மிளகு

மிளகு - சந்திரா தங்கராஜ்: ஆசிரியர் குறிப்பு: தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் பிறந்தவர். பத்திரிகையாளர். சினிமா இயக்குனர். மூன்று சிறுகதைத் தொகுப்புகளும் இரண்டு கவிதைத் தொகுப்புகளும் ஏற்கனவே வெளி வந்துள்ளன. இது இவரது சமீபத்திய கவிதைத் தொகுப்பு. மேற்குத்தொடர்ச்சி மலையே இந்தக் கவிதைகளின் நாயகி. டீசல் வாடையடிக்கும் தார் ரோடுகளும், மூச்சை முட்டவைக்க நிமிர்ந்து நிற்கும் கட்டிடங்களும், குறுவாளை கச்சையில் மறைத்த மனிதர்களும் இழந்ததன் வலியைக் கூட்டுகிறார்கள். பாரி மகள்களின் சோகம் போல் அன்றிருந்த எதுவும் … Continue reading மிளகு

Hercule Poirot’s Christmas

Hercule Poirot's Christmas- Agatha Christie: சஸ்பென்ஸ் கதைகளின் ராணி எனச் சொல்லப்பட்டவர். எண்பது சஸ்பென்ஸ் நாவல்களை எழுதிய இவரது நூல்கள் பைபிளுக்கும் ஷேக்ஸ்பியருக்கும் அடுத்து அதிகம் விற்றவை. பணக்கார Cynic கிழவர் தன்னுடைய நான்கு மகன்களையும், இறந்து போன ஒரே மகளின் மகளையும் கிறிஸ்துமஸ்ஸுக்கு அழைக்கிறார். ஒரு மகன் அவரை கடவுளாய் நினைப்பவன். ஒரு மகன் அரசியலில் காலெடுத்து வைத்து, தன்னைவிட இருபது வயது குறைந்த பெண்ணை மணந்தவன். ஒருவன் தந்தையை வெறுத்து ஓவியம் படிக்கச்சென்றவன். … Continue reading Hercule Poirot’s Christmas

சாலாம்புரி

சாலாம்புரி- அ. வெண்ணிலா: ஆசிரியர் குறிப்பு: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் பிறந்தவர் இவர். முதுகலை உளவியல், கணிதம் படித்தவர். கல்வியியலில் முனைவர் பட்டம் பெற்றவர். “ஆதியில் சொற்கள் இருந்தன”, “நீரிலலையும் முகம்”, “கனவிருந்த கூடு” உள்ளிட்ட பன்னிரண்டு நூல்களை எழுதியுள்ளார். நாவல், சிறுகதைகள்,கவிதைகள், ஆய்வுநூல்கள் என பலதளங்களிலும் இயங்கிவரும் இவருடைய இரண்டாவது நாவல் இது. வெண்ணிலாவின் மொழி அழகு. தன் கண்முன் விரிந்த சரித்திரத்தை இவர் எழுதலாமே என்று சிலநேரம் நான் நினைத்ததுண்டு. இந்த நாவல் அது … Continue reading சாலாம்புரி

திருமதி பெரேரா

திருமதி பெரேரா- இஸுரு சாமர சோமவீர- தமிழில் எம்.ரிஷான் ஷெரிப்: இஸுரு சாமர சோமவீர: இலங்கையைச் சேர்ந்த நவீன தலைமுறை சிங்கள எழுத்தாளர். இலங்கை சுகாதார அமைச்சில் பணிபுரிகிறார். இவருடைய மூன்று கவிதைத் தொகுப்புகள் இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் இதுவரை வெளியாகியுள்ளன. தனித்தனியாக கவிதைத் தொகுப்புக்கு, சிறுகதைத் தொகுப்புக்கு இலங்கை கொடகே சாகித்யவிருது பெற்றிருக்கிறார். இது இவரது சிறுகதைத் தொகுப்பின் சமீபத்திய தமிழ்மொழிபெயர்ப்பு. எம்.ரிஷான் ஷெரிப்: இலங்கையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர். தமிழுக்குத் தொடர்ச்சியாக மொழிபெயர்ப்புகளை செய்து … Continue reading திருமதி பெரேரா

தேனொடு மீன்

தேனொடு மீன் - இசை: ஆசிரியர் குறிப்பு: கோயம்பத்தூரில் வசிக்கிறார். பொது சுகாதாரத்துறையில் பணி. இதுவரை இவரது ஏழு கவிதைத்தொகுப்புகள், நான்கு கட்டுரைத்தொகுப்புகள் வெளியாகியுள்ளன. இது இவரது ஐந்தாவது கட்டுரை நூல். காஹா கத்தசஈ என்று பிராகிருத மொழியில் எழுதப்பட்ட 251 பாடல்களை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். சங்கப்பாடல்களின் சாயல் பெரும்பானவற்றில். நிலமும், மொழியும் வேறானாலும் எப்போதும் பெண்கள். பொ.ஆ 200 க்கும் 450க்கும் இடையில் எழுதப்பட்டவை இவை. இந்தப் பாடலைக் கவனியுங்கள். "மாமிஒரு தாமரைக்கும் சேதமில்லைஒரு வாத்தும் … Continue reading தேனொடு மீன்

குமிழி

குமிழி- ரவி: ஆசிரியர் குறிப்பு: ரவி, 80 களின் இறுதியிலும் 9௦ களிலும் ‘மனிதம்’ என்ற இதழினை குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு தொடர்ச்சியாக நடத்தியதன் மூலமும் பல்வேறு விதமான இலக்கிய, சமூக செயற்பாடுகளின் மூலமும் பரவலாக அறியப்பட்டவர். தனது இளமைக் காலங்களில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்துடன் இணைந்து செயல்பட்டு ஆயுதப்பயிற்சியும் பெற்றுக் கொண்டவர். அவர் 1984 இல் இருந்து 1985 வரை தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இந்நூலில் பதிவு செய்துள்ளார். இது நாவல். புத்தகத்திலிருந்து: " … Continue reading குமிழி

பாலைவனச் சிறகு கொள்ளும் வண்ணத்துப் பூச்சிகள்

பாலைவனச் சிறகு கொள்ளும் வண்ணத்துப் பூச்சிகள் - ஆனந்தி ராமகிருஷ்ணன்: ஆசிரியர் குறிப்பு: கணிப்பொறி அறிவியலில் இளங்கலையும் சமூகவியலில் முதுகலையும் பயின்றவர். மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றியவர். இது இவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பு. முன்னுரையில் இவர்: " உணர்தலின் தேசத்தில் உணர்த்துதல் பிழை… காலக்கோடுகளின் கணக்கில் எழுதாமல் இருப்பது பெரும் குறை…..அபரிதம் விடுபட சிக்காத சொல்லுக்குள் எல்லாம் காத்திருத்தல் பதின்நிலை….. பிரபஞ்சத்தின் ரகசியங்களுக்குள் நடப்பவை அத்தனையும் காலயந்திரத்தின் நிறை….." ஒவ்வொருவர் கவிதைக்கும் தனிமொழி. அந்த மொழியைப் புரிந்து … Continue reading பாலைவனச் சிறகு கொள்ளும் வண்ணத்துப் பூச்சிகள்

அழ நாடு

அழ நாடு - அ.உமர் பாரூக்: ஆசிரியர் குறிப்பு: இலக்கியச் சிற்றிதழ்களில் ஆரம்ப காலத்தில் எழுத்தத்துவங்கிய அ. உமர் பாரூக், பிரபல வார, மாத இதழ்களில் மருத்துவத்தொடர்களை எழுதி வருகிறார். தேனி மாவட்டம் போடியில் பாரத் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் நிறுவனத்தில் ஆங்கில மருத்துவத்தின் சார்பு மருத்துவப் பட்டயப் பயிற்சி பெற்றதோடு அக்கு பங்சர் உட்பட பல மருத்துவ மேற்படிப்புகள் படித்ததோடு, ஆய்வுக்கூடங்களில் பணியாற்றியவர். இவரது ஆதுரசாலை சமீபத்தில் வந்த நாவல்களில் குறிப்பிடத்தக்கது. இது ஆய்வுநூல். … Continue reading அழ நாடு

தவ்வை – அகிலா

ஆசிரியர் குறிப்பு: கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், பெண்ணியவாதி, ஓவியர் மற்றும் மனநல ஆலோசகர். கோவையைச் சேர்ந்தவர். கவிதை, சிறுகதை, குறுநாவல், நாவல் என பத்து தொகுப்புகளுக்கு மேல் வெளியிட்டுள்ளார். இந்த நூல் இவரது சமீபத்திய நாவல். 1979ஆம் வருடம். மாடிப்படியில் ஆறேழு பெண்கள் சிரிப்பும் சத்தமுமாய் உட்கார்ந்திருந்தார்கள். காலையில் மணமுடித்த பெண்ணை அதில் ஒருவர் மாடிவரைக் கூட்டிப் போய் விட்டுவிட்டு வந்தார். முன்பின் அறிமுகமில்லா இருவர் எப்படி உறவுகொள்ள முடியும் என்ற சந்தேகத்திற்கு அன்றும் என்னிடம் பதிலில்லை. … Continue reading தவ்வை – அகிலா

மாயம்- பெருமாள் முருகன்

ஆசிரியர் குறிப்பு: படைப்புத்துறையில் இயங்கி வருபவர். அகராதியியல், பதிப்பியல், மூலபாடவியல் ஆகிய கல்விபுலத் துறைகளிலும் ஈடுபாடுள்ளவர். அரசு கலைக்கல்லூரியில் முதல்வராகப் பணிபுரியும் இவரது பலநூல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. இது 2020ல் இவர் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. கடைக்குட்டி: கடைசிவரியில் சட்டென்று எழுந்து நிற்கும் கதை. குடியும், இயலாமையும் அப்படித்தான் பேச வைக்கும். நுங்கு: ஆடுகளை வைத்து பூனாச்சி நாவல் எழுதியவருக்கு ஆடுகளை வைத்து சிறுகதை எழுதுவது சிரமமா என்ன! கதை முழுக்க ஆடுகள் வந்தாலும் இது ஆடுகள் … Continue reading மாயம்- பெருமாள் முருகன்