கோடிக்கால் பூதம் – அ. உமர்பாரூக்- கொரானா குறித்த நாவல்

மாணவப் பருவத்திலிருந்தே எழுதத் தொடங்கியவர். அக்கு ஹீலராக பணிபுரிபவர். பல மருத்துவ நூல்களை எழுதியுள்ளார். தமிழில் ஆரோக்கியநிவேதனம் வெளிவந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுளுந்தீ வந்தது அதன்பின் வந்த முழுமருத்துவ நாவல் இவருடைய ஆதுரசாலை. இவர் பிறந்த மாவட்டமான தேனியின் அகழ்வாராய்ச்சி குறிப்புகள் அடங்கிய அழநாடு இன்னொரு முக்கியமான நூல். இது இவரது சமீபத்திய நாவல். எல்லாத் தொழில்களுக்குமே ஏற்ற இறக்கங்கள் இருந்தே தீரும். ஒரு காலத்தில் Sunrise industry ஆக இருந்த Online tourism இருந்த … Continue reading கோடிக்கால் பூதம் – அ. உமர்பாரூக்- கொரானா குறித்த நாவல்

டைகரிஸ் – ச.பாலமுருகன் – முதல் உலகப்போர் நாவல்

ஆசிரியர் குறிப்பு : ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்தவர். களப்பணியாளர், பழங்குடி மக்களின் உரிமைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். இவருடைய முதல் நாவலான சோளகர் தொட்டி 2004ல்வெளியானது. பெருங்காற்று என்னும் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. இது இவரது இரண்டாவது நாவலாகும். மலைவாழ் பழங்குடி மக்களின் வாழ்க்கையை பிரதிபலித்த சோளகர் தொட்டி நாவலை அடுத்து முதல் உலகப்போரில் இந்திய வீரர்கள் பிரிட்டனுக்காக, எந்த குறிக்கோளுமின்றி, பல நாடுகளில் போர்புரிந்து மரணித்த கதையை சொல்கிறார். At Night All … Continue reading டைகரிஸ் – ச.பாலமுருகன் – முதல் உலகப்போர் நாவல்

எனக்குப் பிடித்த தமிழ் நாவல்கள்

: மோகமுள் - தி.ஜானகிராமன்செம்பருத்தி- தி.ஜானகிராமன்3.உயிர்த்தேன் - தி.ஜானகிராமன்மரப்பசு - தி.ஜானகிராமன்அம்மா வந்தாள் - தி.ஜானகிராமன்நளபாகம் - தி.ஜானகிராமன்மலர்மஞ்சம்- தி.ஜானகிராமன்காகிதமலர்கள் - ஆதவன்என் பெயர் ராமசேஷன் - ஆதவன்கிருஷ்ணா கிருஷ்ணா - இந்திரா பார்த்தசாரதிஒரு புளியமரத்தின் கதை - சுந்தரராமசாமிஜே ஜே சிலகுறிப்புகள்- சுந்தரராமசாமிகுழந்தைகள் பெண்கள் ஆண்கள் - சுந்தரராமசாமிதலைமுறைகள் - நீலபத்மநாபன்பள்ளிகொண்டபுரம் - நீலபத்மநாபன்உறவுகள் - நீலபத்மநாபன்வாஸவேச்வரம் - கிருத்திகாநேற்றிருந்தோம்- கிருத்திகாபுதியகோணங்கி- கிருத்திகாபுத்தம் வீடு - ஹெப்சிபா ஜேசுதாசன்சாயாவனம் - சா.கந்தசாமிஅவன் ஆனது - சா.கந்தசாமிதொலைந்து … Continue reading எனக்குப் பிடித்த தமிழ் நாவல்கள்

ஹோமர் – பாலகுமார் விஜயராமன்:

ஆசிரியர் குறிப்பு: சொந்த ஊர் மதுரை, தற்பொழுது ஒசூரில் வசித்துவருகிறார். மத்திய அரசின் பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றுகிறார். மின்னணுவியல் மற்றும் தொடர்பியலில் பொறியியல் பட்டமும், மேலாண்மையில் பட்டமேற்படிப்பும், வாடிக்கையாளர் மனப்பான்மை தொடர்பான புத்தாய்வில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். தொடர்ந்து மொழிபெயர்ப்பு, நாவல், சிறுகதை என பலதளங்களில் இயங்கும் இவரது சமீபத்திய கிண்டில் நாவல் ஆது. Pentopublish4 போட்டியில் இடம்பெறுகிறது. ஒரு கொலை நடப்பதுடன் நாவல் தொடங்குகிறது. மதுரையில் வளர்ந்தவர்கள், இந்த நாவலில் வரும் மதுரை … Continue reading ஹோமர் – பாலகுமார் விஜயராமன்:

செம்பருத்தி நாவல் ஒருபார்வை

செம்பருத்தி- தி.ஜானகிராமன்: பதின்மவயதில் கருப்புவெள்ளைத் திரையில் பத்மினி என் ஆள் என்றால் பக்கத்தில் இருப்பவன் உமிழ்நீர் விழுங்குவான். அதே வசனத்தை ஜமுனாவிற்கு அவன் சொல்கையில் நான்……அப்படித்தான் ஆகிப்போகிறது தி.ஜாவைத் தொடர்ந்து படிப்பது. ஒன்றை மீறி ஒன்று. ஒன்றுக்கு தேவிகா மூக்கென்றால் இன்னொன்றிற்கு E V சரோஜாவின் கண்கள். முழுசரணாகதி என்பது வைணவத்தத்துவம் என்று யார் சொன்னது? அந்தரத்தில் கயிற்றின் மேல் நடந்து நடந்து தி.ஜாவிற்கு நடை பழக்கமாகி விட்டது. நாம் தான் அவர் கீழே இறங்கும் வரை … Continue reading செம்பருத்தி நாவல் ஒருபார்வை

நளபாகம் ஒரு பார்வை

நளபாகம் - தி.ஜானகிராமன் : தி.ஜாவின் மற்ற நாவல்களைப் போலவே இதுவும் சாத்வீகமாக, வடக்கே யாத்ரா ஸ்பெஷல் ரயில் பயணம், ரயில் சிநேகிதம், வெண்பொங்கல், இட்லி, பஜ்ஜி போன்ற பண்டங்களைப் பிரமாதமாக சமைக்கும் காமேச்வரன் என்ற தலைமை பரிசாரகன் என்றே ஆரம்பிக்கிறது. தி.ஜா நாவல்களில் பலவிதத்தில் இந்த நாவல் தனித்துவமானது. இந்தியத் தொன்மத்தில் இருபாதங்களும் மூழ்கிப்போகும்படி அழுந்தக் கால்பதித்த நாவல் இது. சமையல் கலை விஸ்தாரமாகப் பேசப்படுவது இந்த நாவலில். குழந்தையின்மையின் மனக்கிலேசங்கள் மட்டுமன்றி ஏதோ ஒரு … Continue reading நளபாகம் ஒரு பார்வை

மோகமுள் ஒரு பார்வை

மோகமுள்- தி. ஜானகிராமன்; தமிழில் பூரணத்துவம் கொண்ட நாவல்கள் வெகுகுறைவு. முழுமையான நாவல் என்கையில் எனக்கு முதலில் வரும் பெயர் மோகமுள். சிறுவயதில் இருந்து தொடர்கதையே நான் படித்ததில்லை. தொடர்கதை ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் ஒரு செயற்கைத்தனம் இருக்கும். நான் பிறப்பதற்கு வெகுகாலம் முன்பு தொடர்கதையாக வந்த ஒரு நாவலை சராசரியாக ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை கடந்த நாற்பது வருடங்களாகப் படித்துக் கொண்டிருக்கிறேன். மோகமுள் பலஅடுக்குகள் கொண்ட நாவல். ஒரு பக்கத்தில் ஆண்பிள்ளைகளின் உளவியலைச் சொல்கிறது. தீர … Continue reading மோகமுள் ஒரு பார்வை

அம்மா வந்தாள் ஒரு பார்வை

அம்மா வந்தாள் - தி.ஜானகிராமன்: 1966ல் வந்த நாவல் இது. அப்பு கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம் என்று பலவருடங்கள் முன்பு கமல்ஹாசன் தெரிவித்த போது அவரது முதிர்ச்சியை நினைத்து அப்போது வியந்து பேசியது நினைவுக்கு வருகிறது. சிறுவயதில் பாட்டியிடம் கேட்கும் கதைகளில் பேதமில்லை. எல்லாமே நல்ல கதைகள் தாம். ராட்சஷனிடமிருந்து இளவரசி தப்பி, இளவரசனை மணம் முடித்தால் நிம்மதியான தூக்கம். வளரவளர, வாசிக்க வாசிக்க ஆஜானுபாகுவான ஒன்றாம் வகுப்பு வாத்தியார் குறுகித்தேய்ந்தது போல் ஆகிப் போகிறார்கள் நிறைய … Continue reading அம்மா வந்தாள் ஒரு பார்வை

உயிர்த்தேன் ஒரு பார்வை

உயிர்த்தேன் - தி.ஜானகிராமன்: உயிர்த்தேன் ஒரு கிராமத்தின் கதை. சிறிதும் பெரிதுமாய் நாற்பது வீடுகளே இருக்கும் சின்னக்கிராமம். அப்பாவின் ஊர், அவர் வர நினைத்து ஆசை நிறைவேறாது, சட்டென மரணித்த நினைவு அழுந்த மகன் வியாபாரத்தில் சம்பாதித்தது போதும் என்று வீடு, நிலம் வாங்கி இதே கிராமத்திற்கு வந்தபின் நடப்பதே கதை. ஒவ்வொரு வரியில் அவரவர் குணாதிசயங்கள். சுக்கிரன் வக்கரித்தது போல் ஒரு ஊர். ஒருவன் வந்ததும் எல்லாமே மாறுகிறது. தரிசு நிலம் விளைநிலம் ஆகிறது. கழனிகள் … Continue reading உயிர்த்தேன் ஒரு பார்வை

செம்பருத்தி ஒரு பார்வை

செம்பருத்தி- தி.ஜானகிராமன்: பதின்மவயதில் கருப்புவெள்ளைத் திரையில் பத்மினி என் ஆள் என்றால் பக்கத்தில் இருப்பவன் உமிழ்நீர் விழுங்குவான். அதே வசனத்தை ஜமுனாவிற்கு அவன் சொல்கையில் நான்……அப்படித்தான் ஆகிப்போகிறது தி.ஜாவைத் தொடர்ந்து படிப்பது. ஒன்றை மீறி ஒன்று. ஒன்றுக்கு தேவிகா மூக்கென்றால் இன்னொன்றிற்கு E V சரோஜாவின் கண்கள். முழுசரணாகதி என்பது வைணவத்தத்துவம் என்று யார் சொன்னது? அந்தரத்தில் கயிற்றின் மேல் நடந்து நடந்து தி.ஜாவிற்கு நடை பழக்கமாகி விட்டது. நாம் தான் அவர் கீழே இறங்கும் வரை … Continue reading செம்பருத்தி ஒரு பார்வை