ஆசிரியர் குறிப்பு: கழுகுமலையில் பிறந்தவர். வங்கியில் வேலைசெய்து விருப்பஓய்வு பெற்றவர். மூன்று சிறுகதைத் தொகுப்புகள், ஏழு கட்டுரை நூல்கள், ஒரு குறுநாவல் முதலியவற்றை ஏற்கனவே வெளியிட்டுள்ள இவர் இலக்கியத்துடன் சேர்ந்த பணிகளில் தன்னைத் தொடர்ந்து இணைத்துக் கொண்டவர். இந்த நூல் கி.ராவுடனான கடைசி நேர்காணல். பல வார்த்தைகளைப் போலக் கதைசொல்லி என்ற வார்த்தையும் வேறு அர்த்தத்திலேயே சொல்லப்படுகிறது. கதைசொல்லி என்றால் Narrator என்று பதிந்து கொண்ட மனம், வழுக்குத் தரையில் சறுக்கி, சுவரைப் பிடிமானம் செய்தது போல் … Continue reading கதைசொல்லி கி.ராவின் கடைசி நேர்காணல்- இரா. நாறும்பூநாதன்:
அதிசய மணிகள் – வீர. குணசீலன்:
ஆசிரியர் குறிப்பு: கரூரைச் சேர்ந்தவர். சிறுவயதில் இருந்தே இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருபவர். இதற்கு முன் சாந்தினி சொர்க்கம், கயல்வெளி ஆகிய நூல்களைக் கிண்டிலில் வெளியிட்டுள்ளார். முந்தைய இரண்டுமே தன் வரலாற்று நூல்கள். இதுவும் சமீபத்தில் கிண்டிலில் வெளிவந்த நூல். Snippet : “காலத்தை போல பாடம் நடத்தும் ஆசான் இந்த உலகத்தில் எங்குமே இல்லை மாம்ஸ். அந்த பாடத்தை படிக்கும் முதல் பெஞ்ச் மாணவனா இருப்பது ஒன்றுதான் நம் வெற்றிக்கான நிரந்தர வழியாக இருக்கும்.” நண்பர் … Continue reading அதிசய மணிகள் – வீர. குணசீலன்:
இரவின் ஆன்மா – திரைப்படங்களில் பெண்கள்- பேரா. ஜெ.பி.ஜோஸபின் பாபா:
ஆசிரியர் குறிப்பு; பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் துணைப்பேராசிரியர். ஒரு சிறுகதைத் தொகுப்பு, ஒரு நினைவுத் தொகுப்பு ஆகியவற்றை இதற்கு முன் வெளியிட்டுள்ளார். இது உலகத்திரைப்படங்கள் மற்றும் இந்தித் திரைப்படங்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. ஒரு திரைப்படம் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுவேறு எண்ணங்களை விளைவிப்பதைப் பார்த்திருக்கிறேன். கதைகளில் கூட ஆண் தன்மையில் சொல்லும் கதைகளைப் படிக்கும் ஆண்கள், பெண் செய்யும் துரோகங்களைத் தனக்கு இழைப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள். அதை வாசிக்கும் பெண்கள் Neutral ஆக அந்தக் கதையை … Continue reading இரவின் ஆன்மா – திரைப்படங்களில் பெண்கள்- பேரா. ஜெ.பி.ஜோஸபின் பாபா:
காலத்தை இசைத்த கலைஞன்- இளையராஜா 80 – ஜி.குப்புசாமி;
ஆசிரியர் குறிப்பு: ஆரணியைச் சேர்ந்தவர். பல புகழ்பெற்ற உலக எழுத்தாளர்களைத் தமிழில் மொழிபெயர்த்தவர். அருந்ததிராயின் பல நூல்களைத் தமிழுக்குக் கொண்டு சேர்த்தவர். மொழிபெயர்ப்புக்காக அயர்லாந்து அரசின் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர். இந்த நூல் இளையராஜா குறித்த இரண்டு கட்டுரைகளின் தொகுப்பு. எங்களது இளமைப்பருவம் இளையராஜாவிற்கு முந்தைய இசையமைப்பாளர்களால் நிறைந்தது. வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே, காதல் கடல் கரையோரமே (இரண்டுமே டி.ஆர்.பாப்பா), வண்ணக்கிளியே சொன்ன மொழியே (இரட்டையர்கள்) என்பது போலக் குறைந்தது நூறு … Continue reading காலத்தை இசைத்த கலைஞன்- இளையராஜா 80 – ஜி.குப்புசாமி;
பதில்களில் மட்டும் இல்லை விடை- அப்பணசாமி:
ஆசிரியர் குறிப்பு: எட்டயபுரத்தில் பிறந்தவர். ஊடகவியலாளராக பல நாளிதழ்களில் பணிபுரிந்தவர். நாடக அரங்க அமைப்புகளில் பங்கு கொண்டவர். கடந்த பத்துஆண்டுகளாக கல்வித்துறையில் தன்னை இணைத்துள்ளார். இவரது கொடக்கோனார் கொலை வழக்கு என்ற நாவல் நல்ல வரவேற்பைப் பெற்றது. புனைவு, அல்புனைவு, நாடகம், விமர்சனம், மொழிபெயர்ப்பு என பல தளங்களில் இயங்கிவரும் இவரது நேர்காணல்களின் தொகுப்பு இந்த நூல். எம்.வி.வி நேர்காணலில் இரண்டு விஷயங்கள் மிக முக்கியமானவையாகத் தோன்றுகின்றன. முதலாவது வியாபாரம் நன்றாகப் போய்க்கொண்டிருக்கையில் சிறுபத்திரிகை நடத்தி இரண்டையும் … Continue reading பதில்களில் மட்டும் இல்லை விடை- அப்பணசாமி:
நிருபரின் நினைவுகள்- ஆர். நூருல்லா:
ஆசிரியர் குறிப்பு: சேலத்தில் பணியைத் தொடங்கி அரைநூற்றாண்டு காலத்திற்கு நாளிதழ் செய்தியாளர். எழுத்தாளர். வாதஉரை வீச்சாளர். கவிஞர். சொற்பொழிவாளர். ராஜிவ் காந்தி படுகொலைக் களத்தின் நேரடி சாட்சியாளர். நாளிதழ் செய்திகளை உலக அளவில் சேகரிப்பது என்பது மிகவும் சிரமமான காரியம். War reporter போன்ற நாவல்கள் மரணத்தின் முனை வரை சென்று திரும்பியதைச் சொல்லும். International media குறித்து அறிந்து கொள்ள விரும்புபவர்கள் Irving Wallaceன் The Almighty மற்றும் Jeffrey Archerன் The Fourth Estate … Continue reading நிருபரின் நினைவுகள்- ஆர். நூருல்லா:
அறத்துக்கு அப்பால் நீளும் அத்துமீறல் – ஆரூர் பாஸ்கர்:
ஆசிரியர் குறிப்பு: அமெரிக்காவின் ஃப்ளாரிடா மாகாணத்தில் வசிக்கும் ஆரூர்பாஸ்கர் மென்பொருள் துறையில் பணிபுரிகிறார். இர்மா, வனநாயகன் போன்ற இவருடைய முந்தைய நூல்கள் பரவலான கவனத்தைப் பெற்றன. வெளிநாடுகளில் வசிக்கும் தமிழரில் இலக்கியத்திற்குத் தொடர்ந்து பங்களிப்பவர்களில் ஒருவர். இந்த நூல் சமூகஊடகங்கள் குறித்த புரிதலை அதிகப்படுத்தும் கட்டுரைகளின் தொகுப்பு. காலை ஐந்து மணிக்குக் கோலம் போடுகையில் பார்த்தால் தான், யாரும் அருகில் இல்லாது பேசமுடியும் என்ற காலத்திலிருந்து, அடுத்தவர் மனைவியிடம் கூட நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு யாருமறியாது பேசமுடியும் … Continue reading அறத்துக்கு அப்பால் நீளும் அத்துமீறல் – ஆரூர் பாஸ்கர்:
மோகப் பெருமயக்கு – சுகுமாரன்:
ஆசிரியர் குறிப்பு: கோவையில் பிறந்தவர். ஊடகங்களில் பணியாற்றியவர். கவிஞர், கட்டுரையாளர், நாவலாசிரியர், மொழிபெயர்ப்பாளர். இந்த நூல் இவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் தி.ஜா குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. தி.ஜாவை முழுமையாக வாசித்த எல்லோருக்குள்ளும் தனியாக ஒரு தி.ஜா இருக்கின்றார். அவர் படைப்புகள் மீதான என் நேசம் எந்தக்காதலுக்கும் குறைவானது அல்ல. தி.ஜாவை வாசிப்பது என்பது பதின்வயதில் அரைஇருளில் பாதிபயத்துடன் வாங்கிய அவசரமுத்தம். அது சுகானுபவம். பிரத்யேகமானது. அது இல்லாவிடில் ஆயுள் குறையப் போவதில்லை. ஆனால் அந்த ஈரத்தை … Continue reading மோகப் பெருமயக்கு – சுகுமாரன்:
ஆர்த்தெழும் பெண் குரல்கள் – லறீனா அப்துல் ஹக்:
ஆசிரியர் குறிப்பு: இலங்கை மத்தளையைச் சேர்ந்தவர். ஆய்வுநூல்கள், நாவல், சிறுகதை, மொழிபெயர்ப்பு என பலதளங்களில் இயங்குபவர். இவர் டாகுமென்டரி, நேர்காணல்கள் எடுத்து ஒலிபரப்பு செய்யப்பட்டுள்ளது. ஒன்பது தமிழ் மெல்லிசைப் பாடல்கள் இவர் எழுதி, இசையமைத்து இசைத்தட்டு வெளியாகியுள்ளது. பல துறைகளில் சாதனை புரிந்த பெண்களின் குரலைப் பதிவுசெய்யும் கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். ராஜம் கிருஷ்ணன் குறித்த கட்டுரை அழகாக வந்துள்ளது. நான்கு சுவர்களுக்கு நடுவில் இருந்து புனைக்கதைகள் எழுதாமல், களஆய்வுகள் செய்து நாவல்களை எழுதியவர். மக்களை … Continue reading ஆர்த்தெழும் பெண் குரல்கள் – லறீனா அப்துல் ஹக்:
வாசிப்பெனும் வானம் – அழகுநிலா:
ஆசிரியர் குறிப்பு: தஞ்சை மாவட்டம் செண்டங்காடில் பிறந்தவர். சிங்கப்பூரில் வசிக்கிறார். இலக்கிய விமர்சனத்தைத் தொடர்ந்து செய்யும் இவர், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு கட்டுரைத் தொகுப்புகள், நான்கு சிறார் நூல்கள் முதலியவற்றை வெளியிட்டிருக்கிறார். இது வாசிப்பனுபவக் கட்டுரைகளின் தொகுப்பு. இலக்கிய விமர்சனம் என்பது ரசனை அடிப்படையிலான விமர்சனம் மற்றும் திறனாய்வு ரீதியான விமர்சனம் என்று பொதுவாக இரண்டு வகைகளாகப் பிரித்துக் கொள்ளலாம். திறனாய்வு என்று எடுத்துக் கொண்டால் அங்கே, ஏற்கனவே அந்த கருப்பொருளில் வந்த நூல்களுடன் ஒப்பிடுதல், … Continue reading வாசிப்பெனும் வானம் – அழகுநிலா: