ஆசிரியர் குறிப்பு: தஞ்சை மண்ணில் பிறந்து, வளர்ந்து தற்போது சிங்கப்பூரில் பணிபுரிபவர். இடையர் குலத்தில் பிறந்து, தொகுப்பு முழுக்க அவர்களது வாழ்வியலைச் சொல்லும் முதல் கவிதைத் தொகுப்பு இதுவாகத் தான் இருக்கும் என நினைக்கிறேன். கவிதைகளில் படிமங்கள் அழகு, இடைவெளிகள் அழகு, மாறுபடும் கோணங்கள், வார்த்தைகளின் இடப்பெயர்ச்சி, நவீனத்துவம் என்று எல்லாமே அழகு. நல்ல கவிதைகள் ஏதோ ஒரு அடித்தளத்தில் கட்டுமானம் செய்யப்பட்டு அழகாகக் காட்சியளிப்பவை.வாழ்வியலைச் சொல்லும் கவிதைகளுக்கு எந்த அலங்காரமும் தேவையில்லை. முகத்தைக் கழுவி நீர்சொட்ட … Continue reading கீதாரியின் உப்புக்கண்டம் – வெற்றிச்செல்வன் இராசேந்திரன்:
ஔவையின் கள் குடுவை – அம்மு ராகவ்:
வணிகவியல் பட்டப்படிப்பு, ஆசிரியர் பட்டயப் படிப்பும் படித்தவர். தற்போது தேனியில் வசிக்கிறார். கவிதை, கட்டுரை, நேர்காணல்கள் ஆகிய தளங்களில் தொடர்ந்து இயங்கி வருகிறார். இது இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு. ஔவையின் கள் குடுவை தலைப்பு ஒரு Metaphor அல்லது மறந்து போன சமத்துவத்தின் குறியீடு. காலம் ஒரு பெரிய வட்டத்தில் மெதுவாகச் சுற்றி வந்து, பெங்களூர், மும்பை பார்களில் ஔவையின் கள் குடுவையைக் கண்டுபிடித்துக் கொடுத்திருக்கிறது. ஒன்றாகக் கள்குடிப்பதில் சமத்துவம் இல்லை, ஆனால் வந்த விருந்தினரை … Continue reading ஔவையின் கள் குடுவை – அம்மு ராகவ்:
றா – லார்க் பாஸ்கரன்:
ஆசிரியர் குறிப்பு: லார்க் பாஸ்கரன் கள்ளக்குறிஞ்சி மாவட்டம் சின்ன சேலத்தில் பிறந்தவர். தமிழ்த் திரைப்படத் துறையில் வரைகலைத் தொழில்நுட்பக் கலைஞரான இவர் தற்போதுதிரைப்பட இயக்கம் சார்ந்து பயணித்துக்கொண்டிருக்கிறார். பல நூல்களின் அட்டையில் இவர் கைவண்ணத்தைக் காணலாம். இதற்கு முன் ஐந்து கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. விரைவில் இவரது முதல்நாவல் வெளியாகவிருக்கிறது. இந்தத் தொகுப்பின் பல கவிதைகள் இருத்தலில் இருக்கும் பிரச்சனைகள் குறித்துப் பேசுகின்றன. அவற்றிலிருந்து தப்பிக்கும் ஒரு வழி கற்பனை சாம்ராஜ்ய ஜன்னலைத் திறந்து வைத்துக் கொள்வது. … Continue reading றா – லார்க் பாஸ்கரன்:
மத்தியான நதி – செல்வசங்கரன்:
விருதுநகரில் வசிக்கிறார். கல்லூரியில் தமிழ் பேராசிரியர். ஆதவன் படைப்புகளை முனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்துள்ளார்.இதற்கு முன் ஐந்து கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. இது இவரது ஆறாவது கவிதைத் தொகுப்பு. செல்வசங்கரனின் கவிதைகள் ஒரு மாற்று உலகத்தை சிருஷ்டி செய்து கொள்ளும். நிதர்சனமில்லாத எல்லாமும் அங்கே, தினம் நடக்கும் சாதாரண நிகழ்வு போல் பகிரப்படும். இருத்தல் குறித்த விசாரம், Absurdism ஆகியவைகளால் நிரம்பியது செல்வசங்கரன் கவிதைகள். அஃறிணைகள் நம்மைப் போல் சிந்திப்பது என்பது சரி, இங்கே காலமும, மனிதனும் … Continue reading மத்தியான நதி – செல்வசங்கரன்:
ஊன்முகிழ் மிருகம் – சவிதா:
ஆசிரியர் குறிப்பு: சென்னையில் பிறந்தவர். சேலத்தில் வசிக்கிறார். தீவிர வாசகர். இதற்குமுன் இவரது மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளியாகி இருக்கின்றன. இது நான்காவது கவிதைத் தொகுப்பு. காதல் என்னும் உணர்வு பருகப்பருகத் தீராதது. காதலித்தவர்களை விட்டு விலகினாலும், காதலை இறுகப்பற்றிக் கொண்டே வாழ்க்கையைக் கழிக்கிறோம். காதலிப்பதை விடக் காதலிக்கப்படுவது என்பது வாழ்வின் அர்த்தத்தைக் கூட்டுகிறது. 'பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்' என்பதில் நாயகிபாவம் மட்டுமில்லை, எதிர்பார்ப்பில்லாத சரணாகதி. காலங்கள் தாண்டி, சவிதாவின் இந்தக் கவிதைகளும் அதையே செய்கின்றன. வரிசையாக, … Continue reading ஊன்முகிழ் மிருகம் – சவிதா:
பெருக்கு – அலறி:
ஆசிரியர் குறிப்பு: கிழக்கிலங்கையின் மருதமுனையைச் சேர்ந்தவர். சட்டத்தில் இளமானிப் பட்டமும்,மனித உரிமைகள், பொதுச் சுகாதாரம், உளவளத்துணை போன்றவற்றில் டிப்ளமோ பட்டமும் பெற்ற சட்டதரணியாவார். ஏற்கனவே இவரது ஐந்து கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. இது ஆறாவது தொகுப்பு. 'அற்றைத் திங்களின்' பாரி மகளிரின் சோகம் இந்தக் கவிதையிலும் பிரதிபலிக்கிறது. சிதிலங்கள் எப்போதும் நமக்கு சொந்தமில்லாதவற்றில் நேரும் போதும் வருத்தத்தை ஏற்படுத்துபவை. கட்டிடங்கள், ஆறு, குளம், நாடு…… ஏன் பெண்ணாக இருந்தால் கூட சரி இனம்புரியாத சோகம் மேலெழுகிறது. " … Continue reading பெருக்கு – அலறி:
அசகவ தாளம் – பெரு விஷ்ணுகுமார்:
ஆசிரியர் குறிப்பு: பழனியைச் சேர்ந்தவர். இயற்பியலில் முதுகலைப் பட்டதாரி. இதற்கு முன் " ழ என்ற பாதையில் நடப்பவன்' என்ற கவிதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. இது இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு. சிறிய சிக்கல்களில் மனஅழுத்தம் பெறுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்களது வாழ்க்கை முழுவதும் பேரிடர் அவர்கள் இருக்கும் தெருவிற்குக்கூட வரப்போவதில்லை. misfortunes never come singly என்பதெல்லாம் எப்போதும் அடிதாங்கிக் கொண்டு அமைதியாக இருப்பவர்களுக்கு மட்டும். " எதையும் நிரூபிக்காமல் வெறுமனேகிடப்பினும் காலம் எங்கேனும்கூட்டித்தான் செல்கிறதுதற்போது இந்த … Continue reading அசகவ தாளம் – பெரு விஷ்ணுகுமார்:
ஜூடாஸ் மரம் – மலர்விழி:
ஆசிரியர் குறிப்பு: கோவையில் பிறந்து, வளர்ந்தவர். பெங்களூரில் வசிக்கிறார். கணினிப் பயன்பாட்டில் முதுகலைப்பட்டம் பெற்று ஐடித்துறையில் பணியாற்றியவர். இவரது ஒரு கவிதைத் தொகுப்பும், ஒரு மொழிபெயர்ப்பு நூலும் ஏற்கனவே வெளிவந்தவை. இது இரண்டாவது கவிதைத் தொகுப்பு. சந்திரோதயம் படப்பாடலில் ஒரு Stanza "இதழோடு இதழ் வைத்து இமை மூடவோ" என்று ஆரம்பிக்கும். மொத்தப்பாராவும் தணிக்கை செய்யப்பட்டு "மணக்கின்ற தமிழ் மண்ணில் விளையாடவோ" என்று காமெடிப் பாடலாக மாறியிருக்கும். அதற்கு ஏழு வருடங்கள் முன்பே வந்த அம்பிகாபதி பாடல் … Continue reading ஜூடாஸ் மரம் – மலர்விழி:
காலடித் தடங்கள் – சுபி:
ஆசிரியர் குறிப்பு: பள்ளி இறுதியில் கவிதைகள் எழுத ஆரம்பித்த சுபியின், முதல் தொகுப்பான 'காலடித் தடங்கள்' கிண்டில் வெளியீடாக வந்து, கடந்த ஜூலையில் வெளிவந்த "தேம்பூங்கட்டி', ' நோமென் நெஞ்சே' தொகுப்புகளுடன் இணைந்து மூன்றாவது அச்சுப்பிரதியாக வெளிவந்துள்ளது. தமிழில், பிரபல பதிப்பகங்கள் தவிர்த்து, மற்ற பதிப்பக நூல்களை வாங்க நினைப்பவர்களுக்கு, Online link பெரும்பாலும் இருப்பதில்லை. தொலைபேசி எண் உபயோகத்தில் இருப்பதில்லை அல்லது அவர்கள் எடுப்பதில்லை. அதே போல் புத்தக வெளியீட்டுக்கு வரும் வாழ்த்துகள் வேறு, புத்தகங்கள் … Continue reading காலடித் தடங்கள் – சுபி:
தாழை மலர்த்தும் மின்னல் – காயத்ரி ராஜசேகர் :
ஆசிரியர் குறிப்பு: தஞ்சையில் பிறந்தவர். சென்னையில் வசிப்பவர். முதுகலை நுண்ணறிவியல் பயின்றவர். 'யாவுமே உன் சாயல்',' ஏவாளின் பற்கள்' ஆகியவை இவரது முந்தைய கவிதைத் தொகுப்புகள். இது மூன்றாவது கவிதைத் தொகுப்பு. காயத்ரியின் கவிதைகளின் மொழி ஒரு விடாமுயற்சி கொண்ட பெண்ணின் மொழி.அரைமணி நேரம் சமாதானப்படுத்துவதை, மறுவார்த்தை பேசாது கேட்டுக் கொண்டிருந்து விட்டுக் கடைசியில் "இல்லை போகக்கூடாது " என்று சொல்லும் பெண்ணின் முகபாவம். " பச்சிளம் சிசுவெனஉறங்க வைத்துவிலகத் துணியாதேபிரிவின் முன் பழக்கி விட்டுப் போநிறைசூலியாயிருந்தும்சடலத்தைப் … Continue reading தாழை மலர்த்தும் மின்னல் – காயத்ரி ராஜசேகர் :