நினைவில் நிற்கும் சில நாவல்கள்-2022

நன்றி அகநாழிகை/ பொன்.வாசுதேவன். தமிழில் பட்டியல் என்றாலே இப்போதெல்லாம் பயம் வருகிறது. மூளையின் செயலிக்கும், கைவிரல்களுக்கும் இருக்கும் தொடர்பு அறுந்து போகிறது. நினைவில் நின்றவை என்று சொல்வதில், பட்டியல் வந்தாலும் கூடப் பழி நினைவிற்குப் போய்ச்சேரட்டும். நாவல்கள் எப்போதுமே தமிழ் நவீன இலக்கியத்தின் பலவீனம் என்றே சொல்ல வேண்டும். சிறுகதைகளில் ஒரு பொறியை வைத்து, பிரகாசமாகக் காட்டும் வித்தை நாவல்களில் கைகூடுவதில்லை. நாவல் நின்று விளையாட வேண்டிய களம். சிறுகதைகளில், கவிதைகளில் நாம் உலகத்தரத்தில் இருக்கிறோம் என்று … Continue reading நினைவில் நிற்கும் சில நாவல்கள்-2022

Rogue Banker -9:

Resident கணக்கை NROவாக மாற்றத் தனியார் வங்கிக்குச் சென்றிருந்தோம். நான் இப்போது சொன்னால் மிகைப்படுத்துதல் என்றே பலரும் நினைக்கக்கூடும். அந்தப் பெண் எங்கள் ஒருவருக்கு எடுத்துக் கொண்ட நேரத்தில், நான் குறைந்தபட்சம் இருபது பேரை Attend செய்திருப்பேன். எந்தப் பதற்றமுமில்லாது, ஒவ்வொரு தாளையும் புள்ளி மாறாது பார்த்துக் கொண்டே இருந்தார். அயல்நாட்டில் வங்கிக்கணக்கு, Work permit வைத்திருந்து, அடுத்த ஆறுமாதங்களுக்கு முடிவடையாத விசா இருந்தால் போதுமானது இல்லையா? ஆவணங்களை வாங்கிக்கொண்டதற்கானஓப்புகையை அளிப்பதற்கு மேலாளரிடம் போய் கேட்டு வருகிறேன் … Continue reading Rogue Banker -9:

இன்றைய ஜப்பானிய இலக்கியம்:

ஜப்பானில் இது ஒரு Transition period. பல நூற்றாண்டுகளாகவே ஜப்பானில் தற்கொலை என்பது மற்ற நாடுகளை விட அதிகமான ஒன்று. பண்டைய ஜப்பானில் Seppuku என்பது ஒரு Ritual. ஆண்களே அதிகம் தற்கொலை செய்து கொள்கிறார்கள். குழந்தை பிறப்பு வெகுவாகக் குறைந்து போயிருக்கிறது. ஜப்பானியப் பள்ளிகளில் Bullying ஒரு பெரிய தொற்றுநோயாக அதிகரித்து வருகிறது. இரண்டாம் உலகப்போரின் அழிவிற்குப் பிறகு மீண்டெழுந்த ஜப்பானில், இப்போது என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது? முரகாமியின் படைப்புகளில் வரும் ஜப்பான் அடர்பனிக்காலத்தில் தூரத்தில் … Continue reading இன்றைய ஜப்பானிய இலக்கியம்:

நாவலாசிரியர்கள்:

தஸ்தயேவ்ஸ்கியின் உன்னதமான நாவல்கள் எல்லாமே அவர் சிறைசென்று வந்த பின் எழுதியவை. ஒரு தோல்வியடைந்த தாம்பத்யத்தைச் சந்தித்திருக்காவிட்டால் டால்ஸ்டாயால் அன்னா கரீனினா எழுதியிருக்க முடியுமா என்ற சந்தேகம் எப்போதுமே எனக்கு உண்டு. தி.ஜா, ஆதவன், இ.பா, கிருத்திகா போன்றோரின் படைப்புகள் பிற எழுத்தாளர்களில் இருந்து வேறுபட்டதற்குக் காரணம் அவர்களது டெல்லி வாழ்க்கை. ஜி.நாகராஜனும், ப.சிங்காரமும் நம்மை பிரமிப்பில் ஆழ்த்தியது அவர்களது பிரத்யேக அனுபவங்களை புனைவில் கலந்ததால் தான். அரைப்பித்து நிலையில் தான் நம்மை மயக்க வைக்கும் மொழி … Continue reading நாவலாசிரியர்கள்:

வரலாற்று நாவல்கள்:

பிரம்மதேசம் அத்தையின் வீட்டில் என்னை மிகவும் கவர்ந்த அம்சம், பத்திரிகைகளில் இருந்து எடுத்து பைண்டிங் செய்யப்பட்ட புத்தகங்கள்.பலரது வீடுகளில் நான் சிறுவனாக இருந்த போது அவற்றைப் பார்த்திருக்கிறேன். இப்போது படிக்கிறார்களோ இல்லையோ பளபளக்கும் Coffee table வடிவிலான புத்தகங்களே வரவேற்பறையில். கல்கி, சாண்டில்யன் முதலியோர் அறிமுகமானது பழைய பைண்டிங் புத்தகங்கள் மூலமே. சாண்டில்யன் ஏராளமாக எழுதியிருந்தார், நானும் அவரை ஏராளமாகப் படித்திருந்தேன். இன்று நான் நினைவில் வைத்திருப்பது யவனராணியை மட்டுமே. கல்கியை இப்போது நினைக்கையில் (என்னால் கல்கியை … Continue reading வரலாற்று நாவல்கள்:

திரில்லர் நாவல்கள்:

அம்புலிமாமா, காமிக்ஸ்க்குப் பிறகு நேரடியாக சமூகநாவலுக்கு வந்து விட்டேன்.வரதராசனார், நா.பா படித்து வளர்பவர்கள், பெரியவராகி, பத்தரைமாற்று தங்கமாக இருக்கவே வாய்ப்பு அதிகம். நான் பித்தளையாகக்கூட ஆகவில்லை. பின்னர் ஆரம்பித்தது தான் தமிழ்திரில்லர் படிப்பது. புஷ்பா தங்கதுரையின் திரில்லர் கூடப் படித்திருக்கிறேன். சுஜாதா தான் இந்த உலகத்தில் சிறந்த திரில்லர் எழுதுகிறார் என்று திடமாக நம்பிய காலமது. S.S.L.C முடித்த பிறகே Chaseல் ஆங்கில வாசிப்புத் தொடங்கியது. அநேகமாக எல்லா Chase booksம் படித்ததாக நினைவு. ஒரு கணக்கிற்குச் … Continue reading திரில்லர் நாவல்கள்:

சிறுகதைகள்

இணைய இதழ்களின் வளர்ச்சிக்குப் பிறகு, தமிழில் பெண்கள் எழுதுவது அதிகரித்திருக்கிறது. தேவியில், மங்கையர்மலரில் என் கதை வந்திருக்கிறது என்று உற்சாகம் கொப்பளிக்கும் குரல்கள் குறைந்து, அந்த இதழில் நான் எழுதிய கதையை ஏற்றுக்கொள்ளவில்லை, ஏன் என்று கேட்கும் குரல்கள் அதிகரித்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. எல்லோருக்கும் சொல்வதற்குக் கதைகள் இருக்கின்றன. கூச்சம் காரணமாகப் பல கதைகள் சொல்லப்படாமல் போகின்றன. தமிழில் சொல்லப்பட வேண்டிய கதைகள் சொல்லப்படாமலும், எல்லாவற்றையும் சொல்லி முடித்த ஆண்கள் இடைவிடாது கதைகளில் தொணதொணத்துக் கொண்டிருப்பதும் சமீபத்தில் … Continue reading சிறுகதைகள்

Rogue Banker -8:

Neighbour’s Envy, Owner’s Pride என்ற Onida விளம்பரம் போல், வங்கியின் விற்பனைப் பொருட்களை மார்க்கெட்டிங் செய்வதற்கில்லை. அப்போது, ஒன்றே போல் நிரந்தர வைப்பு, அதில் மாதவட்டி அல்லது கூட்டுவட்டி, மாதாந்திர சேமிப்பு ஆகியவை எல்லா வங்கிகளுக்கும் பொதுவானவை.பல தனியார் நிதி நிறுவனங்கள் 36% வட்டிக்கு பின்தேதியிட்ட காசோலைகளைக் கொடுத்து, பணத்தைச் சுருட்டிய காலகட்டத்தில், தனியார் வங்கிகள் குறித்த புரிதல் பொதுமக்களிடமில்லை. ICICI, UTI (now Axis) போன்ற பெரிய தனியார் வங்கிகள் தோன்றவேயில்லை. தனியார் வங்கிகளை … Continue reading Rogue Banker -8:

கால்பந்து

ராஜாவின் அம்மா மலையாளி. அப்பா தமிழ். இருவரும் மருத்துவர்கள். அனைவரும் உட்கார்வது, படிப்பது, படுப்பது எல்லாம் ஒரே ஹாலில் என்ற வீட்டில் வளர்ந்த என் போன்ற பலருக்கு, ராஜாவின் மொட்டை மாடியில் இருந்த தனியறை ஒரு ஆச்சரியம். வீட்டிலிருக்கும் தனியறையில் நினைத்தபொழுது புகைபிடிக்க முடியும் என்பது சுதந்திரத்தின் உச்சம். ஒரு சிகரெட் வாங்கி இருவர் அல்லது மூவர் பகிரும் பொருளாதாரச் சூழலில், ராஜா அவனுடைய அறையில் பாக்கெட் வாங்கி வைத்திருப்பான். ஆளுக்கொன்றைப் பற்ற வைத்துக் கொண்டு, அப்பா, … Continue reading கால்பந்து

காதலே காதலே!

கலா அக்கா எண்பதுகளில் நிச்சயமாக வித்தியாசமானவர். நண்பன் துரை அவரை அண்ணனின் காதலி என்று அடிக்கடி சொல்லியும் நான் பொருட்படுத்தவில்லை. அப்போதிருந்த ஆண்களில் தொண்ணூறு சதவீதம், பெண்கள் விஷயத்தில் பொய் சொல்வார்கள். அப்படியில்லை என்று நிரூபிக்கவே துரை என்னை கலா அக்கா வீட்டிற்குக் கூட்டிச் சென்றிருக்க வேண்டும்.கலா அக்கா வீட்டில், அவர், அம்மா, தங்கை வசந்தி ஆக மொத்தம் மூன்றுபேர். துரையின் அண்ணனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டதால் கலா அக்கா அவருடைய நிரந்தரக் காதலியாக இருக்கத் … Continue reading காதலே காதலே!