கல்லாப்பிழை- க.மோகனரங்கன்:

மோகனரங்கன். கவிதை, கட்டுரை, விமர்சனம், மொழிபெயர்ப்பு என்று பல தளங்களில் இயங்கிவருபவர். இதுவரை இவருடைய மூன்று கவிதைத் தொகுப்புகள், இரண்டு கட்டுரைத் தொகுப்புகள்,ஒரு சிறுகதைத் தொகுப்பு, இரண்டு மொழிபெயர்ப்புகள் வெளியாகியுள்ளன. இவரது சிறுகதைகள் மொழிபெயர்ப்பு, " குரங்கு வளர்க்கும் பெண்" வாசகர்கள் தவறவிடக்கூடாத நூல். இது இவருடைய சமீபத்திய கவிதைத் தொகுப்பு. நல்ல கவிதைகள் காட்சிப்படுத்தலுடன் முடிவதில்லை. இன்னும் சொல்லப்போனால் எல்லா நல்ல விசயங்களிலுமேயே இன்னும் இன்னும் என்று மனம் தேடும். இந்தக்கவிதையில் கருவறைக்கதவு சாத்தியிருக்கிறது. விளக்கு … Continue reading கல்லாப்பிழை- க.மோகனரங்கன்:

உழத்தி – ஜே.மஞ்சுளாதேவி:

ஆசிரியர் குறிப்பு: உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர்.வானம்பாடி கவிதை இயக்கம் பற்றி தனது முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்தவர். இதுவரை பன்னிரண்டு நூல்களை எழுதிய இவரது ஐந்தாவது கவிதைத் தொகுப்பு இது. உழவன் என்ற சொல் புழங்கும் அளவிற்கு அதன் பெண்பால் சொல் உழத்தி அதிகம் புழங்கியதில்லை. முதல் கவிதையில் அது ஏன் என்று சொல்கிறார். நாம் தான் எளிதாக கூலிக்காரி என்று சொல்லிக் கடந்து விடுகிறோமே. எளிய மனிதர்களைப் பற்றிச் சொல்லும் எளிய கவிதைகள், ஆனால் எளிய விசயங்களைப் … Continue reading உழத்தி – ஜே.மஞ்சுளாதேவி:

சமகாலம் என்னும் நஞ்சு – சமயவேல்:

ஆசிரியர் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகில் வெம்பூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். அடிப்படையில் கவிஞர். இதற்குமுன் ஆறுகவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியுள்ள இவர் குறிப்பிடத்தக்க மரக்கறி, அன்னா ஸ்விர், குளோரியா ஃப்யூடர்ஸ் கவிதைகள் போன்ற நாவல், கவிதைகள் மொழிபெயர்ப்புகளையும் செய்துள்ளார். இந்த நூல் இவரது சமீபத்திய கவிதைத் தொகுப்பு. முன்னுரையில் இவர் ஒரு முக்கியமான விவாதத்தை எழுப்பியிருக்கிறார். ஆண்டாள் மேல் மையல் கொண்டால் அவர் சமகாலத்தவரா? நாட்டியப் பேரொளி பத்மினி அன்னை வயதானவராயிற்றே! … Continue reading சமகாலம் என்னும் நஞ்சு – சமயவேல்:

உன் சின்ன உலகத்தைத் தாறுமாறாகத்தான்புணர்ந்திருக்கிறாய்

உன் சின்ன உலகத்தைத் தாறுமாறாகத்தான் புணர்ந்திருக்கிறாய்- பெருந்தேவி: ஆசிரியர் குறிப்பு: மொழியில் தொடர்ந்து பரிசோதனைகள் செய்யும் நவீனகவிஞர். எளிதில் திருப்தி அடையாது கவிதைகளைச் செதுக்கிச்செதுக்கி பின் பதிவிடுபவர். பலவருடங்கள் அகாடெமிக் ஆக இருந்தபோதும் நல்லிக்கியத்தை அடையாளம் தெரிந்து அனுபவிப்பவர். புனைவுலகத்தில் சமீபத்தில் காலடி எடுத்து வைத்திருக்கும் இவர் ஏற்கனவே, ஸ்ரீவள்ளி என்ற பெயரில் எழுதியதும் சேர்த்து பத்து கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார். பெருந்தேவியின் கவிதைகள் மேல் தீராக்காதல் எனக்கு. புற்றீசல் போல் கவிதைகள் மூச்சுத்திணற வைக்கும் காலகட்டத்தில், … Continue reading உன் சின்ன உலகத்தைத் தாறுமாறாகத்தான்புணர்ந்திருக்கிறாய்

மிளகு

மிளகு - சந்திரா தங்கராஜ்: ஆசிரியர் குறிப்பு: தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் பிறந்தவர். பத்திரிகையாளர். சினிமா இயக்குனர். மூன்று சிறுகதைத் தொகுப்புகளும் இரண்டு கவிதைத் தொகுப்புகளும் ஏற்கனவே வெளி வந்துள்ளன. இது இவரது சமீபத்திய கவிதைத் தொகுப்பு. மேற்குத்தொடர்ச்சி மலையே இந்தக் கவிதைகளின் நாயகி. டீசல் வாடையடிக்கும் தார் ரோடுகளும், மூச்சை முட்டவைக்க நிமிர்ந்து நிற்கும் கட்டிடங்களும், குறுவாளை கச்சையில் மறைத்த மனிதர்களும் இழந்ததன் வலியைக் கூட்டுகிறார்கள். பாரி மகள்களின் சோகம் போல் அன்றிருந்த எதுவும் … Continue reading மிளகு

பாலைவனச் சிறகு கொள்ளும் வண்ணத்துப் பூச்சிகள்

பாலைவனச் சிறகு கொள்ளும் வண்ணத்துப் பூச்சிகள் - ஆனந்தி ராமகிருஷ்ணன்: ஆசிரியர் குறிப்பு: கணிப்பொறி அறிவியலில் இளங்கலையும் சமூகவியலில் முதுகலையும் பயின்றவர். மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றியவர். இது இவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பு. முன்னுரையில் இவர்: " உணர்தலின் தேசத்தில் உணர்த்துதல் பிழை… காலக்கோடுகளின் கணக்கில் எழுதாமல் இருப்பது பெரும் குறை…..அபரிதம் விடுபட சிக்காத சொல்லுக்குள் எல்லாம் காத்திருத்தல் பதின்நிலை….. பிரபஞ்சத்தின் ரகசியங்களுக்குள் நடப்பவை அத்தனையும் காலயந்திரத்தின் நிறை….." ஒவ்வொருவர் கவிதைக்கும் தனிமொழி. அந்த மொழியைப் புரிந்து … Continue reading பாலைவனச் சிறகு கொள்ளும் வண்ணத்துப் பூச்சிகள்

வண்ணநிலவன் கவிதைகள்

ஆசிரியர் குறிப்பு: திருநெல்வேலியில் பிறந்தவர். எழுபதில் எழுத ஆரம்பித்து ஏறக்குறைய நூற்றைம்பது சிறுகதைகள், ஏழு நாவல்கள் (குறுநாவல்கள்) என்று ஐம்பது வருடங்களில் எழுதியது குறைவாகத் தோன்றுகிறது. சமகாலத்தின் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவர். அவரது எல்லாக் கவிதைகளையும் தொகுத்து சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது இந்த நூல். வண்ணநிலவனின் எஸ்தரும், கடல்புரத்திலும் படித்து அது குறித்து எவ்வளவு நேரம் பேசியிருப்போம் என்பதை நினைவாற்றல் அதிகமுள்ள தோழர் R P ராஜநாயஹம் தான் சொல்ல வேண்டும். எஸ்தர் புத்தகம் கிடைக்காத நேரம் … Continue reading வண்ணநிலவன் கவிதைகள்

அம்புயாதனத்துக் காளி

ஆசிரியர் குறிப்பு: சீர்காழியைப் பூர்வீகமாகக் கொண்டவர், அபுதாபியில் வசித்து வருகிறார். இது இவரது சமீபத்திய கவிதைத் தொகுப்பு. இந்தியத் தொன்மமரபில் கடவுளைக் காதலனாக உருவகித்து ஏராளமான கவிதைகள். பெண்கள் கண்ணனை அழைக்கும் சிருங்கார நடனம் வடக்கில் ஏராளம். சீதா, லட்சுமியின் அம்சம், அவளையும் வேறொருவன் காமுற்றான். தன்னை மறக்கச் செய்யும் போதை அபின், ஹெராயின் மட்டுமல்ல, பக்தியும், காமமும் தான். காமம் சிற்றின்பம், கடவுள் பேரின்பம் என்று முதலில் வகுத்தவன் யார்? காணாதது, கையில் சிக்காதது எப்போதுமே … Continue reading அம்புயாதனத்துக் காளி