பாலைவனச் சிறகு கொள்ளும் வண்ணத்துப் பூச்சிகள்

பாலைவனச் சிறகு கொள்ளும் வண்ணத்துப் பூச்சிகள் - ஆனந்தி ராமகிருஷ்ணன்: ஆசிரியர் குறிப்பு: கணிப்பொறி அறிவியலில் இளங்கலையும் சமூகவியலில் முதுகலையும் பயின்றவர். மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றியவர். இது இவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பு. முன்னுரையில் இவர்: " உணர்தலின் தேசத்தில் உணர்த்துதல் பிழை… காலக்கோடுகளின் கணக்கில் எழுதாமல் இருப்பது பெரும் குறை…..அபரிதம் விடுபட சிக்காத சொல்லுக்குள் எல்லாம் காத்திருத்தல் பதின்நிலை….. பிரபஞ்சத்தின் ரகசியங்களுக்குள் நடப்பவை அத்தனையும் காலயந்திரத்தின் நிறை….." ஒவ்வொருவர் கவிதைக்கும் தனிமொழி. அந்த மொழியைப் புரிந்து … Continue reading பாலைவனச் சிறகு கொள்ளும் வண்ணத்துப் பூச்சிகள்

வண்ணநிலவன் கவிதைகள்

ஆசிரியர் குறிப்பு: திருநெல்வேலியில் பிறந்தவர். எழுபதில் எழுத ஆரம்பித்து ஏறக்குறைய நூற்றைம்பது சிறுகதைகள், ஏழு நாவல்கள் (குறுநாவல்கள்) என்று ஐம்பது வருடங்களில் எழுதியது குறைவாகத் தோன்றுகிறது. சமகாலத்தின் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவர். அவரது எல்லாக் கவிதைகளையும் தொகுத்து சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது இந்த நூல். வண்ணநிலவனின் எஸ்தரும், கடல்புரத்திலும் படித்து அது குறித்து எவ்வளவு நேரம் பேசியிருப்போம் என்பதை நினைவாற்றல் அதிகமுள்ள தோழர் R P ராஜநாயஹம் தான் சொல்ல வேண்டும். எஸ்தர் புத்தகம் கிடைக்காத நேரம் … Continue reading வண்ணநிலவன் கவிதைகள்

அம்புயாதனத்துக் காளி

ஆசிரியர் குறிப்பு: சீர்காழியைப் பூர்வீகமாகக் கொண்டவர், அபுதாபியில் வசித்து வருகிறார். இது இவரது சமீபத்திய கவிதைத் தொகுப்பு. இந்தியத் தொன்மமரபில் கடவுளைக் காதலனாக உருவகித்து ஏராளமான கவிதைகள். பெண்கள் கண்ணனை அழைக்கும் சிருங்கார நடனம் வடக்கில் ஏராளம். சீதா, லட்சுமியின் அம்சம், அவளையும் வேறொருவன் காமுற்றான். தன்னை மறக்கச் செய்யும் போதை அபின், ஹெராயின் மட்டுமல்ல, பக்தியும், காமமும் தான். காமம் சிற்றின்பம், கடவுள் பேரின்பம் என்று முதலில் வகுத்தவன் யார்? காணாதது, கையில் சிக்காதது எப்போதுமே … Continue reading அம்புயாதனத்துக் காளி