அருணா இன் வியன்னா – அருணாராஜ்:

ஆசிரியர் குறிப்பு: மருத்துவர் அருணா ராஜ் பல் மருத்துவத்தில் பட்டமேற்படிப்பு முடித்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் இணை பேராசியராக பணிபுரிந்து வருகிறார். இதுவரை ‘கருப்பி’ என்ற சிறுகதை தொகுப்பும் ‘இரண்டாவது புத்தகம்’ என்ற அனுபவக் கட்டுரைத் தொகுப்புமாக, இரு நூல்களை வெளியிட்டுள்ளார். ‘அருணா ‘இன்’ வியன்னா’ இவரது மூன்றாவது படைப்பு. இந்தப் புத்தகத்தில் மிகவும் கவர்ந்த விசயம், நான்கு (உண்மையில் மூன்று) வெவ்வேறு இடத்தில் இருக்கும் பெண்களின் ஐரோப்பா பயணம். இவர்கள் கல்லூரிப் பெண்களோ, மணமாகாது … Continue reading அருணா இன் வியன்னா – அருணாராஜ்:

வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்- வே.மு.பொதியவெற்பன்:

ஆசிரியர் குறிப்பு: தமிழ்க் கவிஞர், ஆய்வாளர், பதிப்பாளர், பிழைதிருத்துநர், பிரதிமேம்படுத்துநர், கல்விப் புலத்துக்கு வெளியே நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டியாக விளங்குபவர் போன்ற பன்முகத் தன்மை உடையவர், முனைவன் என்ற சிற்றிதழை எண்பதுகளில் நடத்தி வந்தவர். தொல்காப்பிய-திருக்குறள் உரையியல், மணிக்கொடி கலைஞர்களைப் பற்றிய ஆய்வியல் உள்ளிட்ட இவரது பல நூல்கள் ஏற்கனவே வெளிவந்தவை. ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் இலக்கியம், சிறுபத்திரிகைகளுடன் இணைந்தே பயணிப்பவர். இலக்கிய விமர்சனங்களை, நூல் குறித்த தகவல்களை அயர்வின்றி வாசகர்களுக்குக் கொண்டு … Continue reading வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்- வே.மு.பொதியவெற்பன்:

மாயவரம் சில நினைவுகளும் நிகழ்வுகளும் – சந்தியா நடராஜன்:

ஆசிரியர் குறிப்பு: மாயவரத்தில் பிறந்தவர். சுங்கத்துறையில் பணிபுரிந்தவர். மொழியாக்கப் பணிகளில் ஈடுபட்டு வரும் இவர் புதுமைப்பித்தன், சந்தியா பதிப்பகங்களின் உரிமையாளர். இந்த நூல் இவரது மாயவரம் நினைவுகள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு. மாயவரத்தில் (மயிலாடுதுறை) அவ்வப்போது ஓரிரு நாட்கள் தங்கியதைத் தவிர அந்த ஊரில் சிலமாதங்கள் கூட வசித்ததில்லை. பல வருடங்கள் முன்பு ஒரு ஆடிப்பெருக்குக்கு மாயவரத்தில் தங்கியிருந்ததுண்டு. மாயவரத்தில் கிடைக்கும் பொருட்களின் விசேஷத்தில் நூல் ஆரம்பிக்கிறது. காளியாகுடி காப்பி, அல்வா. காலை ஐந்து மணிக்கு நெய் … Continue reading மாயவரம் சில நினைவுகளும் நிகழ்வுகளும் – சந்தியா நடராஜன்:

சில இடங்கள் ……. சில புத்தகங்கள் …….- ச.சுப்பாராவ்:

ஆசிரியர் குறிப்பு: சிறுகதைகள், கட்டுரைகள், விமர்சனம் என்று பலதளங்களில் இலக்கியத்தோடு அளவளாவிக் கொண்டிருப்பவர். சிறந்த மொழிபெயர்ப்பாளர். எல்லாவற்றிற்கும் மேலாகத் தொடர் வாசிப்பில் இருக்கும் சிறந்த வாசகர். இந்த நூல் இவர் சென்ற சில இடங்களையும் அதைக் களமாக வைத்து எழுதப்பட்ட புத்தகங்களையும் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. அயல்நாட்டை விடுங்கள், திருவனந்தபுரமோ, மதுரையோ எந்த ஊருக்குச் சென்றாலும் எனக்கு நினைவில் வருவது வேறு விசயம். திருவனந்தபுரம் என்றால் பள்ளிகொண்டபுரம், மதுரை என்றால் குறிஞ்சிமலர் என்று நினைவுகள் புத்தகங்களை இழுத்து … Continue reading சில இடங்கள் ……. சில புத்தகங்கள் …….- ச.சுப்பாராவ்:

நான் கண்ட பெங்களூரு

நான் கண்ட பெங்களூரு - பாவண்ணன்: ஆசிரியர் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வளவனூர் என்னும் கிராமத்தில் பிறந்தவர். நாற்பதாண்டுகளாக எழுதும் இவரது மூன்று நாவல்கள், இரண்டு குறுநாவல்கள், பத்தொன்பது சிறுகதைத் தொகுதிகள், இருபத்தி நான்கு கட்டுரைத் தொகுதிகள் இதுவரை வெளிவந்த நூல்கள். 1989ல் இருந்து பெங்களூரில் வசித்து வரும் இவரது பெங்களூர் நினைவுகள் குறித்த நூல் இது. பெங்களூர் என்றாலே எண்பதுகளில் பார்கள், தாராளமான பெண்கள், இரவு வாழ்க்கை என்று இளைஞர்கள் மனதில் பதிந்திருந்த விசயம். … Continue reading நான் கண்ட பெங்களூரு

கல்கத்தா நாட்கள்

கல்கத்தா நாட்கள் - நர்மி: ஆசிரியர் குறிப்பு: நர்மி என்ற நர்மியா மதுரையில் பிறந்தவர். கல்கத்தா ஜதவ்பூர் பல்கலையில் முதுகலை பட்டப்படிப்பு படித்தவர். இவரது கல்கத்தா வாழ்க்கையின் நினைவுகள் குறித்த நூல் இது. கல்கத்தா நகருக்கு நிறைய நூல்கள் வந்துள்ளன. எல்லோருக்கும் தெரிந்த Dominique Lapierreன் City of Joyல் இருந்துKushanava Choudhuryன் சமீபத்திய Epic City வரை ஏராளமான நூல்கள். அந்த வரிசையில் தமிழில் கல்கத்தா நகர் குறித்து வெளிவரும் முதல் நூல் இதுவாகத்தான் இருக்கும். … Continue reading கல்கத்தா நாட்கள்

தாயார் சன்னதி- திருநவேலி பதிவுகள்

தாயார் சன்னதி - திருநவேலி பதிவுகள்- சுகா: ஆசிரியர் குறிப்பு: திருநெல்வேலியில் பிறந்தவர். பாலுமகேந்திராவின் மாணவர். படித்துறை படத்தின் இயக்குனர். பல திரைப்படங்களில் வசனகர்த்தா. மூங்கில் மூச்சு, சாமானியனின் முகம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். இந்த நூல் இவரது திருநெல்வேலி நினைவுகள். முதல் கட்டுரையே புத்தகத்தை முடிக்காமல் கீழே வைக்கக்கூடாது என்று நம்மிடம் உறுதிமொழி வாங்கிக் கொள்கிறது. திருநெல்வேலியில் மட்டுமல்ல, மதுரையைச் சுற்றிய கழுதை கூட வெளியில் போகாது என்பார்கள். அத்துடன் இன்னொரு விசயம், சிறுவயதில் … Continue reading தாயார் சன்னதி- திருநவேலி பதிவுகள்

Brevity- a handbook for Flash Fiction

Brevity - David Galef டேவிட் அமெரிக்க எழுத்தாளர், விமர்சகர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர். இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். எழுத்தாளர் பட்டறையில் ஆசிரியராக இருந்தவர். மிசிஸிபி பல்கலையில் இலக்கியம் கற்பித்தவர். பல நூல்களை எழுதிய இவரது இந்த நூல் குறுங்கதைகள் (Flash Fiction).குறித்து வந்த நூல்களில் முக்கியமானது. 1500 வார்த்தைகளுக்குக் கீழ் வருவதெல்லாம் குறுங்கதைகளா? அப்படி என்றால் குமுதம் ஒருபக்கக் கதைகளும் அந்த வரையறைக்குள் வரும் இல்லையா? நல்ல குறுங்கதை ஒரு அறிக்கை போல் கதையை … Continue reading Brevity- a handbook for Flash Fiction

எஸ்.ராமகிருஷ்ணனின் ஆறு நூல்கள்

எஸ்.ராமகிருஷ்ணனின் ஆறு நூல்கள்: எஸ்.ரா சென்ற ஆண்டைப் போலவே இப்போதும் அவருடைய இந்த வருடத்தியப் புத்தகங்களை வருடத்தின் முடிவில் வெளியிட்டிருக்கிறார். இந்த வருடத்தின் புத்தகக்கண்காட்சி கேள்விக்குரியதாக இருக்கையில் அதை எதிர்பாராது தொடர்ந்து மற்ற பதிப்பகங்களும் நூல்களை வெளியிடுவது நல்லது. இந்த ஆண்டு, உலக இலக்கியம் பற்றிய நூல், சிறுகதைத் தொகுப்பு, குறுங்கதைத் தொகுப்பு, தமிழ் சினிமாக் கட்டுரைகள் தொகுப்பு, உலகசினிமா கட்டுரைத் தொகுப்பு, சிறார் நூல் என்று கலவையாக ஆறுநூல்களின் வெளியீடு. கதாபாத்திரங்களின் பொம்மலாட்டம்:(உலக இலக்கியம்) உலக … Continue reading எஸ்.ராமகிருஷ்ணனின் ஆறு நூல்கள்

தனுஜா- ஈழத்திருநங்கையின் பயணமும் போராட்டமும்

தனுஜா - தனுஜா சிங்கம்: ஆண் குழந்தையாகப் பிறந்து தனுஜன் என்ற பெயரில் வளர்ந்த இவர், இயற்கையின் தேர்வில் தன்னை தனுஜாவாக மாற்றிக் கொண்டார். பன்னிரண்டு வயதிலிருந்து ஜெர்மனியில் வளர்ந்தவர். பாலியல் தொழிலாளியாக நல்ல வருமானத்தை ஈட்டி வந்த இவர், சுயவிருப்பில் அதை விட்டுவிட்டு சுகாதாரத்துறையில் பற்கள் பராமரிப்பு கல்விபயின்று கொண்டிருக்கிறார். இருபத்தொன்பது வயதே ஆன இவரது இந்த சுயசரிதை, ஈழத்தின் திருநங்கைகளின் முதல் சுயசரிதை மட்டுமல்ல, தமிழில் முழுமையான LGBT பிரிவில் அடங்கும் முதல் சுயசரிதையும் … Continue reading தனுஜா- ஈழத்திருநங்கையின் பயணமும் போராட்டமும்