Best of 2021

பேரிடர் தொடர்காலமாகிய 2021ல் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு, ஓரளவு வழக்கமான வாழ்க்கை திரும்பிய போதும், தமிழ் இலக்கிய உலகைப் பொறுத்தவரை, 2020க்கும் இந்த வருடத்திற்கும் பெரிதாக வித்தியாசம் ஏதும் சொல்வதற்கில்லை. இவ்வருடமும் ஏராளமான சிறுகதைகள் வெளியாகி இருக்கின்றன. இணைய இதழ்களின் வளர்ச்சி, புதிய சிறுகதை எழுத்தாளர்களுக்கும் ஒரு மேடையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. தமிழுக்கே உரித்தான புற்றீசல் கவிதைகள், இந்த வருடத்திலும் ஏமாற்றம் தரவில்லை. புதிய மொழிபெயர்ப்பாளர்களும், அதிக அளவில் மொழிபெயர்ப்பு நூல்களும் வெளியாகிய வருடமிது. அதே போலவே … Continue reading Best of 2021

கல்குருத்து- ஜெயமோகன்

மூத்ததும் குருத்து ஆகும் என்பதை அழகம்மை புரிந்து கொள்கிறாள். பலர் எழுதுகையில் கதை அத்துடன் முடிந்து விடும். ஆனால் ஜெயமோகன் ஒரு நாவல் படித்து முடித்த அனுபவத்தை இந்தக் கதையில் தந்து விடுகிறார். வயதானவர்களைப் பார்க்க வேண்டிய (அதுவும் கணவனின் தாத்தா, பாட்டி) பொறுப்பின் சுமையுடன், Economical independence இல்லாத பதற்றம், அதைக் கணவன் சொல்லிக் காண்பிப்பதில் அவமானம் என்று அழகம்மையே கதை முழுதும் Score பண்ணுகிறாள். அம்மி செய்வது குறித்த தகவல்கள் காரணத்துடன் இடையிடை வந்து … Continue reading கல்குருத்து- ஜெயமோகன்

தன்னெஞ்சறிவது….

"மீனாட்சி அம்மன் கோவிலில் தான் வழக்கமாக வெள்ளிக்கிழமை மாலை சந்திப்போம். போனமுறை பொற்றாமரை குளப்படிக்கட்டில் உட்கார்ந்திருந்த போது, குனிவது போல் அவளுக்கு ஒரு முத்தம் கொடுத்து விட்டேன்" என்றான் அவன். அது சொந்தமாக டெலிபோன், விரல்விட்டு எண்ணும் வீடுகள் வைத்திருந்த காலம். STD கிடையாது. டிரங்கால் தான் பேச வேண்டும். அடுத்த வெள்ளி நான்கு நண்பர்கள் போய் காத்திருந்தார்கள். குளம் இருந்தது. ஆட்கள் வந்தார்கள். போனார்கள். அவனும் வரவில்லை. அவளும் வரவில்லை. மறுநாள் அவன் ஆரம்பிக்கக் காத்திருந்தோம். … Continue reading தன்னெஞ்சறிவது….

யாருக்கு நோபல்

சென்ற வருடத்தில் நோபல் பரிசு இலக்கியத்துக்கு அறிவிக்கப்பட்டதும் உலகெங்கிலுமிருந்து ஏராளமான எதிர்மறை விமர்சனங்கள். அதற்கு முன்பே கூட யாருக்கும் தெரியாத, யாராலும் யூகிக்கமுடியாத எழுத்தாளர்களை நோபல் கமிட்டி தேடிக் கண்டுபிடிப்பதாக பேசப்பட்டது. புக்கர் ஓரிரவில் எழுத்தாளரின் வாழ்க்கையை, அவர்களின் நூல்களின் விற்பனையை மாற்றுகிறது. நோபல் இன்று பெருங்காய டப்பாவாக இருக்கிறது. Louise Glückஐ நோபலுக்குப் பிறகு எத்தனை பேர் படித்தார்கள்? இன்றைக்கு இந்தியாவில், அவர்கள் ராஜகுடும்பம் என்று சொல்வது போல Nobel Laurette என்பது. Louise Erdrich … Continue reading யாருக்கு நோபல்

எழுத்தும் வாழ்க்கையும்

எழுத்து என்பது நேர்மையானதாக இருந்தால் அது நம் உணர்வின் வெளிப்பாடு. உணர்வுகள் அறிதலில் இருந்தும், அறிதல்கள் வாசிப்பு மற்றும் அனுபவங்களில் இருந்தும் பண்படக்கூடும்.வீட்டைவிட்டு வெளியேறி, ஐந்து வருடங்கள் சகலத்தையும் எதிர்கொண்டு, சம்பாதிக்கத் தொடங்கிய பதினைந்து வயது பையனுக்கும், பெற்றோர் பள்ளிக்கு கொண்டு போய் விட்டு, மறக்காமல் மதியம் சாப்பிட வேண்டும் என்று சொல்லி, பின் கூட்டிவரும் பதினைந்து வயது பையனுக்கும், வெளியில் என்ன நடக்கின்றது என்ற அளவிலேனும் அறிதல்கள் எப்படி ஒன்றாக இருக்க முடியும்! என்னுடைய எழுத்து … Continue reading எழுத்தும் வாழ்க்கையும்

சட்டங்கள் வேறு

நான்கு நாட்கள் வெளியூர் செல்வதாக இருந்தது. நெரிசலாக வீடுகள் என்றாலும், பூட்டிச்செல்வதால் எதிர்வீட்டுப் பெண்ணிடம் ஒரு வார்த்தை சொல்லலாம் என்று அழைப்பு மணியை அழுத்தினேன். முகத்தை மட்டும் கதவிற்கு வெளியே காட்டிய பெண், முகபாவனையில் என்ன வேண்டும் என்றது. ஒருவேளை shorts போல் ஏதாவது உடை அணிந்திருக்கலாம் என்று, வந்த வேலையான, கள்வரின் கயமையில் இருந்து வீட்டைப் பாதுகாக்க ஒரு கண் வைத்துக் கொள்ளச் சொல்லித் திரும்பினேன். அங்கிள் ஒரு நிமிடம், உங்களுக்கு புக் ஒன்று வந்திருக்கிறது … Continue reading சட்டங்கள் வேறு

பொன்னியின் செல்வன்

கல்கியின் பொன்னியின் செல்வனை SSLC முடிப்பதற்குள் மூன்று முறை படித்து விட்டேன். பிரம்மதேசம் அத்தை வீட்டில் தங்கியிருந்த நேரங்களில் இரண்டுமுறை பின்னர் கோடம்பாக்கம் பெரியம்மாவின் வீட்டில். அங்கே பக்கத்து வீட்டில் குடியிருந்த பூங்குழலி அக்காவுடன் பொன்னியின் செல்வன் குறித்து அடிக்கடி நாங்கள் பேசியது இலக்கிய விவாதமா இல்லையா தெரியவில்லை! சிறுவயதின் நினைவாகப் பின்னர் வாங்கிய பொன்னியின் செல்வன் படிக்கப்படாமலேயே இன்னும் வீட்டில் இருக்கிறது. தொடர் வாசிப்பு முன்னர் பிரமிப்பு தந்த விசயங்களை எளிதில் கடந்து விடுகிறது. சில … Continue reading பொன்னியின் செல்வன்

முதல்நாள் கழிந்தது

நாகப்பட்டினம் கிளை நீலாயதாட்சி தெற்கு வீதியில் இருந்தது அப்போது. நான் வங்கி வேலையில் முதன்முதலாகச் சேர்ந்தது அந்தக் கிளையில் தான். The Hindu படித்துக் கொண்டிருந்த மேலாளரிடம் எனது Appointment orderஐக் கொடுத்து ஆங்கிலத்தில் ஏதோ பேசியதற்கு "ஏன் தமிழ் தெரியாதா" என்றார். சுவாரசியமே இல்லாது, இன்னொரு அலுவலரை அழைத்துப் புதிதாக வந்திருக்கிறார் மதுரையிலிருந்து, முதலில் DD Sectionல் உட்கார வையுங்கள் என்றார். வந்தவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி " சார் சிகரெட் பிடிப்பீங்களா?" DD … Continue reading முதல்நாள் கழிந்தது