Cobalt Blue - Sachin Kundalkar- Translated from Marathi by Jerry Pinto: சச்சின் மராத்தியில் இரண்டு திரைப்படங்களுக்கு தேசியவிருது பெற்ற திரைப்பட இயக்குனர், திரைக்கதாசிரியர், நாவலாசிரியர். தன்னுடைய இருபத்திரண்டாம் வயதில் இந்த நாவலை இவர் வெளியிட்டார். சமீபத்தில் வெளிவந்த B.R. Collinsன் The Binding நாவல் உட்பட அண்ணன், தங்கை இருவரும் ஒரே ஆணைக் காதலிப்பது போன்ற கதையம்சம் கொண்ட ஆங்கில நாவல்கள் பல. இந்தியாவில் நாம் தொடத்தயங்கும் ஒரு கதைக்கரு. மராத்தியில் வந்திருக்கிறது … Continue reading Cobalt Blue
Azadi
Azadi- Arundhati Roy: எழுத்தாளர். சமூகசேவகர். அரசியல் விமர்சகர். களப்பணியாளர் மனிதஉரிமை போராளி. இவருடைய God of Small Things 1997 புக்கர் பரிசை வென்றது. அடுத்த நாவலான The Ministry of Utmost Happiness புக்கர் நீண்ட பட்டியலில் இடம்பெற்றது. இது இவரது சமீபத்திய நூல். My Seditious Heart என்ற இவரது அரசியல் கட்டுரைகள் அடங்கியநூல் இவரது நிலைப்பாட்டைத் தெளிவாகச் சொல்லும். அருந்ததி போன்ற போராளிகளின் கண்கள் அவர்கள் பார்க்க விரும்புவதை மட்டுமே பார்க்கும், … Continue reading Azadi
Hercule Poirot’s Christmas
Hercule Poirot's Christmas- Agatha Christie: சஸ்பென்ஸ் கதைகளின் ராணி எனச் சொல்லப்பட்டவர். எண்பது சஸ்பென்ஸ் நாவல்களை எழுதிய இவரது நூல்கள் பைபிளுக்கும் ஷேக்ஸ்பியருக்கும் அடுத்து அதிகம் விற்றவை. பணக்கார Cynic கிழவர் தன்னுடைய நான்கு மகன்களையும், இறந்து போன ஒரே மகளின் மகளையும் கிறிஸ்துமஸ்ஸுக்கு அழைக்கிறார். ஒரு மகன் அவரை கடவுளாய் நினைப்பவன். ஒரு மகன் அரசியலில் காலெடுத்து வைத்து, தன்னைவிட இருபது வயது குறைந்த பெண்ணை மணந்தவன். ஒருவன் தந்தையை வெறுத்து ஓவியம் படிக்கச்சென்றவன். … Continue reading Hercule Poirot’s Christmas
Becoming – Michelle Obama
எட்டு வருடங்கள் அமெரிக்காவின் முதல் பெண்மணி, வழக்கறிஞர், எழுத்தாளர், மருத்துவமனை ஒன்றில் Vice President, லாபநோக்கில்லாத நிறுவனத்தின் இயக்குனர் என பலமுகங்கள் இவருக்கு. இந்தநூல் இவருடைய புகழ்பெற்ற சுயசரிதை நூல். "ஒரு ஜனாதிபதியின் மரசாமான்கள் வெளியேற மற்றவருடையது உள் நுழைகின்றன. அலமாரிகள் காலி செய்யப்பட்டு சில மணிநேரங்களில் நிரப்பப்படுகின்றன. புதிய தலைகள் புதுத் தலையணைகளில், புதிய உணர்வுகள், புதிய கனவுகள். எல்லாம் முடிகையில், உலகின் புகழ்மிக்க விலாசத்தை விட்டு நீங்கள் கடைசியாக வெளியேறுகையில், உங்களை மீண்டும் கண்டறிய … Continue reading Becoming – Michelle Obama