எழுத்தும் வாழ்க்கையும்

எழுத்து என்பது நேர்மையானதாக இருந்தால் அது நம் உணர்வின் வெளிப்பாடு. உணர்வுகள் அறிதலில் இருந்தும், அறிதல்கள் வாசிப்பு மற்றும் அனுபவங்களில் இருந்தும் பண்படக்கூடும்.வீட்டைவிட்டு வெளியேறி, ஐந்து வருடங்கள் சகலத்தையும் எதிர்கொண்டு, சம்பாதிக்கத் தொடங்கிய பதினைந்து வயது பையனுக்கும், பெற்றோர் பள்ளிக்கு கொண்டு போய் விட்டு, மறக்காமல் மதியம் சாப்பிட வேண்டும் என்று சொல்லி, பின் கூட்டிவரும் பதினைந்து வயது பையனுக்கும், வெளியில் என்ன நடக்கின்றது என்ற அளவிலேனும் அறிதல்கள் எப்படி ஒன்றாக இருக்க முடியும்! என்னுடைய எழுத்து … Continue reading எழுத்தும் வாழ்க்கையும்

சட்டங்கள் வேறு

நான்கு நாட்கள் வெளியூர் செல்வதாக இருந்தது. நெரிசலாக வீடுகள் என்றாலும், பூட்டிச்செல்வதால் எதிர்வீட்டுப் பெண்ணிடம் ஒரு வார்த்தை சொல்லலாம் என்று அழைப்பு மணியை அழுத்தினேன். முகத்தை மட்டும் கதவிற்கு வெளியே காட்டிய பெண், முகபாவனையில் என்ன வேண்டும் என்றது. ஒருவேளை shorts போல் ஏதாவது உடை அணிந்திருக்கலாம் என்று, வந்த வேலையான, கள்வரின் கயமையில் இருந்து வீட்டைப் பாதுகாக்க ஒரு கண் வைத்துக் கொள்ளச் சொல்லித் திரும்பினேன். அங்கிள் ஒரு நிமிடம், உங்களுக்கு புக் ஒன்று வந்திருக்கிறது … Continue reading சட்டங்கள் வேறு

பொன்னியின் செல்வன்

கல்கியின் பொன்னியின் செல்வனை SSLC முடிப்பதற்குள் மூன்று முறை படித்து விட்டேன். பிரம்மதேசம் அத்தை வீட்டில் தங்கியிருந்த நேரங்களில் இரண்டுமுறை பின்னர் கோடம்பாக்கம் பெரியம்மாவின் வீட்டில். அங்கே பக்கத்து வீட்டில் குடியிருந்த பூங்குழலி அக்காவுடன் பொன்னியின் செல்வன் குறித்து அடிக்கடி நாங்கள் பேசியது இலக்கிய விவாதமா இல்லையா தெரியவில்லை! சிறுவயதின் நினைவாகப் பின்னர் வாங்கிய பொன்னியின் செல்வன் படிக்கப்படாமலேயே இன்னும் வீட்டில் இருக்கிறது. தொடர் வாசிப்பு முன்னர் பிரமிப்பு தந்த விசயங்களை எளிதில் கடந்து விடுகிறது. சில … Continue reading பொன்னியின் செல்வன்

முதல்நாள் கழிந்தது

நாகப்பட்டினம் கிளை நீலாயதாட்சி தெற்கு வீதியில் இருந்தது அப்போது. நான் வங்கி வேலையில் முதன்முதலாகச் சேர்ந்தது அந்தக் கிளையில் தான். The Hindu படித்துக் கொண்டிருந்த மேலாளரிடம் எனது Appointment orderஐக் கொடுத்து ஆங்கிலத்தில் ஏதோ பேசியதற்கு "ஏன் தமிழ் தெரியாதா" என்றார். சுவாரசியமே இல்லாது, இன்னொரு அலுவலரை அழைத்துப் புதிதாக வந்திருக்கிறார் மதுரையிலிருந்து, முதலில் DD Sectionல் உட்கார வையுங்கள் என்றார். வந்தவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி " சார் சிகரெட் பிடிப்பீங்களா?" DD … Continue reading முதல்நாள் கழிந்தது

உறவுகள்

உறவுகளை நாம் ஒன்று Romanticize அல்லது Glorify செய்கிறோம். உங்கள் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் சொல்லுங்கள், எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் இப்போதுள்ள துணையைத் தேர்வு செய்வீர்களா? திரையுலகில் அடிக்கடி மணமுறிவு ஏற்படுதல், அங்கே கிடைக்கும் அபரிதமான வாய்ப்புகளினால். சந்தர்ப்பம் கிடைக்காத ஆஷாடபூதிகள் ஒருவில் ஒருசொல் ஒருஇல் என்றே சொல்வார்கள். வாழ்க்கைத்துணை என்ற ஒரு உறவு மட்டுமல்ல, எல்லா உறவுகளுமே பொறுமையின் எல்லையைத் தாண்டுகையில் கண்ணாடிப்பாத்திரம் போல் நொறுங்கிவிடுகின்றன. தனாவின் வில்லுவண்டி கதையின் முடிவு நம்மனதில் வெளித்தெரியாது உறைந்திருக்கும் குரூரம். … Continue reading உறவுகள்

வேலை என்னும் பூதம்

"வேலை என்னும் ஒரு பூதம் திங்கள் விடிந்தால் காதைத் திருகி இழுத்துக் கொண்டு போகிறது" என்பது ஞானக்கூத்தன் எழுதிய கவிதையின் வரிகள். வாழ்வாதாரத்திற்காக அவமானங்களைப் பொருட்படுத்தாமல்,நம் வாழ்வின் பெரும்பகுதியைக் கழிக்கும் வாழ்க்கையே பெரும்பாலும் அமைகிறது, உதரநிமித்தம் பஹுக்ருதவேஷம். மனம் விரும்பிச்செல்லும் வேலைகள் அத்திபூத்தாற் போல் யாருக்கேனும் கிடைக்கலாம். சொந்தத்தொழில் செய்தால் யாருக்கும் கைகட்டி நிற்கவேண்டியதில்லை என்பது ஒரு மாயை. அலுவலகத்தில் வேலை செய்பவர் இரண்டு மூன்று பேருக்குக் கைகட்டி நின்றால் இவர்கள் இருபது பேருக்காவது கைகட்டி நிற்கிறார்கள். … Continue reading வேலை என்னும் பூதம்

கர்வபங்கம்

Hilary Mantel மற்றும் Anne Tyler இருவரும் 2020 புக்கர் நீண்ட பட்டியலில் இடம்பெற்ற பெரிய எழுத்தாளர்கள். இருவருக்கிடையே நோபல் தவிர மீதமிருக்கும் எல்லா உயரிய விருதையும் வாங்கியுள்ளனர். புக்கர் இறுதிப்பட்டியலில் இருவருமே இடம்பெறாமல், நான்கு புதுமுக எழுத்தாளர்கள் அவர்களின் முதல் நாவல்கள் மூலம் பட்டியலுக்குள் வந்தனர். Hilaryன் எதிர்வினை "Disappointed but freed'. Anneன் எதிர்வினை 'Relieved'. நோபல், புக்கரின் இரண்டு பரிசுகள், அமெரிக்காவின் மதிப்புமிக்க விருதுகளான Pulitzer மற்றும் National Book Award என … Continue reading கர்வபங்கம்

ஆங்கிலப்பெருங்கடல்

தமிழ் நவீன இலக்கியத்தைப் படிக்கும் போது நானும், தோழர் R P ராஜநாயஹமும் ஒரு எழுத்தாளரை எடுத்துக் கொண்டால், அவருடைய படைப்புகள் முழுவதும் தேடிப் படித்துவிடுவது வழக்கம். உதாரணத்திற்கு அமிர்தம் நாவலை தி.ஜா எழுதியிருக்க வேண்டாம் என்று யாரேனும் கூறியிருந்தாலும் நாங்களே அதைப் படித்துத்தான் முடிவுக்கு வருவோம். நவீன இலக்கியத்தைத் தொடர்ந்து படிக்கும் போது, ஜனரஞ்சக எழுத்தை வாசிப்பது கடினம். அதனால் பெரும்பான்மையான புத்தகங்களை ஒதுக்க நேரிடும். தோழர் வாசிப்பது மிக மெதுவாக, அத்துடன் அவர் படித்த … Continue reading ஆங்கிலப்பெருங்கடல்

மொழிபெயர்த்தல்

பின்னோட்டத்தில் நண்பர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க சிறந்த நாவல்கள் தமிழில் ஐந்தை சொல்ல முடியுமா என்று கேட்டிருந்தார். சிறந்த என்பதே எப்போதும் Subjective ஆகையால் பெரும்பான்மையான Serious readers பரிந்துரைக்கும் நாவல்களைத் தான் சொல்ல முடியும். எனக்குப் பிடித்த ஐந்து நாவல்கள் என்றால் நான் மோகமுள், காகிதமலர்கள், தலைமுறைகள், பசித்த மானிடம், நாகம்மாள்/அபிதா என்று சொல்லலாம். இதில் மோகமுள்ளை ஆங்கிலத்தில் அப்படியே கொண்டுவர முடியாது. பசித்தமானிடம் தமிழில் ஒரு Path breaking novel. அதை ஆங்கிலத்தில் 2021ல் மொழிபெயர்த்தால் … Continue reading மொழிபெயர்த்தல்