Paradise – Abdulrazak Gurnah:

ரஸாக் கிழக்கு ஆப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். இருபது வயதில் இங்கிலாந்துக்குப் புலம்பெயர்ந்தவர். ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இதுவரை பத்து நாவல்கள் எழுதியுள்ளார். 2021 ஆம் வருட நோபல் பரிசை வென்றவர். இந்த நாவல் 1994 புக்கர் இறுதிப்பட்டியலில் இடம்பெற்றது. இவரது சிறந்த நாவலாகக் கருதப்படுகிறது. யூசுப் பன்னிரண்டு வயது சிறுவன். அவன் தந்தைக்கு, இரண்டாம் மனைவியின் மூலம் பிறந்தவன். வீதிகளில் திரிவதும் அவ்வப்போது அம்மாவிற்கு வீட்டு வேலைகளில் உதவுவதுமாய்ப் பொழுதைக் கழிக்கும் அவனுக்கு அவனுடைய மாமா … Continue reading Paradise – Abdulrazak Gurnah:

Bewilderment – Richard Powers: 13/13

ரிச்சர்ட் அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர். நவீன அறிவியலையும் புனைவையும் கலந்து எழுதுபவர். இதுவரை பன்னிரண்டு நாவல்களை எழுதியுள்ளார். புலிட்சர் பரிசை 2019ல் வென்றவர். புக்கர் பட்டியலுக்கு இவர் வருவது மூன்றாவது முறை. இந்த நாவல் புக்கரின் இறுதிப் பட்டியலுக்கும், National book awardன் முதல் பட்டியலுக்கும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வந்துள்ளது. தியோ வேறு கிரகங்களில் இருக்கும் கனிமங்களையும், உயிர்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் ஆய்வுசெய்யும் விஞ்ஞானி. அவனது பன்னிரண்டு வருட காதல் மனைவி அவனையும், ஏழுவயது மகனையும் … Continue reading Bewilderment – Richard Powers: 13/13

Madurai Days – Subramanian:

நெல்லையில் பிறந்தவர். பள்ளி, கல்லூரி படிப்புகளை மதுரையில் முடித்தவர். ஆசிரியர். ஏற்கனவே இவரது கவிதைத் தொகுப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. இது இவரது மதுரை நினைவுகள் குறித்த கட்டுரை நூல். மதுரை என் முதல் கால்நூற்றாண்டின் நினைவுகளின் பேழை. எல்லா முதலும் அங்கே தான். எண்பதுகள், தொன்னூறுகளின் மதுரையைப் பற்றியே ஆசிரியர் எழுதியிருக்கிறார். தொன்னூறுகளின் மதுரை நான் அறியாதது. சித்திரை மாதம் அழகர் திருவிழா, மதுரை மக்களின் திருவிழா. பிற மதத்தினரும் ஆர்வமாகக் கலந்து கொள்ளும் பண்டிகை.அக்கம் … Continue reading Madurai Days – Subramanian:

1232 KM – A Long Journey Home – Vinod Kapri:

வினோத் தேசிய மற்றும் உலக திரைப்பட விழாக்களில் விருது வாங்கிய திரைப்படங்களை எடுத்தவர். திரைத்துறைக்கு வருவதற்கு முன் இருபத்தி மூன்று வருடங்கள் பத்திரிகையாளராக இருந்தவர். இந்த நூல் சமீபத்தில் நடந்த உண்மைச்சம்பவத்தைப் பற்றியது. Ghaziabadல் இருந்து பீகாரின் கிராமத்திற்கு தூரம் கூகுள் மேப்பின்படி 1232 கி.மீ. 24/3/2020 திடீரென அறிவிக்கப்பட்ட நாடுதழுவிய ஊரடங்கால் வேலைவாய்ப்பு இழந்து சொந்த ஊருக்குப் பயணத்தை மேற்கொண்ட, ஏழு இளைஞர்களைக் காரில் தொடர்ந்து, ஆசிரியர் ஏழுநாள் பயணத்தின் நிகழ்வுகளைத் தொகுத்ததே இந்தநூல்.வீட்டுவேலை செய்பவரின் … Continue reading 1232 KM – A Long Journey Home – Vinod Kapri:

The Right To Sex- Amia Srinivasan :

அமியா இந்தியப்பெற்றோருக்கு பக்ரைனில் பிறந்தவர். பின்னர் தைவான், சிங்கப்பூர், நியூயார்க், லண்டன் போன்ற நகரங்களில் வசித்தவர். தத்துவயியலாளர். முனைவர் பட்டத்தைத் தத்துவயியலில் பெற்றவர். ஆக்ஸ்போர்டு பல்கலையில் உதவிப்பேராசிரியராகப் பணிபுரியும் இவரது இந்த முதல் நூல் செப்டம்பர் 21, 2021ல் வெளியாகியது. பெண்ணுக்கு பாலியல் சுதந்திரம் என்பது உலகம் முழுதும் பல ஆண்டுகளாகப் பேசப்படும் ஒரு கருத்து. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலேயே இன்னும் பரிபூர்ண சுதந்திரம் பெண்களுக்குக் கிடைத்ததாக சொல்ல முடியாது. ஆண்களைப் போலவே தன் கீழ் … Continue reading The Right To Sex- Amia Srinivasan :

Great Circle – Maggie Shipstead:

Maggie அமெரிக்க எழுத்தாளர். IOWA writers workshopலும், Stanford பல்கலையிலும் பட்டம் பெற்றவர். இவரது முதல்நாவல் Seating Arrangements பல விருதுகளை வென்றது. 2021ல் வெளியான இவருடைய இந்த மூன்றாவது நாவல் புக்கர் நீண்ட பட்டியலில் இடம்பெற்ற நாவல்களில் ஒன்று. "I thought I would believe I’d seen the world, but there is too much of the world and too little of life. I thought I would … Continue reading Great Circle – Maggie Shipstead:

Light Perpetual – Francis Spufford 11/13:

Francis பிரிட்டனைச் சேர்ந்த எழுத்தாளர். அல்புனைவுகளை எழுதிக் கொண்டிருந்தவர், 2016ல் Golden Hill என்ற முதல் நாவலை அவருடைய ஐம்பத்தி இரண்டாவது வயதில் எழுதினார். நல்ல வரவேற்பைப் பெற்ற நாவல் அது. லண்டன் பல்கலையில் எழுத்துக்கலையைக் கற்பிக்கும் இவரது இந்த இரண்டாவது நாவல் 2021 புக்கர் நீண்ட பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. “Come, other future. Come, mercy not manifest in time; come knowledge not obtainable in time. Come, other chances. … Continue reading Light Perpetual – Francis Spufford 11/13:

China Room – Sunjeev Sahota: 10/13

சஞ்சீவ்வின் தந்தைவழி தாத்தா, பாட்டி அறுபதுகளில் பஞ்சாபிலிருந்து பிரிட்டனுக்குப் புலம் பெயர்ந்தனர். மூன்று தலைமுறைகளாக அங்கே இருக்கும் இவர்Jhumba Lahiriஐப் போல் பெயரளவில் மட்டுமே இந்தியர். இவருடைய The Year of Run aways என்ற மற்றொரு நூல் தவறவிடக்கூடாத நூல். அது புக்கர் இறுதிப்பட்டியலில் இடம்பெற்றது. இந்த நாவலின் மூலம்புக்கரின் நீண்ட பட்டியலுக்கு இரண்டாம் முறையாக இடம்பெறுகிறார். Year of Run awaysல் புலம்பெயர்ந்தவர்களின் அனுபவங்களைப் பேசியவர் இந்த நாவலில் தன் கொள்ளுப்பாட்டியின் கதையைச் சொல்கிறார். … Continue reading China Room – Sunjeev Sahota: 10/13

The Fortune Men – Nadifa Mohamed 9/13

Nadifa, Somalilandல் பிறந்தவர், Ishiguro ஐந்து வயதில் பிரிட்டனுக்குப் புலம்பெயர்ந்தது போல இவர் நான்கு வயதில் பிரிட்டனுக்குச் சென்றவர். இவரது முதல் இருநாவல்களும் பெருத்த வரவேற்பையும், விருதுகளையும் பெற்றன. 2013 ல் சிறந்த பிரிட்டிஷ் நாவலாசிரிராகத் தேர்வாகியவர் இவர். லண்டனில் வசிக்கிறார். இவரது இந்த நாவல், இவ்வருட புக்கரின் நீண்ட பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது. 1950 களில் நடந்த உண்மையான சம்பவத்தைத் தழுவி எழுதப்பட்ட புனைவு இந்த நாவல். Mahmood என்ற Somaliaவில் இருந்து பிரிட்டனுக்குப் புலம்பெயர்ந்த கறுப்பின … Continue reading The Fortune Men – Nadifa Mohamed 9/13

Piranesi by Susanna Clarke :

Susanna இங்கிலாந்தைச் சேர்ந்த எழுத்தாளர். 2004ல் வெளிவந்த இவரது Jonathan Strange & Mr Norrell எழுத இவர் பத்து வருடங்கள் எடுத்துக் கொண்டார். மிகுந்த வரவேற்பைப் பெற்ற நாவலது. இது இவரது இரண்டாவது நாவல், 2020 செப்டம்பரில் வெளிவந்தது. இந்த நாவலுக்கு இவர் எடுத்துக் கொண்ட காலம் பதினாறு வருடங்கள். புக்கர் இறுதிப்பட்டியல் செப்டம்பர் 14ல் வெளியாவதற்கு முன், இருபத்தி ஆறாவது Women’s Prize For Fictionன் வெற்றியாளர் யாரென்று இம்மாதம் 8ஆம் தேதி தெரிந்துவிடும். … Continue reading Piranesi by Susanna Clarke :