போர்க்குதிரை-சிறுகதைத் தொகுப்பு

போர்க்குதிரை - லஷ்மி சரவணகுமார்: ஆசிரியர் குறிப்பு: மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்தவர். சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் என வெவ்வேறு தளங்களில் இயங்கி வருகிறார். யுவபுரஸ்கார் விருது உட்பட பலவிருதுகளைப் பெற்றவர். திரைக்கதாசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார். இது இவரது சமீபத்திய சிறுகதைத் தொகுப்பு. வீடு திரும்புதல்: ரூஹ் போல குறுநாவலாக வந்திருக்க வேண்டிய கதை. ஊர் சுற்றுவதில் பேரார்வம் கொண்ட இவருக்குப் பிடித்த Subject கொண்ட கதை இது.Woofingஐ மையமாகக் கொண்டது. உண்மை தான், தோல்விகள், தாழ்வுமனப்பான்மை, அவமானங்கள் … Continue reading போர்க்குதிரை-சிறுகதைத் தொகுப்பு

உச்சை

உச்சை- ம.நவீன்: ஆசிரியர் குறிப்பு: ம.நவீன், மலேசிய நவீன தமிழ் இலக்கியத்தில் பலருக்கும் அறிமுகமான பெயர். மலேசிய இலக்கியத்தை உலகப் பார்வைக்குக் கொண்டு செல்ல தொடர்ந்து பல ஆக்ககரமான செயற்திட்டங்களை ‘வல்லினம்’ அமைப்பின் மூலமாக முன்னெடுக்கும் இலக்கியச் செயற்பாட்டாளர். தமிழ்ப்பள்ளி ஆசிரியரான இவர், இந்நாட்டின் இலக்கியத்துறையில் முக்கியமான படைப்பாளி. இதுவரை பேய்ச்சி நாவல் உட்பட இவரது பத்து நூல்கள் வெளியாகியுள்ளன. இது சிறுகதைத் தொகுப்பு. கழுகு: இருவருக்குள் நடக்கும் Mind game தான் கதையே. யார் ஜெயிக்கிறார்கள் … Continue reading உச்சை

திருமதி பெரேரா

திருமதி பெரேரா- இஸுரு சாமர சோமவீர- தமிழில் எம்.ரிஷான் ஷெரிப்: இஸுரு சாமர சோமவீர: இலங்கையைச் சேர்ந்த நவீன தலைமுறை சிங்கள எழுத்தாளர். இலங்கை சுகாதார அமைச்சில் பணிபுரிகிறார். இவருடைய மூன்று கவிதைத் தொகுப்புகள் இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் இதுவரை வெளியாகியுள்ளன. தனித்தனியாக கவிதைத் தொகுப்புக்கு, சிறுகதைத் தொகுப்புக்கு இலங்கை கொடகே சாகித்யவிருது பெற்றிருக்கிறார். இது இவரது சிறுகதைத் தொகுப்பின் சமீபத்திய தமிழ்மொழிபெயர்ப்பு. எம்.ரிஷான் ஷெரிப்: இலங்கையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர். தமிழுக்குத் தொடர்ச்சியாக மொழிபெயர்ப்புகளை செய்து … Continue reading திருமதி பெரேரா

மாயம்- பெருமாள் முருகன்

ஆசிரியர் குறிப்பு: படைப்புத்துறையில் இயங்கி வருபவர். அகராதியியல், பதிப்பியல், மூலபாடவியல் ஆகிய கல்விபுலத் துறைகளிலும் ஈடுபாடுள்ளவர். அரசு கலைக்கல்லூரியில் முதல்வராகப் பணிபுரியும் இவரது பலநூல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. இது 2020ல் இவர் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. கடைக்குட்டி: கடைசிவரியில் சட்டென்று எழுந்து நிற்கும் கதை. குடியும், இயலாமையும் அப்படித்தான் பேச வைக்கும். நுங்கு: ஆடுகளை வைத்து பூனாச்சி நாவல் எழுதியவருக்கு ஆடுகளை வைத்து சிறுகதை எழுதுவது சிரமமா என்ன! கதை முழுக்க ஆடுகள் வந்தாலும் இது ஆடுகள் … Continue reading மாயம்- பெருமாள் முருகன்