கர்வபங்கம்

Hilary Mantel மற்றும் Anne Tyler இருவரும் 2020 புக்கர் நீண்ட பட்டியலில் இடம்பெற்ற பெரிய எழுத்தாளர்கள். இருவருக்கிடையே நோபல் தவிர மீதமிருக்கும் எல்லா உயரிய விருதையும் வாங்கியுள்ளனர். புக்கர் இறுதிப்பட்டியலில் இருவருமே இடம்பெறாமல், நான்கு புதுமுக எழுத்தாளர்கள் அவர்களின் முதல் நாவல்கள் மூலம் பட்டியலுக்குள் வந்தனர். Hilaryன் எதிர்வினை "Disappointed but freed'. Anneன் எதிர்வினை 'Relieved'. நோபல், புக்கரின் இரண்டு பரிசுகள், அமெரிக்காவின் மதிப்புமிக்க விருதுகளான Pulitzer மற்றும் National Book Award என … Continue reading கர்வபங்கம்

ஆங்கிலப்பெருங்கடல்

தமிழ் நவீன இலக்கியத்தைப் படிக்கும் போது நானும், தோழர் R P ராஜநாயஹமும் ஒரு எழுத்தாளரை எடுத்துக் கொண்டால், அவருடைய படைப்புகள் முழுவதும் தேடிப் படித்துவிடுவது வழக்கம். உதாரணத்திற்கு அமிர்தம் நாவலை தி.ஜா எழுதியிருக்க வேண்டாம் என்று யாரேனும் கூறியிருந்தாலும் நாங்களே அதைப் படித்துத்தான் முடிவுக்கு வருவோம். நவீன இலக்கியத்தைத் தொடர்ந்து படிக்கும் போது, ஜனரஞ்சக எழுத்தை வாசிப்பது கடினம். அதனால் பெரும்பான்மையான புத்தகங்களை ஒதுக்க நேரிடும். தோழர் வாசிப்பது மிக மெதுவாக, அத்துடன் அவர் படித்த … Continue reading ஆங்கிலப்பெருங்கடல்

மொழிபெயர்த்தல்

பின்னோட்டத்தில் நண்பர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க சிறந்த நாவல்கள் தமிழில் ஐந்தை சொல்ல முடியுமா என்று கேட்டிருந்தார். சிறந்த என்பதே எப்போதும் Subjective ஆகையால் பெரும்பான்மையான Serious readers பரிந்துரைக்கும் நாவல்களைத் தான் சொல்ல முடியும். எனக்குப் பிடித்த ஐந்து நாவல்கள் என்றால் நான் மோகமுள், காகிதமலர்கள், தலைமுறைகள், பசித்த மானிடம், நாகம்மாள்/அபிதா என்று சொல்லலாம். இதில் மோகமுள்ளை ஆங்கிலத்தில் அப்படியே கொண்டுவர முடியாது. பசித்தமானிடம் தமிழில் ஒரு Path breaking novel. அதை ஆங்கிலத்தில் 2021ல் மொழிபெயர்த்தால் … Continue reading மொழிபெயர்த்தல்

உறவுகள்

உறவுகளை நாம் ஒன்று Romanticize அல்லது Glorify செய்கிறோம். உங்கள் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் சொல்லுங்கள், எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் இப்போதுள்ள துணையைத் தேர்வு செய்வீர்களா? திரையுலகில் அடிக்கடி மணமுறிவு ஏற்படுதல், அங்கே கிடைக்கும் அபரிதமான வாய்ப்புகளினால். சந்தர்ப்பம் கிடைக்காத ஆஷாடபூதிகள் ஒருவில் ஒருசொல் ஒருஇல் என்றே சொல்வார்கள். வாழ்க்கைத்துணை என்ற ஒரு உறவு மட்டுமல்ல, எல்லா உறவுகளுமே பொறுமையின் எல்லையைத் தாண்டுகையில் கண்ணாடிப்பாத்திரம் போல் நொறுங்கிவிடுகின்றன. தனாவின் வில்லுவண்டி கதையின் முடிவு நம்மனதில் வெளித்தெரியாது உறைந்திருக்கும் குரூரம். … Continue reading உறவுகள்

Retention

எப்போதுமே நான் எதிர்கொள்ளும் கேள்வி, தினம் ஒரு புத்தகம் படித்தால் எதை என்று நினைவில் வைத்துக் கொள்ளமுடியும்!வாசித்தல் ஒரு சுகானுபவம். சாயங்கால நேரங்களைக் கண்டிப்பாக மதுக்கூடங்களில் கழிக்க வேண்டும் என்று சிலர் நினைப்பது போல் அது ஒரு தேர்வு. வாழ்வில் எது நம்மை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது என்று நினைக்கிறோமோ அதனிடம் நம்மை ஒப்புவிக்கிறோம். எனது நண்பர் ஒருவர் எந்தப்பெண்ணைப் பார்த்தாலும் பதின்பருவச் சிறுவனைப் போல் மருவக் காதல் கொள்வார். Retention என்பது காலஓடையின் நீர்மையில் கட்டாயம் பாசிபடரக்கூடியது. … Continue reading Retention

அன்பு மலர்களே

பாசமலரில் முதலிரவு அறையில் தங்கை சாவித்திரியின் புகைப்படத்தைக் கவிழ்த்து வைப்பார் சிவாஜி. அது ஒரு நுட்பமான விசயம். உறைந்த முகம் சட்டகத்துக்குள் இருந்து ஒன்றும் செய்யப் போவதில்லை. ஆனால் நமக்கு உள்மனதில் அது பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதே ஒரு சங்கடமான உணர்வை அளிக்கும். வாடிக்கையாளர் ஒருவரின் மொத்தக்குடும்பமும் வேன் விபத்தில் மரித்து, இவரும் இவர் கணவரும் எஞ்சினர். வங்கிவர அவர் யோசித்தார் என்று நானே அவர் வீட்டுக்குச் சென்றேன். வரவேற்பரையில் வரிசையாகப் புகைப்படங்கள், மாலையிட்டு, பொட்டுவைத்து, ஒரு … Continue reading அன்பு மலர்களே

நாய்க்கு வேலையில்லை உட்கார நேரமில்லை என்னும் சொலவடையை மனிதர்களுக்குச் சொன்னால் கோபித்துக் கொள்வார்கள். ஆனால் எந்நேரமும் பரபரப்பாக அலைந்து கடைசியில் முதலுக்கு மோசம் என்று வந்து நிற்பவர்களைப் பார்த்தால் அது தான் நினைவுக்கு வந்து தொலைகிறது.

சிலரது பரபரப்பைப் பார்ப்பதற்கே அடிவயிற்றில் கிலி பற்றிக்கொள்கிறது. போனில் பேசுகையில் கூட சீக்கிரம் சீக்கிரம் என்று திருப்பதி பெருமாள் சன்னதியை நினைவுபடுத்துவார்கள்.அவர்கள் அன்று செய்யவேண்டிய வேலைகளின் பட்டியலைப் பேசாது அவர்களால் உரையாடலை முடிக்க முடியாது. தனியார் வங்கியின் மேலாளர் என்பது என் அனுபவத்தில் ஒரு மனப்பயிற்சியை அளிக்கிறது. காலை நுழைந்தவுடன் ஒரு புகாரில் ஆரம்பிக்கும் அன்றைய அலுவல் இரவில் எந்நேரம் வேலை முடியுமோ அந்த நேரத்திலும் ஒரு புகாருக்குப் பதில் சொல்லி முடியும். மேலதிகாரிகளை விட்டுவிடுங்கள், அவர்கள் … Continue reading நாய்க்கு வேலையில்லை உட்கார நேரமில்லை என்னும் சொலவடையை மனிதர்களுக்குச் சொன்னால் கோபித்துக் கொள்வார்கள். ஆனால் எந்நேரமும் பரபரப்பாக அலைந்து கடைசியில் முதலுக்கு மோசம் என்று வந்து நிற்பவர்களைப் பார்த்தால் அது தான் நினைவுக்கு வந்து தொலைகிறது.

மனத்துக்கண் மாசிலன்

பிரகாசுக்கு என்ன நினைத்து அந்தப்பெயர் வைத்தார்களோ, அவருக்கும் அந்த பெயருக்கும் ஸ்நானபிராப்தி கூட இல்லை.வங்கியில் இருந்த அவரது அப்பா இறந்து கருணை அடிப்படையில் கடைநிலை ஊழியராக வேலை கிடைத்தது. பத்து வருடங்கள் கழித்து காசாளரானார். சொந்தத்தில் பெண் கொடுத்தார்கள். அழகான பெண். பிரகாசுக்கு பேசுகையில் கடைவாயிலிருந்து எச்சில் வடியும். இரண்டு மூன்று நாள் தாடி. தொடர்ந்து பேசுகையில் குரல் தடுமாறி பேச்சு நிற்கும். அவர் மேல் இனம்புரியாத ஒரு துர்நாற்றம் எப்போதும் நிரந்தரமாய். காசியபனின் அசடு படித்திருக்கிறீர்களா? … Continue reading மனத்துக்கண் மாசிலன்

பகிர்வு: 1

சமீபத்தில் கேரளா சென்றிருந்தோம். அதிகாலையில் எழுந்து விட்டேன். நண்பர் சற்று நேரம் கழித்து எழுந்தார். படுக்கை சற்றும் கலையவில்லை. சின்ன சுருக்கம் இல்லாமல் ஒரு நேர்த்தியான ஒழுங்கு. நான் தூக்கத்தில் குப்புற, ஒருக்களித்து, மல்லாந்து என பலவகைகளில் உருண்டு படுத்து காலையில் பார்த்தால் போர்வையும், படுக்கை விரிப்பும் எதிர்திசையில் சுருண்டிருக்கும். செய்திகள் முடிந்த உடன் சாப்பாடு என்பார் இன்னொரு நண்பர். காலை ஏழரை மணிக்கு காப்பி மதியம் ஒரு மணிக்கு மதிய உணவு என்று எல்லாம் மிகச்சரியான … Continue reading பகிர்வு: 1