செற்றை – கு.கு.விக்டர் பிரின்ஸ்:

ஆசிரியர் குறிப்பு: குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். Missouriயில் வசிக்கிறார். அச்சு மற்றும் இணைய இதழ்களில் கதைகள் எழுதிவரும் இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு இது. முழுக்கவே குமரி மாவட்டக் கதைகள் தான் இந்தத் தொகுப்பில். 'செற்ற சர்டிபிகேட்' மட்டும் விதிவிலக்காக அமெரிக்காவில். குமரியின் மலையாளம் கலந்த தமிழ் பேச்சு மொழியை எல்லாக் கதைகளிலும் உபயோகித்திருக்கிறார். இதில் வரும் கதைகளும் இவர் பார்த்தவை, கேட்டவை தாண்டி வேறெங்கும் பயணம் செய்பவை இல்லையாதலால் ஒரு Authenticity எல்லாக் கதைகளிலுமே இருக்கின்றது. … Continue reading செற்றை – கு.கு.விக்டர் பிரின்ஸ்:

உடல் – அரிசங்கர்:

ஆசிரியர் குறிப்பு: புதுச்சேரியைச் சேர்ந்தவர். கணிணி வரைகலையாளர். இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு நாவல், ஒரு குறுநாவல், ஒரு சிறுவர் நாவல் ஆகியவை ஏற்கனவே வெளிவந்த இவரது படைப்புகள். இது சமீபத்தில் வெளிவந்த இவரது மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. காதல், திருமணம் என்பதன் மீதான புனிதஅரிதாரம் மெல்ல மெல்லக் கலைந்து வருகிறது. பிறழ் உறவுகளை அப்படியா என்று அதிர்ச்சியாகக் கேட்பவர்களைப் பார்த்தால் நன்றாக நடிக்கிறார்கள் என்று தோன்றுகிறது. வாழ்வின் சமநிலை தடுமாற்றத்துக்குள்ளாகும் போது, திருமண உறவுகள் ஆட்டம் … Continue reading உடல் – அரிசங்கர்:

சுற்றந்தழால் – தாணப்பன் கதிர்:

ஆசிரியர் குறிப்பு: திருநெல்வேலியில் வசிப்பவர். முதுகலை வேதியியல் பயின்றவர். பள்ளி, கல்லூரி காலங்களில் கவிதைகள் எழுதியவர். திருநெல்வேலியில் பல இலக்கிய அமைப்புகளில் பங்காற்றும், காணிநிலம் என்ற இலக்கியப் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் இருக்கும் இவரது, முதல் சிறுகதைத் தொகுப்பு இது. தாணப்பன் தொடர்வாசிப்பில் இருப்பவர். புத்தகங்களைத் தேடித்தேடிப் படிப்பவர். இலக்கியத்தை விட்டு விலகக்கூடாது என்று ஏதேனும் ஒன்றில் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவர். நீண்ட காத்திருப்பின் பின்னர் ஐம்பதாவது வயதில் முதல் படைப்பை வெளியிடுகிறார். என் நாட்குறிப்பிலிருந்து கதையில் … Continue reading சுற்றந்தழால் – தாணப்பன் கதிர்:

இலக்கியம்

எம்.ஜி.ஆர் படங்களின் வெற்றிக்கு, அத்திரைப்படங்களில் வரும் பெண்கள், தங்களையே விரும்புகிறார்கள், தங்களையே கட்டி அணைக்கிறார்கள் என்று ஆண் ரசிகர்களை நம்பவைத்தது முக்கிய காரணம். பெண்கள் எப்படி நம்பினார்கள் என்பதை ஜெயகாந்தன் ஒரு கதையில் (சினிமாவுக்குப் போன சித்தாளு) சொல்லி இருப்பார். இலக்கியத்தையும் அதையும் ஒப்பிடக்கூடாது. ஆனால் அதன் மையக்கதாபாத்திரங்களுடன் தன்னை இணைத்துக்கொள்ளும் தன்மை இரண்டிலும் பொதுமையானது. சி.மோகனின் கமலியில், கமலியை யாரும் தானாக நினைக்க வாய்ப்பில்லாத, மொழிநடை, சம்பவக்கோர்வை, கதைசொல்லல், கமலியை அருவருப்பாகப் பார்க்க வைத்தது. செங்கம்மாவைப் … Continue reading இலக்கியம்

அறை – தேவிலிங்கம்:

கு.ப.ராவின் ஆற்றாமை சிறுகதையை யார் மறக்க முடியும். தனக்கு மறுக்கப்பட்ட காமம் அடுத்தவளுக்குக் கிடைப்பதைப் பார்ப்பதில் ஏற்படும் பொறாமை தான் இரண்டு கதைகளையும் இணைக்கும் மையச்சங்கிலி. தேவி, கூட்டுக்குடும்பத்தில் கொழுந்தன் மேல் கொள்ளும் உரிமையை இந்தக் கதையில் கொண்டு வந்திருக்கிறார். வயது அதிகமுள்ள அண்ணிகளின் மூத்தபிள்ளைகளாகிப் போகிறார்கள் கொழுந்தர்கள். வித்தியாசம் குறைகையில் அந்த உறவில் ஒரு சீண்டல் இருப்பது இயல்பு. பெரும்பாலும் சீண்டலுடன் நிறுத்திக் கொள்ளப்படும். நுட்பமான உறவு அது. காமம் ஒடுக்கப்படுகையில் பெண்களின் எதிர்வினை பலவாக … Continue reading அறை – தேவிலிங்கம்:

கடவுளைத் தரிசித்த கதை – தரணி ராசேந்திரன்:

ஆசிரியர் குறிப்பு: பொறியியல் பட்டம் பெற்றவர். திரைப்பட இயக்குனர். இதற்குமுன் நான்கு நூல்களை எழுதியுள்ள, இவரது சமீபத்தில் வெளிவந்த சிறுகதைத் தொகுப்பு இது. ஐந்து சிறுகதைகள் கொண்ட இந்த நூலின் தலைப்பு, கொஞ்சம் Misleading ஆகக்கூட இருக்கக்கூடும். கடவுளை நம்பாதவர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள். கடவுளை வேண்டி உருகிக் கேட்டுக்கொள்பவர்களைக்கடவுள் மறக்காமல் கைவிடுகிறார். பயம் என்பது கடவுள் நம்பிக்கையாக மாறி இன்று பலகோடிகள் வியாபாரத்தில் வந்து நிற்கிறது. கடவுளைத் தரிசித்த கதையில் வழமை போல் நடுத்தரவயதைத் தாண்டிய தம்பதிகளிடையே … Continue reading கடவுளைத் தரிசித்த கதை – தரணி ராசேந்திரன்:

பைசாசத்தின் எஞ்சிய சொற்கள் – காலபைரவன்:

ஆசிரியர் குறிப்பு: காலபைரவன் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் வசிக்கிறார். அரசுப் பள்ளியில் ஆசிரியப்பணி. நான்கு சிறுகதைத் தொகுப்புகளும் ‘ஆதிராவின் அம்மாவை ஏன்தான் நான் காதலித்தேனோ?’ எனும் கவிதைத் தொகுப்பும் வெளியாகியுள்ளன. சல்லிகை எனும் கலை இலக்கிய இணைய இதழின் ஆசிரியராகவும் உள்ளார். இது இவரது சிறுகதைத் தொகுப்பின் இரண்டாம் பதிப்பு. ஆறு கதைகள் கொண்ட இந்தத் தொகுப்பில் கதாபாத்திரங்கள் எல்லோருமே விதியின் சங்கிலியால் பிணைக்கப்பட்டு, அது காட்டும் பாதையில் இழுத்துச் செல்லப்படுபவர்கள்.சதாசிவம், பார்வதி, ஆறுமுகம் என்று பெயர்களும், … Continue reading பைசாசத்தின் எஞ்சிய சொற்கள் – காலபைரவன்:

பழைய குருடி – த.ராஜன்:

ஆசிரியர் குறிப்பு: திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த ராஜன் புனைவு, அல்புனைவு, விமர்சனம், உரையாடல்கள், மொழியாக்கம் போன்ற பலதளங்களில் இயங்கி வருகிறார். பொறியியல் பட்டதாரி. இந்து தமிழ் நாளிதழில் சிலவருடங்கள் பணியாற்றியவர். கதையும் புனைவும், சிறுவர்களுக்கான தத்துவம் ஆகியவை இவரது முந்தைய நூல்கள். இது இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு. நண்பருடன் பேசிக் கொண்டிருக்கையில், தாண்டவராயன் கதை போன்ற படைப்பை சலனமேயில்லாது கடந்து போகும் தமிழ் இலக்கிய உலகத்தைக் குறித்து விசனப்பட்டார். பா.வெங்கடேசன் The most underrated … Continue reading பழைய குருடி – த.ராஜன்:

நீண்ட மழைக்காலம் – ஜெகநாத் நடராஜன்:

ஆசிரியர் குறிப்பு: தென்காசி அருகே ஊர்மேனிஅழகியான் இவரது சொந்த ஊர். எழுத்தாளர் பாலகுமாரனிடம் அவரது எழுத்து மற்றும் திரைப்படப் பணிகளில் உதவியாளராக இருந்தவர். தமிழின் முதல் தினசரி தொடரான சக்தியை எழுதியவர். சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் தொலைகாட்சிகளில் பல தொடர்கள் எழுதியவர். கார்லோஸ்புயண்ட்ஸின் ஔரா இவரால் மொழிபெயர்க்கப்பட்டு கோணங்கி மற்றும் கௌதம சித்தார்த்தனால் புத்தகமாக வெளியிடப்பட்டிருக்கிறது. இவரது குறுநாவல் தொகுப்பு ’வேண்டுதல்’ எழுத்து வெளியீடாக வந்திருக்கிறது. ’கீர்த்தனைகளின் வரலாறு’ என்ற கர்நாடக இசை … Continue reading நீண்ட மழைக்காலம் – ஜெகநாத் நடராஜன்:

ஆராயி – விஜி முருகநாதன்:

ஆசிரியர் குறிப்பு: ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிறந்தவர். கல்கி, அமுதசுரபி, தினமணி போன்ற பத்திரிகைகளில் இவர் கதைகள் பிரசுரமாகி, பல பரிசுகளையும் வென்றிருக்கிறார். பதினைந்து வார ஆன்மீகத்தொடர் ஒன்றை எழுதியிருக்கிறார். இது இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் கதையை அச்சில் பார்க்கும் மகிழ்ச்சிக்கு இணையானது, முதல் தொகுப்பைக் கையில் ஏந்துவது. ஆண் எழுத்தாளர்களே கூட இது பிரசவவலி என்று கூறக் கேட்டிருக்கிறேன். வண்ணதாசன் கலைக்க முடியாத ஒப்பனைகள் என்ற அவரது முதல் நூலுக்கு எழுதியிருந்ததைப் படித்துப் … Continue reading ஆராயி – விஜி முருகநாதன்: