ஆசிரியர் குறிப்பு: திருச்சியில் பிறந்தவர். பொறியியல் பட்டதாரி. வடமாநிலங்களில் பணியாற்றியவர். சிதைவு என்ற சிறுபத்திரிகையை நடத்தியவர். தனுமையின் இக்கணம், யாதென அழைப்பாய், மாயன்- ஹிலிலோ கொத்தஸார் ஆகிய கட்டுரை நூல்கள் இதற்கு முன் இவர் வெளியிட்டவை. இது நான்காவது கட்டுரைத் தொகுப்பு. Flash Non fiction என்ற வடிவம் பெரும்பாலும் முகநூலுடன் நின்றுவிடுகிறது. புத்தக வடிவம் பெறுவது குறைவு. அல்புனைவு என்றாலே பத்து பக்கங்களுக்கு மேல் இருக்க வேண்டும் என்று திறனாய்வுப் பெருமக்கள் திடமாக நம்புவதால், இவை … Continue reading மனதோடு மொழிதல் – எஸ்.வாசுதேவன்:
சொல் ஒளிர் கானகம் – ஸ்ரீதேவி கண்ணன்:
ஆசிரியர் குறிப்பு: கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அரசு ஊழியர். மெட்ராஸ் பேப்பர் இணைய வார இதழில் தொடர்ந்து எழுதிவரும் இவரது முதல் நூல் இது. உலக அளவில் கல்வி அறிவு பெற்றவர்களின் சதவீதம் என்றால் ஆண்களே அதிகம். ஆனால் வாசிப்பவர்கள் என்று எடுத்துக் கொண்டால் மூன்றில் இரண்டுபங்கு பெண்களே. அதே போல், எல்லா நாடுகளிலுமே எழுத்தாளர்களில் பெண்களின் சதவீதம் அதிகம். தமிழில் Serious writing என்றால், பெண்களின் எண்ணிக்கை இன்றும் கூட விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருப்பது … Continue reading சொல் ஒளிர் கானகம் – ஸ்ரீதேவி கண்ணன்:
மாமி சொன்ன கதைகள் – சந்திரா இரவீந்திரன்:
ஆசிரியர் குறிப்பு: வடமராட்சி, பருத்தித்துறை, மேலைப்புலோலி, ஆத்தியடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது இலண்டனில் வசிக்கிறார். ஏற்கனவே இவரது இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகி இருக்கின்றன. இது அனுபவப் பகிர்வுகளின் தொகுப்பு. மாமியார்- மருமகள் உறவு என்பது love-hate relationship. Hate எத்தனை சதவீதம் என்பதைப் பொறுத்தே அவர்கள் பேசுவது இருக்கும். மேலைநாடுகளில் கூட இந்த உறவு சொல்லிக் கொள்ளும் வகையில் கிடையாது. முதன்முறையாக, சந்திரா, தனது மாமியார் கூறிய கதைகளை நினைவுறுத்திப் புத்தகமாக்கியதன் மூலம் அந்த உறவின் … Continue reading மாமி சொன்ன கதைகள் – சந்திரா இரவீந்திரன்:
அசைவறு மதிகேட்டேன்.
நல்ல கவிதைகள் அடையாளம் கண்டுபிடிக்கப்படாமல் போவதன் காரணம், கும்பலில் தொலைந்து போவது. சமீபகாலத்தில் சிறுகதைகளும், நாவல்களும் ஏராளமாக வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அவற்றில் சராசரிக்கு மேலிருப்பதைக் கண்டுபிடித்தல் எளிது. எது எப்படியாயினும் இந்த மூன்றையும் எழுதுபவர்கள், எழுத்தின் தரம் பார்க்கப்படாமலேயே கவிஞர், எழுத்தாளர் என்று பெயரிடப்படுகிறார்கள். R.P. ராஜநாயஹம் முப்பது வருடங்களுக்கு மேலாக எழுதிக் கொண்டிருக்கிறார். இலக்கியம், தத்துவம், அரசியல், கலை, சினிமா போன்று, இவர் எழுதாத விஷயங்களே இல்லை என்று சொல்லலாம். எழுத்திலும் தனக்கென தனித்துவ … Continue reading அசைவறு மதிகேட்டேன்.
பஞ்சுர்ளி – சத்தியப்பெருமாள் பாலுசாமி:
ஆசிரியர் குறிப்பு: சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.தொடர்ந்து பல இணைய/அச்சு இதழ்களில் கதைகள், கட்டுரைகள் எழுதி வருபவர். இவருடைய சிறுகதைத் தொகுப்பு 'கிளிக்கன்னி' மற்றும் கட்டுரைத் தொகுப்பான பஞ்சுர்ளி இரண்டுமே சமீபத்தில் வெளிவந்தவை. ஷோபா சக்தியின் 'ஸலாம் அலைக்' நாவலில் உலகில் ஒரே கதை தான் உள்ளது, அது தான் மாறிமாறிச் சொல்லப்படுகிறது என்ற வரி வரும். அது சொல்லப்படுவதன் அர்த்தம் வேறு. உண்மையில் இந்த உலகில் கோடானு கோடிக் கதைகள் உள்ளன. ஒவ்வொன்றும் அதன் சொந்தக்காரரை சொல்லிவிடு, … Continue reading பஞ்சுர்ளி – சத்தியப்பெருமாள் பாலுசாமி:
வீட்டு எண் 38/465- கவிதா லட்சுமி :
ஆசிரியர் குறிப்பு: கவிதா லட்சுமி. ஈழத்தின் வடபுலத்தில் குரும்பசிட்டியை பிறப்பிடமாகக் கொண்டவர். பன்னிரண்டாவது வயதில் புலம்பெயர்ந்து தற்பொழுது நோர்வே நாட்டில் வசித்துவருகிறார். கவிதை, இலக்கியம், நடனம், மொழிபெயர்ப்பு, அரங்கியல் என்று பலகளங்களில் இயங்குபவர். ஆறு கவிதைத் தொகுப்பு, ஒரு சிறுகதைத் தொகுப்பு ஆகியவற்றை இதுவரை வெளியிட்டுள்ள இவரது கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். அரியாத்தை- வேலப்பணிக்கன் கதையில், மனைவி இறந்து போக, கணவன் உடன்கட்டை ஏறுகிறான். இந்தக் கதையையும் காலனிய ஆதிக்கத்தின் நோக்கத்தையும் ஒப்பிடுதலே முதல் கட்டுரை. … Continue reading வீட்டு எண் 38/465- கவிதா லட்சுமி :
சங்கமி – பெண்ணிய உரையாடல்கள் – ஊடறு றஞ்சி & புதிய மாதவி:
ஊடறு றஞ்சி: இலங்கையைச் சேர்ந்தவர். ஸ்விட்சர்லாந்தில் வசிப்பவர். களப்பணியாளர். ஊடறு உட்பட பல பெண்களின் ஆக்கங்களைத் தொகுத்து வந்த நூலின் தொகுத்தவர். புதிய மாதவி: மும்பையில் பிறந்து வளர்ந்தவர். பெண்ணியச் செயற்பாட்டாளர். ஐந்திணை’, ‘பெண் வழிபாடு’, ‘மின்சார வண்டிகள்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர். இவர்கள் இருவர் உட்பட, சமூகத்தில் ஒரு தனித்த ஆளுமையாக விளங்கும் முப்பத்தி மூன்று பெண்களின் அறிமுகக் குறிப்புகளுடன், அவர்களது நேர்காணல்களின் தொகுப்பு இந்த நூல்.பெண் வெளி, பெண் மொழி, பெண்ணெழுத்து என்றெல்லாம் … Continue reading சங்கமி – பெண்ணிய உரையாடல்கள் – ஊடறு றஞ்சி & புதிய மாதவி:
சினிமா எனும் பூதம் – பாகம்- 2-R.P. ராஜநாயஹம்:
ஆசிரியர் குறிப்பு: R.P. ராஜநாயஹம் ஒரு எழுத்தாளர், பேச்சாளர், நடிகர், பாடகர், சங்கீதரசிகர், இயக்குனர், கூத்துப்பட்டறை ஆசிரியர், பெரும் வாசகர், அரசியல் உட்பட பலவிசயங்களை எழுதும் பத்தி எழுத்தாளர், சினிமா தகவல்களை (ஹாலிவுட், உலகப்படங்கள் உட்பட) மூளையில் சுரங்கம் போல் வைத்திருப்பவர், இத்தனைக்கும் மேல் சிறந்த மனிதர். தற்போது முரசு டிவியில் சினிமா எனும் பூதம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். எண்பதுகளில், மதுரையில் இவரோடு பழைய படங்கள் பார்ப்பதென்றால் ஒரு பட்டாளமே பரவசமாகத் தயாராகி விடும். … Continue reading சினிமா எனும் பூதம் – பாகம்- 2-R.P. ராஜநாயஹம்:
புதுப்புனல் – எம்.கோபாலகிருஷ்ணன் :
ஆசிரியர் குறிப்பு: திருப்பூரில் பிறந்தவர். தற்போது கோவையில் வசிக்கிறார். இந்தி இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர்.கவிஞர். எழுத்தாளர். மொழிபெயர்ப்பாளர். விமர்சகர். இவருடைய அம்மன் நெசவு, மணல்கடிகை, மனைமாட்சி ஆகிய நாவல்கள் முக்கியமானவை. இது சமீபத்தில் வெளிவந்த கட்டுரைத் தொகுப்பு. இந்த நூல் தமிழினியில் வெளிவந்த வளரும் எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு. இரண்டு காரணங்களினால் இந்த நூல் முக்கியமானது. முதலாவது, ஒரு Seasoned writer, வளரும் எழுத்தாளர்களின் படைப்புகளைக் குறித்து எழுதுவது அரிது. அப்படியே எழுதினாலும், 'தம்பி … Continue reading புதுப்புனல் – எம்.கோபாலகிருஷ்ணன் :
இந்தி ஒரு வரலாற்றுச் சுருக்கம் – கார்த்திக் புகழேந்தி:
ஆசிரியர் குறிப்பு: கார்த்திக் புகழேந்தி,எழுத்தாளர், பத்திரிகையாளர்.நாட்டுப்புறவியல்,நெல்லைத் தமிழ் ஆய்வு, சங்க இலக்கியம், கல்வெட்டு வாசிப்பு மற்றும் பண்பாட்டு ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார். மூன்று சிறுகதைத் தொகுப்புகள், நான்கு கட்டுரைத் தொகுப்புகளை இதுவரை வெளியிட்டுள்ளார். கார்த்திக்கின் கட்டுரை நூல்கள் ஆய்வை அடிப்படையாகக் கொண்டவை. இந்த நூல் இந்தி என்ற மொழியின் தோற்றம், உருதுவுக்கும் அதற்குமான பிணக்கு, காந்தியிலிருந்து பலரும் இந்தியை தேசிய மொழியாக்கச் செய்த முயற்சிகள் இவற்றுடன் ஆரம்பிக்கிறது. 2021 கணக்கின்படி 3372 மொழிகளைப் பேசும் தேசத்தில் இந்தி … Continue reading இந்தி ஒரு வரலாற்றுச் சுருக்கம் – கார்த்திக் புகழேந்தி: