தீர்த்த யாத்திரை- எம்.கோபால கிருஷ்ணன்:

ஆசிரியர் குறிப்பு: வணிகவியலிலும் இந்தி இலக்கியத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றவர். திருப்பூரைச் சொந்த ஊராகக் கொண்டவர். கவிஞர், சிறுகதையாசிரியர், நாவலாசிரியர், மொழிபெயர்ப்பாளர், இலக்கிய விமர்சகர். இவருடைய முந்தைய மூன்று நாவல்களும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பானவை. இது நான்காவது நாவல். அம்மன் நெசவு படித்து உடன் இதைப் படிக்க நேர்பவர்கள், பெயர் வித்தியாசத்தினால் மட்டுமல்ல, மொழிநடை வித்தியாசத்தினாலும் இரண்டும் வேறுவேறு எழுத்தாளர் எழுதியது என்று உறுதியாக நம்புவார்கள். சமீபகாலமாக ஆன்மீகத்தின் சாயலும் இவர் எழுத்தில் அங்கங்கு கலக்கிறது. நவராத்திரியில் … Continue reading தீர்த்த யாத்திரை- எம்.கோபால கிருஷ்ணன்:

தட்டழியும் சலதி ஆரம்பவேகம்

தட்டழியும் சலதி - கோமதிராஜன்: ஆசிரியர் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர். முதுநிலைப் பொறியியல் பட்டதாரி. தனியார் பள்ளி ஆசிரியர். ஒரு கட்டுரைத் தொகுப்பும், ஒரு கவிதைத் தொகுப்பும் ஏற்கனவே வெளியிட்டுள்ள இவருடைய முதல் நாவல் இது. முற்றிலும் கேள்விப்படாத புதிய நூல்களை Intuitionல் தேர்ந்தெடுப்பது மார்க்கெட்டிங் பாஷையில் சொன்னால் Cold Call. Hit rate குறைவு எப்போதும். ஆனால் எந்தவித முன்முடிவுகளுமின்றி ஒரு நூலை அணுகும் ஆனந்தம் அதில் இருக்கிறது. முத்துக்களும் எப்போதேனும் கிடைக்கும். மூன்று … Continue reading தட்டழியும் சலதி ஆரம்பவேகம்

அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும் நாவல் விமர்சனம்

அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும்- சுரேஷ்குமார இந்திரஜித்: ஆசிரியர் குறிப்பு: நாற்பது ஆண்டுகளாக சிறுகதை எழுதி வரும் இவரது முதல்நாவல் 2019ஆம் ஆண்டு வெளியானது. 2020 விஷ்ணுபுரம் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இது சமீபத்தில் வெளிவந்த நாவல். கோவில்கள் இத்தனை இல்லாமலிருந்தால் இத்தனை படையெடுப்புகள் நடந்திருக்குமா என்ற சந்தேகம் எனக்கு உண்டு. எவ்வளவு எளியவர் ஆயினும் கோவிலுக்குக் கொடுத்தால் பலமடங்கு திரும்பவரும் என்பது நம்பிக்கை. அதனால் தான் குசேலர்-அவல் கதை. கோவில்கள் எல்லோரையும் அன்றும் சமமாக நடத்தியதில்லை இன்றும் … Continue reading அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும் நாவல் விமர்சனம்

பேரருவி நாவல் விமர்சனம்

பேரருவி - கலாப்பிரியா: ஆசிரியர் குறிப்பு: திருநெல்வேலியில் பிறந்தவர். தமிழின் நவீன கவிஞர்களில் ஒருவர். ஐம்பதாண்டுகளாக எழுதிக் கொண்டு இருக்கிறார். இருபத்திரண்டு கவிதைத் தொகுப்புகள், பன்னிரண்டு உரைநடைத் தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன. சமீபத்தில் நாவல் எழுத ஆரம்பித்தவரின் மூன்றாவது நாவல் இது. மற்றாங்கே, எட்டயபுரம், சுயம்வரம் போன்ற கவிதைத் தொகுப்புகளில் ஆழ்ந்து மூழ்கி ஆனந்தப்பட்டபோது இளமை நிறைய மீதி இருந்ததால் நெருக்கமாகிப்போன கவிதைகள் அவை. "மருத மர நிழல்கள் மீட்டாத தண்டவாளச் சோகங்களை எனக்கேன் நிரந்தரித்தாய் சசி" … Continue reading பேரருவி நாவல் விமர்சனம்

சாலாம்புரி

சாலாம்புரி- அ. வெண்ணிலா: ஆசிரியர் குறிப்பு: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் பிறந்தவர் இவர். முதுகலை உளவியல், கணிதம் படித்தவர். கல்வியியலில் முனைவர் பட்டம் பெற்றவர். “ஆதியில் சொற்கள் இருந்தன”, “நீரிலலையும் முகம்”, “கனவிருந்த கூடு” உள்ளிட்ட பன்னிரண்டு நூல்களை எழுதியுள்ளார். நாவல், சிறுகதைகள்,கவிதைகள், ஆய்வுநூல்கள் என பலதளங்களிலும் இயங்கிவரும் இவருடைய இரண்டாவது நாவல் இது. வெண்ணிலாவின் மொழி அழகு. தன் கண்முன் விரிந்த சரித்திரத்தை இவர் எழுதலாமே என்று சிலநேரம் நான் நினைத்ததுண்டு. இந்த நாவல் அது … Continue reading சாலாம்புரி

குமிழி

குமிழி- ரவி: ஆசிரியர் குறிப்பு: ரவி, 80 களின் இறுதியிலும் 9௦ களிலும் ‘மனிதம்’ என்ற இதழினை குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு தொடர்ச்சியாக நடத்தியதன் மூலமும் பல்வேறு விதமான இலக்கிய, சமூக செயற்பாடுகளின் மூலமும் பரவலாக அறியப்பட்டவர். தனது இளமைக் காலங்களில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்துடன் இணைந்து செயல்பட்டு ஆயுதப்பயிற்சியும் பெற்றுக் கொண்டவர். அவர் 1984 இல் இருந்து 1985 வரை தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இந்நூலில் பதிவு செய்துள்ளார். இது நாவல். புத்தகத்திலிருந்து: " … Continue reading குமிழி

தவ்வை – அகிலா

ஆசிரியர் குறிப்பு: கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், பெண்ணியவாதி, ஓவியர் மற்றும் மனநல ஆலோசகர். கோவையைச் சேர்ந்தவர். கவிதை, சிறுகதை, குறுநாவல், நாவல் என பத்து தொகுப்புகளுக்கு மேல் வெளியிட்டுள்ளார். இந்த நூல் இவரது சமீபத்திய நாவல். 1979ஆம் வருடம். மாடிப்படியில் ஆறேழு பெண்கள் சிரிப்பும் சத்தமுமாய் உட்கார்ந்திருந்தார்கள். காலையில் மணமுடித்த பெண்ணை அதில் ஒருவர் மாடிவரைக் கூட்டிப் போய் விட்டுவிட்டு வந்தார். முன்பின் அறிமுகமில்லா இருவர் எப்படி உறவுகொள்ள முடியும் என்ற சந்தேகத்திற்கு அன்றும் என்னிடம் பதிலில்லை. … Continue reading தவ்வை – அகிலா