரும்புதல்: ரூஹ் போல குறுநாவலாக வந்திருக்க வேண்டிய கதை. ஊர் சுற்றுவதில் பேரார்வம் கொண்ட இவருக்குப் பிடித்த Subject கொண்ட கதை இது.Woofingஐ மையமாகக் கொண்டது. உண்மை தான், தோல்விகள், தாழ்வுமனப்பான்மை, அவமானங்கள் … Continue reading போர்க்குதிரை-சிறுகதைத் தொகுப்பு

பேரருவி நாவல் விமர்சனம்

பேரருவி - கலாப்பிரியா: ஆசிரியர் குறிப்பு: திருநெல்வேலியில் பிறந்தவர். தமிழின் நவீன கவிஞர்களில் ஒருவர். ஐம்பதாண்டுகளாக எழுதிக் கொண்டு இருக்கிறார். இருபத்திரண்டு கவிதைத் தொகுப்புகள், பன்னிரண்டு உரைநடைத் தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன. சமீபத்தில் நாவல் எழுத ஆரம்பித்தவரின் மூன்றாவது நாவல் இது. மற்றாங்கே, எட்டயபுரம், சுயம்வரம் போன்ற கவிதைத் தொகுப்புகளில் ஆழ்ந்து மூழ்கி ஆனந்தப்பட்டபோது இளமை நிறைய மீதி இருந்ததால் நெருக்கமாகிப்போன கவிதைகள் அவை. "மருத மர நிழல்கள் மீட்டாத தண்டவாளச் சோகங்களை எனக்கேன் நிரந்தரித்தாய் சசி" … Continue reading பேரருவி நாவல் விமர்சனம்

மெச்சியுனை…..

மெச்சியுனை….. - உமா சங்கரி: ஆசிரியர் குறிப்பு: தி.ஜாவின் மகள். ஹைதராபாத்தில் வசிக்கிறார். தமிழ்நாட்டில் பல இடங்களில், பெங்களூரில் இவரை முன்னிறுத்தி தி.ஜா நூற்றாண்டு விழா நடத்தும் முயற்சிகளுக்கு கோவிட் தடைவிதித்து விடவில்லையென்றால், வாசகர் பலருக்கும் இவர் நேரில் அறிமுகமாகியிருக்கக்கூடும். இந்த நூல் தந்தையைப்பற்றி மகள் நினைவுகூறும் நூல். ஒரு பேட்டியில் உமா சங்கரி: "நானும் என் கணவரும், விவசாயிகளின் பிரச்னைகள், நிலம் இல்லாத விவசாயக்கூலிகளின் பிரச்னைகள், அவர்களுக்கு நிலம் சொந்தமாக்குதல், மனித உரிமைகள், தீண்டாமையை எதிர்த்து … Continue reading மெச்சியுனை…..

Azadi

Azadi- Arundhati Roy: எழுத்தாளர். சமூகசேவகர். அரசியல் விமர்சகர். களப்பணியாளர் மனிதஉரிமை போராளி. இவருடைய God of Small Things 1997 புக்கர் பரிசை வென்றது. அடுத்த நாவலான The Ministry of Utmost Happiness புக்கர் நீண்ட பட்டியலில் இடம்பெற்றது. இது இவரது சமீபத்திய நூல். My Seditious Heart என்ற இவரது அரசியல் கட்டுரைகள் அடங்கியநூல் இவரது நிலைப்பாட்டைத் தெளிவாகச் சொல்லும். அருந்ததி போன்ற போராளிகளின் கண்கள் அவர்கள் பார்க்க விரும்புவதை மட்டுமே பார்க்கும், … Continue reading Azadi

உச்சை

உச்சை- ம.நவீன்: ஆசிரியர் குறிப்பு: ம.நவீன், மலேசிய நவீன தமிழ் இலக்கியத்தில் பலருக்கும் அறிமுகமான பெயர். மலேசிய இலக்கியத்தை உலகப் பார்வைக்குக் கொண்டு செல்ல தொடர்ந்து பல ஆக்ககரமான செயற்திட்டங்களை ‘வல்லினம்’ அமைப்பின் மூலமாக முன்னெடுக்கும் இலக்கியச் செயற்பாட்டாளர். தமிழ்ப்பள்ளி ஆசிரியரான இவர், இந்நாட்டின் இலக்கியத்துறையில் முக்கியமான படைப்பாளி. இதுவரை பேய்ச்சி நாவல் உட்பட இவரது பத்து நூல்கள் வெளியாகியுள்ளன. இது சிறுகதைத் தொகுப்பு. கழுகு: இருவருக்குள் நடக்கும் Mind game தான் கதையே. யார் ஜெயிக்கிறார்கள் … Continue reading உச்சை