பீரங்கிப்பாடல்கள்

பீரங்கிப்பாடல்கள் - என்.எஸ்.மாதவன்- மலையாளத்தில் இருந்து தமிழில் இரா.முருகன்: என்.எஸ்.மாதவன்: திருப்பணித்துராவில் பிறந்தவர். என்.எஸ்.மாதவனின் தந்தை ஐ.ஆர்.எஸ். அதிகாரி. மாதவன் I A S அதிகாரியாகப் பணியாற்றியவர். மலையாள நவீன இலக்கியத்தை மடைமாற்றியவர் என்ற பெருமைக்குரியவர். சாகித்ய அகாதமி விருதும், மூன்று முறை கதா விருதும் பெற்றவர். இவருடைய சிறுகதைகளில் பலத்த கவனத்தைப் பெற்றவை. இந்த நாவல் இதுவரையான இவரது மாஸ்டர்பீஸ் என்று கருதப்படுவது. இரா.முருகன்: சிறுகதைகள், கவிதைத்தொகுப்பு, நாவல்கள், கட்டுரைத் தொகுப்பு என்று முப்பது நூல்களுக்கு … Continue reading பீரங்கிப்பாடல்கள்

ஏவாளின் ஏழுமகள்கள்-தாய்வழிச்சமூகம்

ஏவாளின் ஏழு மகள்கள் - பிரையன் சைக்ஸ்- தமிழில் அமலன் ஸ்டேன்லி: பிரையன் சைக்ஸ்; பிரிட்டிஷ் மரபணு நிபுணர். அறிவியல் பரப்புரைஞர். ஆக்ஸ்போர்ட் பல்கலையில் மானிட மரபணுவியல் பேராசிரியராய் இருந்தவர். டிசம்பர் 2020ல் மறைந்தார். அமலன் ஸ்டேன்லி: அறிவியலாளர். சுற்றுச்சூழல் நச்சுயியலில் முனைவர் பட்டம் பெற்றவர். முப்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும், பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார். ஆயிரமாயிரம் ஆண்டுகள் மரபணு மூலம் செய்தி, கண்டங்கள், காலங்கள் தாண்டி இன்றைய நம்மையும் வந்து சேர்ந்தது பற்றிய நூல் … Continue reading ஏவாளின் ஏழுமகள்கள்-தாய்வழிச்சமூகம்

இருட்டில் ஒரு புனிதன் நாவல் விமர்சனம்

இருட்டில் ஒரு புனிதன் - பி.எப். மாத்யூஸ்- தமிழில் சுஜா ராஜேஷ்: பி.எப். மாத்யூஸ்: 1986ல் இருந்து மலையாளத்தில் எழுதுகிறார். இலக்கியம், திரைத்துறை இரண்டிலும் இணைந்து பணியாற்றும் இவர் 'குட்டிசிரான்' படத்தின் திரைக்கதைக்குத் தேசியவிருது பெற்றவர். இதுவரை ஐந்து சிறுகதைத் தொகுப்புகள், ஒரு நினைவுக்குறிப்பு நூல் வெளிவந்துள்ளன. இது இவருடைய சமீபத்தில் வெளிவந்த முதல்நாவல். சுஜா ராஜேஷ்: கேரள மாவட்டம் இடுக்கியில் பிறந்தவர். முனைவர் பட்டம் பெற்றவர். தமிழ்த்துறை பேராசிரியர். எழுத்திலும், மொழிபெயர்ப்பிலும் ஈடுபாடு கொண்டவர். மனைவியின் … Continue reading இருட்டில் ஒரு புனிதன் நாவல் விமர்சனம்

இரவு- எலீ வீஸல்

இரவு- எலீ வீஸல்- பிரஞ்சிலிருந்து ஆங்கிலத்தில் மரியன்வீஸல் தமிழாக்கம்- ரவி.தி. இளங்கோவன் எலீ வீஸல்: ருமேனியாவில் சிகெட் என்ற ஊரில் பிறந்தார். சிறுவனாக இருந்த போதே வதை முகாமுக்கு (concentration camps) கொண்டு செல்லப்பட்டு, பெற்றோரையும், தங்கையையும் அங்கே இழந்தவர். இவருடைய வதைமுகாம் அனுபவங்களே இந்த நூல். இவருடைய The Beggar in Jerusalem பரபரப்பாகப் பேசப்பட்ட நூல்.1986ல் சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றவர். ரவி.தி. இளங்கோவன்: திருவல்லிக்கேணி நடைபாதையில் தற்செயலாக வாங்கிய ஆங்கிலப் புத்தகம் தூங்கவிடாது … Continue reading இரவு- எலீ வீஸல்