ஹமார்ஷியா- கண்ணன் ராமசாமி:

ஆசிரியர் குறிப்பு: திருவள்ளூரைச் சேர்ந்தவர். பொறியியல் இளங்கலை படித்து, ரயில்வே சிக்னல் துறையில் பணிசெய்பவர். இரண்டு நாவல்கள், ஒரு மொழிபெயர்ப்பு நூல் ஆகியவை, ஏற்கனவே வந்த இவரது படைப்புகள். இந்த நூல் சமீபத்தில் வெளிவந்த இவரது மூன்றாவது நாவல். Games People Play என்ற Eric Berneன் புத்தகம் மனிதவளத்துறை மாணவர்களுக்குப் பரவலாகப் பரிந்துரை செய்யப்படுவது. அதற்கும் இந்த நூலுக்கும் சம்பந்தமில்லை. ஆனால் அந்த நூலின் மையஇழையான மற்றவர்களுடனான உறவு (social interaction) என்பதை இன்றைய Online … Continue reading ஹமார்ஷியா- கண்ணன் ராமசாமி:

‘ இப்பொழுது என்ன நேரம் மிஸ்டர் குதிரை’ – கௌதமசித்தார்த்தன்:

இது ஒரு விஞ்ஞானக்கதை. விஞ்ஞானக் கதை என்றால், பெருவாரியான கதைகள் ஆரம்பிப்பது போல், அது கிபி 3200வது வருடம் என்று இந்தக்கதை தொடர்வதில்லை. இதில் காலம் மௌனமாக இருக்கிறது. அடுத்த வருடத்தில், ஐந்து வருடங்களில் இல்லை ஐம்பது வருடங்களில், எப்போது வேண்டுனாலும் நாவலின் முக்கியபகுதி நிதர்சனமாகும் சாத்தியக்கூறுகள் நிறையவே இருக்கின்றன. வங்கியில் செய்யும் முதலீடுகள், பத்திரங்களில் செய்யும் முதலீடுகளுக்கானவரவுச்சீட்டை, நாம் நடுஇரவில் தூக்கத்திலிருந்து முழித்தாலும், அலமாரியில் இருந்து எடுத்துச் சரிபார்த்துக் கொள்ளலாம். பங்குச்சந்தையில் செய்யும் முதலீடுகள் மின்னணுக் … Continue reading ‘ இப்பொழுது என்ன நேரம் மிஸ்டர் குதிரை’ – கௌதமசித்தார்த்தன்:

அம்பரம் – ரமா சுரேஷ்:

ரமா சுரேஷ் தஞ்சையில் பிறந்தவர். சிங்கப்பூரில் வசிப்பவர். மாயா இலக்கிய வட்டம் போன்ற இலக்கிய நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கேற்பவர். உட்லண்ட்ஸ் ஸ்ட்ரீட் 81 என்ற பெயரில் சிறுகதைத் தொகுப்பு ஏற்கனவே வெளிவந்துள்ளது. இது இவரது முதல் நாவல். யாத்வஷேம் நாவல் எழுதிய நேமிசந்திரா போல் நாவலுக்கான கதைக்களத்தை நேரடியாகப் பார்க்க வேண்டும் என்று அலைபவர்கள் இந்தியாவிலேயே குறைவு.இந்த நாவலுக்காக ரமா, பர்மியக் கிராமங்களில் சுற்றியிருக்கிறார், நூற்றுக்கணக்கானவர்களைச் சந்தித்திருக்கிறார், தான் சந்திக்கும் மனிதர்களில் கதாபாத்திரங்களின் சாயலைத் தேடியிருக்கிறார். காலனி … Continue reading அம்பரம் – ரமா சுரேஷ்:

அம்மாவின் வாடகை வீடு – இந்திரஜித்:

ஆசிரியர் குறிப்பு : சிங்கப்பூரில் வசிக்கிறார். ஒரு கட்டுரைத் தொகுப்பு, ஒரு சிறுகதைத் தொகுப்பு, இரண்டு கவிதைத் தொகுப்புகள், ஒரு நாவல் முதலியன இவர் ஏற்கனவே எழுதியவை. இது இவரது இரண்டாவது நாவல். ஆதவனின் முதலில் இரவு வரும் ஒரு அற்புதமான கதை. மணமுடித்து, குழந்தையும் பெற்றுக் கொண்ட ராஜாராமன் அம்மாவிடம் மீண்டும் சரணாகதி அடைவது.இன்னொரு பெண், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அம்மாவிடமிருந்து ஒரு சிறிய விலக்கத்தையேனும் கொண்டு வந்து விடுகிறாள். அவள் முன்னால் விச்ராந்தியாக அம்மாவைக் கட்டிப்பிடிக்க … Continue reading அம்மாவின் வாடகை வீடு – இந்திரஜித்:

தீவாந்தரம் – அண்டனூர் சுரா:

ஆசிரியர் குறிப்பு: புதுக்கோட்டை மாவட்டம் அண்டனூர் கிராமத்தில் பிறந்தவர். கணிதப் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். ஏழு சிறுகதைத் தொகுப்புகள், மூன்று கட்டுரைத் தொகுப்புகள், மூன்று புதினங்களை இதுவரை எழுதியுள்ளார். இது இவரது சமீபத்திய நாவல். சுப்பிரமணிய சிவா மற்றும் வ.உ.சிக்கு அளிக்கப்பட்ட அதிகபட்ச சிறைத்தண்டனை தீர்ப்பு நகலுடன் நாவல் தொடங்குகிறது. 1908ல் வ.உ.சி கைது செய்யப்படுகிறார். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலைக்கு வந்து போராடுகிறார்கள். அவர்களின் உணர்வு போராட்டம் பிரிட்டிஷாரை திருநெல்வேலி கலவரத்தில், துப்பாக்கிச்சூடு நடத்த … Continue reading தீவாந்தரம் – அண்டனூர் சுரா:

ஆட்டுக்குட்டியும் அற்புத விளக்கும் – பிரியா விஜயராகவன்:

ஆசிரியர் குறிப்பு: அரக்கோணத்தில் பிறந்து வளர்ந்தவர். மருத்துவத் தம்பதிகளுக்குப் பிறந்த இவரும் மருத்துவர். UKல் மருத்துவராகப் பணிபுரிகிறார். இவருடைய முதல் நாவல், அற்றவைகளால் நிரம்பியவள் சுயசரிதைக்கூறுகள் நிறைந்த புனைவு (Auto Fiction) இது சமீபத்தில் வெளிவந்த இவரது இரண்டாவது நாவல். அற்றவைகளால் நிரம்பியவள் ஒரு துறையில் நிபுணத்துவம் பெற்றவர் எழுதிய நாவல். Medical terminologies, அனாடமி குறித்து ஏராளமான விஷயங்கள் இருக்கும் நூல். அவற்றை அலைபாயும் அஞ்சனா என்ற பெண் மருத்துவரின் வாழ்க்கைக்கதையுடன் இணைத்திருப்பார். அஞ்சனாவில் பிரியா … Continue reading ஆட்டுக்குட்டியும் அற்புத விளக்கும் – பிரியா விஜயராகவன்:

ஆரண்யவாசி – எம்.ரிஷான் ஷெரீப்:

ஆசிரியர் குறிப்பு: இலங்கையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளரும், ஊடகவியலாளரும், மொழிபெயர்ப்பாளரும் ஆவார். இலங்கை, இந்தியா,கனடா முதலிய நாடுகளில் இருந்து விருதுகளை வாங்கியுள்ள இவர், சிங்களத்தில் இருந்து பல குறிப்பிடத்தக்க படைப்புகளை மொழிபெயர்ப்பு செய்துள்ளார். இவருடைய முதல் குறுநாவல் இது. மிகச்சிறிய குறுநாவல் இது, நெடுங்கதை என்றே சொல்ல வேண்டும். கிராமத்தில் எல்லோருக்குமே இயற்கையாக மரணம் நேராது, துர்மரணம் நேரும் ஊரில் அடுத்தடுத்து மரணங்கள் நேரும் Dystopian story. இந்தக் கதையில் கதைசொல்லியின் பெயரோ, பாலினமோ கடைசிவரை குறிப்பிடப்படவில்லை. … Continue reading ஆரண்யவாசி – எம்.ரிஷான் ஷெரீப்:

பண்ணையில் ஒரு மிருகம் – நோயல் நடேசன்:

ஆசிரியர் குறிப்பு: யாழ்பாணத்திற்கு மேலே அமைந்திருக்கும் எழுவைத்தீவில் பிறந்தவர். கால்நடை மருத்துவர். பலகாலமாக ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். இந்தியாவிலும் சிலகாலம் வசித்திருக்கிறார். இங்கே ஒரு பண்ணையில் சிலகாலம் வேலைசெய்த அனுபவத்தை வைத்து எழுதப்பட்டதே இந்த நாவல். இந்தியர் எல்லோருக்கும் சிறுவயதில் இருந்து கேட்ட புராணக்கதைகள், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் மேலைநாட்டினருக்கு ஆச்சரியமூட்டுபவை. கீதாஞ்சலியின் Tomb of Sand இந்தியத்தனத்தினாலேயே விருதை வென்றது. இந்தியா போல Rich heritage கொண்ட நாடுகள் குறைவு. ஈழத்தமிழர்கள் சினிமா, இலக்கியம், கலை மூலம் நம்முடன் … Continue reading பண்ணையில் ஒரு மிருகம் – நோயல் நடேசன்:

ஸலாம் அலைக் – ஷோபா சக்தி:

ஆசிரியர் குறிப்பு: இலங்கையில் வடபுலத்தில் அல்லைப்பிட்டி கிராமத்தில் பிறந்தவர். பல வருடங்களாகப் பிரான்ஸில் வசிக்கிறார். கொரில்லா என்ற நாவலின் மூலம் தமிழ் வாசகர்களின் கவனத்தைப் பெற்ற ஷோபாசக்தி, தொடர்ந்து நாவல்கள், சிறுகதைகள் எழுதி வருகிறார். விவாதங்கள், விமர்சனங்களுக்கு அதிகம் ஆளானவர். இது இவருடைய சமீபத்திய நாவல். இரண்டு பகுதிகள் கொண்ட நாவல். இரண்டில் எந்த பாகத்தையும் முதலில் படிக்கலாம். நூலின் வடிவமும் அதற்கேற்றாற்போல் அமைந்துள்ளது." இந்த உலகத்தில் ஒரே கதை தான் உள்ளது, அதைத்தான் ஆளும் பேரும் … Continue reading ஸலாம் அலைக் – ஷோபா சக்தி:

மைத்ரி – அஜிதன்:

ஆசிரியர் குறிப்பு: தத்துவயியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். திரைத்துறையில் வெர்னர் ஹெர்லாக், தெரேன்ஸ் மாலிக், ராபர்ட் அல்ட்மன் போன்றோர் இவரது ஆதர்சங்கள். திரைப்படங்களில் உதவி இயக்குனராகப் பணிபுரிகிறார். இவர் எழுத்தாளர்கள் ஜெயமோகனுக்கும், அருண்மொழி நங்கைக்கும் தர்மபுரியில் பிறந்தவர். இவரது முதல் நாவல் இது. ஹரன், கேதார்நாத் செல்லும் பேருந்தில் மைத்ரி என்ற பேரழகியைச் சந்திக்கிறான். அவள் மொபைலில் இருந்து கட்வாலி மொழியில் வாழ்க்கையில் கேட்ட சிறந்த பாடல் ஒன்றைக் கேட்கிறான். கீழே இறஙகுவதற்குள் ஹரனும், மைத்ரியும் ஈருடல் … Continue reading மைத்ரி – அஜிதன்: