ஆள்தலும் அளத்தலும் – ஆர்.காளிபிரசாத்:

ஆசிரியர் குறிப்பு: சென்னையில் வசிக்கும் இவர் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதிவருகிறார். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்புகளும் செய்து வருகிறார். தம்மம் தந்தவன் எனும் நாவல் இவரது மொழிபெயர்ப்பு. இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு இது. விடிவு கதைக்கருவில் பல கதைகள் வந்திருக்கின்றன. ஆனால் இவர் இதைச் சொல்லியவிதம் புதிது. நிஜவாழ்க்கையிலும் கூட கணவன் மனைவி அல்லாத இருவர் வெளியூர் செல்கிறார்கள். ஒன்றும் நடக்காதவரை ஒன்றுமில்லை. ஒருவர் இறந்தால் மற்றவர் என்ன செய்வது? இருவரின் வீட்டாரை எப்படி எதிர்கொள்வது! விளையாட்டுக்கள் … Continue reading ஆள்தலும் அளத்தலும் – ஆர்.காளிபிரசாத்:

நாய்சார் – ஐ.கிருத்திகா:

ஆசிரியர் குறிப்பு: திருவாரூர் மாவட்டம் மணக்கால் அய்யம்பேட்டையில் பிறந்தவர். திருச்சியில் வசிப்பவர். இருபது வருடங்களாக எழுதிவரும் இவரது பல நல்ல கதைகள் இணைய இதழ்களில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இது சமீபத்தில் வெளிவந்த இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு. கண்டதை, கேட்டதை சரிநுட்பமாக வாசிக்கத்தரும் முயற்சியே என் கதைகள் என்று இவர் முன்னுரையில் சொல்லி இருக்கிறார். கதைகள் வாழ்க்கையை ஒட்டி நடைபயில்வதும், வாசிப்பவர்கள் அதற்குள் தங்களை அடையாளம் கண்டு கொள்வதும் இப்படித்தான். முழுதும் கற்பனையில் எழுதப்படும் கதைகள் … Continue reading நாய்சார் – ஐ.கிருத்திகா:

நூறு ரூபிள்கள் – மயிலன் ஜி சின்னப்பன்:

தஞ்சாவூர் மாவட்டம் சூரப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர். மூளை தண்டுவட அறுவைசிகிச்சை நிபுணர். இவரது முதல் நாவல் பிரபாகரனின் போஸ்ட் மார்ட்டம் பலத்த வரவேற்பைப் பெற்றது. இது இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு. சாந்தாரம் சிறுகதையில் தஞ்சை கோயிலின் பிரமாண்டம் மயிலன் ஜி சின்னப்பனின் கதையிலும் பரவுகிறது. Failed marriageஐ கழிவிரக்கமாகக் காட்டாமல் ஓரிரு வரிகளில் எளிதாகச் சொல்லிக் கடக்கிறார். யோசித்துப் பார்த்தால் புறபிரமாண்டங்களை வைத்து நம்மை மற்றவர் எடைபோடுவதற்கும் உண்மையான நமக்கும் எந்த சம்பந்தமுமில்லை. சேட்டு முதல் … Continue reading நூறு ரூபிள்கள் – மயிலன் ஜி சின்னப்பன்:

நிழற்காடு – விஜயராவணன்:

ஆசிரியர் குறிப்பு: திருநெல்வேலியில் பிறந்தவர். தனியார் நிறுவனமொன்றில் பொறியாளர். 2018ல் இருந்து இலக்கிய இதழ்களில் சிறுகதைகள் எழுதி வருகிறார். இது இவருடைய முதல் சிறுகதைத்தொகுப்பு. பத்து சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. ஒன்றுக்கொன்று வித்தியாசமான கதைகள் இவை. சவப்பெட்டி dystopian story மாயயதார்த்த யுத்தியில் எழுதப்பட்டது. மார்ட்டின் ஓ கைனின் வசைமண் நாவலை நினைவுபடுத்துவது. மொட்டை மாடி Perfect YA fiction story. பேசும் தேநீர் கோப்பைகள் அழகியல் படிமங்களைக் கொண்ட கதை. நிழற்காடு மீண்டும் மாய யதார்த்தம், … Continue reading நிழற்காடு – விஜயராவணன்:

சின்னக்குடை- அழகிய பெரியவன்:

ஆசிரியர் குறிப்பு: வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டைச் சேர்ந்தவர். இதுவரை இவருடைய ஏழு சிறுகதைத் தொகுப்புகளும், மூன்று நாவல்களும், ஐந்து கட்டுரைத் தொகுப்புகளும், நான்கு கவிதைத் தொகுப்புகளும் வெளியாகியுள்ளன. பல பல்கலைகளில் இவரது படைப்புகள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. இது இவருடைய சமீபத்திய நாவல். ஒரு தெரிந்து கொள்ளலுக்காக அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளில் நீண்ட காலம் வசிப்பவர்களிடம் எப்போதாவது அங்கே தனியார் நிலத்தை அரசாங்கம் எடுத்துக் கொண்டதாகக் கேள்விப்பட்டதுண்டா என்று கேட்டதற்கு இல்லை என்ற பதில் வந்தது. இந்தியாவில் மட்டும் … Continue reading சின்னக்குடை- அழகிய பெரியவன்:

ஆகாயத்தில் முட்டிக்கொண்டேன்- எஸ்.சங்கரநாராயணன்:

ஆசிரியர் குறிப்பு: தூத்துக்குடியில் பிறந்தவர். புனைவின் அத்தனை வடிவங்களிலும் எழுதியிருக்கிறார். இவருடைய பத்துக்கும் மேற்பட்ட நாவல்கள், இருபத்தைந்துக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. இது சமீபத்தில் வந்த இவரது குறுநாவல்களின் தொகுப்பு. நந்தவனத்துப் பறவைகள் மற்றும் அட்சரேகை தீர்க்கரேகையில் ஆரம்பித்த பயணம் இவருடையது. இரண்டுமே முதல்பதிப்பு என்னிடம் இருக்கிறது. இவர் எழுத்தில் ஒரு வேகமும் மெல்லிய கிண்டலும் சேர்ந்திருக்கும். இரண்டாவது இன்னிங்ஸ் என்பது எல்லோருக்கும் இருந்தே தீரும். புன்முறுவலுடன் கடப்பவர் சிலர். அலைபேசி எண்ணை மாற்றிக் … Continue reading ஆகாயத்தில் முட்டிக்கொண்டேன்- எஸ்.சங்கரநாராயணன்:

மிச்சக் கதைகள்

மிச்சக் கதைகள் - கி.ராஜநாராயணன்: பல தமிழ் நவீன இலக்கிய ஆளுமைகளை எனக்கு அறிமுகம் செய்த R.P. ராஜநாயஹம் முதலில் இவருடைய கோபல்ல கிராமம் நாவலைக் கொடுத்தார். அதன் பிறகு கன்னிமை, வேட்டி, கதவு ……. என்று தேடித்தேடி இவருடைய எல்லா நூல்களையும் படித்தோம். வாழ்வியல் அனுபவங்கள் பெருஞ்சுமையாய் நம்மை அழுத்தாத வயதில் கோபல்ல கிராமம் போன்ற நூலைப் படிப்பவர்கள் பாக்கியவான்கள். தகவல்கள், தகவல்கள் கி.ராவின் கதைகளில் விரவிக்கிடக்கும். தாய்ப்பாலில் இரண்டு நெல்மணி போட்டு வைத்தால் பால் … Continue reading மிச்சக் கதைகள்

போர்க்குதிரை-சிறுகதைத் தொகுப்பு

போர்க்குதிரை - லஷ்மி சரவணகுமார்: ஆசிரியர் குறிப்பு: மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்தவர். சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் என வெவ்வேறு தளங்களில் இயங்கி வருகிறார். யுவபுரஸ்கார் விருது உட்பட பலவிருதுகளைப் பெற்றவர். திரைக்கதாசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார். இது இவரது சமீபத்திய சிறுகதைத் தொகுப்பு. வீடு திரும்புதல்: ரூஹ் போல குறுநாவலாக வந்திருக்க வேண்டிய கதை. ஊர் சுற்றுவதில் பேரார்வம் கொண்ட இவருக்குப் பிடித்த Subject கொண்ட கதை இது.Woofingஐ மையமாகக் கொண்டது. உண்மை தான், தோல்விகள், தாழ்வுமனப்பான்மை, அவமானங்கள் … Continue reading போர்க்குதிரை-சிறுகதைத் தொகுப்பு

உச்சை

உச்சை- ம.நவீன்: ஆசிரியர் குறிப்பு: ம.நவீன், மலேசிய நவீன தமிழ் இலக்கியத்தில் பலருக்கும் அறிமுகமான பெயர். மலேசிய இலக்கியத்தை உலகப் பார்வைக்குக் கொண்டு செல்ல தொடர்ந்து பல ஆக்ககரமான செயற்திட்டங்களை ‘வல்லினம்’ அமைப்பின் மூலமாக முன்னெடுக்கும் இலக்கியச் செயற்பாட்டாளர். தமிழ்ப்பள்ளி ஆசிரியரான இவர், இந்நாட்டின் இலக்கியத்துறையில் முக்கியமான படைப்பாளி. இதுவரை பேய்ச்சி நாவல் உட்பட இவரது பத்து நூல்கள் வெளியாகியுள்ளன. இது சிறுகதைத் தொகுப்பு. கழுகு: இருவருக்குள் நடக்கும் Mind game தான் கதையே. யார் ஜெயிக்கிறார்கள் … Continue reading உச்சை