The Promise – Damon Galgut 3/13

Damon தென் ஆப்பிரிக்காவில் பிறந்தவர். நாடகாசிரியர் மற்றும் நாவலாசிரியர். இதற்கு முன் எட்டு நாவல்கள் எழுதியுள்ளார், அவற்றில் இரண்டு புக்கர் இறுதிப்பட்டியலில் வந்துள்ளன. 2021ல் எழுதப்பட்ட இந்த நாவலுடன் மூன்றாம் முறையாக புக்கர் நீண்ட பட்டியலில் இடம் பெறுகிறார். யூதர் இனம் மற்ற மதங்களைப் போலல்லாமல் தலைகீழ் வளர்ச்சி அடைந்துள்ளது. 1939ல் 17 மில்லியன் யூதமக்கள் தொகை 2015ல் 14 மில்லியனாகி இருக்கிறது. உலக யூத மக்கள் தொகையில் இஸ்ரேலில் 30% யூதமக்கள் தொகை இருக்கையில் அமெரிக்காவில் … Continue reading The Promise – Damon Galgut 3/13

Second Place – Rachel Cusk: 2/13

ரச்செல் கனடாவில் பிறந்தவர். அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் வளர்ந்தவர். Creative writing பயிற்றுவிப்பவராகப் பணியாற்றியவர். மூன்று சுயசரிதை நூல்கள் எழுதி கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானவர். இவருடைய Outline Trilogyமிகவும் பேசப்பட்டது. பத்து நாவல்கள் எழுதியிருக்கும் இவரது இந்த நாவல் 2021 மே மாதத்தில் வெளியாகி புக்கர் நீண்ட பட்டியலில் இடம் பெற்றுள்ளது. Mabel Dodge Luhan தன்னுடைய சுயசரிதையில் D H Lawrenceஐ மெக்சிகோவில் இவருடைய இடத்தில் தங்க வைத்ததன் பிரதிபலனாக, D H Lawrence அவரை அழித்துவிடுவேன் … Continue reading Second Place – Rachel Cusk: 2/13

A Passage North- Anuk Arudpragasam 1/13

அருட்பிரகாசம் கொழும்பில் தமிழ் பெற்றோருக்குப் பிறந்தவர். தத்துவயியலில் முனைவர் பட்டத்தை அமெரிக்காவின் கொலம்பியா பல்கலையில் பெற்றவர். The Story of a Brief Marriage என்ற இலங்கை இறுதிப்போரில் இளம் தம்பதியரைக் கதைக்களமாகக் கொண்ட இவரது முதல் நாவல் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்தியாவிலும் இலங்கையிலும் வருடத்தின் பகுதிகளில் வசிக்கிறார். இவரது இந்த இரண்டாவது நாவல் புக்கர் 2021 நீண்டபட்டியலில் இடம்பெற்ற பதிமூன்று நாவல்களில் ஒன்று. உலகத்தின் எல்லா எழுத்தாளர்களின் படைப்புகளில் இருந்து தொகுக்கப்பட்ட Flash … Continue reading A Passage North- Anuk Arudpragasam 1/13

Touring the Land of the Dead by Maki Kashimada- translated by Haydn Trowell:

ஜப்பானின் டோக்கியோவில் பிறந்து, வளர்ந்து, வசிப்பவர். பரிசோதனை இலக்கியத்தை எழுதும் வெகுசில ஜப்பானிய எழுத்தாளர்களில் ஒருவர். Dostoevskyன் The Idiotஐ ஜப்பானிய saintly idiotஐ வைத்து இவர் எழுதிய The Kingdom of Zero மிகுந்த வரவேற்பைப் பெற்றது. சிறுவயதில் கிருத்துவமதத்தைத் தழுவியவர். இவர் போன்ற பலர் மதம் மாறுவது புத்தமதம் பிரதானமாக இருக்கும் ஜப்பானில் கிருத்துவம் மெல்ல ஊடுருவதன் சான்று. இந்த நூல் இவரது ஆங்கிலத்தில் வெளிவரும் முதல்நூல், 2021ல் வெளியாகியது. இரண்டு குறுநாவல்கள் அடங்கிய … Continue reading Touring the Land of the Dead by Maki Kashimada- translated by Haydn Trowell:

An I-Novel by Minae Mizumura, Translated by Juliet Winters Carpenter.

Mizumura அவருடைய பன்னிரண்டு வயதில் அமெரிக்கா சென்றவர். இருபது வருடங்களுக்கு மேல் அங்கிருந்து ஜப்பானின் மேல் அந்த மொழியின் மேல் உள்ள காதலால் திரும்பி வந்தவர். ஆங்கிலக்கல்வியே படித்த இவருக்கு ஜப்பானிய மொழின் மேல் இருந்த Obsession மட்டுமே தொடர்ந்து எழுத வைத்திருக்கக் கூடும். ஜப்பானிய மாஸ்டர்களில் ஒருவரான Sosekiயின் முற்றுப்பெறாத நாவலின் தொடர்ச்சியே இவரது முதல் நாவல். அதன் பின் புனைவும் அல்புனைவுகளுமாய் நிறையவே ஜப்பானிய மொழியில் எழுதி விட்டார். 1995ல் எழுதப்பட்ட இந்த நூல் … Continue reading An I-Novel by Minae Mizumura, Translated by Juliet Winters Carpenter.

Bullet Train – Kotaro Isaka – Translated from the Japanese by Sam Malissa:

Isaka ஜப்பானில் பிறந்து வளர்ந்தவர். இப்போது ஜப்பானில் எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களில் உலகஅளவில் கணிசமான எண்ணிக்கையுள்ள வாசகர்களைக் கொண்டவர். இவரது நூல்களுக்குப் பல பரிசுகளை வென்றவர். பல திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன.2010ல் ஜப்பானிய மொழியில் இவர் எழுதிய இந்த நாவல் 2021ல் ஆங்கிலத்தில் வெளியாகி மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய நூல்களில் ஒன்றாக முன்னணியில் இருக்கிறது. Toyoவில் இருந்து Morioka செல்லும் புல்லட் டிரெயின் அது. இடையில் ஆறு நிறுத்தங்கள்.தன் மகனை கட்டிடத்தின் உச்சியில் இருந்து தள்ளிவிட்ட டீன்ஏஜ் சிறுவனைப் … Continue reading Bullet Train – Kotaro Isaka – Translated from the Japanese by Sam Malissa:

Kitchen by Banana Yoshimoto

அடுக்களை- பனானா யொஷிமோட்டோ பனானா ஜப்பானில் இப்போது எழுதிக் கொண்டிருப்பவர்களில் அதிக வாசகர் எண்ணிக்கை கொண்ட ஜப்பானிய எழுத்தாளர்களில் ஒருவர். உணவுவிடுதியில் பணிப்பெண்ணாக வேலைபார்த்துக் கொண்டு எழுதிய முதல் நாவலான Kitchen பரவலான வரவேற்பைப் பெற்று, இவருக்கு ஜப்பானிய இலக்கியத்தில் நிரந்தர இடத்தைப் பெற்றுத் தந்தது. மிகேஜ் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தவள். தாத்தா, பாட்டியுடன் அவர்கள் வீட்டில் வளருகையில் தாத்தாவும் இறக்கிறார். அவள் காலமெல்லாம் ஒன்றாய் வாழ்வோம் என்று நம்பிக் கொண்டிருந்த காதலனின் பிரியத்தில் அந்த இழப்பைக் … Continue reading Kitchen by Banana Yoshimoto

The Phone Booth at the Edge of the World by Laura Imai Messina Translated from Italy by Lucy Rand:

Laura இத்தாலியைச் சேர்ந்தவர். இலக்கியத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டத்தை Tokyo பல்கலையில் பெற்றவர். கடந்த பதினைந்து வருடங்களாக ஜப்பானை உறைவிடமாகக் கொண்டவர். ( Jhumpa Lahiri அமெரிக்காவில் இருந்து இத்தாலிக்குக் குடிபுகுந்தவர்.) ஜப்பானில் இத்தாலிய மொழியைக் கற்பிப்பவர். தன்னுடைய Blog மூலம் பல பிரபல ஜப்பானிய எழுத்தாளர்களை இத்தாலியில் பிரபலமாக்கி, அவர்களது நூல்களை இத்தாலியில் தேடிப்படிக்கச் செய்தவர். இத்தாலியும் ஜப்பானும் கலந்த கலவைக் கலாச்சாரத்தைத் தன் படைப்புகளில் கொண்டுவருபவர். 2021ல் வெளிவந்த நாவல் இது. Jhumpa … Continue reading The Phone Booth at the Edge of the World by Laura Imai Messina Translated from Italy by Lucy Rand:

Terminal Boredom: Stories by Izumi Suzuki:

Suzukii 1949ல் பிறந்தவர். பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்டு மாடலாக, நடிகையாக 70களில் நடித்தவர். இவர் கணவர் போதை மருந்து அதிகம் உட்கொண்டு இறந்தவுடன், எழுத ஆரம்பித்தவர். இலக்கியத்தில் ஆண்கள் உலகம் என்று இருந்த எல்லாவற்றிலும் இவர் முயற்சித்திருக்கிறார். இந்தத் தொகுப்பு கூட அப்போது ஆண்களே அதிகம் எழுதிய Sci fi கதைகளின் தொகுப்பு. 1986ல் தற்கொலை செய்து கொண்ட இவரது முதல்படைப்பாக ஆங்கிலத்தில் இந்த நூல் 2021ல் வெளிவருகிறது. Women and Women கதையில் ஆண்கள் இல்லாத … Continue reading Terminal Boredom: Stories by Izumi Suzuki:

Infinite Country by Patricia Engel

எல்லையற்ற தேசம் - பேட்ரிஷியா ஏங்கில். பேட்ரிஷியா கொலம்பியப் பெற்றோருக்குப் பிறந்தவர். மியாமி பல்கலைக்கழகத்தில் ஆசிரியை. இதற்கு முன் இருநாவல்களும், பல பரிசுகளும் வென்றவர். 2021 மார்ச் மாதம் வெளியாகியுள்ள இந்த நாவல் 2021ல் வெளிவந்த சிறந்த படைப்புகளில் ஒன்றாக விளங்கப்போகிறது. ஊடகச்செய்திகள் குற்றவாளியைப் பலியாளாக, பலியாட்களை குற்றவாளிகளாக சித்தரிப்பதைப் பார்த்ததுண்டா? தலியா அவளது தோழி, வேலை முடிந்து வந்தால் அவளுடன் சினிமாவிற்குச் செல்வதற்காகக் காத்திருக்கையில் தான் அது நடந்தது.ஒரு உணவுவிடுதியின் பின்னால் சமையல் செய்பவர்கள் ஒய்வில் … Continue reading Infinite Country by Patricia Engel