ஆசிரியர் குறிப்பு: சென்னையில் பிறந்து தஞ்சையில் வளர்ந்தவர். மென்பொருள் துறையில் பணிபுரிந்தவர். சிறப்புக் கல்வி ஆசிரியராகவும், மனநல ஆலோசகராகவும் இயங்கி வரும் இவர் ஏற்கனவே எழுதாப்பயணம், ஆனந்தவல்லி ஆகிய நூல்களை எழுதியுள்ளார். ஆனந்தவல்லி சிறந்த வரவேற்பைப் பெற்ற வரலாற்று புதினம். இது இவரது இரண்டாவது நாவல். நூலிலிருந்து: " காலச்சக்கரம் மாயத்திறன் கொண்டது. அழிவை அறியாதது. அனைத்து உயிரினங்களின் செயல்களுக்கான பலனை முடிவு செய்வது அந்தக் காலச்சக்கரமே. ஒரு போதும் அயராமல் சுழலும் அந்தச் சக்கரத்தின் சுழற்சியே … Continue reading மானசா – லஷ்மி பாலகிருஷ்ணன் :
காலச்சுவடு தமிழ் கிளாசிக் நாவல் பதிப்பிற்கான முன்னுரை:
தமிழில் சிறுகதைகள் மற்றும் நாவல்கள் என்ற இரண்டு வடிவங்களிலும் சிறந்த பங்களிப்பை அளித்தவர்கள் என்று பட்டியலிட்டால், விரல்விட்டு எண்ணி விடலாம். சா.கந்தசாமி அதிகம் ஆரவாரமின்றித் தன்னுடைய தடங்களைத் தமிழிலக்கியப் பரப்பில் பதித்துச் சென்றவர். கதைகளல்லாத கதைகள் என்று சா.கந்தசாமியின் சிறுகதைகளைச் சொல்வார்கள். பெரும்பாலான கதைகளை பின்னாளில் அவர் அப்படி எழுதியிருந்தாலும், 'தக்கையின் மீது நான்கு கண்கள்' போன்ற சிறந்த கதையம்சம் கொண்ட சிறுகதைகளையும் அவர் அதிகமாகவே எழுதியிருக்கிறார். சா.கந்தசாமியின் முக்கியமான நாவல்களைப் பட்டியலிடுவோர் தவறாமல் குறிப்பிடுபவை, சாயாவனம், … Continue reading காலச்சுவடு தமிழ் கிளாசிக் நாவல் பதிப்பிற்கான முன்னுரை:
காந்தப்புலம் – மெலிஞ்சி முத்தன்:
ஆசிரியர் குறிப்பு: யாழ்ப்பாணம், மெலிஞ்சிமுனையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது கனடாவில் வசிப்பவர். முட்களின் இடுக்கில், வேருலகு, பிரண்டையாறு, அத்தாங்கு, உடக்கு முதலியன இவரது முந்தைய படைப்புகள். இது இவரது சமீபத்திய நாவல். ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார் என்று சிறுவயதில் கேட்ட கதைகளில் இருந்து, தமிழில் கதைசொல்லல் வெகுதூரத்திற்குப் பயணம் செய்து வந்து விட்டது. போருக்கு முன்னும், பின்னுமான இலங்கையில் நடக்கும் கதை, ஆனால் போர் குறித்த ஒரிரு வரிகளும், தெருமுனையில் வெடித்த ஓலைப்பட்டாசு போல் … Continue reading காந்தப்புலம் – மெலிஞ்சி முத்தன்:
பர்தா – மாஜிதா:
ஆசிரியர் குறிப்பு: இலங்கையின் ஒட்டமாவடியில் பிறந்து வளர்ந்தவர். தற்போது இங்கிலாந்தில் வசித்துக் கொண்டு, சட்டத்துறையில் பணியாற்றுகிறார். இவரது சிறுகதைகள் அச்சு மற்றும் இணைய இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. இது இவரது முதல் நாவல். ஒரு பழுத்த ஆன்மிகவாதி கடவுளை எவ்வளவு தீர்க்கமாக நம்புகிறானோ, அதே தீர்க்கத்துடன் கடவுள் இல்லை என்பதை நான் நம்புகிறேன். மதங்கள் மனிதநேயத்தை அழிக்கும் பெருநோய்கள். நான் பிறந்த மதத்தில் ஆயிரம் குறைகளை வைத்துக் கொண்டு அடுத்த மதத்தை விமர்சிக்கும் நோக்கம் எப்போதும் எனக்கில்லை. இலக்கியத்தையும் … Continue reading பர்தா – மாஜிதா:
ஆக்காண்டி – வாசு முருகவேள்:
ஆசிரியர் குறிப்பு: இலங்கை யாழ்/நயினா தீவில் பிறந்தவர். தற்போது சென்னையில் வசிக்கிறார். இதற்கு முன் நான்கு நாவல்களை எழுதியிருக்கும் இவரது சமீபத்தில் வெளிவந்த ஐந்தாவது நாவல் இது. என்னுடைய சிறுவயதில் கேட்ட இலங்கை வானொலியின் வர்த்தகசேவை தமிழ் நிகழ்ச்சியில், பக்திப்பாடல்களில் இந்து, கிறிஸ்துவ, முஸ்லீம் பாடல்கள் ஒலிக்கும். தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் பிரச்சனையின் போது மும்மதத்தினரும் கூடித் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். இலங்கையிலும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும், மதத்தின் பெயரால் தமிழர்கள் தனித்தனியாகும்படி ஆகிப்போனது. இலங்கையில் முஸ்லீம்கள் என்று … Continue reading ஆக்காண்டி – வாசு முருகவேள்:
நட்ராஜ் மகராஜ் – தேவி பாரதி
ஆசிரியர் குறிப்பு: 1980ல் இருந்து பல இலக்கிய இதழ்களில் சிறுகதைகள், கவிதைகள், அரசியல், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் எழுதி வருபவர். காலச்சுவடின் பொறுப்பாசிரியராகப் பணிபுரிந்தவர். பல சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரைத் தொகுப்புகள், நான்கு நாவல்கள் இதுவரை வெளிவந்துள்ளன. இது இவரது இரண்டாவது நாவல். Last Emperor படத்தில் தான் அரசாண்ட அரண்மனைக்குப் பார்வையாளனாக வரும் மனிதனின் தளர்ந்த நடையைப் பார்த்திருப்பீர்கள். Last Mughal நாவலில் பகதூர் ஷாவிற்கு ஆங்கிலேயர் இழைத்த அவமானத்தை விட, அவரது மனைவியால் வந்த … Continue reading நட்ராஜ் மகராஜ் – தேவி பாரதி
நகுலாத்தை – யதார்த்தன்:
ஆசிரியர் குறிப்பு: இலங்கையின் யாழ்பாணத்திலுள்ள சரசாலை என்ற கிராமத்தில் பிறந்தவர். சமூக செயற்பாட்டாளர். தொன்ம யாத்திரை எனும் இதழின் ஆசிரியர்களில் ஒருவர்.'மெடூசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம்' இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு. இது சமீபத்தில் வெளியான இவருடைய முதல் நாவல். நூலிலிருந்து: " அவள் என்றைக்குமில்லாத நிறங்களை உடலெங்கும் பரவவிடுவதும், அவளுடைய கரிய வாளிப்பான உடல் ஒரு கருங்கடலைப்போல் அலைகொள்ளத் தொடங்கி, அவன் நிதானத்தை நடுக்கடலுக்கு எடுத்துச்சென்று புதைப்பதையும் அவனால் பார்க்கமட்டும் தான் முடிந்தது. தான் … Continue reading நகுலாத்தை – யதார்த்தன்:
பராரி – நரன்:
ஆசிரியர் குறிப்பு: விருதுநகரில் பிறந்தவர். ஊடகத்துறையில் பணிபுரிந்தவர். சிற்றிதழ் நடத்தியவர். சால்ட் பதிப்பகத்தை நடத்தி வருபவர். மூன்றுகவிதைத் தொகுப்புகள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ள இவரது சமீபத்திய நாவல் இது. " எங்கு என்பதை விட யாரோடு என்பதில் தான் பயணத்தின் அத்தனை சுவாரசியங்களுமிருக்கிறது -பராரிகள்" மணமாகி நான்கு வருடங்களுக்குள் கணவனை இழந்தவனிடம், மாமியார் சொல்கிறாள். "ஒரு நல்லது பொல்லாததுக்கு முன்னாடி நிக்கவிட மாட்டாங்க, மூலைல உட்கார வைப்பாங்க, இங்கே இருந்து போயிடு, உங்க அம்மா விட்டுக்கும் … Continue reading பராரி – நரன்:
கல்லறை – எம்.எம்.தீன்:
ஆசிரியர் குறிப்பு: திருநெல்வேலி மாவட்டம், அரிகேசவ நல்லூரில் பிறந்தவர். முதுகலை ஆங்கில இலக்கியம் மற்றும் சட்டம் பயின்று வழக்கறிஞராகப் பணிபுரிபவர். இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு நாவல்கள், ஒரு வரலாற்று நூல் எழுதிய இவரது சமீபத்திய நாவல் இது. கல்லறைக்குள் இருவர் பேசிக் கொள்ளும் ஆவலாதிகள் Mairtín O Cadhainன் Dirty Dust.The Posthumous Memoirs of Bras Cubas என்ற Machadoவின் நாவல், கல்லறையில் இருந்து ஒருவன் தன்வாழ்வை பின்னோக்கி நினைத்துப் பார்ப்பது. V J … Continue reading கல்லறை – எம்.எம்.தீன்:
நிழலின் தனிமை – தேவிபாரதி:
ஆசிரியர் குறிப்பு: 1980ல் இருந்து பல இலக்கிய இதழ்களில் சிறுகதைகள், கவிதைகள், அரசியல், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் எழுதி வருபவர். காலச்சுவடின் பொறுப்பாசிரியராகப் பணிபுரிந்தவர். பல சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரைத் தொகுப்புகள், நான்கு நாவல்கள் இதுவரை வெளிவந்துள்ளன. இது இவரது முதலாவது நாவல். "பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம்"என்ற சினிமா பாடலின் வரிகளே இந்தக் கதையின் கரு. பழி வாங்கும் உணர்ச்சி ஒரு மனிதனை, மனிதத்துக்கும் மிருகத்தன்மைக்கும் மாறிமாறிச் செல்ல வைக்கிறது. ஒரு பொருளை உரிமைகோரி, … Continue reading நிழலின் தனிமை – தேவிபாரதி: