The Hummingbird – Sandro Veronesi – Translated from The Italian by Elena Pala:

Veronesi இத்தாலிய எழுத்தாளர். இது இவருடைய ஒன்பதாவது நாவல். ஏற்கனவே இத்தாலிய இலக்கியத்தின் உயர்விருதையும், வருடத்தின் சிறந்த நாவல் விருதையும் பெற்ற இந்த நூல், உலக வாசகர்களின் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. Elena Pala இத்தாலியைச் சேர்ந்தவர். மொழியியலில் முனைவர் பட்டத்தை கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் பெற்றவர். 2008ல் இருந்து இங்கிலாந்தில் வசிப்பவர். பல தொழில் முயற்சிகள் செய்துவிட்டு மொழிபெயர்ப்பில் உள்ள ஆர்வத்தில் அந்தத்துறைக்குத் திரும்பியிருக்கும் இவரது முதல் மொழிபெயர்ப்பு இது. Marco அவனது நண்பனுடன் இன்னொரு நகரில் … Continue reading The Hummingbird – Sandro Veronesi – Translated from The Italian by Elena Pala:

India Before Europe – Catherine B Asher & Cynthia Talbot:

இந்த நூல் ஆங்கிலேயர் வருகைக்கு முன்பான காலமான, கி.பி 1200 முதல் கி.பி. 1750 வரையான இந்திய வரலாற்றையும், நாகரீகத்தையும் பற்றி எழுதப்பட்ட நூல். இருவருமே Scholars, Catherine ஒரு Art Historian, குறிப்பாக இஸ்லாமிய பண்பாடுகள், Cynthia ஒரு Historian, ஏற்கனவேயே இஸ்லாமியர் வருகைக்கு முன்பான இந்தியா குறித்து ஆராய்ச்சி செய்தவர், உலகவரலாற்றில் ஆர்வம் கொண்டவர். இருவரையும் Cambridge University Press அணுகி, கிட்டத்தட்ட ஐநூறு ஆண்டு கால வரலாற்றை ஆய்வு செய்து எழுத அணுகியதன் … Continue reading India Before Europe – Catherine B Asher & Cynthia Talbot:

The Tomorrow Box – Curtis Sittenfeld:

சா.கந்தசாமியின் தொலைந்து போனவர்களின் அமெரிக்க வடிவம். மைக்கேல் கல்லூரி படிக்கையில் ஏழுபேர்கொண்ட குழுவில் எட்டாவதாகச் சேர்கிறான். ஆரம்பத்தில் குழுவில் யாருக்கும் அவனைச் சேர்த்துக் கொள்வதில் விருப்பமில்லை, ஆன்டி என்பவனைத் தவிர. பின் மெல்ல மெல்ல இணைந்து விடுகிறான். பின்னாளில் மீதி ஏழுபேர் சராசரி மற்றும் சராசரிக்குக் கொஞ்சம் கூடுதல் வாழ்க்கை வாழும் பொழுது, இவன் மிகவும் பிரபலமான எழுத்தாளராகிறான். பல வருடங்கள் தொடர்பில்லாதிருந்து ஐம்பத்தி இரண்டு வயதில் அவன் ஆன்டியைச் சந்திக்க வருவதாகச் சொல்கையில் கதை ஆரம்பிக்கிறது. … Continue reading The Tomorrow Box – Curtis Sittenfeld:

I Would Be Doing This Anyway – Jia Tolentino:

சமூக வலைதளங்களில் பலரும் முன்னிறுத்தும் பிம்பம் உண்மையானதல்ல.அதில் போராளிகளாகத் தோற்றமளிப்பவர்கள் நிஜவாழ்க்கையில் யாரேனும் மிரட்டும் போது, கால்சட்டையைநனைப்பவர்களாகக்கூட இருக்கலாம். ஐநூறு Likesக்கு மேல் வாங்குபவர்களுக்கு அவ்வப்போது பதிவு போடாமல் இருந்தால் மறந்து போய் விடுவார்களோ என்ற பயம் இருக்கும். அவர்களுக்கும் மேலிருப்பவர்கள் Social media influencers. Social media influencer ஒருவரின் பதிவுகளுக்குத் தொடர்ந்து Backlash ஆகிறது.Social Media Manager ஒருவருக்கு வேலை இல்லாமல் போகிறது. முதலாமவர் Ultra rich. இரண்டாமவருக்கு சாப்பிடுவதற்கே பணமில்லை. இருவரும் ஒரே … Continue reading I Would Be Doing This Anyway – Jia Tolentino:

A Death in Tokyo – Keigo Higashino

Higashinoவை தஸ்தயேவ்ஸ்கி மற்றும் அகதா கிறிஸ்டி இருவரும் சேர்ந்த கலவை என்கிறது Wall Street Journal. உலக வாசகர்கள் மெல்ல இவரைப் படிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். அமெரிக்கப் புத்தகக்குழுக்கள், நூலகங்கள் இவரது ஆங்கில மொழிபெயர்ப்புகளை முன்னிலைப் படுத்தும்போது இவர் அடையப்போகும் இடம் வேறு. அமெரிக்காவிலேயே தரமான Crime writers நூற்றுக்கணக்கில் இருப்பதால் அது நிகழ இன்னும் சற்று காலமாகலாம். Nihonbashi Bridge, டோக்கியோ ஸ்டேஷனில் இருந்து நடக்கும் தூரம். இங்கிருந்து தான் ஜப்பான் தொடங்குகிறது என்ற அர்த்தத்தில் … Continue reading A Death in Tokyo – Keigo Higashino

Me and Carlos – Tom Perrotta:

Perrotta அமெரிக்க எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர். இவரது Election மற்றும் Little Children இரண்டும் பலத்த வரவேற்பை பெற்ற நாவல்கள். Henry என்ற பள்ளி மாணவனின் Coming of age story இது. அத்துடன் அவன் நெருங்கிப் பழகும் Carlos என்பவனுடனான நட்பும் குறித்தது. அங்கு படிக்கும் எல்லோரிடமும் வசதி இருந்தது. Carlosன் பெற்றோர் ஹோட்டலில் பணியாளர்கள். Carlosக்கு சாப்பாடு, உடை மட்டும் பிரச்சனையில்லை, அமெரிக்காவில் தங்கும் Documentsம் பிரச்சனை. ஆனால் அவனது அழகு, எளிதாகப் பழகும் … Continue reading Me and Carlos – Tom Perrotta:

The Contractors – Lisa Ko:

Lisa அமெரிக்காவில் குடிபுகுந்த சீனத்தம்பதியருக்கு, நியுயார்க்கில் பிறந்தவர். இவருடைய The Leavers புலம்பெயர்ந்த ஒருவனின் சிக்கல்களைச் சொல்லும் கதை. NBA இறுதிப்பட்டியலில் இடம்பெற்ற நாவல். Sandra என்ற பெயரில் ஒரு பெண் நியூஜெர்ஸியிலும், இன்னொரு பெண் மணிலாவிலும், ஒரே Social media நிறுவனத்திற்கு ஒரே வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவருக்குப் போக வேண்டிய மெயில் மற்றொருவருக்குத் தவறுதலாகப் போனபின், ஒரு ஆர்வத்தில் இருவரும் தொடர்பு கொள்கிறார்கள். இருவரது வாழ்க்கையும் இதனால் மாறப் போகிறது. இந்தக் கதையில் இரண்டு … Continue reading The Contractors – Lisa Ko:

Independence – Chitra Banerjee Divakaruni:

Snippet from the book: “The river is Sarasi, the village is Ranipur in Bengal, the mansion belongs to Somnath Chowdhury, zamindar. He is playing chess with Priya, daughter of his best friend, Nabakumar Ganguly. The country is India, the year is 1946, the month is August. Everything is about to change.” கல்கத்தாவிற்கு மகிழ்ச்சியான குடும்பச் சுற்றுலா … Continue reading Independence – Chitra Banerjee Divakaruni:

Landing – Olivia Hawker:

அமெரிக்க எழுத்தாளர். நான்கு நாவல்களை எழுதியுள்ளார். உணர்வுகள் அதிகமாக வெளிப்படும் கதைகளை எழுதியவர். ஆலன் நாசாவில் விஞ்ஞானி. கரோல் அவனிடம் காதலைத் தெரிவித்த போது அவனால் மறுக்கமுடியவில்லை. இந்தியத் திருமணங்கள் போல, ஒருவரை ஒருவர் நன்கு அறிந்து கொள்ளாமலேயே கரோல் அவசரப்பட்டதால், அவசர நிச்சயம், அவசரக் கல்யாணம். கரோல் போன்ற பெண் கிடைப்பது என்பது யாருக்குமே நனவாகும் கனவு. ஆனால் இன்னும் நான்கு வாரங்களில் நாசா அப்பல்லோவை நிலாவிற்கு அனுப்பப் போகிறது. இரண்டு விண்வெளி வீரர்களின் உயிர் … Continue reading Landing – Olivia Hawker:

We are Bone and earth – Esi Edugyan:

கனடாவில் பிறந்து வளர்ந்தவர். கானாவைப் பூர்விகமாகக் கொண்டவர். நான்கு நாவல்களை இதுவரை எழுதியுள்ள இவரது இரண்டு நாவல்கள் புக்கர் இறுதிப் பட்டியலுக்கு வந்திருக்கின்றன. காடுகள், பறவைகள், விலங்குகள் இவற்றைச் சுற்றியே குழந்தைப் பருவம் கழியும். பெரிதாக கல்வி வசதி இல்லாததால்பள்ளிக்கூடப்படிப்பு இல்லை. கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை, கூடப்பிறந்தவர்கள் ஏராளம் என்று இயற்கையோடு இணைந்த வாழ்வு , மேற்கு ஆப்பிரிக்காவின் 1700களில்.அவர்களுக்கு இருக்கும் ஒரே அச்சம், வெள்ளையர்கள் அவர்களை அடிமைகளாக்க வலுக்கட்டாயமாகத் தூக்கிச் செல்வது. பலநேரங்களில் குழந்தைகள், Pawnகளாகத் … Continue reading We are Bone and earth – Esi Edugyan: