மீள் வருகை – கூகி வா தியாங்கோ- தமிழில் எம். ரிஷான் ஷெரீப்:

கூகி வா தியாங்கோ கென்யாவில் பிறந்தவர். பல்கலையில் பேராசிரியராகப் பணியாற்றியவர். உயிர் அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்காவில் குடிபுகுந்தவர்.அட்வுட்டைப் போலவே ஒவ்வொரு முறையும் இவருக்கு நோபல் பரிசு இந்தவருடமாவது கிடைத்துவிடும் என்று பலர் நம்புகின்றனர். ரிஷான் இலங்கையைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், கவிஞர். மொழிபெயர்ப்புகளுக்காகப் பல விருதுகளை வென்ற இவர் சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்குத் தொடர்ந்து மொழிபெயர்த்து வருகிறார். நான்கு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு இது. நான் வாசித்த வகையில், தியாங்கோவின் சிறுகதைகள் சுதந்திரப் போராட்டம், … Continue reading மீள் வருகை – கூகி வா தியாங்கோ- தமிழில் எம். ரிஷான் ஷெரீப்:

கர்ஷூ – சிங்களச் சிறுகதைகள் – தமிழில் அனுஷா சிவலிங்கம் :

ஆசிரியர் குறிப்பு : கொழும்பு பல்கலையின் ஊடகப் பட்டதாரி. தமிழில் இருந்து சிங்களத்திற்கு, சிங்களத்தில் இருந்து தமிழுக்கு, ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு என்று இதுவரை நான்கு மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டுள்ளார். இது ஐந்தாவது. பத்து கதைகள் கொண்ட தொகுப்பு இது. ஐந்து ஆண்கள், ஐந்து பெண்கள் என்ற சரிவிகிதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள். அநேகமாக எல்லாக் கதைகளுமே கடந்த பதினைந்து வருடங்களுக்குள் எழுதப்பட்டிருக்கலாம். எல்லாக் கதைகளின் கதைக்களங்களும் போருக்குப் பிந்தியது. போரினால் ஏற்பட்ட சிதிலங்களைக் குறித்துப் பேசினாலும், போர் … Continue reading கர்ஷூ – சிங்களச் சிறுகதைகள் – தமிழில் அனுஷா சிவலிங்கம் :

LTTE மூர்த்தி அழைக்கிறார் – கதை- ஏ.வெங்கடேஷ மூர்த்தி – விவரிப்பு சிவகுமார் மாவலி- கன்னடத்திலிருந்து தமிழில் கே. நல்லதம்பி:

சிவகுமார் மாவலி, ஷிவமோக்கா, சொரடாவின் மாவலி கிராமத்தைச் சேர்ந்தவர். ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஆங்கிலப் பேராசிரியர். இரண்டு சிறுகதைத்தொகுப்புகள், பல இலக்கியக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். கே.நல்லதம்பி: தனியார் கம்பெனியில் அகில இந்திய மேலாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தமிழக வாசகர்களுக்குப் பெரிதும் அறிமுகமானவர். நூலின் ஆரம்பத்தில் 25 படைப்புகள் கன்னடத்திலிருந்து தமிழுக்கும், 15 தமிழிலிருந்து கன்னடத்திற்கும் மொழிபெயர்த்திருக்கிறார் என்று குறிப்பு சொல்கிறது. இதை எழுதும் வேளையில் நிச்சயம் இந்த எண்ணிக்கை மாறியிருக்கும். Right man in … Continue reading LTTE மூர்த்தி அழைக்கிறார் – கதை- ஏ.வெங்கடேஷ மூர்த்தி – விவரிப்பு சிவகுமார் மாவலி- கன்னடத்திலிருந்து தமிழில் கே. நல்லதம்பி:

கபர் – கே.ஆர்.மீரா – தமிழில் மோ.செந்தில்குமார்:

கே.ஆர்.மீரா மீரா தற்போதுஎழுதிக்கொண்டிருக்கும் சமகால எழுத்தாளர்களில் குறிப்பிடத் தக்கவர். இவரது நான்கு நாவல்கள், ஆறு குறுநாவல்கள், ஒன்பது சிறுகதைத் தொகுப்புகள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. கேரளாவின் Major Literary awards எல்லாவற்றையும் வென்றிருக்கிறார். ஆராச்சார் நாவலுக்காக சாகித்ய அகாதமி விருதும், பிற படைப்புகளுக்காக மூன்று முறை கேரள சாகித்யஅகாதமி விருதும் வாங்கி இருக்கிறார். மோ.செந்தில்குமார்: தமிழ் பேராசிரியர். மொழிபெயர்ப்பாளர். பெயல் இதழின் ஆசிரியர். ஆராச்சாரில் தொடங்கி மீராவின் படைப்புகளைத் தொடர்ந்து மொழிபெயர்த்து வருகிறார். பொதுவாக ஒருமொழியில் வாசித்ததை அடுத்த … Continue reading கபர் – கே.ஆர்.மீரா – தமிழில் மோ.செந்தில்குமார்:

மாளாக்காதல் – தல்ஸ்தோய் – தமிழில் கமலக்கண்ணன்:

ஆசிரியர் குறிப்பு: திருச்சிராப்பள்ளியைச் சொந்த ஊராகக் கொண்ட கோ.கமலக்கண்ணன் சிறுகதை, குறுநாவல் மற்றும் கட்டுரைகள் எழுதிவருவதுடன், மொழிபெயர்ப்பிலும் ஈடுபட்டுள்ளார். தமிழினி வெளியீடாக, இவருடைய ஐந்தாவது மொழிபெயர்ப்பு நூல் இது. தல்ஸ்தோயின் இந்தக் குறுநாவல், இரண்டு வகைகளில் முக்கியமானது, 1857ல் முடித்த நாவல், அவருக்கு திருப்தி ஏற்படாமல் திருத்தி எழுதப்பட்டு 1963ல் இலக்கியப் பத்திரிகையொன்றில் வெளியாகிறது. இந்த நாவலை முடிப்பதற்கான தூண்டுதல் 1862ல் சூதாட்டத்தில் அவர் பட்ட கடன். இந்த நாவலிலும் கொசாக் போரின் கடைசியில் சேர்ந்த தல்ஸ்தோயின் … Continue reading மாளாக்காதல் – தல்ஸ்தோய் – தமிழில் கமலக்கண்ணன்:

சாத்தான் – லியோ டால்ஸ்டாய் – தமிழில் கீதா மதிவாணன் :

Where the Crawdads Sing என்ற நாவலை அதன் ஆசிரியரே எதிர்பார்த்திருக்க மாட்டார், எழுபது வயதில் அவரது முதல் நாவல். உலகம் முழுதும் வரவேற்பைப் பெற்றதுடன், திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. வெளியாகி ஐந்தாவது வருடத்திலும் விற்பனையில் சிறந்த பத்து நூல்கள் பட்டியலில் இருக்கிறது. இந்த அபாரமான வெற்றி, எழுத்தாளருக்கு ஒரு சோதனையையும் கொண்டு வந்தது. பல வருடங்கள் முன்பு, அவரது ஜாம்பியா பண்ணையில் அத்துமீறி நுழைந்த ஒருவர் கொல்லப்பட்டது காமிராவில் பதிவாகி, எழுத்தாளரின் சாட்சியத்தின் பேரில் கேஸ் மூடப்பட்டது. … Continue reading சாத்தான் – லியோ டால்ஸ்டாய் – தமிழில் கீதா மதிவாணன் :

மீராசாது – கே.ஆர்.மீரா – தமிழில் மோ.செந்தில்குமார் :

கே.ஆர்.மீரா: இந்தியாவில் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். பெண்ணியத்தைப் பிரச்சாரத் தொனி சிறிதுமின்றி இலக்கியமாக்கும் வித்தை தெரிந்தவர். சாகித்ய அகாதமி விருது உட்பட பல விருதுகளை வென்றவர். மோ.செந்தில் குமார்: தமிழ் பேராசிரியர். பெயல் என்னும் ஆய்விதழின் ஆசிரியர். மீராவின் புகழ்பெற்ற நூலான The Hangwoman நாவலை 'ஆராச்சார்' என்ற பெயரில் மொழிபெயர்ப்பைத் தொடங்கிய இவரது பயணம், குறுகிய காலத்தில் மீராவின் நான்கு நாவல்களை மொழிபெயர்க்க வைத்திருக்கிறது. இந்த நாவல் மீராவின் மற்றொரு முக்கிய … Continue reading மீராசாது – கே.ஆர்.மீரா – தமிழில் மோ.செந்தில்குமார் :

சகீனாவின் முத்தம் – விவேக் ஷான்பாக்- கன்னடத்தில் இருந்து தமிழில் கே.நல்லதம்பி:

விவேக் ஷான்பாக்: பொறியியல் பட்டதாரி. பெங்களூரில் வசிக்கிறார். ஐந்து சிறுகதைத் தொகுப்புகளையும், நான்கு நாவல்களையும், இரண்டு நாடகங்களையும் இதுவரை வெளியிட்டிருக்கிறார். காச்சர் கோச்சர் இவரது முக்கியமாகப் பேசப்பட்ட நாவல். கே. நல்லதம்பி: மைசூரில் படித்து அகில இந்திய மேலாளராகப் பணிபுரிந்து ஒய்வு பெற்றவர். தமிழில் இருந்து கன்னடத்திற்கும், கன்னடத்தில் இருந்து தமிழுக்கும் தொடர்ச்சியாக மொழிபெயர்ப்பவர். மொழிபெயர்ப்புக்கான 2022 சாகித்ய அகாதமி விருதை வென்றவர். பார்த்துப் பார்த்து காதலித்த உருவம் தேவன்/தேவதை வடிவத்தில் இருந்து, சகிக்க முடியாத உருவத்தை … Continue reading சகீனாவின் முத்தம் – விவேக் ஷான்பாக்- கன்னடத்தில் இருந்து தமிழில் கே.நல்லதம்பி:

சாமிமலை – சுஜித் ப்ரசங்க – சிங்களத்தில் இருந்து தமிழில் எம். ரிஷான் ஷெரீப்:

சுஜித் ப்ரசங்க: இலங்கையின் காலி மாவட்டத்தில் பிறந்தவர். கவிஞர், பாடலாசிரியர், நாவலாசிரியர். இதுவரை நான்கு நாவல்களை எழுதியுள்ள, இவரது மூன்றாவது நாவலின் தமிழ்மொழிபெயர்ப்பு இந்த நாவல். ரிஷான் ஷெரீப்: தமிழ் எழுத்தாளர். கவிஞர். மொழிபெயர்ப்பாளர். ஆங்கிலத்தில் இருந்தும் சிங்களத்தில் இருந்தும் பல முக்கிய படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்தவர். மொழிபெயர்ப்புக்காகப்பல விருதுகளை வென்றவர். இலங்கை புதிர்களின் தேசம். தமிழ்நாட்டின் மக்கள்தொகையில் முப்பது சதவீதத்திற்கும் குறைவான மொத்த மக்கள்தொகை கொண்ட இந்த சிறிய தேசத்தில் நூறு குழுக்கள். மலையகத்தில் தேயிலைத் … Continue reading சாமிமலை – சுஜித் ப்ரசங்க – சிங்களத்தில் இருந்து தமிழில் எம். ரிஷான் ஷெரீப்:

உறவுச்சிக்கல்களின் சித்திரங்கள்- (ஐந்து விளக்குகளின் கதை)

முன்னுரை என்பது எப்போதும் கதைகளுக்கான வரைபடம். வாசகர்களை நுழைவாயிலில், எதைப் படிக்கப் போகிறோம் என்பதை தயார் படுத்துவது அதன் பணி. ஆங்கிலத்தில் Prologue என்பதுநூலுக்கான பின்கதையைச் சொல்லி வாசிக்க ஆரம்பிக்குமுன் அதன் தொனியைச் சொல்வது, Preface என்பது வழக்கமாக ஆசிரியர் எந்த சூழ்நிலையில் எதற்காக இந்த நூலை எழுதினேன் என்று சொல்வது,Foreword என்பது விமர்சகர்களால் இது போன்ற நூல்கள் குறித்த ஒரு பார்வை, introduction என்பது ஆசிரியரோ, மற்றவர்களோ நூல் குறித்த உபரித் தகவல்களைச் சொல்வது, ,ஆனால் … Continue reading உறவுச்சிக்கல்களின் சித்திரங்கள்- (ஐந்து விளக்குகளின் கதை)