கிடா வெட்டு – ராஜேஷ் ராதாகிருஷ்ணன் :

ஆசிரியர் குறிப்பு: விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழாயிரம் பண்ணை இவரது சொந்த ஊர். தற்போது காளஹஸ்தியில் பணிநிமித்தம் வசிக்கிறார்.கருப்பட்டி மிட்டாய் என்ற பெயரில் ஏற்கனவே சிறுகதைத் தொகுப்பை வெளியிட்ட இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இது. எழுபது வயது முதியவர் நாற்பது வருடங்களுக்கு முன் காதலித்த பெண்ணைப் பார்க்க, மனைவியையும் அழைத்துக் கொண்டு முட்டிவலியுடன் நடை பயில்கிறார். அவர் மனைவி கிண்டல் செய்கிறார். ஆமாம், எழுபதில் என்ன பொறாமை வரப்போகிறது? 'நன்செய் மனமே ' such a … Continue reading கிடா வெட்டு – ராஜேஷ் ராதாகிருஷ்ணன் :

அப்பாவின் காது – ச.மோகன்:

ஆசிரியர் குறிப்பு: பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஊடகத் துறையில் பணிபுரிகிறார். பத்திரிகைகள் இலக்கிய இதழ்களில் தொடர்ந்து எழுதுபவர். ஏற்கனவே ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்ட இவரது சமீபத்தில் வெளியான முதல் சிறுகதைத் தொகுப்பு இது. கதைக்கருக்கள் என்று எடுத்துக் கொண்டால், மணமான பெண்ணுக்கு ஏற்படும் Crush, அம்மா இன்னொருவரை மணந்து கொண்டதைத் தாங்க முடியாத மகன், ஆறாம் வகுப்பில் படித்த பெண்ணை, அறுபது வயதில் கண்டுபிடிப்பவர், திருநங்கைகள் பற்றிய ஆராய்ச்சி செய்பவன், செக்காவின் கடைசி தினங்கள், பெண்ணுடல் … Continue reading அப்பாவின் காது – ச.மோகன்:

தமிழ்நதியின் சிறுகதையுலகம்:

தமிழில் சிறுகதையாசிரியர்களுக்கு எப்போதும் பஞ்சமேயில்லை. கிரிக்கெட்டில் கபில்தேவ்வின் விக்கெட்டுகள் மதிப்பு வாய்ந்தவை. அவருடன் பந்து வீசிய வேகப்பந்து வீச்சாளர்கள் யாருமே அவரது தரத்தில் இல்லை. எதிரணியினர் செய்ய வேண்டியதெல்லாம் கபில்தேவை அடித்து ஆடாமல் கவனமாக விளையாட வேண்டியது மட்டுமே. மற்ற ஓவர்களில் ஸ்கோர் செய்யலாம். இதற்கு எதிராக , தமிழில் சிறப்பாக சிறுகதை எழுத அதிகப்படியான ஒன்று தேவைப்படுகிறது. எழுத்தாளர்களுக்கு எல்லோரையும் போலவே தனி வாழ்க்கை என்று ஒன்று இருக்கிறது. அதை எப்படி வாழவேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கும் … Continue reading தமிழ்நதியின் சிறுகதையுலகம்:

புலிக்குத்தி – ராம் தங்கம்:

ஆசிரியர் குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். விகடன் போன்ற பத்திரிகைகளில் பணியாற்றியவர். பயணங்களில் ஆர்வம் கொண்ட இவர் தற்போது முழுநேர எழுத்தாளர். சமீபத்திய இந்த சிறுகதைத் தொகுப்புடன் சேர்த்து, இவரது பதினோரு நூல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. காயத்தில் மஞ்சனத்திப் பட்டைத்தூளை நல்லெண்ணெயில் கலந்து பூசுகிறார்கள்,சாறைக் குடிக்கத் தருகிறார்கள், கள்வர் நொச்சி இலையின் மணம் காட்டி ஆடுகளைக் கூட்டத்தில் இருந்து தனித்து வரச்செய்து பின் திருடுகிறார்கள். "பாள வந்த பனயில தான் பயினி வரும். உடை நின்னா … Continue reading புலிக்குத்தி – ராம் தங்கம்:

செற்றை – கு.கு.விக்டர் பிரின்ஸ்:

ஆசிரியர் குறிப்பு: குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். Missouriயில் வசிக்கிறார். அச்சு மற்றும் இணைய இதழ்களில் கதைகள் எழுதிவரும் இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு இது. முழுக்கவே குமரி மாவட்டக் கதைகள் தான் இந்தத் தொகுப்பில். 'செற்ற சர்டிபிகேட்' மட்டும் விதிவிலக்காக அமெரிக்காவில். குமரியின் மலையாளம் கலந்த தமிழ் பேச்சு மொழியை எல்லாக் கதைகளிலும் உபயோகித்திருக்கிறார். இதில் வரும் கதைகளும் இவர் பார்த்தவை, கேட்டவை தாண்டி வேறெங்கும் பயணம் செய்பவை இல்லையாதலால் ஒரு Authenticity எல்லாக் கதைகளிலுமே இருக்கின்றது. … Continue reading செற்றை – கு.கு.விக்டர் பிரின்ஸ்:

உடல் – அரிசங்கர்:

ஆசிரியர் குறிப்பு: புதுச்சேரியைச் சேர்ந்தவர். கணிணி வரைகலையாளர். இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு நாவல், ஒரு குறுநாவல், ஒரு சிறுவர் நாவல் ஆகியவை ஏற்கனவே வெளிவந்த இவரது படைப்புகள். இது சமீபத்தில் வெளிவந்த இவரது மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. காதல், திருமணம் என்பதன் மீதான புனிதஅரிதாரம் மெல்ல மெல்லக் கலைந்து வருகிறது. பிறழ் உறவுகளை அப்படியா என்று அதிர்ச்சியாகக் கேட்பவர்களைப் பார்த்தால் நன்றாக நடிக்கிறார்கள் என்று தோன்றுகிறது. வாழ்வின் சமநிலை தடுமாற்றத்துக்குள்ளாகும் போது, திருமண உறவுகள் ஆட்டம் … Continue reading உடல் – அரிசங்கர்:

சுற்றந்தழால் – தாணப்பன் கதிர்:

ஆசிரியர் குறிப்பு: திருநெல்வேலியில் வசிப்பவர். முதுகலை வேதியியல் பயின்றவர். பள்ளி, கல்லூரி காலங்களில் கவிதைகள் எழுதியவர். திருநெல்வேலியில் பல இலக்கிய அமைப்புகளில் பங்காற்றும், காணிநிலம் என்ற இலக்கியப் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் இருக்கும் இவரது, முதல் சிறுகதைத் தொகுப்பு இது. தாணப்பன் தொடர்வாசிப்பில் இருப்பவர். புத்தகங்களைத் தேடித்தேடிப் படிப்பவர். இலக்கியத்தை விட்டு விலகக்கூடாது என்று ஏதேனும் ஒன்றில் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவர். நீண்ட காத்திருப்பின் பின்னர் ஐம்பதாவது வயதில் முதல் படைப்பை வெளியிடுகிறார். என் நாட்குறிப்பிலிருந்து கதையில் … Continue reading சுற்றந்தழால் – தாணப்பன் கதிர்:

இலக்கியம்

எம்.ஜி.ஆர் படங்களின் வெற்றிக்கு, அத்திரைப்படங்களில் வரும் பெண்கள், தங்களையே விரும்புகிறார்கள், தங்களையே கட்டி அணைக்கிறார்கள் என்று ஆண் ரசிகர்களை நம்பவைத்தது முக்கிய காரணம். பெண்கள் எப்படி நம்பினார்கள் என்பதை ஜெயகாந்தன் ஒரு கதையில் (சினிமாவுக்குப் போன சித்தாளு) சொல்லி இருப்பார். இலக்கியத்தையும் அதையும் ஒப்பிடக்கூடாது. ஆனால் அதன் மையக்கதாபாத்திரங்களுடன் தன்னை இணைத்துக்கொள்ளும் தன்மை இரண்டிலும் பொதுமையானது. சி.மோகனின் கமலியில், கமலியை யாரும் தானாக நினைக்க வாய்ப்பில்லாத, மொழிநடை, சம்பவக்கோர்வை, கதைசொல்லல், கமலியை அருவருப்பாகப் பார்க்க வைத்தது. செங்கம்மாவைப் … Continue reading இலக்கியம்

அறை – தேவிலிங்கம்:

கு.ப.ராவின் ஆற்றாமை சிறுகதையை யார் மறக்க முடியும். தனக்கு மறுக்கப்பட்ட காமம் அடுத்தவளுக்குக் கிடைப்பதைப் பார்ப்பதில் ஏற்படும் பொறாமை தான் இரண்டு கதைகளையும் இணைக்கும் மையச்சங்கிலி. தேவி, கூட்டுக்குடும்பத்தில் கொழுந்தன் மேல் கொள்ளும் உரிமையை இந்தக் கதையில் கொண்டு வந்திருக்கிறார். வயது அதிகமுள்ள அண்ணிகளின் மூத்தபிள்ளைகளாகிப் போகிறார்கள் கொழுந்தர்கள். வித்தியாசம் குறைகையில் அந்த உறவில் ஒரு சீண்டல் இருப்பது இயல்பு. பெரும்பாலும் சீண்டலுடன் நிறுத்திக் கொள்ளப்படும். நுட்பமான உறவு அது. காமம் ஒடுக்கப்படுகையில் பெண்களின் எதிர்வினை பலவாக … Continue reading அறை – தேவிலிங்கம்:

கடவுளைத் தரிசித்த கதை – தரணி ராசேந்திரன்:

ஆசிரியர் குறிப்பு: பொறியியல் பட்டம் பெற்றவர். திரைப்பட இயக்குனர். இதற்குமுன் நான்கு நூல்களை எழுதியுள்ள, இவரது சமீபத்தில் வெளிவந்த சிறுகதைத் தொகுப்பு இது. ஐந்து சிறுகதைகள் கொண்ட இந்த நூலின் தலைப்பு, கொஞ்சம் Misleading ஆகக்கூட இருக்கக்கூடும். கடவுளை நம்பாதவர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள். கடவுளை வேண்டி உருகிக் கேட்டுக்கொள்பவர்களைக்கடவுள் மறக்காமல் கைவிடுகிறார். பயம் என்பது கடவுள் நம்பிக்கையாக மாறி இன்று பலகோடிகள் வியாபாரத்தில் வந்து நிற்கிறது. கடவுளைத் தரிசித்த கதையில் வழமை போல் நடுத்தரவயதைத் தாண்டிய தம்பதிகளிடையே … Continue reading கடவுளைத் தரிசித்த கதை – தரணி ராசேந்திரன்: