மூச்சே நறுமணமானால் – அக்கமகாதேவி- தமிழில் பெருந்தேவி:

அக்கமகாதேவி பன்னிரண்டாம் நூற்றாண்டின் சைவபக்தி இலக்கியத்தை வளர்த்தவர். கர்நாடகாவின் ஷிமோகாவில் பிறந்தவர். ஆண்டாளுக்கு மாதவன் போல் அக்கமகாதேவிக்கு சென்ன மல்லிகார்ஜூன். பெருந்தேவி, கவிஞர், எழுத்தாளர், ஆய்வாளர், அமெரிக்கப் பல்கலை ஒன்றில் இணைப்பேராசிரியர். புனைவென்றாலும், கவிதையென்றாலும் மொழியில் தொடர்ந்த பரிசோதனைகளைச் செய்து வருபவர். சைவம் தென்இந்தியா முழுவதுமே தன் இருப்பைப் பலமாகத் தக்க வைத்திருக்கிறது. குறிப்பாக கர்நாடகாவில் லிங்காயத்துகள் (சிவனைத் தவிர வேறு யாரையும் வழிபடாதவர்கள்) திங்கள் கிழமைகள் எல்லாவற்றையும், சிவநாளாகக் கொண்டாடி வருகின்றனர். இந்த சூழலில் அக்காவின் … Continue reading மூச்சே நறுமணமானால் – அக்கமகாதேவி- தமிழில் பெருந்தேவி:

பீடி – தக் ஷிலா ஸ்வர்ணமாலி- தமிழில் ரிஷான் ஷெரிப்:

தக் ஷிலா ஸ்வர்ணமாலி: இலங்கை, களனி பல்கலைக் கழகத்தில் சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். சிங்கள எழுத்தாளர். அந்திம காலத்தின் இறுதிநேசம் என்ற சிறுகதைத் தொகுப்பின் மூலம் தமிழுக்கு ஏற்கனவே அறிமுகமானவர். இது சமீபத்தில் வெளிவந்த இவரது நாவலின் மொழிபெயர்ப்பு. ரிஷான் ஷெரிப்: சிங்களத்தில் இருந்தும் ஆங்கிலத்தில் இருந்தும், பல மொழிபெயர்ப்புகளைச் செய்தவர். மொழிபெயர்ப்புக்காக பல விருதுகளைப் பெற்றவர். சொந்தமாகவும் கவிதை, சிறுகதைத் தொகுப்பு, நாவல், கட்டுரைத் தொகுப்புகளை வெளியிட்டவர். ஸ்வர்ணமாலியின் சென்ற சிறுகதைத் தொகுப்பில், கதைக்கருக்கள் … Continue reading பீடி – தக் ஷிலா ஸ்வர்ணமாலி- தமிழில் ரிஷான் ஷெரிப்:

கிகோர் – ஹோவன்னஸ் டுமேனியன்- தமிழில் எம்.ரிஷான் ஷெரீப்;

டுமேனியன் ஆர்மேனியாவைச் சேர்ந்த கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இலக்கியவாதி. ஆர்மேனியாவின் தேசியக் கவிஞராகப் போற்றப்படும் இவர் சிறார்களுக்கான தேவதைக் கதைகளும், பெரியவர்களுக்கான நாவல்களையும் எழுதியவர். ரிஷான் சிங்களத்தில் இருந்தும், ஆங்கிலத்தில் இருந்தும் பல நூல்களை மொழிபெயர்த்தவர். சிங்களத்தின் சிறந்த Contemporary writersஐ தமிழுக்குக் கொண்டு வந்தவர். பல விருதுகளை மொழிபெயர்ப்புக்காகப் பெற்றவர். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார். தி.ஜாவின் சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய்சிறுகதையும், இந்த குறுநாவலும் Child exploitation என்ற புள்ளியில் ஒன்றிணைகின்றன. இரண்டிலுமே … Continue reading கிகோர் – ஹோவன்னஸ் டுமேனியன்- தமிழில் எம்.ரிஷான் ஷெரீப்;

விடியலைத் தேடிய விமானம் – ஆந்த்துவான் த சேந்தெக்ஸுபெரி- பிரெஞ்சிலிருந்து தமிழில் எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி:

ஆந்த்துவான் த சேந்தெக்ஸுபெரி: இருபதாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர்களில் ஒருவர். பத்திரிகையாளர். விமானி. பல பிரெஞ்சு இலக்கிய விருதுகளையும் USAன் National Book Awardஐயும் வென்றவர். எல்லாவற்றிற்கும் மேல் The Little Prince என்ற படைப்புக்காக உலகவாசகர்கள் அனைவருக்கும் நெருக்கமானவர். Aviation writing வகையில் மூன்று குறுநாவல்களை எழுதியவர். அதில் Night Flight என்பதன் மொழிபெயர்ப்பு இது. எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி: புதுவை மாநில பல்கலை முன்னாள் பிரெஞ்சுத்துறைத் தலைவர். மொழிபெயர்ப்புக்காக பல விருதுகள் பெற்றவர். தமிழ், ஆங்கிலம், … Continue reading விடியலைத் தேடிய விமானம் – ஆந்த்துவான் த சேந்தெக்ஸுபெரி- பிரெஞ்சிலிருந்து தமிழில் எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி:

க்ரோ மவுண்டன்- உலகச் சிறுகதைகள்- தமிழில் ச.வின்சென்ட்:

ஆசிரியர் குறிப்பு; ஓய்வுபெற்ற ஆங்கிலப் பேராசிரியர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார். தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் மொழிபெயர்த்துள்ளார். இந்த நூல் காஃப்கா, கால்வினோ, கான்சியுயி போன்றவர்களின் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு. காஃப்காவின் பட்டினிக் கலைஞனுக்கும், அசோகமித்ரனின் புலிக்கலைஞனுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. பட்டினிக்கலைஞனை Marketing செய்வோர்,நாற்பது நாட்கள் என்று Fix செய்ததில் ஒரு முக்கியமான பாயிண்ட் இருக்கிறது. பத்து நாட்கள் என்றால், யாருமே இருக்கமுடியும் என்றாகிவிடும். நாற்பது நாட்களுக்கு மேல் பார்வையாளரின் … Continue reading க்ரோ மவுண்டன்- உலகச் சிறுகதைகள்- தமிழில் ச.வின்சென்ட்:

அந்த நாளின் கசடுகள் – மார்ட்டின் ஓ’ கைன்- ஆங்கிலத்தில் ஆலன் டிட்லி – தமிழில் ஆர்.சிவக்குமார்:

மார்ட்டின் ஓ' கைன் அயர்லாந்தைச் சேர்ந்த எழுத்தாளர். ஐரிஷ் மொழிபெயர்ப்பாளராக, விரிவுரையாளராகப் பணியாற்றியவர். ஐரிஷ் நவீன இலக்கியத்தின் முன்னோடியாகக் கருதப்படுபவர். இது இவரது கடைசிக் குறுநாவல். ஆலன் டிட்லி அயர்லாந்தில் பிறந்தவர். எழுத்தாளர், கல்விப்புல அறிஞர், பேராசிரியர். பல படைப்புகளின் இடையே ஆங்கில மொழிபெயர்ப்புகளையும் செய்தவர். ஆர்.சிவக்குமார் ஆங்கிலத்துறை இணைப்பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பல முக்கியமான நூல்களை தமிழில் மொழிபெயர்த்தவர். இதே ஆசிரியரின் இன்னொரு நாவலான வசைமண் என்ற நூலும் அதில் ஒன்று. காஃப்காவின் K … Continue reading அந்த நாளின் கசடுகள் – மார்ட்டின் ஓ’ கைன்- ஆங்கிலத்தில் ஆலன் டிட்லி – தமிழில் ஆர்.சிவக்குமார்:

ஆவியின் வாதை – ஹஸன் அஸிஸூல் ஹக்- தமிழில் தாமரைச் செல்வி:

ஹஸன் வங்கத்தின் மூன்று முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர் என்று பதிப்பகத்தாரின் குறிப்பு சொல்கிறது. முதுகலை பட்டப்படிப்பை முடித்துப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். இருபத்து நான்குக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். வங்கத்தின் பல விருதுகளைப் பெற்றவர். பாஸ்கர் சட்டோபத்யாய வங்கத்திலிருந்து ஆங்கிலத்திற்கு பலநூல்களை மொழிபெயர்த்தவர். எழுத்தாளர். தாமரைச் செல்வி, தென்றல் சிவக்குமார் என்ற பெயரில் பரவலாகத் தெரிந்தவர். எனில் என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டவர். ஏற்கனவே ஒருநூலை சாரு நிவேதிதாவுடன் இணைமொழிபெயர்ப்பு செய்தவர். கணிசமான பாகிஸ்தானிய, பங்களாதேஷ் எழுத்தாளர்களிடம் இந்திய, … Continue reading ஆவியின் வாதை – ஹஸன் அஸிஸூல் ஹக்- தமிழில் தாமரைச் செல்வி:

நரக மாளிகை- சுதீஷ் மின்னி- தமிழில் கே.சதாசிவன்:

சுதிஷ் மின்னி தலசேரி தாலுகாவில் கண்டங்குந்நு கிராமத்தில், விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். கணிதத்தில் முதுநிலைப்பட்டம் பெற்றவர். சங்பரிவார் அமைப்புகளில் இருபத்தைந்து வருடங்கள் சேர்ந்திருந்து விட்டு தற்போது சி.பி.எம்மில் இணைந்து பணியாற்றுகிறார். கே.சதாசிவனின் மொழிபெயர்ப்பு தெளிவாக இருக்கிறது. பொதுவாகவே ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்ப்பதை விட இந்திய மொழிகளில் இருந்து செய்யப்படும் பெயர்ப்புகள் தமிழுக்கு நெருக்கமாகின்றன. எந்த மதவாதமுமே அபாயமானது. சகமனிதனின் நம்பிக்கையை உடைக்கச் செய்யும் முயற்சிகளால் அவன் வாழ்வில் பலகெடுதல்களையும், அழிவையும் ஏற்படுத்துவது. கருணையே வடிவான புத்தரைப் பின்பற்றுபவர்கள் … Continue reading நரக மாளிகை- சுதீஷ் மின்னி- தமிழில் கே.சதாசிவன்:

ஆன்டன் செகாவ் கதைகள்- தமிழில் எம்.கோபாலகிருஷ்ணன் :

ஆன்டன் செகாவ்: நவீன சிறுகதைக்கான பாதையை உருவாக்கித் தந்தவர் செகாவ். நூற்றாண்டுகள் கடந்தும் கதைவடிவம், மொழிநேர்த்தி, சித்தரிப்பு வடிவம் என சிறுகதையின் ஒவ்வொரு இலக்கணத்திலும்செகாவின் அழுத்தமான முத்திரை மெருகிழக்காமல் இருப்பதே அவரது மேதைமைக்கு சான்று. எம்.கோபாலகிருஷ்ணன் : கோயம்பத்தூரில் வசிப்பவர். இவரது நான்கு நாவல்கள், இரண்டு குறுநாவல்கள், மூன்று சிறுகதைத் தொகுப்புகள், மூன்று கட்டுரைத் தொகுப்புகள், ஐந்து மொழிபெயர்ப்பு நூல்கள் (இந்தியிலிருந்தும், ஆங்கிலத்திலிருந்தும்) ஏற்கனவே வெளிவந்தவை. செகாவின் கதைகள் பெரும்பாலும் அவர் கண் முன் பார்த்த வாழ்க்கையினின்று … Continue reading ஆன்டன் செகாவ் கதைகள்- தமிழில் எம்.கோபாலகிருஷ்ணன் :

அம்ரிதா நினைவுகள் – கன்னடத்தில் ரேணுகா நிடகுந்தி – தமிழில் கே.நல்லதம்பி:

ரேணுகா நிடகுந்தி: ரேணுகா கர்நாடகத்தின் தார்வாட்டைச் சேர்ந்தவர். பல ஆண்டுகளாகப் புதுதில்லியில் வசிப்பவர். தில்லி டைரி பக்கங்கள், அம்ரிதா நினைவுகள் உள்ளிட்ட பல நூல்களை கன்னடத்தில் எழுதியவர். கே. நல்லதம்பி: கன்னடத்திலிருந்து தமிழுக்கும், தமிழில் இருந்து கன்னடத்திற்கும் தொடர்ந்து மொழிபெயர்ப்பவர். லங்கேஷ், ஷான்பாக், சீனிவாஸ் வைத்யா, நேமிசந்த்ரா முதலியோரை தமிழுக்கும், சுந்தரராமசாமி, தி.ஜானகிராமன் போன்றோரை கன்னடத்திற்கும் கொண்டு சென்றவர். ஒரே கதை சிலநேரங்களில் எழுத்தாளரின் மேதைமையை நமக்குத் தெரியப்படுத்தி விடுகிறது. அதே நேரத்தில் நாம் படிக்காதது ஏராளம் … Continue reading அம்ரிதா நினைவுகள் – கன்னடத்தில் ரேணுகா நிடகுந்தி – தமிழில் கே.நல்லதம்பி: